எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 27, 2006

50. மதுமிதா, எனக்கும் இடம் உண்டா?

என்னுடைய வலைப்பூ அதிகம் அறிமுகம் ஆனது இல்லை. எனக்கு அவ்வளவாக விஷயமும் தெரியாது. அதுவே ஒரு தகுதியாக நினத்துக் கொண்டு கீழ்க்கண்ட விஷயங்களைத் தெரிவிக்கிறேன். இதைச் சேர்த்தால் 50 பதிவுகள். இது என்னுடைய 50வது பதிவு.

பெயர்:கீதா சாம்பசிவம். ஏற்கெனவே கீதா என்ற பெயரில் ஒருத்தர் இருக்கிறார். பெயர்க்குழப்பம் வராமல் இருப்பதற்காக கணவர் பெயரை இணைத்துள்ளேன்.

வலைப்பூ பெயர்:My thoughts. தமிழ்ப்படுத்த வேண்டும். ப்ளாக்கர் சொதப்பலாலும், இணைய இணைப்பு விட்டு விட்டு வருவதாலும் ஒன்றுமே தொடர்ந்து செய்ய முடியவில்லை.

சுட்டி: sivamgss.blogspot.com

ஊர்: தருமமிகு சென்னை


நாடு: பாரதத்திருநாடு

அறிமுகம்:ப்ளாக் பற்றி ஏற்கெனவே பல புத்தகங்களில் படித்ததுண்டு. இருந்தாலும் போன வருடம் கணினி வாங்கிய பிறகு ஒருநாள் தினமலரில் துளசியின் பதிவு பற்றிப் படித்தேன். அதுதான் தொடக்கம்.

முதல் பதிவு: தமிழில் ஏப்ரல் முதல் தேதியா? சரியாக நினைவில் இல்லை. பார்க்கிறேன்.

எத்தனை பதிவு: இதைச் சேர்த்தால் 50 பதிவு வரும்.

இதன் சுட்டி: தெரியாது

ஏன் ஆரம்பம்: புலம்பத்தான். பின் பாதை மாறினேன். புலம்பல்கள்னு பேர் வச்சிருக்கணும்.

அனுபவம்: எல்லாருடைய பதிவிலும் போய்ப் பின்னூட்டம் இட்டது. ஆன்மீகப் பதிவுகளைத் தவிர. ஆன்மீகம் எழுதறவங்களைப் பார்த்தால் அவங்க எழுதற மாதிரி நம்மளால் முடியலியேங்கற பொறாமைதான், வேறே என்ன?

நண்பர்கள்; எதிரிகளே கிடையாது. எல்லாருமே நண்பர்கள் தான். அந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலி நான்.

கற்றவை: இ-கலப்பையால் தமிழ் எழுதப் பழகினது. இது ஒரு புது அனுபவம். ஆனால் இன்னும் வெட்டி ஒட்டும் வேலைதான் செய்கிறேன். யாராவது நிபுணி, அல்லது நிபுணன் கிடைத்தால் முதலில் பதிவில் நேரேயே எழுத வழி கேட்கணும்.

எழுத்தில் சுதந்திரம்: இப்போ நான் எழுதுவது எல்லாம் நீங்க படிக்கிறீங்களே. இது தான். உங்க தலை எழுத்து. என் அதிர்ஷ்டம் மற்றும் சுதந்திரம்.

இனி செய்ய நினைப்பது: சிருங்கேரி பத்தின பதிவு பாதிலே விட்டிருக்கேன் முடிக்கணும். ரெயில் பத்தி இன்னும் முழுசா எழுதலை. அதையும் சீக்கிரம் முடிக்கணும். எங்கே, நாளைக்கு எழுதவே முடியாது. இன்றே இரண்டு ஆகி விட்டது.

இனி செய்ய நினைப்பது.: இன்னும் வேகமாக இ.கலப்பையை உபயோகப் படுத்தினால், முத்தமிழ்க் குழுமத்திலும் தினம் கலந்து கொள்ள முடியும். இப்போ ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் முடியுது.

முழுமையான குறிப்பு: சொல்ல ஒன்றுமே இல்லை. சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் செய்யவில்லை. சாதனை
மனுஷி இல்லை.

