எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 04, 2006

54. அனுபவம் புதுமை-3

நான் கல்யாணம் ஆன போது என்

கணவர் புனே நகரில் இருந்தாலும்,

அதன் பின் ஒரு மாதத்தில் அவருக்கு

அங்கே இருந்து சென்னை

மாற்றலாகி விட்டது. ஆகவே முதல்

மூன்று, நான்கு வருடங்கள் இங்கேயே

கழிந்தது. அவ்வப்போது என் கடைசி

நாத்தனார் இங்கே வருவாள். என்

கணவரின் பெரிய தம்பி எங்களுடன்

இருந்து வந்தார். ஆகவே மாமியார்,

மாமனார் வருவதும் போவதுமாக

இருக்கும். நாங்கள் தனியாகக்

குடித்தனம் செய்தது என்பது

என்னவோ ஒரு 2 அல்லது மூன்று

மாதம் இருந்தால் பெரிது. பிலாயில்

இருக்கும் என் பெரிய நாத்தனார்,

உள்ளூரில் இருந்த 2-வது நாத்தனார்

என்று வீட்டில் ஆட்கள் இருந்த

வண்ணம் இருக்கும். மேலும்,

கிராமாந்தரச் சூழ்நிலையில் இருந்து

பழக்கப்பட்ட என் மாமியாருக்கு நான்

என் கணவருடன் நேருக்கு நேர்

பேசுவது மிகவும் புதுமையாகப்

பட்டதால் நாங்கள் அதிகம்

பேசுவதைக்கூடத் தவிர்த்து

வந்தோம்.(உடனே எனக்கு வயசு 90

என்று யாரும் கணக்குப் போட

வேண்டாம். வயசு என்னமோ 16 கூட

ஆகவில்லை). இப்படி இருக்கும்

நிலையில் என் கணவரின்

உத்தியோகம் உயர்வு அடைந்து

அங்கேயே மேலும் ஒரு வருஷம்

நீட்டித்த காரணத்தால்

நிர்ணயிக்கப்பட்ட மூன்று

வருடங்களுக்கு மேல் ஆகி 4-வது

வருடம் ஆனதால் அந்த வருடம்

மாற்றல் தவிர்க்க முடியவில்லை.

மாற்றலும் ஆனது. சாதாரணமாக புனே

அல்லது டெல்லி தான் அப்போது

சென்னை வாசிகளை அதிகம்

மாற்றுவார்கள். எங்களை அதிசயமாக

ராஜஸ்தானில் உள்ள அஜ்மேருக்குப்

பக்கத்தில் உள்ள "நசீராபாத்"

என்னும் மிலிட்டரி

கண்டோன்மெண்டுக்கு மாற்றி

இருந்தார்கள். கணவருடன் ஜாஸ்தி பேசிக்கூடப் பழக்கம் இல்லாத நான் திகைத்துப் போனேன். அது வரை அந்த ஊர்

பேர் கேட்டது இல்லை. எங்கள்

குடும்பத்தில் அப்பா மட்டும் காசி,

ராமேஸ்வரம் என்று போயிருந்தார்.

இதே பாதுகாப்புக் கணக்குத் துறை

வேலை கிடைத்துப் புனேயில் ஒரு

மாதம் வேலை பார்ப்பதற்குள் குளிர்

தாங்கவில்லை என்று திரும்பி

விட்டார். என் கணவர் குடும்பத்தில்

அநேகம் பேர் மும்பயில், டெல்லியில்

என்று இருந்தார்கள். என்றாலும் யாருக்கும் இந்த மாதிரி ஒரு ஊருக்கு மாற்றல் வந்தது இல்லை.

ராஜஸ்தான் என்றதுமே எல்லாருக்கும்

நினைவு வந்தது பாலைவனம் தான்.

ஊரே பாலைவனம் என்று கற்பனை

செய்து கொண்டு மெதுவாக அட்ல
ஸைத் தேடிப் பிடித்து ஊர் பேர்

இருக்கிறதா என்று தேடிக் கண்டு

பிடித்தோம்.அப்பாடா ஊர் பேர்

இருந்தது. ரெயில்வேயில் டிக்கெட்

வாங்கப் போனால் இரண்டு வழிகள்

இருக்கிறது. எந்த வழியில் போக

விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள்.

