விதி வலிதுனு பதிவு போட்டு ஒரு நாள் ஆகலை. அது உண்மைனு நிரூபணம் ஆகி விட்டது. எப்படினு கேக்கறீங்களா? நேத்திக்குப் பதிவு ஒண்ணும் போட வேண்டாம்,தமிழ் மணம் பதிவுகள் சில படித்து விட்டு முத்தமிழுக்கு ஏதாவது எழுதலாம் என்று முடிவு செய்து தமிழ்மணம் பார்க்கும்போது காசியின் மட்டுறுத்தல் அறிவிப்பைப் பார்த்தேன். எப்போதும் பார்த்து விட்டுக் காசியின் பதிவிலே போய்ப் பின்னூட்டம் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். அது மாதிரி செய்யலாம் என்று நினைத்துப் போனேன். அப்போது ஒரு விபரீத ஆசை வந்தது. இன்னும் கருவிப் பட்டைநிறுவவில்லையே, இப்போது முயன்றால் என்ன? என்பது தான் அது. ஏற்கெனவே ஒரு முறை முயன்றேன். வரவில்லை. அத்தோடு விட்டு விட்டேன். நேற்று என்னுடைய ஆசை அதிகமாகவே அந்தப் பக்கத்துக்குப் போனேன். அப்போ தான் என்னோட எல்லாப் பதிவையும் காக்கா கொண்டு போச்சு.
கருவிப்பட்டை பதிக்கும் முறை சொல்லி இருக்கும் பக்கத்திற்குப் போய் அதில் சொல்லி
இருந்தபடி,
என்னுடைய templateஐத் திறந்து
வைத்துக் கொண்டு கருவிப்பட்டை
பதிக்கும் முறை பற்றிச் சொன்னபடியெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தேன். எல்லாம் முடித்து விட்டுக் கடைசியில் மறு வெளியீடுக்கு குறிப்பிட்டதையும் செய்து விட்டுப் பார்த்தால் ஒரே அதிர்ச்சி. ஒன்றுமே வரவில்லை. வெறும் வெற்றுப் பக்கங்கள் மட்டும் தான். என் மனம் என்னிடம், "நான் தான் சொன்னேனே, நீ கேக்கலை" என்று கிண்டல் செய்ய,நான் "இல்லை, இல்லை, இப்போது வரும் "என்றேன். மறுபடி republish allஐச் சொடுக்கினேன். இம்முறை வந்தது வெறும் தலைப்புக்கள் மட்டும். சரி தலைப்பில் தேடினால் கிடைக்கும் என்று ஒன்று ஒன்றாகப் பொறுமையாகச் சொடுக்கினால் வந்தது வெறும் வெற்றுப் பக்கங்கள் தான். ஹி,ஹி,ஹி, சிரிப்பு ஒலி. என் மனம் தான்.
"நான் தான் சொன்னேனே,உனக்கு வராதுனு." கெக்கலி கொட்டிச் சிரிக்கிறது. "தேடு" பகுதியில் போய்த் தேடினால் எல்லாம் இருக்கிறது. சரி என்று recover all blogs போட்டுப் பார்த்தால் எல்லாம் வந்தது. அதைப் publish கொடுத்து விட்டுப் பார்த்தால் மறுபடி தலைப்புக்கள் மட்டும் திரும்ப வந்திருக்கின்றன்.செய்வது அறியாமல் திகைத்து உட்கார்ந்திருந்தேன். அப்போது என் கணவர் வந்தார். என் முகத்தையும், கிட்டத் தட்ட நான் அழும் நிலையில் இருப்பதையும் பார்த்துப் பயந்து போய் விட்டார். "என்ன ஆச்சு?"
நான்: என் பதிவுகளைக் காணவில்லை.
அவர்:காணவில்லையா? என்ன புதிசாச் சொல்லறே?
