என்னுடைய முதல் திருமண நாள் எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. முதல் திருமண நாளுக்கு எனக்கு ஏதாவது பரிசு தர என் கணவர் நினைத்தார். என்னிடம் நிறையப் புடவை இருந்ததால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. தங்க நகை எதாவது தரலாம் என்றால் கைவசம் இருந்தது வெறும் 50/-ரூபாய் தான். இத்தனைக்கும் இரண்டு பேரும் அப்போது வேலைக்குப் போய்க்கொண்டு இருந்தோம். சென்னை மின்வாரியத்தில் சில மாதங்கள் குப்பை கொட்டிக் கொண்டிருந்தேன். திருமணத்திற்கு முன் நுழைவுத் தேர்வு எழுதித் தேர்வாகி போஸ்டிங்கை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சமயம் திடீரென்று திருமணம் ஆகிவிட்டது. திருமணத்தன்று பாங்க் ஆஃப் இந்தியாவில் நேர்முகத் தேர்வு இருந்தது. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறதோ அதுதான் கிடைக்கும் என்று.
தங்க நகை வாங்கப் பணம் இல்லாததோடு அப்படி ஏதாவது இருந்தால் அது திருமணம் ஆகாமல் இருந்த என்னுடைய மூன்றாவது நாத்தனாருக்காகச் சேமிக்க வேண்டிய தேவை இருந்தது. என்னை விட இரண்டு வயதே சிறியவள். எங்கள் வீட்டில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் வேலைக்குச் செல்பவர்கள் இல்லை. அவருடைய தம்பிகள் இருவரும் பள்ளி மாணவர்கள். இந்த நிலையில் வந்த என்னுடைய முதல் திருமண நாள் எங்களால் மிகவும் எதிர்பார்க்கப் பட்டது . அப்போது என் பெண் வயிற்றில் 4 மாதம். இதுவும் சேர்ந்து கொண்டது.
திருமணத்திற்குப் பின் பரமக்குடிக்கு வந்த போஸ்டிங்கைச் சென்னைக்கு மிகப் பிரயத்தனத்துடன் மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போதே மின்வாரியச் சேர்மன் என்னிடம் "உன் கணவர் வேலை அகில இந்தியப் பணியைச் சேர்ந்தது. உன்னால் வேலையை விடாமல் பார்க்க முடியுமா?" என்று கேட்டிருந்தார். நல்ல வேளையாக நான் வேலையை விடுவதற்குள் அவர் பணி ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்.
திருமண நாள் அன்று இருவரும் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி விட்டுச் சமைத்துச் சாப்பிட்டு விட்டுப் பின் வெளியில் எங்காவது போய் வரலாம் என்று சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தோம். அங்கிருந்து ஜார்ஜ் டவுனில் உள்ள ஏதாவது கோவிலுக்குப் போக முடிவு செய்து NSC BOSE ROAD வந்தோம். அங்கே சுற்றிக் கொண்டிருந்த சமயம் ஒரு கடிகாரக் கடையில் அப்போது மிகவும் பிரசித்தி பெற்றிருந்த BENTEX STRAP என் கண்ணில் பட்டது. உடனே என் முகத்தைப் பார்த்த என் கணவர் அதன் விலை கேட்டார். அப்போது அது ரூ.15/-. அதை எனக்கு வாங்கிக் கொடுத்தார். எனக்கு ஒரு பக்கம் குற்ற உணர்ச்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. அதை வாங்கி என்னுடைய "கேமி" கைக் கடிகாரத்தில் உடனே அதை இணைத்துப் போட்டுக் கொண்டேன். பின் இருவரும் கந்தகோட்டம் வந்து கந்தஸ்வாமியைப் (கடவுள்ங்க) பார்த்து விட்டுத் திரும்பி வீட்டிற்குச் செல்வதற்காக செண்ட்ரல் ஸ்டேஷன் வந்தோம். பக்கத்தில் இருந்த மூர் மார்க்கெட் புத்தகக் கடைக்கு வர விரும்பியதால் அங்கே வந்தோம். மூர்மார்க்கெட் பக்கத்தில் HOTEL PICNIC GARDEN RESTAURENT என்று கண்ணில் பட்டது. உடனே உள்ளே நுழைந்தோம். மேலே ரூஃப் கார்டன் போய்ப் பட்டாணி பாத்தும், பீச் மெல்பாவும் சாப்பிட்டோம். கையில் உள்ள காசு உணவு உபசரிப்பவருக்குக் கொடுக்க வேண்டிய இனாமிற்கும் சேர்த்து வருமா என்ற கவலை. ஒருவழியாக இருந்தது எல்லாம் திரட்டிக் கொடுத்தோம். நான் தினமும் பஸ் சார்ஜ் கொண்டு போவதில் மிச்சம் இருப்பதுவும் சேர்ந்து கைப்பையில் இருந்ததால் ஒருவாறு சரிக்கட்டிவிட்டோம். திரும்பிப் போவதற்கு நல்லவேளையாக இருவரிட மும் ரெயில்வே பாஸ் இருந்தது. மனதை நிறைத்த சந்தோஷத்துடன் வீட்டிற்குப் போனோம். அதற்குப் பின் எத்தனையோ திருமண நாள் வந்துவிட்டது. சில திருமண நாட்கள் குழந்தைகளுடன் தனியாக அவர்கள் விருப்பத்துடனும், சில கூட்டுக் குடும்பத்தில் இருந்த காரணத்தால் எங்கள் இருவருக்கும் இடையே மட்டும் கொண்டாடப்பட்டது. இப்போது சில வருடங்களாக நாங்கள் இருவர் மட்டும் கொண்டாடிக் கொள்கிறோம். பெண்ணும், பையனும் தொலைபேசி மூலமோ அல்லது இணையம் மூலமோ வாழ்த்துச் சொல்கிறார்கள். எத்தனை வந்தாலும் அந்த முதல் திருமண நாளுக்கு ஈடு இல்லை என்பது என் எண்ணம். என்னிடம் அந்தக் கைக்கடிகாரம் அதே ஸ்ட்ராப்புடன் இன்னும் பத்திரமாக இருக்கிறது.
