என்னோட தினசரி அலுவல்களைப் பட்டியல் போட்டா இப்படி வரும். அது எதுக்கு எங்களுக்குனு கேட்கிறவங்களுக்குப் பொறுமை, பொறுமை.
தினம் காலை 5 மணிக்கு எழுந்தால் பல் தேய்த்துக் காபி சாப்பிடுவதில் இருந்து(துபாய்வாசிக்குக் கவலையில்லை. வாரம் ஒரு நாள் வெள்ளி அன்று மட்டும் பல் தேய்ப்பதாக declare செய்து விட்டார்.) என்னுடைய நித்தியப்படி வேலையான யோகா, தியானம் செய்வது எல்லாம் முடிக்க 7-30 ஆகி விடும். சில நாள் 8 மணி கூட ஆகும். அதற்குப்பின் எங்கள் இருவருக்கான காலை உணவு தயாரிப்பு, குளியல், மதியம் சமையல், சாப்பாடு, வீட்டு வேலை செய்யும் அம்மாவிற்குத் தேவையானதைக் கொடுப்பது என்று மதியம் 1 மணி ஆகி விடும். இடையே வரும் போன் கால்கள், தேடி வரும் நண்பர், உறவினர், வாசலில் வரும் சோப்பு, சீப்பு முதல் வாஷிங் மெஷின், வாக்குவம் க்ளீனர் வரை விற்பவர் எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டும். அக்கம்பக்கம் யாராவது ஊரில் இல்லை என்றால் அவர்களுக்கு வரும் தபால், கூரியர் காரனுக்கு பதில் சொல்வது எல்லாம் அடங்கும். இந்த 1 மணியில் இருந்து சாயந்திரம் 4, 4-30 வரை கணவர் ஓய்வு எடுப்பதால் அந்த நேரம்தான் என்னுடைய தமிழ்மணம், முத்தமிழ்க்குழுமம் கருத்துப் பரிமாற்றம் எல்லாம். 4-30க்குப் பிறகு 5-30க்கு நடைப் பயிற்சிக்குப் போனால் இரவு 7 மணிக்கு வந்து 7-30, 8மணிக்குள் சாப்பிட்டு விட்டு சமையல் அறை சுத்தம் செய்து விட்டு 9 மணிக்கு வந்தால் என் பெண்ணுடன் 10 மணி வரை chatting. அதற்குப் பின் படுப்பேன். என் பெண் வராத நாளில் எப்போதாவது தமிழ் மணம் பார்ப்பேன். அப்போது நான் தெரிந்து கொண்ட அதிசயங்களைத் தான் இப்போது கூறப் போகிறேன்.
1. இலவசக் கொத்தனார் எப்போது தூங்குவார்? எனக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயங்களில் இது முதன்மையானது.
2. பெனாத்தலார் பின்னுட்டாங்களைக்கூட மெயிலில் கொடுக்கிறாரே? இலவசம் ப்ளாகில் கூட இப்படித்தான் கொடுத்தார்.கணினியை விட்டு எப்போது எழுந்திருப்பார்?
3.மேற்குறிப்பிட்ட சந்தேகம் சிபி, மற்றும் பொன்ஸிடமும் உண்டு. சிபியாவது ஆபீஸ் வேலை என்று நடுவில் லீவ் போட்டார். பொன்ஸ் மடிக் கணினியைக் கீழேயே வைக்க மாட்டாரா?
4.ஒரு ரூபாய், ஒரே இந்தியா என்ற திட்டத்தில் தயாநிதி மக்களைக் கவர்ந்த மாதிரி இந்த பொன்ஸ் "ஒரு வெண்பா, நூற்றுக் கணக்கான பின்னூட்டம் "என்று ஆனது எப்படி?வெண்பாவில் அது என்னமோ தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் என்கிறார்கள். ஏன் ஆவக்காயைச் சேர்க்கவில்லை? எனக்குப் பிடிக்கும் என்பதாலா?
5. அப்புறம் என்னமோ தளை தட்டுகிறது. சீர் வேண்டும் என்கிறார்கள். அந்தத் தளை எந்தத் தளை? சீர் எனக்கு மட்டும் இல்லையா? தளைகளை உடைத்தெறிந்து எனக்கும் சீர் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
6.இந்த மருத்துவர், அதாங்க, ரஷ்யாக்காரர், இலவசம் கூட என்னை மருந்து வாங்கிச் சாப்பிட சிபாரிசு பண்ணினாரே அவர் எனக்குத் தெரிந்து பின்னூட்டம் இடுவதைப் பற்றிக் கோனார் நோட்ஸ் தான் போட்டார். இலவசத்தின் பதிவில் படித்தேன். ஆனால் பொன்ஸுக்கு மற்றும் சிலருக்குத் தனியாகப் பாடம் எடுத்திருக்கிறார் போலத் தெரிகிறது. அது எப்படி?
