எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 08, 2006

56. அனுபவம் புதுமை

எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அந்தப் பெண் அழுவதைப் பார்த்தால். என்ன என்று விசாரிக்க என் பெட்டியில் இருந்தவர்களை அனுப்பலாம் என்று நினைத்தேன். அதற்குள் அவர்களே "பஹின் ஜி, bhidhai தேகோ" என்றனர். நான் சரியாகக் காதில் வாங்காமல் ஏதோ மிட்டாய் என்று நினத்துக் கொண்டு இப்போ வேண்டாம் என்று சொன்னேன். உடனே அவர்கள் என்னைப் பார்த்து, "நஹி, பஹின், கோயி கானேவாலே சீஸ் நஹி. உஸ் லட்கி அப்னி மா பாப் ஸே bhidhai லேத்தி ஹை". என்றார்கள். அப்போதுதான் புரிந்தது அவள் புதிதாகக் கல்யாணம் ஆகி முதன்முதல் மாமியார் வீடு போகிறாள் என்றும் அவளை வழி அனுப்பத்தான் இவ்வளவு கூட்டமும் என்று. மாப்பிள்ளை எங்கே என்று தேடினால் அவர் ஒரு பக்கம் நின்று அவர் உறவினருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். இது எல்லாம் புதுசு இல்லை என்பது போல மிகச் சாதாரணமாக இருந்தார். இந்தப் பெண் அழுது கொண்டே ஒவ்வொருவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டது. பையன் வீட்டுக் காரர்களும் இது சகஜம் என்பது போல் சாதாரணமாக இருந்தார்கள்.
உண்மையில் இந்த "bhidhai" கல்யாணப் பெண்ணின் கல்யாண சமயம் அவள் கூடப் பிறந்த சகோதரிகளால் ஒரு பாட்டாகவே பாடப்படுகிறது. அதிலும் பஞ்சாபியில் இதைக் கேட்டால் அர்த்தம் புரியாமலே அழுகை வரும். ஊர்மிளா நடித்த ஒரு ஹிந்திப் படத்தில், (பாகிஸ்தான் பிரிவினையை மையப்படுத்தி எடுத்தது) கதாநாயகி ஊர்மிளாவிற்குத் திருமணம் நிச்சயம் ஆனதும் அவள் தங்கைகள் இந்தப் பாட்டைப் பாடுவார்கள். படம் பேர் மற்றும் பாட்டு இரண்டும் நினைவு வரவில்லை. (வல்லாரையை நிறுத்தினதாலே இருக்குமோ). நினைவு வந்ததும் சொல்கிறேன். பாட்டு மிக உருக்கமாக இருக்கும். பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை" பாட்டுக்குப் பின் நான் அழுதது இந்தப் பாட்டைக் கேட்டுத்தான்.

வண்டி கிளம்பியது. எனக்கு அந்தப் பெண் வண்டியில் ஏறியதும் அழாமல் இருக்கிறாளா என்று பார்க்க ஆவல். ஆனால் அவள் வேறு பெட்டி. இப்போது போல நீநீநீநீநீநீநீநீளமாகப் போக முடியாது. கீழே இறங்கினால் அடுத்த ஸ்டேஷனில் தான் திரும்ப ஏற வேண்டும். ஆகவே ஆசையை அடக்கிக் கொண்டேன் வேறு வழியில்லாமல்.