ஆமாம் கீதா. காசுக்கும், சந்தோஷத்துக்கும் தொடர்பு கிடையாது.
ReplyDeleteபிக்னிக் ஹோட்டலா? அதுக்கும் எங்களுக்கும்கூட ஒரு சம்பந்தம் இருக்கு:-)))
//என்னிடம் அந்தக் கைக்கடிகாரம் அதே ஸ்ட்ராப்புடன் இன்னும் பத்திரமாக இருக்கிறது.//
ReplyDeleteவாழ்க்கையைப் போல் அதுவும் நன்றாய் ஒடிக்கொண்டிருக்கிறதாக்கா?
ரொம்ப நன்றி துளசி,
ReplyDeleteஆமாம் மனசு, தனமும் கீ கொடுத்தால் நன்றாக ஓடும் கடிகாரம் தான் அது. என் பெண் கட்டிக் கொள்ளக்கூட அரை மனதுடன் தான் தருவேன்.
யாருமே எத்தனாவது வருஷம்னும் கண்டுபிடிக்கலை, போன பதிவிலே இருந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வில்லை.
ReplyDelete33 Years???
ReplyDeleteஇன்று 25வது வருட திருமண வாழ்க்கையை கொண்டாடும் உங்களூக்கும் உங்கள் கணவருக்கும் எனது வாழ்த்துக்கள். அன்பன் தி.ரா.ச
ReplyDeleteகல்யாண நாள் வாழ்த்துக்கள்!!! இன்னிக்கு அந்த ஸ்ட்ராப்பை எடுத்து பார்த்திருப்பீங்களே?
ReplyDeleteபார்த்தீங்களா...நீங்க தான் லேட்...நான் கரெக்டா வந்து வாழ்த்து சொல்லிட்டேன் :))
Happy anniversary akka :)
ReplyDeleteஇந்த வருட கல்யாண நாளுக்கு என்ன செய்தீர்கள் என்று இன்னும் 25 வருடம் கழித்துச் சொல்லுவீங்களா? :)
டச் பண்ணிட்டீங்களே மேடம்...இதப் படிச்சதும் சின்ன வயசுல ஓ'ஹென்றி எழுதுன "The Gifts of Magi" சிறுகதை தான் ஞாபகம் வந்தது. போன பதிவுல நான் சொன்ன பதில் சரியா?
ReplyDeleteநல்ல பதிவினை தந்து இருக்கீங்க..
ReplyDeleteகைப்புள்ள, "ஓஹென்றி" நாவ்லில் இரண்டு பேருமே இல்ல தியாகம் செய்வாங்க. இதில நம்ம பங்கு கிஃப்டை வாங்கிக்கிட்டதும், ஹோட்டலில் சாப்பிட்டதும் தான். மத்தபடி உங்க ஊகம் எல்லாம் தப்பு. யாருமே கண்டுபிடிக்கலை. நீங்க எல்லாம் என் பதிவுக்கும் வந்து வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றி.
ReplyDeleteஅடுத்த புதிர் இதைப் பார்க்கறவங்களுக்கு மட்டும். மே 22 என் பிறந்த நாள். எத்தனாவது?
// அடுத்த புதிர் இதைப் பார்க்கறவங்களுக்கு மட்டும். மே 22 என் பிறந்த நாள். எத்தனாவது? //
ReplyDeleteஅதைத்தான் உங்களின் "சாதம் வைக்க மறந்து விட்டேன்" பதிவில் மாயவரத்தார் சொல்லிவிட்டாரே:-)))
44 (or) 47 Years.
ReplyDeleteஆமாங்க கீதா, நான் ரொம்ப சின்ன பையன் தான்.(25). உங்கள் பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரே மாதத்தில் இரு விஷேசம், இரண்டு பட்டு புடவையா? ம் ம் ம் நடத்துங்க...........
புடவை எல்லாம் ஒண்ணும் கிடைக்காது. கவனிக்க. என் ஞாபகம் வருதே-2. ஆனாலும் கணக்குப் போடுவதில் மன்னர்தான் நீங்க. தப்புத் தப்பாக. உங்க கணக்கு டீச்சர் சரியாப் பாடம் சொல்லித் தரலியா?
ReplyDelete