வலைப் பதிவாளர்கள் அனைவரையும் வாழ்க, வளர்க என்று சொல்லி வாழ்த்தும் "பின்னூட்ட நாயகி" முன் தூங்கி முன் எழும் திருமதி துளசி கோபால் அவர்களின் கண்ணில் இவை எல்லாம் உடனுக்கு உடனே படுவது எப்படி?
நான் கொஞ்ச நேரம் வேறு வேலை எதாவது கவனித்து விட்டு வந்தால் உடனே பின்னூட்டங்கள் நூற்றுக் கணக்கில் எகிறி விடுகிறது.
அதாங்க ஒண்ணுமே புரியலே உலகத்திலே, ஒருத்தொருத்தர் ஒரு பின்னூட்டத்திற்கே பிள்ளையாருக்குத் தேங்காய் எல்லாம் உடைக்கிறோம். எல்லாம் மச்சம், மச்சம் என்பாங்களே, அது இது தானா? இதுக்கு யாரு பின்னூட்டம் விடப்போறாங்க? வழக்கம் போலத்தான். பெருமூமூமூமூச்ச்ச்ச்ச்சுசுசுசுசுசுசுசு
முக்கியமாக அமெரிக்காவில் இருக்கும் இலவசம் இங்கு இந்தியாவில் எப்போதும் பின்னூட்டங்களோடு குடி இருப்பது எப்படி? தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும்.
முதல் போணி, சங்கத்து ஆளுங்க பின் தொடருங்க :-)
ReplyDeleteஎன்ன மாதிரி, வர பின்னுட்டத்துக்கு மொத்தமா ஓரே பதில் பின்னுட்டம் போடுகிறவங்களுக்கும்,
ReplyDeleteஇல்லாவிட்டால், சைலண்ட்டாய் இருக்கும் சோம்பேறிகளைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
puriyuthu, intha ambi mattum than comment kudukkaraan. vera yaarum varaliyenu thanee?
ReplyDeleteathen ippo than pickup aguthu illa?
last postuku 10 comments polirukku?
ப ம க அல்லது வ வா ச கட்சியில் சேருபவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கிறார்களோ என்னவோ ?
ReplyDelete:-)))
பின்னூட்ட நாயகின்னு பட்டம் வந்தபிறகு பின்னூட்டாமல் இருக்க முடியுமா?
ReplyDeleteஅதென்னவோ பதிவுகள் எல்லாம் வரவர 'சட்'ன்னு கண்ணில் பட்டுவிடுகின்றது.
இப்பப் புரிஞ்சதா?
ஆமாம் யோகா, தியானம்....?ம்ம்ம்ம்
நமக்கு இது எல்லாமே 'தமிழ்மணம்'தானுங்க.
அடுத்த போஸ்ட் "சாம்பாருக்கு உப்பு போட வில்லை"னு போடுவேள்னு பாத்தா, "ஒன்னுமே புரியலை"னு போஸ்ட் போடறேளே! :)
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteகீதாக்கா,
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம்.. ரஷ்யா மருத்துவர், அமெரிக்க கொத்தனார், நியூசி துளசி அக்கா, இந்திய பொன்ஸ், சிபி எல்லாரையும் பத்தி சந்தேகம் கேட்டு நீங்க போட்ட இந்தப் பதிவுக்குக் கூடவா பின்னூட்டம் வரவில்லை?!!!!
ரொம்ப குறைப் பட்டதுனால உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுகிறேன்.. அடுத்தப் பின்னூட்டத்தில்... :)
கீதாக்கா,
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம்.. ரஷ்யா மருத்துவர், அமெரிக்க கொத்தனார், நியூசி துளசி அக்கா, இந்திய பொன்ஸ், சிபி எல்லாரையும் பத்தி சந்தேகம் கேட்டு நீங்க போட்ட இந்தப் பதிவுக்குக் கூடவா பின்னூட்டம் வரவில்லை?!!!!
