%uஒரு மாறுதலுக்கு என் அண்ணாவின் பெண் ஜனனி எழுதிய கவிதை.+2 முடித்திருக்கிறாள். பத்திரிகைத்துறையில் சாதிக்க எண்ணம். பள்ளியில் படிக்கும்போது மாநில அளவிலான கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். மேடையில் தலைப்புக் கொடுத்தால் உடனே கவிதை எழுதும் ஆற்றல் உண்டு. இதில் இருந்தே தெரியுமே என்னைப் போல இல்லைனு. இந்தக் கவிதை சமீபத்தில் ல்கணவனை இழந்த என் கடைசி நாத்தனாரை நினைத்து எழுதப் பட்டது. அவளையும் அத்தை என்றேகூப்பிடும் ஜனனி எழுதிய கவிதை இது.
கண்ணீர்ப்பூக்கள்
கண்களில் கண்ணீரின் தேக்கங்கள்மனதில் உணர்ச்சிகளின் தேக்கங்கள்என் கணவன் இறந்ததை நினைத்துஅணைத்துக் கொள்ளப் பிள்ளைகள் இல்லைஆறுதல் சொல்லக் கணவனும் இல்லைபூவும் பறி போனது என்னவர் தம்பரிவும் பறி போனதுயாரைதேடி நான் போவதுகுந்திக்குப் பஞ்ச பாண்டவர்கள் இருந்தார்கள்ஆள ஒரு ராஜ்ஜியம் இல்லை.எனக்கோ ராஜ்ஜியம் இருந்தும் ஆளஅவர் இல்லையேபாலைவனமானது என் வாழ்க்கை ஆறுதல் சொல்ல உறவுகள் வரலாம் ஆனால்ஆதாரமான அவர் இல்லையேஇருவரும் ஒன்றெனக் கலந்து வாழ்ந்தோம்ஓருயிர் இங்கே ஒருயிர் அங்கே என்றானதுசாலையோர மரம் கேட்டால் என்ன சொல்வேன்நம் வீட்டு ரோஜா கேட்டால் என்ன சொல்வேன்?தூக்கமும் வரவில்ல என் துக்கமும் குறையவில்லைஎன் திலகம் அழிந்து விட்டது என் தலையும் சாயாதோ என்கிறது மனம்வருகிறேன் நானும் வருகிறேன் நீங்கள் இல்லாத மலர்ச்சோலை எனக்குப் பாலைவனம்தான்நீங்கள் இல்லாத விடியல்கள் எனக்குஇருள்கள் தான்நீங்கள் இல்லாத உலகம் எனக்கு நரகம்தான்நீங்கள் இல்லாத வாழ்க்கை எனக்குஇறப்புத் தான்இதோ என் உயிரும் உங்களைச் சேரட்டும்
ஜனனியின் படைப்புகள் மேன்மேலும் மெருகேறி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி, நன்மனம்.
ReplyDeleteநல்ல கவிதை. அந்நேரத்து சோகத்தில் அப்பெண்ணிண் நிலைமையை வடித்திருக்கிறார்.
ReplyDeleteஎனினும் கணவன் இறந்து விட்டாலோ கைவிட்டு விட்டாலோ வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. நம் குழந்கைளுக்கு நாம் பாஸிடிவ் எண்ணங்களை விதைத்தால் அவர்கள் தங்கள் வாழ்வை நல்ல முறையில் எதிர்கொள்வார்கள் என்பது திண்ணம்.
எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. இன்னும் சில நாட்களில் பெருமை பல பெறுவார் என எண்ணுகிறேன். வாழ்த்துகள்.
ReplyDeleteஜனனியின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது.
ReplyDeleteஆனாலும் அவரை நிறைய வாசிக்கச்சொல்லுங்கள்.
நிச்சயம் நல்ல கவிதைகளை நாளை தருவார் என்றே நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்.
தோழன்
பாலா
வாழ்த்துச் சொன்ன கைப்புள்ள, முதன் முதல் வந்த பாலபாரதி, சுல்தான் அனைவருக்கும் நன்றிகள். நன்றிகள்.நன்றிகள்.
ReplyDelete