வழி இருப்பதே தெரியாது, அதில்

இது வேறா என்று நினைத்துக்

கொண்டு இரண்டு வழியையும்

ஆராய்ந்தார் என் கணவர். ஒரு வழி

சென்னை-செண்ட்ரல் ஸ்டேஷனில்

இருந்து டெல்லி போகும் ரெயிலில்

ஆக்ரா வரை போய் அங்கிருந்து

அஜ்மேர் போகும் வண்டியைப்

பிடிப்பது. இதில் ஒரு வசதி என்ன

என்றால் சில மணி நேரம் முன்னால்

போகலாம். ஆனால் அஜ்மேரில்

இருந்து உள்ளூர் லோகல் வண்டியில்

அல்லது நசீராபாத் வழியாகச்

செல்லும் ஏதாவது பாசஞ்சர்

வண்டியில் நசீராபாத்தை அடைய

வேண்டும். மற்றது, சென்னையில்

இருந்து சிகந்திராபாத் போய்

அங்கிருந்து கிளம்பும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ்ஸில் போகவேண்டும். இது அஜ்மேர் வரை போகும். நசீராபாத் வழியாகப் போகும். ஆதலால் நேரே நசீராபாத்தில் இறங்கிக் கொள்ளலாம். ஆனால் பயண நேரம் கூட. ஆகவே நாங்கள் தேர்வு செய்தது ஆக்ரா வழியாக. மேலும் அப்போது கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ் நிஜமாகவே வேகமாகப் போய்க் கொண்டு இருந்தது. ஆகவே அதில் முன்பதிவு செய்து கொண்டோம். ஆளாளுக்கு ஆலோசனைகள். என் மாமியார் இங்கேயே இருக்கட்டும் என, என் அப்பா, அம்மாவோ புது ஊர், புது இடம், என்னதான் ஹிந்தி தெரிந்தாலும் பழகவேண்டுமே எனக் கவலை. கையில் 1 1/2 வருடக் குழந்தை வேறு. சென்னைத் தண்ணீர்க் கஷ்டத்தைப் பார்த்துப்பழக்கப்பட்டுப் பல கதைகள் எழுதி வந்த என் சித்தப்பாவோ ராஜஸ்தானில் தண்ணீர்க் கஷ்டம் என்று தண்ணீர் பிடிக்க நிறையப் பாத்திரம் எடுத்துப் போக யோசனை கூறினார். எரிவாயு இணைப்பு மாற்றம் பெற்றுக் கொண்டதை அறிந்த வேறு சில உறவினர்கள் அங்கே எல்லாம் எரிவாயு கிடைக்காது. பேசாமல் எங்களிடம் கொடுத்து விடு. திரும்பச் சென்னை வந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்றனர். எனக்கோ என்னுடைய இணைபிரியாப்புத்தகங்களான பாரதியின் கவிதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதி, கதைத் தொகுதி மற்றும் கல்கி, தேவன் புத்தகங்கள், உ.வே.சா. நினைவு மஞ்சரி, தனிப்பாடல் திரட்டு போன்றவை கையிலே எடுத்துச் செல்ல வேண்டும் என்று. (இதில் நிறைய புத்தகங்கள் காணாமல் போய் விட்டன. அது தனிக்கதை) மேலும் சித்தப்பா என் திருமணப் பரிசாக அவரின் முதல் கதைத் தொகுதியான "வாழ்விலே ஒரு முறை" புத்தகம் தனிப்பட்ட முறையில் எனக்குக் கையெழுத்திட்டுக் கொடுத்து இருந்தார். அதையும் எடுத்து வைத்துக் கொண்டேன். போதாதற்கு அங்கே படிக்க என் அண்ணாவின் நூலகத்தில் இருந்து சில புத்தகங்கள். சில புத்தகங்களுக்குச் சந்தாக் கட்டினோம். இப்படியாக கல்லுரல், அம்மி என்று சாமான்கள். போனதும் சமைக்க வேண்டிய பாத்திரங்கள். குழந்தையின் விளையாட்டுச் சாமான்கள். மொத்தம் எத்தனை என்று நினைக்கிறீர்கள்? முப்பதோ என்னமோ சரியாக நினைவில் இல்லை. 20-க்கு மேல் கட்டாயம். இதைத் தவிர பீரோ போன்ற பெரிய சாமான்கள் பிரேக் வானில் வந்தன. நாங்கள் கிளம்பும் அன்று ஸ்டேஷனில் வழி அனுப்பும் கூட்டம் எல்லாரும் சேர்ந்து சாமானை ஏற்றி விட்டார்கள். முதல் வகுப்பு இரண்டு பேர் போகும் கூப்பேயில் முன் பதிவு செய்யப்ப்பட்டிருந்ததால் அதில் ஏற்றி விட்டு எங்களையும் ஏறச் சொன்னார்கள். வண்டியும் கிளம்பத் தயாரானது. எல்லாரிடமும் பிரியாவிடை பெற்று விட்டு இரண்டு பேரும் எங்கள் பகுதிக்குள் போனால் உள்ளே நுழையவே முடியவில்லை. எங்கெங்கு காணினும் சாமானடா!!!!!!!!!!!! இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு முழித்தோம். வண்டி வேகம் எடுத்தது. கூடூர் தாண்டி நெல்லூர் வந்தது.

