ரைஸ் குக்கரில் 1மணிநேரம் ஊற வைத்த அரிசியைப் போட்டு வெந்நீரையும் ஊற்றி மூடிவிட்டேன். 20 நிமிஷம் கழித்து, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யும் பழக்கம் இன்னும் இருப்பதால் குக்கரைத் திறந்து பார்த்தேன். நான் வைத்தபடியே அரிசியும், தண்ணீருமாக இருக்கிறது. என்ன செய்தேன் புரியவில்லை. மண்டை குழம்ப யோசித்ததில் ஸ்விட்ச் ஆன் செய்ய மறந்து விட்டேன் என்று புரிந்தது. நல்லவேளையாக சாப்பிட இன்னும் 1/2 மணி நேரம் இருப்பதை நினைத்துக் கொண்டு ஸ்விட்ச் ஆன் செய்து சாதம் வைத்தேன். அந்த அளவிற்கு மன உளைச்சலா என்று தோன்றுகிறாது. ஆம் என்பதே விடை. எழில்முதல்வனின் இந்தக் கவிதை மட்டும் இன்று போடுகிறேன்.(உடுப்பி பிரயாணம் மிச்சம் பிறகு வரும். அதைப் படிக்கிறவர்களுக்கு இந்தச் செய்தி)
தனியே விடு, என்னைத் தனியேவிடு
அழவேண்டும் நான் என்னைத் தனியே விடு
பெருஞ்சுமை நெஞ்சில் கனக்கிறது-ஒருபிரளயம் என்னுள் நடக்கிறது
நெருஞ்சியின் மேலே நடப்பது போல-என் நினைவுகள் என்னை வதைக்கிறது.
உடம்பே வாயாய் அழவேண்டும்-நான் 'ஓ' வென்றலறி விழ வேண்டும்
வடிகால் தேவை-இலையென்றால் இவ்வாரிதி எனை விழுங்கி விடும்.
ஊற்று மணற்கரை போல்-மனம்
உருகி நெகிழ்ந்திட வேண்டும்
நீற்றுத் துகளெனத் துன்பம் நீங்கிப்
பொடிந்திட வேண்டும்
வெந்த பசும்புண் போலே-இதயம்
இந்த அழுகையின்றி-மருத்துவத்தால்
ஏதும் பயனுண்டோ-தனியே விடு என்னை
ஒற்றைச் சிறிய கிளை -
முற்றி உடைந்த பலாப்பழத்தைப்
பற்றியே தாங்கிடுமோ?
இற்று முறிந்திடுமோ?
தளைகளை விட்டு நான் விடுபட வேண்டும்
தாங்கும் சுமைகளை இறக்கிட வேண்டும்
திரு எழில் முதல்வனின் இந்தக் கவிதை 67 அல்லது 68-ம் வருடத்தில் எப்போதோ 'கணையாழி' பத்திரிகையில் வந்தது. என்னுடைய 15, 16 வயதில் படித்துக் குறித்து வைத்தது இன்றும் எனக்குப் பொருத்தமாக இருப்பது வேடிக்கைதான்.
கீதா,
ReplyDeleteஎன்ன ஆச்சு?
"வாழ்க்கை என்றால் ஆயிரம் உண்டு
வாசல்கள் தோறும் வேதனையுண்டு
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதியுண்டு"
கீதா, இந்த வரிகள் அவ்வப்பொழுது நான் முணுமுணுப்பவை. உங்களுக்கு வேண்டும் என்றால் அடுத்த
இரு வரிகளைப் பாடிக்குங்க.
ரொம்ப நன்றி உஷா, என்னுடைய வலைப்பூவிற்கும் வருவதற்கு. அடுத்த நன்றி உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு. ஆனாலும் கொஞ்ச நாள் ஆகும் என்றுதான் தோன்றுகிறது. முயற்சி செய்து வருகிறேன். இப்போது கூட அபிராமி அம்மைப் பதிகத்தில் வரும்
ReplyDeleteஒருநாள் இரண்டு நாள் அல்ல நான் உலகத்து உதித்த இந்நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு
உள்ளம் தளர்ந்து மிகவும்
அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்கு இமிவடிமைபால் கருணை கூர்ந்து
அஞ்சேல் எனச் சொல்லி ஆதரிப்பவர்கள் உனை அன்றியிலை உண்மையாக
என்ற பாடலைத் திருப்பித் திருப்பிப் படித்துவிட்டுத் தான் வருகிறேன்.