இன்னும் சொல்ல நினைப்பது: எதுவுமே இல்லைங்க. உங்களுக்குத் தெரியாததா?

15 comments:

  1. //எனக்கு அவ்வளவாக விஷயமும் தெரியாது. //
    அக்கா, இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.. உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கிறது (வால்மார்ட், வால்க்ரீனிலிருந்து ராஜஸ்தான், குஜராத் வரை). இன்னும் கொஞ்சம் முயன்றால் எல்லாவற்றையும் உங்கள் பதிவிலேயே ஒழுங்குப் படுத்தி எழுதலாம்.

    //ஊர்: தருமமிகு சென்னை//
    சென்னைல தான் இருக்கீங்களா? வேற ஏதோ ஊர்னு நினைச்சேன் :)

    // தமிழில் ஏப்ரல் முதல் தேதியா? சரியாக நினைவில் இல்லை. பார்க்கிறேன்.//
    சரியா பார்த்து எழுதுங்க.. மதுவுக்கு சரியான நாள் வேண்டும்

    //எத்தனை பதிவு: இதைச் சேர்த்தால் 50 பதிவு வரும்.//
    50ஆஆஆ?!!!

    //இதன் சுட்டி: தெரியாது//
    இதையும் கொஞ்சம் எடிட் பண்ணிடுங்க.. இதுவும் அவங்களுக்கு வேணும். http://sivamgss.blogspot.com/2006/05/50.html

    //ஏன் ஆரம்பம்: புலம்பத்தான். பின் பாதை மாறினேன். புலம்பல்கள்னு பேர் வச்சிருக்கணும்.//
    இப்போ யாரோ இந்தப் பேரு வச்சிட்டாங்க.. நோ சான்ஸ் :)

    ஒரு மெயில் அனுப்புங்க - prajaramin @ aim.com

    ReplyDelete
  2. ஓடி வந்து உதவிய பொன்ஸுக்கு நன்றி. சுட்டி கொடுத்து விட்டேன் மதுமிதாவிற்கு. இதே தான். சங்கத்தில் தான் பதியவில்லை. நீக்க மாட்டீங்களே. நான் தான் நிரந்தரத் தலைவலி ஆச்சே. தேதி பார்த்து விட்டு எழுதுகிறேன். வயசு 16 ஆச்சா எல்லாம் மறந்து விடுகிறது.

    ReplyDelete
  3. யக்கா கீதா அக்கா!
    தப்பா தட்டசு பண்ணிடிங்க பாருங்க. 16 வயது வந்து இருக்கு பாருங்க. இனிமே கொஞ்சம் சரி பார்த்து பதிவுல போடுங்க...........
    அது சரி, எங்க நம்ம வீட்டு பக்கம் ஆளயே காணோம். உங்கள் பத்தி உயர்வாக சொன்னது தப்பா......... அப்படினா சொல்லுங்க வாபஸ் வாங்கிடுறேன்.

    ReplyDelete
  4. ayyo...16 aaiducha!!!!!! (61???)

    ReplyDelete
  5. Ada daa, 50 post pottachaa?

    mudhalla oru congrats... (sweet ellam courierla varuma enakku? thengai barbi pothum)

    btw, U r correct, my mom dwelled in gopalan kothan st only.. (i told abt u to my mom)..

    i came to chennai and was there for 2 days.. appa, enna veyil..

    unga style romba merugu erituthee! sringeri post verayaa? kalukungaa..

    ReplyDelete
  6. தம்பி, நாகைத் தம்பி, நீங்க ஆதரிக்கலேனா நான் என்ன பண்ணுவேன் வயசு என்னமோ 16 தான். தப்பில்லை. இதோ உங்க வீட்டுக்கு உடனே வர்ரேன். வீட்டிலே கொஞ்சம் பிசியா அதான் ஜாஸ்தி கவனிக்க முடியலே.

    ReplyDelete
  7. மனசு, 61ஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!!!!!!மயக்கம் போட்டு விழுந்துட்டேன் போங்க ஒரு நாள் எனக்கும் 61 வயசு ஆகும்னு நினைக்கிறேன். அப்போ நீங்க எங்கே இருந்தாலும் கூப்பிடுகிறேன்.