18 comments:

  1. இன்று internet explorer மூலம் வந்து பதிவு போட்டேன். அதுவும் சொதப்பல் தான். படிக்கிறவர்கள் கவிதை என்று நினைத்துக் கொள்ளுங்கள். வேறு என்ன செய்வது புரியவில்லை. இத்தனைக்கும் இருமுறை எடிட் செய்தேன். டைம் தான் வேஸ்ட். அது இஷ்டத்திற்குதான் நடக்கிறது. சொன்னபடி கேட்பது இல்லை.

    ReplyDelete
  2. ராஜஸ்தான் பயண அனுபவம் ஆரம்பமே கலக்கலா இருக்கு. தொடரும் வேறெ போட்டு ஆர்வத்தெ அதிகப்படுத்தறீங்க...ம்ம்ம். நடக்கட்டும். சரி சித்தப்பா பேர் என்ன?

    அப்புறம் நீங்க ஒரு சின்ன வேலை செய்யுங்க. Click start, programs, accessories, notepad பிறகு நோட்பேடில் நீங்கள் விரும்புவதை தட்டச்சி பின்னர் வெட்டி வலைப்பதிவில் ஒட்டவும். பிரச்சினை குறையும். நோட்பேடில் இருப்பதையும் சேமிக்கவும். சேமிக்கும் போது யுனிகோட் முறையில் சேமிக்கவும்.
    நன்றி.

    ReplyDelete
  3. நான் கல்யாணம் ஆன போது என் கணவர் புனே நகரில் இருந்தாலும், அதன் பின் ஒரு மாதத்தில் அவருக்கு அங்கே இருந்து சென்னை
    மாற்றலாகி விட்டது. ஆகவே முதல் மூன்று, நான்கு வருடங்கள் இங்கேயே கழிந்தது. அவ்வப்போது என் கடைசி நாத்தனார் இங்கே வருவாள். என் கணவரின் பெரிய தம்பி எங்களுடன் இருந்து வந்தார். ஆகவே மாமியார், மாமனார் வருவதும் போவதுமாக இருக்கும். நாங்கள் தனியாகக் குடித்தனம் செய்தது என்பது என்னவோ ஒரு 2 அல்லது மூன்று மாதம் இருந்தால் பெரிது. பிலாயில் இருக்கும் என் பெரிய நாத்தனார், உள்ளூரில் இருந்த 2-வது நாத்தனார் என்று வீட்டில் ஆட்கள் இருந்த வண்ணம் இருக்கும். மேலும், கிராமாந்தரச் சூழ்நிலையில் இருந்து பழக்கப்பட்ட என் மாமியாருக்கு நான் என் கணவருடன் நேருக்கு நேர் பேசுவது மிகவும் புதுமையாகப்பட்டதால் நாங்கள் அதிகம் பேசுவதைக்கூடத் தவிர்த்து வந்தோம்.(உடனே எனக்கு வயசு 90 என்று யாரும் கணக்குப் போடவேண்டாம். வயசு என்னமோ 16 கூட ஆகவில்லை).

