என்ன பார்க்கிறீங்க? கரடி எங்கேருந்து வந்ததுனா? நம்ம "மர்ம தேசம்" நாகா மாதிரி எனக்கும் காடுகள்னா பிடிக்கும். அதுக்காக இது காட்டில் இருக்கும் கரடினு நினைக்கிறவங்களுக்கு,அதுக்கும், இதுக்கும் சம்மந்தமே இல்லை.
ஒரு இரண்டு நாள் முந்தி நாங்க இரண்டு பேரும் நடைப் பயிற்சிக்காகப் போய்க்கிட்டு இருந்தோம். அப்படியே வீட்டுக்குத் தேவையான காயும் வாங்கி வந்துடலாம்னு. என் கணவருக்குக் கணினியில் உட்கார அவ்வளவாப் பிடிக்காது. அவர் உட்கார்ந்தால் அது வருமானவரி "சரள்" பத்தித் தெரிஞ்சுக்கவோ அல்லது நாங்க எங்கேயாவது ஊர் சுற்றக் கிளம்பினால் அந்த ஊர் பத்தித் தெரிஞ்சுக்கவோ தான் இருக்கும். சில சமயம் அது கூட என்னையே பார்க்கச் சொல்லுவார். நான் தினமும் வலைப்பூவில் நடந்தது பத்தி அவர்கிட்டே நாங்கள் சாயங்காலம் நடக்கும்போது சொல்லிக்கிட்டே வருவேன்.
அன்னிக்கும் அப்படியே சொல்லிட்டு இருந்தபோது சட்டுனு எனக்கு ஒரு சந்தேகம். நான் சொல்றதை அவர் கவனிக்கிறாரா இல்லையானு. உடனே கேட்டேன்"நான் இப்போ எதைப் பத்திச் சொல்றேன், சொல்லுங்க" என்றேன். உடனே அவர், "ம்ம்ம்ம்ம்ம்" இரு வரேன், அந்தக் கத்தரிக்காய் பார்த்தால் நல்லா இருக்கு. வாங்கட்டுமா?"
"வாங்குங்களேன். என்னைக் கேட்டால்" இது நான். அவர் கத்தரிக்காய் பொறுக்க என் கதை தொடர்ந்தது. மறுபடியும் சந்தேகம் இவர் என்னைக் கவனிக்கிறாரா இல்லையா? மறுபடி கேட்டேன். "என்னதான் செய்யறீங்களோ, நான் முக்கியமான விஷயம் சொல்றேன் ". அவர் "இரு, வரேன், இந்த வெண்டைக்காய் பிஞ்சா, முத்தலா சொல்லு". ங்கறார்.
நான் பல்லைக் கடித்தேன். "நான் ஒருத்தி இங்கே கரடி மாதிரிக் கத்திக்கிட்டு வரேன். நீங்க என்னன்னா கத்தரிக்காய், வெண்டைக்காய்ங்கறீங்களே"
உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. "பார்த்தியா, தப்பு உன்பேர்லதான். நீ தமிழ்ல பேசினால் எனக்குப் புரிஞ்சிருக்கும். கரடி பாஷை எனக்குப் புரியாதே". சுற்றிலும் கடைக்காரர்கள் சிரிக்க நான் நற நற நற நற நற நற வென பல்லைக் கடித்தேன்.
கரடி கத்திரிக்காய், வெண்டைக்காய் எல்லாம் சாப்பிடுமா?
ReplyDeleteதேன் கூடக் குடிக்கும் என்பார்கள். வரட்டுமா?
ReplyDeleteசில சமயம் நகைச்சுவை நம்மை வைத்தே நடக்கும் போது அந்த நேரத்தில் வரும் எரிச்சல் சொல்லில் அடங்காதது..உஙல் நிலைமை கற்பனை செய்தபோது, என்னை மீறி சிரிப்பு வந்தது..
ReplyDeleteதலைநகரம் படத்தில் வடிவேலு சொன்ன என்னை வைத்து ஏதும் காமெடி கீமடி பண்ணலையே..வசனம் தான் தோன்றுகிறது..
இது எங்க வீட்டிலே அடிக்கடி நடக்கிற ஒரு விஷயம். இப்போவெல்லாம் என் பையனும், பெண்ணும் கூட இந்த மாதிரி ஜோக் அடிக்கிறாங்க.
ReplyDelete