இன்னிக்கு இன்னும் இணைய இணைப்புக் கிடைக்கவில்லை. முதலில் வந்தது 2 நிமிஷம் கூட ஆகலை, உடனே போயிடுச்சு. எப்போ வரும் தெரியாது. அதற்குள் எழுதி வேணா வச்சுக்கலாம்னு எழுத ஆரம்பிச்சேன். "நேத்திக்கு," னு எழுத ஆரம்பிச்சதும் "நிறுத்து" னு ஒரு கூக்குரல். "யாரு" பயத்துடன் பார்த்தேன். "நான் தான் உன்னோட மனசாட்சி." என்றது. "இது என்ன புதுசா? நான் தமிழ் சினிமாவெல்லாம் ரொம்பப் பாக்கறதில்லை." என்றேன். "அலட்டாதே! என்ன எழுதப்போறே?" என்று கேள்வி வந்தது. "இது என்ன கேள்வி? நேத்திக்கு சாயந்திரம் நடந்ததை எழுதப் போறேன்." இது நான். "அப்படியா? அப்போ பாதிலே விட்டிருக்கே அது?" மனசாட்சியின் கேள்வி. "இது என்ன கேள்வி? அப்புறம் எழுதுவேன்." நான். "ஓஹோ~ ரொம்பப் பெரிய எழுத்தாளினு நினைப்போ? பெரிய சஸ்பென்ஸ் கொடுக்கிறியாக்கும்?" கேள்வி வந்தது. "அதெல்லாம் இல்லை. இது கொஞ்சம் வித்தியாசமான காமெடியாயிருக்குமேனு தான்......." நான் இழுத்தேன். "ஆஹா, தெரியுமே, உன் காமெடி எல்லாம். ஒருத்தர் ஒண்ணு சொல்லக்கூடாதே உடனே தலை கழுத்திலே நிக்காதே!' அதட்டல் வந்தது. "என்ன சொல்றே நீ? என் தலை எங்கே போகும்? என் கழுத்திலே தான்...." நான் முடிக்கவில்லை. "என்கிட்டேயே ஜோக் அடிக்கிறியா?" என்று கோபமாகக் கேள்வி வரவே, "இப்பொ என்ன செய்யறது?" என்றேன் ஈனஸ்வரத்தில். நான் செய்வது அறியாமல் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த என் கணவர், "என்ன, மறுபடி ஏதாவது தப்புப் பண்ணிட்டியா?" என்று கேட்டார். "இல்லை, மூளையே குழம்பிக் கிடக்கு. எதை எழுதறதுனு தெரியலை. யோசிக்கிறேன்." என்றேன். "அட, அது வேறேயா?" என்றார். "எது வேறேயா?" நான் கேட்டேன். "அதான், உனக்கு மூளை குழம்பி இருக்குன்னியே! ஆச்சரியமா இல்லை! உனக்கு மூளை இருக்குங்கறது?" என்று கேட்டார். நான் பல்லைக் கடித்த கடியில் கடைவாய்ப் பற்கள் கீழே விழுந்து விட்டது. எழுத்தாளியாக இருப்பது என்றால் இம்மாதிரி விமரிசனங்களையும் ஏற்கும் பக்குவம் வர வேண்டும் என்று (வேறே வழி?) என்னை நானே தேற்றிக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.
*********************
அப்பாடி, ஒரு வழியாகக் கனெக்ஷன் வந்து விட்டது. இனிமேல் வெளியிடத் தடை எதுவும் இல்லை.
**********************
பஸ் போய்க் கொண்டு இருந்தது. ஒரு வழியாக செகண்ட் லைன் பீச் வந்து விட்டது. ராயபுரம் பழைய ஸ்டேஷன் என்பதால் பீச் ஸ்டேஷனில் இருந்து அங்கே போய் விட்டால் அப்புறம் நடக்கும் தூரம் என்றார்கள். பார்க்கலாம், என்பது என் நினைப்பு. பீச் ஸ்டேஷனில் போய் விசாரித்தால் தான் ராயபுரம் ஸ்டேஷன் போக வேண்டும் என்றால் செண்ட்ரல் தான் போக வேண்டும் என்றும், அதுவும் அங்கே அப்படி ஒண்ணும் லோக்கல் வண்டி எல்லாம் நிற்காது என்றும் புரிந்தது. காலையில் கிளம்பும்போது சாப்பிட்டது. ப;சி வேறு, துக்கம் வேறு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. ஸ்டேஷனில் வேலை செய்த ஒருத்தரிடம் போய் என்னுடைய வேலையில் சேரும் கடிதத்தைக் காட்டிக் கேட்டபோது அதை அவர் கையில் வாங்காமலே "இ.பி.