வழியில் பிரசித்தி பெற்ற சித்தூட்கட் ஊர் வந்தது. ராணி பதுமணி வாழ்க்கைப் பட்டு அலாவுதீன் கில்ஜியால் நெருப்பில் இறங்கின ஊர். கோட்டை ரெயிலில் இருந்து பார்க்கும் போதே நன்றாகத் தெரியும். பழமையை அப்படியே காப்பாற்றி வைப்பதில் ராஜஸ்தான், குஜராத்தியருக்கு ஈடு யாரும் இல்லை என்று என் எண்ணம். இப்போது எப்படியோ?(கைப்புள்ள வந்ததும் கேட்டால் தான் தெரியும்.) அந்தக் கோட்டையை ஒரு நாள் போய்ப் பார்க்க மனதுக்குள் குறித்துக் கொண்டேன். சற்று நேரத்தில் எல்லாம் மத்தியப் பிரதேச எல்லை வந்து விடும்.
இரவு நெருங்கும் சமயம் அரை இருளில் "பாதாள்பூர்" என்னும் ஸ்டேஷனில் இருந்து மத்தியப் பிரதேச எல்லை தொடங்கியது. ஊர் உண்மையிலேயே பாதாளத்தில் தான் இருந்தது. ரெயில் மேமேமேமேமேமேமேலேலேலேலேலேஊர் பார்க்கவே மிக அழகாக இருந்தது. அதுவும் மேலே இருந்து கீழே பார்ப்பது ஒரு தனி அனுபவம். ராத்திரி நெருங்க நெருங்க கொஞ்சம் பயமும் வந்தது. மறுபடி சம்பல் வருமே அதான். ஆனால் எந்தத் தொந்திரவும் இல்லாமல் "ரத்லம்" ஸ்டேஷனை வண்டி கடந்தது. (அதிலும் அந்த வண்டியில் முதல் வகுப்பில் 4 படுக்கை வசதி கொண்டது ஒன்றையும், 2 படுக்கை வசதி கொண்டது ஒன்றையும் தவிர வேறு கிடையாது. அதில் நாங்கள் மட்டும் தான்.) அதற்குப் பின் அவ்வளவு பயம் இல்லை. மான் சிங், பூலான் தேவி எல்லாம் எங்களைப் பார்த்து பயந்து விட்டார்களோ என்னமோ?

காலை நேரத்தில் இன்னும் சொல்லப்போனால் அதிகாலையில் வண்டி "காண்ட்வா" என்னும் ஸ்டேஷனை அடைந்தது. இங்கே சில மணி நேரம் வண்டி நிற்கும் எனவும் நமக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் எனவும் சில பயணிகள் மூலம் தெரிந்து கொண்டோம். உடனே கீழே இறங்கினாலும் வட இந்தியாவில் எல்லாம் கடைகள் மிகவும் நேரம் கழித்துத் தான் திறப்பார்கள். புதுப் பால் என்பது வரக் குறைந்தது 8 மணி ஆகும் சீக்கிரம் கிடைத்தால் நம்ம அதிர்ஷ்டம். ஆதலால் என்ன செய்வது என்று புரியவில்லை. ஸ்டேஷன் பக்கத்திலேயே கடைத்தெரு. பிரதானமானது. ரெயில் கிளம்புவதற்குள் போக வேண்டும் என்று நினைததோம். ஆனால் நடந்தது என்ன?

11 comments:

  1. megaa serial ellam romba parpel polirukee!
    correctaa break vidurengaa..

    ReplyDelete
  2. Ambi, no chance, if i am that much serial addict, how can it be possible for me to blog like this?

    ReplyDelete
  3. அனியாய சஸ்பென் ஸ்.இருந்தாலும் நாங்கள் கத்துகிட்டே இருக்கோம்.பூலந்தேவிகள் தங்கள் குருவுக்கு இப்படி மரியாதை செலுதினார்களா.அது சரி 18வது பையனையோ பெண்ணையோ தனியாக ஊர்பேர் தெரியாத அமெரிக்கா நாட்டிற்கு படிக்க அனுப்பும்போது யாருமே அழவில்லை ஆனால் நங்கநல்லூரிலிருந்து கிண்டிக்கு கல்யாண்ம்பண்ணி அனுபினால் மட்டும் ஏன் அழுகிறார்கள். எனிடதுகை இப்போது தேவலாம்.கையில் பிளேட் வைத்து டைட்டாக ஸ்குருவும் போட்டுவிட்டார்கள்.இன்னும் இரண்டு மதத்தில் கை சரியாகும் என்கிறார்கள். பார்ப்போம்.என் மனைவிக்குதான் கொஞ்சம் வருத்தம் அதேமாதிரி தலைஸ்குருவையையும் கொஞ்சம் டைட்பன்னீருக்கலாமே என்கிறாள். தி ரா ச