    இப்படி இருக்கும் நிலையில் என் கணவரின் உத்தியோகம் உயர்வு அடைந்து அங்கேயே மேலும் ஒரு வருஷம் நீட்டித்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி 4-வது வருடம் ஆனதால் அந்த வருடம் மாற்றல் தவிர்க்க முடியவில்லை. மாற்றலும் ஆனது. சாதாரணமாக புனே அல்லது டெல்லி தான் அப்போது சென்னை வாசிகளை அதிகம் மாற்றுவார்கள். எங்களை அதிசயமாக ராஜஸ்தானில் உள்ள அஜ்மேருக்குப்பக்கத்தில் உள்ள "நசீராபாத்" என்னும் மிலிட்டரி கண்டோன்மெண்டுக்கு மாற்றி இருந்தார்கள். கணவருடன் ஜாஸ்தி பேசிக்கூடப் பழக்கம் இல்லாத நான் திகைத்துப் போனேன். அது வரை அந்த ஊர் பேர் கேட்டது இல்லை. எங்கள் குடும்பத்தில் அப்பா மட்டும் காசி, ராமேஸ்வரம் என்று போயிருந்தார். இதே பாதுகாப்புக்க்குத் துறை வேலை கிடைத்துப் புனேயில் ஒரு மாதம் வேலை பார்ப்பதற்குள் குளிர் தாங்கவில்லை என்று திரும்பிவிட்டார். என் கணவர் குடும்பத்தில் அநேகம் பேர் மும்பயில், டெல்லியில் என்று இருந்தார்கள். என்றாலும் யாருக்கும் இந்த மாதிரி ஒரு ஊருக்கு மாற்றல் வந்தது இல்லை.

    ராஜஸ்தான் என்றதுமே எல்லாருக்கும் நினைவு வந்தது பாலைவனம் தான். ஊரே பாலைவனம் என்று கற்பனை செய்து கொண்டு மெதுவாக அட்லஸைத் தேடிப் பிடித்து ஊர் பேர் இருக்கிறதா என்று தேடிக் கண்டுப்பிடித்தோம்.அப்பாடா ஊர் பேர் இருந்தது. ரெயில்வேயில் டிக்கெட் வாங்கப் போனால் இரண்டு வழிகள் இருக்கிறது. எந்த வழியில் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள். வழி இருப்பதே தெரியாது, அதில் இது வேறா என்று நினைத்துக்கொண்டு இரண்டு வழியையும் ஆராய்ந்தார் என் கணவர். ஒரு வழி சென்னை-செண்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து டெல்லி போகும் ரெயிலில் ஆக்ரா வரை போய் அங்கிருந்து அஜ்மேர் போகும் வண்டியைப்பிடிப்பது. இதில் ஒரு வசதி என்ன என்றால் சில மணி நேரம் முன்னால் போகலாம். ஆனால் அஜ்மேரில் இருந்து உள்ளூர் லோகல் வண்டியில் அல்லது நசீராபாத் வழியாகச்செல்லும் ஏதாவது பாசஞ்சர் வண்டியில் நசீராபாத்தை அடைய வேண்டும். மற்றது, சென்னையில் இருந்து சிகந்திராபாத் போய் அங்கிருந்து கிளம்பும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ்ஸில் போகவேண்டும். இது அஜ்மேர் வரை போகும். நசீராபாத் வழியாகப் போகும். ஆதலால் நேரே நசீராபாத்தில் இறங்கிக் கொள்ளலாம். ஆனால் பயண நேரம் கூட. ஆகவே நாங்கள் தேர்வு செய்தது ஆக்ரா வழியாக. மேலும் அப்போது கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ் நிஜமாகவே வேகமாகப் போய்க் கொண்டு இருந்தது. ஆகவே அதில் முன்பதிவு செய்து கொண்டோம்.