ரொம்ப குறைப் பட்டதுனால உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுகிறேன்.. அடுத்தப் பின்னூட்டத்தில்... :)
//மேற்குறிப்பிட்ட சந்தேகம் சிபி, மற்றும் பொன்ஸிடமும் உண்டு. சிபியாவது ஆபீஸ் வேலை என்று நடுவில் லீவ் போட்டார். பொன்ஸ் மடிக் கணினியைக் கீழேயே வைக்க மாட்டாரா?
ReplyDelete//
தற்போது பதில் எழுத நேரமின்மையால் பிறகு வருகிறேன்.
:-)
அதுவரை ஆற்றலரசி, பிகிலு பொன்ஸ் தங்களுக்கு தக்க வழிகாட்டுதல்களை வழங்குவார்.
யேன்? நான் வந்து இதொ பின்னூட்டம் போட்டாசு. கமான் கீதா. சீயர் அப். தேமா, புளிமா, நேர் நிறை இதை எல்லாம் கத்துக் கொள்ள எனக்கும் ஆசைதான்.15 வயதில்,(இலக்கணம்) கற்றுக்கொண்டதை மறந்தால் (மறக்க சந்தர்ப்ப்ங்கள் நிறைய) இது தான் நடக்கும்.நெட்டில் பாடம் நடக்கிரதா பார்த்து படித்தால் போகிரது.
ReplyDeleteஒரு பின்னூட்டத்திற்கு இப்படி எல்லாம் எழுதணும்னு இப்போதான் புரியுது. வராதவங்க எல்லாம் வந்துட்டாங்களே.
ReplyDeleteஇதிலே என்னான்னா நான் பேப்பர் படிக்குறது, மாத, வார, மாதம் இரண்டு முறை புத்தகங்கள் படிக்கிறது எல்லாம் கணக்குலெ எடுக்கலை. எல்லாம் போக இருக்கும் கொஞ்ச நேரத்தில பின்ன்னூட்டம் பெறுவது எப்படினு படிக்கவே நேரம் பத்தலை அதுவும் சின்னப் பசங்க கிட்ட இருந்து.
இதுல நான் என்னத்தை எழுதி என்னத்தைப் பின்னூட்டம் வாங்கறது.
லதா, வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலியான என்னிடமா இந்தக் கேள்வி?
ReplyDeleteஅம்மா பொன்ஸு,பின்னூட்ட இளவரசியே,
உங்க மருத்துவர் எனக்கு அரைகுறைப் பாடம்தான் சொல்லிக் கொடுத்திருக்கார்னு இப்போ புரியுதா? அது சர், ஒரே பின்னூட்டத்தைப் பலமுறை கொடுத்தால் எண்ணிக்கை எகிறும்னு நினைப்பா?
உஷா, உங்க கைராசி பின்னூட்ட மழைனு இல்லாட்டாலும் தூறலாவது இருக்கு.
ReplyDeleteஅம்பி, உங்கள் வரவு என்றுமே நல் வரவு.
பின்னூட்ட நாயகி, பின்னூட்டங்களின் ராணி, திருமதி துளசி கோபால் அவர்களுக்கும் அவரின் யானைச் சின்னத்திற்கும் எப்போதுமே நல்வரவு.
மனு, உண்மையாகவே தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ளப் போகிறீர்களா?
என்ன சிபி, நிஜமாவே பிசியா? நைஸா நழுவறீங்க. ஒரு பின்னூட்டத்திற்கு எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது பாருங்க.
ReplyDeleteஇந்த "விட்டது சிவப்பு" எல்லாம் எங்கேயோ போயிட்டாங்க.
உங்க பதிவு எல்லாமே பொறுமையாப் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு. கருவிப்பட்டை எங்கே காணோம்?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅக்கா, போன பின்னூட்டத்தை அழித்து விடவும்.. தவறாகப் போட்டுவிட்டேன்.. :)
ReplyDeleteஅக்கா, தங்கள் திருக் கரத்தால் பின்னூட்ட இளவரசி என்னும் பட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி.. ஆனா அதை எல்லாரும் ஒத்துக்கணுமே..
ReplyDeleteசரி விடுங்க.. அதெல்லாம் வேண்டாம்.. இப்போ உங்க சந்தேகங்களுக்கு வருவோம்..
1. இலவசக் கொத்தனார் எப்போது தூங்குவார்? எனக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயங்களில் இது முதன்மையானது.