நான் நடந்ததை விவரித்தேன். "உன் கையும், காலும் சும்மாவே இருக்காதே. பரவாயில்லை, மறுபடி எழுது."
நான்: என்ன, 72 பதிவுமா? அதிலும் சில பின்னூட்டங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அவர்:அப்படி என்ன வந்தது?
நான்;உங்களுக்கு என்ன தெரியும்? என் தமிழ் எழுத்தைப் பாராட்டி எழுதறாங்க. மேலும் ஒருத்தர் "தேவன்" எழுதற மாதிரி இருக்குனு வேறே சொல்லி இருக்காரு.
அவர்:வஞ்சப் புகழ்ச்சியாயிருக்கும். பாவம்.
நான்:யார் பாவம்? நானா?
அவர்:நீ இல்லை. "தேவன்" தான். இப்போ இருந்து இருந்தால் உன்னோடு சேர்த்துச் சொன்னதிலே நொந்து போய் எழுதறதையே விட்டிருப்பார்.
நான்:உங்களுக்குப் பொறாமை. அதான்.நான் இப்போ என்ன செய்யறது சொல்லுங்க. அதை விட்டுட்டு.
அவர்: உன் friends யாரையும் கூப்பிட்டுக் கேளேன்.
நான்:இன்னிக்குச் சனிக்கிழமை. ஜாஸ்தி யாரும் இருக்க மாட்டாங்க. எல்லாரும் நம்மளை மாதிரி வீட்டிலே இருந்து பதிவு போடறதில்லையே. சில பேர் சனிக்கிழமைனா இருக்கவே மாட்டாங்க."
அப்படியும் மனதில் ஒரு யோசனை தோன்றவே உதவி கேட்டு ஒரு பதிவு எழுதினேன். அது போச்சா, போகலையானும் தெரியலை. ஒரே வேதனை தாங்கலை. சரி, இதையே முத்தமிழ்க்குழுமத்திலே சொல்லி உதவி கேட்போம்னு ஜி-மெயிலுக்குப் போனேன். அங்கே நல்லவேளையாக உதவிகேட்டு எழுதினதை அழிக்காமல் வைத்திருந்ததால் அப்படியே போட்டு விட்டு உட்கார்ந்தேன். சற்று நேரத்துக்கு எல்லாம் மஞ்சூர் ராஜா என் அழைப்பைப் பார்த்துவிட்டு அவரும் யாராவது உதவ முடியுமா? எனக்கேட்டு எழுதினார். அப்புறம் டெலஸ்கோப்பிலே பார்த்த மாதிரி என் நிராதரவான நிலையைப் புரிந்து கொண்டு உடனேயே சாட்டிங் வந்தார். (நான் பொதுவாக நானாக யாரையும் சாட்டிங் கூப்பிடுவது கிடையாது. முக்கியமான காரணம் எல்லாரும் வேலைக்குப் போகிறவர்கள் என்பதுதான். அவரவர் வேலையில் இருக்கும்போது நான் வீட்டில் இருந்து கொண்டு சாட்டிங் கூப்பிடுவது முறை ஆகாது என்றுதான். யாராவது முத்தமிழில் கூப்பிட்டால் சாட்டிங் செய்வதுடன் சரி.) ஆகவே தான் இப்போதும் யாராவது மெயில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து உட்கார்ந்து இருந்தேன். திரு மஞ்சூர் ராஜாவைச் சாட்டிங்கில் பார்த்ததும் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.உடனே அவரிடம் நான் செய்த எல்லாவற்றையும் சொல்லவே அவர் வந்து என் ப்ளாகில் பார்த்து விட்டு மிகவும் அருமையான முறையில் templateஐயும் மாற்றி விட்டு எல்லா பதிவையும் திரும்பக் கண்டு பிடித்துக் கொண்டுவந்தார். நடுவில் என்னைக் கூப்பிட்டுப் பதிவுகள் எல்லாம் இருக்கின்றன. கவலை வேண்டாம், என்றும் வேலை முடித்து விட்டு மறுபடி கூப்பிடுவதாகவும் சொன்னார். அதே மாதிரி வேலை எல்லாம் முடித்து விட்டுக் கூப்பிட்டுச் சொன்னார். எனக்கு உயிர் வந்தது.மீண்டும் சிரிப்பும் வந்தது.