என்ன ஆச்சு? y so sogam?
ReplyDeleteதனம் தரும், கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்....
ஸ்லோகம் சொல்லுங்கோ.
Y Fear? when i'm here nu Abirami will come and help u... :)
ரொம்ப நன்றி, அம்பி, நீங்க வந்தாலே உற்சாகமும் தன்னாலே வந்துவிடும்.இன்னும் குழந்தை தான் நீங்க.
ReplyDelete"உனக்கும் கீழே இருப்பவர் கோடி
ReplyDeleteநினைத்துப் பார்த்து அமைதியை நாடு"
கீதா, உங்கள் பிரச்சனை எனக்கு தெரியாது. ஆனால் சிலர் வாழ்க்கையில் தீராத பிரச்ச்னையைப் பார்க்கும்பொழுது, நம்முடைய
பிரச்சனைகள் ஜூஜூபி என்று தோன்றும். விட்டு தள்ளுங்க.
கீதா என்ன ப்ரச்சினை? வேண்டாம் சொல்ல வேண்டாம். சரியாக சாப்பிடுஙகள்.முடிந்தபோது த்யானம் செய்யவும்.
ReplyDeleteJust relax.we are here for you.
ரொம்ப நன்றி மனு, உஷா. அநேகமாக நாளை எழுத ஆரம்பிக்கிறேன்.
ReplyDeleteகீதாக்கா
ReplyDeleteவாழ்க்கையில் சோகம் வரும்போது சோர்வும் இலவச இணைப்பா கூடவே வரும்.
ஆனா உங்களுக்குள்ள ஒழிஞ்சுகிட்டு இருக்கிற அந்த நகைச்சுவை (jewels இல்ல) உணர்வு ,இன்னும் கொஞ்சம் வெளியெ எடுத்துவிட்டு
பாருங்க .
என்ன மாதிரி பெருசுகள் சொல்லறத கேட்டு நொந்து நூடில்ஸ் ஆகாதிங்க.
என்ன கீதா இது ? ச்சின்னப்புள்ளையாட்டம்....
ReplyDeleteஎதுவந்தாலும் கலங்காத மன உறுதி வேணாமா?
'முண்டாசு' சொல்லிட்டுப் போயிருக்காரு,பாருங்க.
எல்லா பாரத்தையும் கடவுள் ( நம்பிக்கை இருந்தால்) மேல் போட்டுட்டுப்
பேசாம எழுதுங்க.
நான் விருந்தினர்களை சாப்பிடக்கூப்டுட்டு எல்லாம் இலையில் உக்கார்ந்த பிறகு தான்
ஞாபகம் வருது. சாதம் கடைசியா வைக்கலாமுன்னு இருந்து மறந்து போனது.
கமான், ச்சியர் அப்.
ரொம்ப நன்றி, பெரு(சு),
ReplyDeleteரொம்ப நன்றி, துளசி
இது என்னுடைய integrity சரியான தமிழ்ச்சொல் நேர்மை எனலாமா? அதைச் சந்தேகித்ததால் வந்த வருத்தம். கொஞ்ச நாளில் சரியாகும்.
//திரு எழில் முதல்வனின் இந்தக் கவிதை 67 அல்லது 68-ம் வருடத்தில் எப்போதோ 'கணையாழி' பத்திரிகையில் வந்தது. என்னுடைய 15, 16 வயதில் படித்துக் குறித்து வைத்தது//
ReplyDeleteகூட்டி கழிச்சு பார்த்தா உங்களுக்கு ஒரு 55 வயசு இருக்கும்னு சொல்லுங்க பாட்டி.
ஆமாம் தாத்தா, என் வயதைப் பற்றி இத்தனை நாளாகவா ஆராய்ச்சி? ரொம்ப slow நீங்க.
ReplyDelete