பெரிய கேள்வி.. எனக்கும் தெரியலை.. நான் குட் நைட் சொல்லிட்டுத் தூங்கப் போகும் போது இருக்காரு.. திரும்பி வந்து ஆபீஸ் போய் கமெண்ட் போட்டாலும் பப்ளிஷ் பண்ணுகிறார்.. அனேகமா நீங்க நெட்டுக்கு வரும் அந்த ரெண்டு, மூணு மணி நேரம் தான் தூங்குவாரோ என்னவோ!!!
அக்கா, தங்கள் திருக் கரத்தால் பின்னூட்ட இளவரசி என்னும் பட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி.. ஆனா அதை எல்லாரும் ஒத்துக்கணுமே..
ReplyDeleteசரி விடுங்க.. அதெல்லாம் வேண்டாம்.. இப்போ உங்க சந்தேகங்களுக்கு வருவோம்..
1. இலவசக் கொத்தனார் எப்போது தூங்குவார்? எனக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயங்களில் இது முதன்மையானது.
பெரிய கேள்வி.. எனக்கும் தெரியலை.. நான் குட் நைட் சொல்லிட்டுத் தூங்கப் போகும் போது இருக்காரு.. திரும்பி வந்து ஆபீஸ் போய் கமெண்ட் போட்டாலும் பப்ளிஷ் பண்ணுகிறார்.. அனேகமா நீங்க நெட்டுக்கு வரும் அந்த ரெண்டு, மூணு மணி நேரம் தான் தூங்குவாரோ என்னவோ!!!
ப்ளாக்கர் சொதப்புகிறது.. இதையும் நான் இரண்டாம் முறையாகப் போட்டிருந்தால் ஒன்றை அழித்து விடவும்.. :)
இந்தப் பதிலை நீங்கள் பிரசுரித்ததும் வந்து மிச்சம் சொல்கிறேன்...:-D
ReplyDeleteகற்றுக்கொள்ளலாம் என்று தான் சொன்னேன்.!(காமராஜர் காலத்தில் நான் படித்தேன்)
ReplyDeleteஆளை விடம்மா.எல்லோரும் கவிதையில் இறஙகினால்.. படிப்பதற்கு யார் இருப்பார்கள்?ரசிகையாக இருப்பது தான் எனக்கு இசைந்த பொழுது போக்கு.
ஹெல்லோ சாம், கருவிப்பட்டை வாங்கவில்லை. அது வாங்கினால் தான் பதிவுகள் வருமா என்ன? அது சரி, பொறுமையாப் படிக்கிற அளவுக்கு ரம்பம் என்கிறீர்களா? இது என்ன வஞ்சப் புகழ்ச்சி அணியா?
ReplyDeleteபின்னூட்ட இளவரசியே, நான் எல்லாப் பதிவுக்கும் போற போது இந்தப் புதுப் பட்டத்தைப் பற்றி சொல்லிடறேன். சரியா? நான் நெட்டுக்கு வரும் அந்த நேரம் அவங்களுக்கு நடு ராத்திரி. ஆனால் இவர் என்னன்னா முழிச்சுகிட்டு இருக்காரே. என்ன வரம் வாங்கிட்டு வந்திருக்காரோ தெரியலை.
மனு, சும்மா
ReplyDeleteவார்த்தைகளைப்
போடுங்க அம்மா,
இது தான்
கவிதை என்று
சொல்லிடுவோம்
நாம் சும்மா.
இது ஒரு புதுக் கவிதை.
smiley அவங்க அவங்க போட்டுக்கணும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கொத்துவேலை நடக்கிறது. எனக்கு என்ன இ.கொ. வந்தா வேலை செய்யப்போறார். சமீபத்தில் சித்தாள்னு ஒருத்தர் கூட வந்தார். அவரையும் காணோம். நான் தான் யோசித்து யோசித்துச் செய்யணும்.
Dear All,
ReplyDeleteOn behalf of Thalai Kaippu's Dream girl Kaiponnu's English knowledge light scheme we are proud to honour Geetha Akka with a new title " KELVIYIN NAYAGi"
The function will be held in Washington DC
presided by GEorge W bush, president WORRILESS YOUTH ASSOCIATION USA
Spl guests
TONY BLAIR President WORRILESS YOUTH ASSOCIATION UK
spl invitee
MOST HONOURABLE Thalai KAIPULLAI.
Program organised by
Va.vaa.Sa European union in association with
Va.vaa.sa Valaiguda
Va.Vaa.sa Malgate
ஆஹா, என் பெருமை இப்போவாவது தெரிந்ததே.
ReplyDelete