    ஆளாளுக்கு ஆலோசனைகள். என் மாமியார் இங்கேயே இருக்கட்டும் என, என் அப்பா, அம்மாவோ புது ஊர், புது இடம், என்னதான் ஹிந்தி தெரிந்தாலும் பழகவேண்டுமே எனக் கவலை. கையில் 1 1/2 வருடக் குழந்தை வேறு. சென்னைத் தண்ணீர்க் கஷ்டத்தைப் பார்த்துப்பழக்கப்பட்டுப் பல கதைகள் எழுதி வந்த என் சித்தப்பாவோ ராஜஸ்தானில் தண்ணீர்க் கஷ்டம் என்று தண்ணீர் பிடிக்க நிறையப் பாத்திரம் எடுத்துப் போக யோசனை கூறினார். எரிவாயு இணைப்பு மாற்றம் பெற்றுக் கொண்டதை அறிந்த வேறு சில உறவினர்கள் அங்கே எல்லாம் எரிவாயு கிடைக்காது. பேசாமல் எங்களிடம் கொடுத்து விடு. திரும்பச் சென்னை வந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்றனர். எனக்கோ என்னுடைய இணைபிரியாப்புத்தகங்களான பாரதியின் கவிதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதி, கதைத் தொகுதி மற்றும் கல்கி, தேவன் புத்தகங்கள், உ.வே.சா. நினைவு மஞ்சரி, தனிப்பாடல் திரட்டு போன்றவை கையிலே எடுத்துச் செல்ல வேண்டும் என்று. (இதில் நிறைய புத்தகங்கள் காணாமல் போய் விட்டன. அது தனிக்கதை) மேலும் சித்தப்பா என் திருமணப் பரிசாக அவரின் முதல் கதைத் தொகுதியான "வாழ்விலே ஒரு முறை" புத்தகம் தனிப்பட்ட முறையில் எனக்குக் கையெழுத்திட்டுக் கொடுத்து இருந்தார். அதையும் எடுத்து வைத்துக் கொண்டேன். போதாதற்கு அங்கே படிக்க என் அண்ணாவின் நூலகத்தில் இருந்து சில புத்தகங்கள். சில புத்தகங்களுக்குச் சந்தாக் கட்டினோம். இப்படியாக கல்லுரல், அம்மி என்று சாமான்கள். போனதும் சமைக்க வேண்டிய பாத்திரங்கள். குழந்தையின் விளையாட்டுச் சாமான்கள். மொத்தம் எத்தனை என்று நினைக்கிறீர்கள்? முப்பதோ என்னமோ சரியாக நினைவில் இல்லை. 20-க்கு மேல் கட்டாயம். இதைத் தவிர பீரோ போன்ற பெரிய சாமான்கள் பிரேக் வானில் வந்தன.

    நாங்கள் கிளம்பும் அன்று ஸ்டேஷனில் வழி அனுப்பும் கூட்டம் எல்லாரும் சேர்ந்து சாமானை ஏற்றி விட்டார்கள். முதல் வகுப்பு இரண்டு பேர் போகும் கூப்பேயில் முன் பதிவு செய்யப்ப்பட்டிருந்ததால் அதில் ஏற்றி விட்டு எங்களையும் ஏறச் சொன்னார்கள். வண்டியும் கிளம்பத் தயாரானது. எல்லாரிடமும் பிரியாவிடை பெற்று விட்டு இரண்டு பேரும் எங்கள் பகுதிக்குள் போனால் உள்ளே நுழையவே முடியவில்லை. எங்கெங்கு காணினும் சாமானடா!!!!!!!!!!!! இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு முழித்தோம். வண்டி வேகம் எடுத்தது. கூடூர் தாண்டி நெல்லூர் வந்தது. (தொடரும்)

    ReplyDelete
  4. //அது இஷ்டத்திற்குதான் நடக்கிறது. சொன்னபடி கேட்பது இல்லை.//

    என்ன பண்றது எல்லா கணினியும்
    இப்ப மனைவி போல ஆகிவிட்டது.

    //கணவருடன் ஜாஸ்தி பேசிக்கூடப் பழக்கம் இல்லாத நான் திகைத்துப் போனேன்.//

    நிஜமாவா....

    திகைத்தது என்னவோ வூட்டுக்காரர்னு சொன்னாங்க.... எப்பிடிடா வீட்டு சப்போட் ஒண்ணும் இல்லாம சமாளிக்கிறதுண்ணு!!!!

    ReplyDelete
  5. உங்கள் பாத்த ரொம்ப பாவமா இருக்குங்க கீதா. ஆனா என்னால ஒன்னும் பண்ண முடியாது........ வேணும்னா பொழுதுனைக்கும் கணிப்பொறி கட்டிக்கிட்டு இருக்காங்களே நம்ம மகளிரணி தலைவி அங்ககிட்ட கேட்டு பாருங்களேன், ஏதாச்சும் உதவி பண்ணுனாலும் பண்ணுவாங்க.
    எங்க உங்க திருமணம் பால்ய விவாகமா........... இருங்க உங்க மேல ஒரு வழக்கு பதிவு பண்ணுறேன். அப்படி வேணாம் என்றால் வயது 16 என்று சொல்லுவதை நிறுத்துங்க. 25ல் இருந்து 30 குள் சொன்னா கூட சரி........ 16 ரொம்ப தான் ஒவரா இருக்கு.