"எந்நன்றி கொன்றார்க்கும், உய்வுண்டாம், உய்வில்லை, செய்
நன்றி கொன்ற மகற்கு."
இன்று நான் இந்த மாதிரி ஒரு பதிவு போட திரு மஞ்சூர் ராஜா தான் காரணம். "நன்றி" என்று வெறும் வாய்வார்த்தையால் சொன்னால் உடனே மறந்து போவேன். அதனால் சொல்லப் போவது இல்லை.
சோதனைப்பின்னூட்டம்.
ReplyDelete"அம்பி, இப்போ புரியுதா? நான் சின்னப் பொண்ணுதான்னு. பாருங்க, எவ்வளவு கஷ்டப் பட்டுட்டேன், காக்காய் கொண்டு போனதிலே!
//நான் நடந்ததை விவரித்தேன். "உன் கையும், காலும் சும்மாவே இருக்காதே. பரவாயில்லை, மறுபடி எழுது."
ReplyDelete//
சரியாக சொல்லி இருக்கார்.. :-)
சரி விடுங்க....
ReplyDeleteகெட்டதிலும் ஒரு நல்லது பாருங்க. உங்க Template பாக்க இப்ப சூப்பரா இருக்கு. அப்படியே இந்த தலைப்பு மேட்டரையும் .........
கீதாவின் எண்ணங்கள், இல்லாட்டி என் எண்ணங்கள், என் நினைவலைகள், கீதாவின் நினைவலைகள், போல எதாவது ஒரு தமிழ் தலைப்பை வைங்களேன். இது ஒரு வேண்டுகோள் தான்...........
//"உன் கையும், காலும் சும்மாவே இருக்காதே.//
ReplyDeletehahaaa, sema funny.. now i agree that U r a சின்னப் பொண்ணுதான்னு!
i also saw that comedy blog from my office on sat. but i dono how to call u, as my mobile has no charge. Thank God, U recovered.
So, now onwards, don't play with blog and don't scold it as vethaalam and all. :)
btw, i've written your Tag "Aru amname Aru" and referred you on my recent post. paarthu santhosa padunga..
வேதா,
ReplyDeleteமுன்னாலேயே சொல்லி இருக்கக்கூடாதா? அன்னிக்கு ரொம்ப டென்ஷன் போங்க. இது மாதிரி நடக்கும்னதும் ஒரு ஆறுதல் வந்திருக்கு. இனிமேல் கண்டுக்கப்படாதுனு நான் முடிவு செஞ்சாலும் இந்த கையும், காலும் என்ன செய்யுமோ உத்திரவாதம் இல்லை.
ச்யாம்,
ReplyDeleteநாகை சிவாவின் வேலையை இப்போ நீங்களும் பகிர்ந்துக்கறீங்க போல் இருக்கு. அதான் சிரிக்கிறது. :-)
சிவா,
ReplyDeleteஅதெல்லாம் முயற்சி பண்ணாமல் இருப்பேன்னு நினைக்கிறீங்களா? அதுக்குத் தனிப் பதிவு போடலை,அவ்வளவு தான், மானத்தை வாங்காதீங்க, அப்புறம் சங்கத்துலே தலைவி பதவி போயிடப் போகுது.
அம்பி,
ReplyDeleteஇதுக்காகவெல்லாம் அசந்து போய் என் கருத்தை மாத்திப்பேனா என்ன? வேதாளம் தான் இந்த மாதிரி மாஜிக் எல்லாம் செய்யும். உங்க பதிவுக்கு வரேன் இப்போவே.