ஆஃபீஸ்தானே, இதோ இப்படிப் போய்த் திரும்பினால் அந்த பாங்க்கிற்கு அடுத்த கட்டிடம், கீழே காஷ் கவுண்டர். மேலே ஆஃபீஸ். " என்றார். அப்பாடி, இவ்வளவு கிட்டத்தில் இருக்கிறதே என்று சந்தோஷத்துடன் அந்த ஆஃபீஸுக்குள் நுழைந்தேன். அங்கே போய் மேலதிகார் யார் என விசாரித்து விட்டு என் கடிதத்தைக் காட்டினால் அவர், "இது DCA/Royapuram, இல்லைம்மா, DCA/Chennai, நீ போக வேண்டிய ஆஃபீஸ் தண்டையார் பேட்டையில் இருக்கிறது. நீ தினமும் எப்படி அம்பத்தூரில் இருந்து வருவே? பேசாம இந்த ஆஃபீஸ் கேட்டிருக்கக் கூடாதோ?' என்றார். "எனக்குத் தெரியவில்லை. தண்டையார் பேட்டைக்கு எப்படிப் போவது?" என்று கேட்டேன். "நாளைக்குப் போயேன். இப்போவே மணி 2 ஆகிறது." என்றார். "இல்லை, வழி சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்." "சரி, 6.-ம் நம்பர் பஸ்ஸில் போ." என்றார். "இறங்க வேண்டிய ஸ்டாப்?" "போலீஸ் ஸ்டேஷன்." " சரி, சார். தாங்ஸ்." மறுபடி பஸ் ஸ்டாண்டு. இன்னிக்கு எப்படியும் போயே ஆகணும்னு ஒரே வெறி வந்தது. 6.-ம் நம்பர் பஸ் வந்தது. நானும் ஏறினேன். கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டேன். "போலீஸ் ஸ்டேஷன்" ரொம்பப் பெருமையாக இடம் தெரிந்த் நிம்மதியில் சொன்னேன். கண்டக்டர் "இப்படி மொட்டையாச் சொன்ன எப்படி? எந்தப் போலீஸ் ஸ்டேஷன்? இந்த ரூட்டில் மூன்று வருகிறது." என்றார். "கடவுளே, இது என்ன சோதனை?" என்று நினைத்துக் கொண்டு இ.பி.ஆஃபீஸ், இருக்கிறதே அங்கே" என்றேன். "அடப் பாவமே, அதுக்கு இந்த 6-ம் நம்பரில் ஏன் ஏறினே? 6-C இல்லே போகும்? இது ராயபுரம் வழியாப் போய்க் காலரா ஆஸ்பத்திரி ரோடு போகும். அதுக்கு முன்னாலேயே திருவொத்தியூர் ஹை ரோடிலே இருக்கு நீ சொல்ற ஆஃபீஸ். காலரா ஆஸ்பத்திரியிலே இருந்து ரொம்ப தூரம் திரும்ப நடக்கணும்." என்றார். "ராயபுரம் தான் போட்டிருக்கு." நான். "ஆஃபீஸ் பேரு அதும்மா. ஆனால் இருக்கிற இடம் திருவொத்தியூர் ஹை ரோடு. நான் எத்தனை நாளா இந்த ரூட்டிலே இருக்கேன். தெரியுமா? நீ எங்கே இறங்கி எப்படி போவே? இது என்னடா தொந்திரவு?" என்று கண்டக்டர் வாய் விட்டுப் புலம்பவே என் மனம் கலங்கியது.
**********************
"என்ன, லிங்க் வந்ததா? எழுதியாச்சா?" என் கணவர் கேட்க, நான் லிங்க் சரியாக வராத எரிச்சலில் இருந்தேனா? "என்னவோ எழுதினேன், மண்ணாங்கட்டி." என்றேன். "பரவாயில்லை, அதைக்கூட எழுதலாமா?" அவர். "ஏன், என்ன விஷயம்?"அப்பாவியாக நான். "இல்லை, உன் மண்டைக்குள் இருக்கிறதை வெளியில் கொட்டி இருக்கியே, அதான் கேட்டேன்." என்று சொல்ல மறுபடி நான் பல்லைக் கடிக்கப் பல் விழுந்தது நினைவுக்கு வர வாயை மூடிக் கொண்டேன்.
-:)))))))))))))))))))))))))
ReplyDeleteஇப்ப எத்தன பல் இருக்கு? இல்ல பல் செட்டா??
சாம்பு சாருக்கு கற்பூரபுத்தி, எல்லாம் கரெக்ட்டா சொல்றார்.
//
ReplyDeleteமூளையே குழம்பிக் கிடக்கு. எதை எழுதறதுனு தெரியலை. யோசிக்கிறேன்." என்றேன். "அட, அது வேறேயா?" என்றார். "எது வேறேயா?" நான் கேட்டேன். "அதான், உனக்கு மூளை குழம்பி இருக்குன்னியே! ஆச்சரியமா இல்லை! உனக்கு மூளை இருக்குங்கறது?"
//
இது என்ன சின்னபிள்ளைதனமா இருக்கு..அப்ப என்னை மாதிரி மூளையில்லாதவங்க யாரும் யோசிக்கவே கூடாதா??
adakka odukkamaana chinnaponnukku ippadi adankaapidari manasatchiyaa?
