வேலையில் சுணக்கம்
இரண்டு நாளாக வேலை கொஞ்சம் அதிகம் இருந்ததாலும் நேற்றுப்பூரா internet connection கிடைக்காததாலும் ஒன்றும் எழுத முடியவில்லை. அடிக்கடி இப்படி ஆகிறது. Broadband connection வந்த பிறகு தொந்திரவு இருக்காது என்று நினைத்தால் அடிக்கடி link போய் விடுகிறது. அல்லது server problemவந்து விடுகிறது.நடுவே ப்ளாக்கர் சொதப்பல் வேறு. இன்னும் ஊர் போய் விட்டு வந்த மிச்சம் நாளை எழுத வேண்டும். அதற்குள் பதில் போட வேண்டியவர்களுக்கு பதில் கொடுத்து விடவேண்டும்.இது ஒரு பதிவா என்று அம்பி கேட்பது காதில் விழுகிறது. என்ன செய்ய? கேசரி பற்றி எழுதினால் அம்பிக்குப் பிடிக்கும். அது அம்பியின் பதிவு என்று தெரியாமலே நிறைய முறை படித்திருக்கிறேன். சாப்பாடு பற்றி எழுதுவது என்றால் தனியாக ஒரு ப்ளாக் வேண்டும். என்னுடைய நாலு பதிவில் நான் எனக்குப் பிடித்த சாப்பாடு பற்றிக் கூறவில்லை. தனியாக எழுதிக் கொள்ளலாம் என்றுதான்.
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்பார்கள். நிஜமாக சாப்பாட்டில் நாங்கள் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ருசித்திருக்கிறோம்.பஞ்சாபின் பைங்கன் பர்த்தா, ருமாலி ரோட்டி, காஷ்மீரின் பாசுமதி அரிசியுடன் சேர்ந்த ராஜ்மா, உத்தராஞ்சலில் சாப்பிட்ட தவா ரோட்டி, பத்ரியில் சாப்பிட்ட இட்லி, சாம்பார், உத்தரப் பிரதேசக் காசியில் சாப்பிட்டத் தென்னிந்தியப் பாரம்பரிய உணவு, ராஜஸ்தானின் சூர்மா மற்றும் தால் பாட்டி, ராஜஸ்தான், நசிராபாத்தின் special உணவான கச்சோடா மற்றும் ஜிலேபி(இது உளுத்தம்பருப்பினால் செய்யப்படும் ஜாங்கிரி அல்ல), அங்கு கிடைக்கும் சாக்லேட் எனப்படும் மில்க் ஸ்வீட், அஜ்மேர் மதார்கேட்டில் கிடக்கும் ஆலு சாப்ஸ் மற்றும் தயிர் வடை, மஹாராஷ்டிராவின் பாசந்தி மற்றும் சாபுதானா கிச்சடி, கத்திரிக்காய் சாதம், பிஹாரில் சாப்பிட்டது, கல்கத்தாவின் மாவா லட்டு, அஜ்மேர் புஷ்கரில் மட்டும் கிடைக்கும் மால்புவா எனப்படும் மில்க் ஸ்வீட், கர்நாடக உணவு தித்திக்கும் சாம்பார், கொத்துமல்லிச் சட்டினி,ஆந்திராவின் ஊறுகாய் மற்றும் வடை,கேரளாவின் குழாய்ப்புட்டு, கடலக்கறி, அதைத் தவிர இருக்கவே இருக்கிறது நம் தமிழ் நாட்டு உணவு. இந்த்தனையும் நான் ஒருத்தி மட்டும் சாப்பிட்டேன் என்று நினைக்காதீர்கள். போதாக்குறைக்கு குஜராத்தின் டோக்ளாவை விட்டு விட்டேன். அங்கிருந்து சண்டை போடுகிறார்கள். 5,6 வருடம் எங்கள் ஊரில் இருந்து விட்டு நன்றி மறந்தாயே என்று. இன்னும் இருக்கிறது. எழுத.கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன். என்ன ஒரு கஷ்டம் என்றால் இப்படி வித விதமாகச் சாப்பிட்டதால் ஒரிஜினல் டேஸ்ட்டே மறந்து விட்டது. போதாக்குறைக்கு போன வருஷம் யு.எஸ்ஸில் சாப்பிட்ட Starbucks Latte எனப்படும் காபி, Mac-Donaldன் Chocklate drink என்று எத்தனையோ இருக்கிறது. அதிலிருந்து நான் தேடிக் கண்டு கொண்டது எல்லாம் நம்ம ஊரு ரசம் சாதம், அப்பளம் இரண்டையும் மிஞ்ச எதுவும் கிடையாது என்பது தான்.காயோ, கனியோ, பூவோ, பழமோ இந்தியாவின் சுவையை மிஞ்ச எதுவும் இல்லை.
அடேங்கப்பா! இத்தனை ஐய்ட்டங்களா? காசில்லாம, ஓட்டலில் மாவாட்டியது பற்றி சொல்லவே இல்லையே? சரி, சரி, கோச்சுகாதீங்கோ! சமையல் லிஸ்ட பாத்தா, சென்னைக்கு வரும் போது உங்காத்துக்கு வரலாம் போலிருக்கே?
ReplyDeletebtw, the post w.r.to cell phone, is really thought provoking. especially these gals are using mobile frequently. yaarta thaan pesuvaaloo? enna thaan pesuvaaloo? yamariyen paraparamE!
tcho tcho...nalla pasikkum potha indha posta padikanum...
ReplyDeletehaiyooo ellathaiyum nyabagap padutheteengaleee
///அதிலிருந்து நான் தேடிக் கண்டு கொண்டது எல்லாம் நம்ம ஊரு ரசம் சாதம், அப்பளம் இரண்டையும் மிஞ்ச எதுவும் கிடையாது என்பது தான்.//
ReplyDeleteமிகவும் உண்மை.
அம்பி, இதில் நான் விட்டது நிறைய. என் அம்மா செய்யும் புடலங்காய் பஜ்ஜி, தட்டாம்பயறுச் சுண்டல்(சின்ன வெங்காயம் போட்டு), அதே சின்ன வெங்காயம் போட்டுப் புளி உப்புமா இது எல்லாம் என் favourite. especially mother's make.இன்னும் ஆக்ரா கோட்டை மஹாராஜா ஹோட்டலின் பட்டர் பராட்டாவும், ஆலு மட்டரும் இன்னும் எத்தனையோ இருக்கிறது. போனால் போகிரது என்று ரொம்பக் கொஞ்சமாக எழுதி இருக்கிறேன். காசில்லாமல் நீங்க ஆட்டியதை நான் பார்த்து விட்டேன்.ஒருத்தரிடமும் சொல்லவில்லை.
ReplyDeleteரொம்ப நன்றி முத்து, என் வீட்டிற்கு முதலில் வந்ததிற்கு.
ReplyDelete