    ReplyDelete
  8. ஹெல்லோ அம்பி, தங்கக்கம்பி, சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குக் கம்பி நீட்டிட்டீங்களே! சென்னையிலே இருந்து கொண்டு என்னைப் பார்க்காமல் போனதை வன்மையாகக் கண்டிக்கிறேன். (உங்க அம்மா பேர் என்ன மங்கையா? பத்மாசனியா?) உங்கள் வரவு நல்வரவு ஆகுக. டுபுக்கு ஒரு நாள் டுபுக்குனு வந்தார். டுபுக்குனு போயிட்டார்.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. // இதைச் சேர்த்தால் 50 பதிவுகள்//

    மொதல்ல 50வத் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    இனி தான் ஆரம்பம்ன்னு வச்சிக்கலாம்.

    //
    ஆன்மீகம் எழுதறவங்களைப் பார்த்தால் அவங்க எழுதற மாதிரி நம்மளால் முடியலியேங்கற பொறாமைதான், வேறே என்ன?
    //

    நல்லா படுங்க, அப்பதான் அதை பத்தி எழுத தோன்றும். நானும் இப்படி தான் ஆரம்பிச்சு... ஓடுது பதிவுகளின் எண்கள்.

    //
    சொல்ல ஒன்றுமே இல்லை. சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் செய்யவில்லை. சாதனை
    மனுஷி இல்லை.
    //

    50 பதிவு போட்டதே ஒரு சாதனை, இத விட்டுட்டு, என்னங்க நீங்க?

    ReplyDelete
  11. CONGRATS ON 50 ;)

    சாரி அக்கா.. எம்புட்டு போராடியும் தல உங்கப் பிறந்த நாள் விழாப் பரிசைக் கொடுக்காமல் செருமனிக்குப் போயிட்டார். வந்ததும் கேட்டு வாங்கித் தர்றேன்.

    ReplyDelete
  12. தேவ், தலைவர், ராஜஸ்தானில் இருக்கிறாரா, அதான் கஞ்சூஸ் ஆகி விட்டார். போனால் போகுது அடுத்த பிறந்த நாள் (நட்சத்திரப்படி ஜூன் மாதம் வருகுது)அப்போ எனக்கு 8 வயசு ஆகும் அதிலே வாங்கிக்கறேன். எப்படி எட்டு வயசுங்கறீஙகளா? மன்சு, 61 வசுன்னு சொன்னதிலே பாதியா உடைஞ்சுட்டேன். அப்போ 8 வயசு தனே? எப்படி என் கணக்கு? புலி இல்ல நானு?

    ReplyDelete
  13. ரொம்ப நன்றி சிவமுருகன், என் ப;திவிற்கு வந்து பின்னூட்டம் இடுவதற்கு.உண்மையில் உங்களை எலலாம் போல எனக்கு எழுத வராது.

    ReplyDelete
  14. //சாதனை மனுஷி இல்லை. //
    பல கோடிக்கணக்கான உயிரணுக்களின் ஒலிம்பிக்ஸ் ஓட்டப்பந்தயத்தில் முதல் வந்ததால் தான் நாம் இன்று உயிர்கொண்டிருக்கிறோம். அதுவே நம் முதல் சாதனை. இன்னும் நூறு வருடங்கள் கழித்து உங்கள் சந்ததியினர் சாதிக்கும் ஒவ்வொரு செயலிலும் உங்கள் பங்கும் உண்டு. இது பற்றி ஐசக் அஸிமோவின் ஒரு விஞ்ஞானக்கதை உண்டு.கால இயந்திரத்தில் பயணித்து கடந்த காலத்தில் ஒரு வண்ணாத்திபூச்சியை தெரியாமல் மித்த்ததால் திரும்பி வரும்போது நிகழ்காலம் கண்மண் தெரியாமல் மாறி இருப்பதைப்பற்றி. க்தையின் பெயர் நினைவில்லை.

    ReplyDelete
  15. ம்ம்ம்ம், கிட்டத் தட்ட ஒரு வருஷம் கழிச்சு மறுபடி ஒரு ஊக்கம் கொடுக்கும் பின்னூட்டம். மிக்க நன்றி நண்பரே! பதில் கொடுக்கிறேன், நீங்க தான் கஷ்டப் பட்டுப் பழையனவற்றில் தோண்டிப் பார்க்கணும்.! :)))))))

    ReplyDelete