ReplyDeletenambave mudiyaliye TRC
hahaaa, sema comedy...
ReplyDeleteAmarar Kalkiyin padaipugalil ippadi thaan melliya comedy ezhaiyodum..
intha commenta Maama ta kaatunga.
(pavaam Kalki nu sonna athukku naan poruppu illai!)
than muyarchiyil satrum manam thalaraatha vethaalam ohhh, sorry! sorry!! vikramaathithai, mindum bus erinaal! correctaaa? :)
கீதா, பத்தி பிரித்து எழுதுங்க, படிக்க செளகரியமாய் இருக்கும்.
ReplyDeleteஎடிட்டிங் என்று ஒன்று உண்டு. எழுதிவிட்டு, ஒரு முறை படித்தால், தேவையில்லாத வரிகளை வார்த்தைகளை நீக்கிவிடலாம் :-)
கீதா அக்கா, உங்க ஆத்துக்கார அப்ப அப்ப தைரியமா உண்மை பேசுவார் போல........
ReplyDeleteபல் செட் கிழே விழுந்தா என்ன, கழுவிட்டு மறுபடியும் வாய்குள்ள போட்டுக்க வேண்டியது தானே......... :)))))
யக்கா உங்க மனசாட்சி பத்தின விமர்சனத்தை தேவையான அளவு அனைவரும் அலசி விட்டதால், அடுத்த கேள்விக்கு போவோம்
ReplyDeleteஅப்புறம் என்ன ஆச்சு?
adada oru pechukku sonna unmailaye mega serial renjukku iruukku,
ReplyDeleteunga mudhal naal prayana anubavatha naamo oru 4/5 masathukku kamichudalam,
then mudhal naal aluvalaga anubavam oru 4/5 masam
hmmmm peru enna vaikkalam.............
adutha comment-la solren
aana sooooooooooooooper
மனசு,
ReplyDeleteஆனாலும் இது நல்லா இல்லை, சொல்லிட்டேன், ஒரு 15 வயசுப் பெண்ணைப் பார்த்துப் பல்செட்டானு கேட்கலாமா?
மின்னுது மின்னல்,
ReplyDeleteதுணைக்கு வந்ததுக்கு நன்றி. நீங்களும் நம்மளை மாதிரினு தெரிஞ்சதும் ஒருஆறுதல் தான் வேறே என்ன?
ஹையா, ஜாலி, trc Sir நான் சின்னப்பொண்ணுதான்னு ஒத்துக்கிட்டாரே? Sir, டாங்க்ஸு,
ReplyDeleteஅம்பி, கல்கி எல்லாம் சும்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆ.
ReplyDeleteடாங்ஸு, புதுப் பேருக்கு.
வாங்க உஷா, அப்போ அப்போ நீங்க வருது ரொம்ப சந்தோஷம். பத்தி பிரிக்கணும்னு நினைச்சுக்கறது தான். ஆனால் உங்களுக்கு என் ப்ளாக்கர் பத்தித் தெரியலை. நான் எழுத ஆரம்பிக்க வேண்டியது தான், உடனே could not conect to blogger.com. publication may fail. அப்படினு message bar கண் சிமிட்டிக் கிட்டே இருக்கும். அது அசந்த நேரம் பார்த்து வெளியீடு செய்ய வேண்டி இருக்கு. அப்போ உள்ள கவலையிலே இது எல்லாம் பெரிசாத் தெரியறதில்லை. அதான். இனிமேல் பார்க்கலாம். எடிட்னு ஒண்ணு இருக்குங்கறது தெரியும். இது பண்ணற கலாட்டாவிலே நான் பதிவு போடறதே பெரிய விஷயம்.
ReplyDeleteroவேதா,
ReplyDeleteஅது என்ன dataone broadband connection? விவரம் தேவை. இன்னொருத்தர் கூட Reliance-ல் wireless connection கொடுக்கறதா சொன்னாங்க. ஆனால் TATA INDICOM -வேலை செய்யறது எல்லாம் VSNL தான். Cable கூட அவங்கதான் போட்டாங்க. Complaint attend பண்ணறதும் அவங்கதான். டாட்டா எந்த விதத்தில் இவங்களோட தொடர்புனு புரியலை. VSNLங்கறதாலே மாத்தக் கொஞ்சம் யோசனை.
சிவா,
ReplyDeleteதலைவிக்குச் செய்யற துரோகம் இது. நல்லா இல்லே. பல் செட்டா எனக்கு? ம்ஹும்.,....நற நறநறநற
ச்யாம்,
ReplyDeleteஅவசரப்பட்டால் எப்படி? அப்புறம் ஒரு மூணு பதிவுக்கு விஷயம் வேணாம்?
சின்னக்குட்டி,
ReplyDeleteமெகா சீரியல் பேரு என்ன? தேர்வு செஞ்சாச்சா? நீங்களும் ஒரு ஸ்பான்ஸர். பணமூட்டை தயாராக இருக்கட்டும்.