    ReplyDelete
  6. மஞ்சூர் ராஜா, சித்தப்பா பேர் நீங்க தான் கண்டு பிடிக்கணும். அதுக்குத் தான் பேர் சொல்லாமலே நிறைய முறை அவரைப் பற்றி எழதுகிறேன்.

    ReplyDelete
  7. மனசு, நெருப்பு நரியிலே உலவும்போது சமயத்திலே ப்ரவுசர் அசையக்கூட மாட்டேங்குது. என்ன பண்ண? ஒண்ணும் புரியலியே! மவுஸ் க்ளிக்கினால் நகரவே மாட்டேங்குது.கர்சராலே பிடித்டு அதை தாஜா செய்து கொஞ்சி வழிக்குக் கொண்டு வர வேணும்.

    ReplyDelete
  8. நாகை சிவா, எனக்கு வயசு 16 கூட இல்லை. மனசு கேட்ட ஒரு கேள்வியிலே நான் பாதியா உடைஞ்சு போயிட்டேன் தெரியாதா? அதனாலே வயச்ய் இப்போ 8 தான். இப்போ கூட பாருங்க இந்த கமெண்டை க்லிக் செய்தேனா உன்னுடைய ப்ளாகே இல்லை என்று சொல்கிரது. இந்த மாதிரி ஒரு கணினியோட நான் என்னத்தைச் செய்ய. முதலில் நெருப்பு நரியில் இதை அடித்துவிட்டு வரவே இல்லை.எக்ஸ்ப்ளோரெரில் கேட்கவே வேண்டாம்.This page cannot be found. இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  9. It is very difficult to put those comments even in my page. I do not know what is going on? It is always disconnected or else someother happenings. Something must be done to this. There is continuous disconnection and again again I am gettin it reconnected.

    ReplyDelete
  10. .(உடனே எனக்கு வயசு 90

    என்று யாரும் கணக்குப் போட

    வேண்டாம். வயசு என்னமோ 16 கூட

    ஆகவில்லை).
    அப்போதா? இப்போதா?
    தி.ரா.ச

    ReplyDelete
  11. யாரு சித்தப்பா? கல்கி? எம் எஸ். அம்மா கணவர்? கி.வா.ஜ?
    அகிலன்?
    ரொம்ப சச்பென்ஸாக இருக்கே?
    சி.பி.யு வை மாத்துங்கபா.
    பெட்டர் ஸ்டில் ,மெமரி அளவு அதிகரிக்க செய்யுங்கள். மதர் பொர்டு மாத்தலாம். குழந்தை பசியால் அழ ஆரம்பித்து இருக்குமே?

    ReplyDelete
  12. Mmmm, autographaaa? nadakkattum, nadakkatum.
    romba nalla irukku..

    ReplyDelete
  13. trc,
    நான் என்றும் 16 தெரியாதா?
    (நாகை சிவா மனதுக்குள்; நற நற நற நற)

    ReplyDelete
  14. வள்ளி, நீங்க சொன்ன யாருமே பொருந்தலியே. கல்கி எப்போவோ இறந்துட்டார். அகிலனும், கி.வா,ஜ வும் கூட என் கல்யாணத்தப்போ இல்லைனு நினைக்கிறேன். சதாசிவம்?ம்ஹூம். நீங்க பாஸ் இல்லை. கொஞ்சம் யோசிங்க. நானே 16 வயசுதான்னா என் சித்தப்பா? இப்போ கூட கலக்குகிறார்.

    ReplyDelete
  15. அம்பி, என்ன சும்மா இரண்டு வரி எழுதிட்டுப் போறீங்க?

    ReplyDelete
  16. வேதா, ரொம்ப நாள் கழிச்சு வந்து என் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டினதுக்கு நன்றி. என் தமிழ் மொழிபெயர்ப்பு எப்படி? நல்லா இல்லே?

    ReplyDelete
  17. உங்க சித்தப்பா இன்னும் கலக்குராரா?மண்டை காய்கிறதே.பா.ராகவன்?, தேவிபாலா?சுஜாதா சார்?மாலன்? ஓஒ பாலகுமாரன்? ராஜேஷ்குமார்/ போங்கப்பா.சொல்லுங்க யாரின்னு.

    ReplyDelete
  18. வள்ளி, கண்டுபிடிங்க, நீங்க சொன்ன யாருமே இல்லை. என்னோட திருமண நாள் பதிவுலே கூட க்ளூ இருக்கு.

    ReplyDelete