    ReplyDelete
  4. trc,
    நான் என் கல்யாணத்தில் bhidhai போது அழவே இல்லை. அழுது இருந்தால் இந்த மாதிரி எல்லாம் எழுதுவேனா?
    அது சரி, கை சரியானதும் அடுத்த நட்சத்திரத்தில் சஷ்டி அப்த பூர்த்தி வைத்துக் கொள்ளலாம். பூர்த்தி ஆன வருடத்தில் இருந்து மறு வருடம் வரைக்கும் எப்போ வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். சாஸ்திரம் சொல்கிறது என்றார்கள்.
    உங்க ஸ்க்ரூ எங்கே வைக்கணும்னு உங்க மனைவியை விட நன்றாகத் தெரிந்தவர் வேறு யார் இருக்க முடியும்? வாழ்த்துக்கள் அவங்களுக்கு.

    ReplyDelete
  5. பூலான் தேவிகளும், மான்சிங்குகளும் எங்கள் சாமானைத் தூக்கிப் போக முடியாமல் அலுத்துப் போய் விட்டிருப்பார்கள்.

    ReplyDelete
  6. சித்தூர்கட்ன்னதும் மறக்காம என் பேரையும் ஞாபகம் வச்சு குறிப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி மேடம். So thoughtful of
    you. சித்தூர்கட்னு சொன்னாலும் நான் இருக்கறது ஷம்பூபுராங்கிற எடத்துல. சித்தூர்கட்லேருந்து 15 கி.மீ.
    தூரம். நீங்க சொல்ற மத்தியபிரதேச எல்லையில் இருக்கிற நிம்பாஹேடா என்கிற ஊருக்கும் போயிருக்கேன்(எல்லாம் வேலை விஷயமாத் தான்). அது ஷம்பூபுராவிலிருந்து 38 கி,மீ.தூரத்துல இருக்குது.

    சித்தூர்கட் கோட்டையை இன்னும் முழுமையா சுத்தி பாக்கலை. அங்கே கோட்டை மேலே இருக்குற காலிகா மாதா மந்திர்ங்கிற கோயிலுக்கு மட்டும் ஒரு சில வாரங்களுக்கு முன்னே
    போயிட்டு வந்தோம். வெயில்
    கொளுத்துறதால பகல்ல எங்கேயும் வெளியே கெளம்ப முடியலை. அதனால சாயந்திரமா 7 மணிக்குத் தான் போனோம். அதுக்குள்ள
    அந்த பேலஸ் எல்லாம் பந்த்
    பண்ணிட்டாங்க (ஹா...ஹா..."மூடிட்டாங்க"...எங்க சித்தி பலவருஷமா வடநாட்டுல இருக்கறதால இந்த மாதிரி
    தான் இந்தி கலப்போட பேசுவாங்க :)-

    முதல்முறையா ஒரு வட இந்திய
    கோயில்ல நம்ம ஊரு கோயிலைப் போன்ற கல் வேலைப்பாட்டைக் கவனிச்சேன். நாங்க போன நேரம் சரியா "ஆர்த்தி" நேரம் - அதான் பூஜை நேரம்...நல்ல தரிசனம்.

    ரெயில் வண்டி நின்ன கேப்புல் பிதாயி எல்லாம் நல்லா கவனிச்சிருக்கீங்க...நல்ல Observation power தான் உங்களுக்கு. ரஸ்கின் பாண்டோட "The Train Stops at
    Shamli" கதை ஞாபகம் வந்துடுச்சு. பிதாயி பத்தி எனக்கு அதிகமாத் தெரியாது...ஒரு பொண்ணு அம்மா, அப்பாவை விட்டு பிரியறப்போ அழறதை என்னான்னு வேடிக்கை
    பாக்குறது? ஆனா இந்த "பாராத்" - மாப்பிள்ளை ஊர்வலத்துல ரோட்டுல டான்ஸ் ஆடுன அனுபவம் எல்லாம் இருக்கு. பஞ்சாபி கல்யாணங்களில நடக்கும் தடபுடலையும் நல்லா கவனிச்சிருக்கேன்.

    ராஜஸ்தான்ல ஒன்னு ரொம்ப பிடிச்சது...மக்கள் ரொம்ப நல்ல டைப். கெஸ்ட் அவுஸ்ல சாப்பாடு பரிமாறரவரு "தோடா சா அவுர் லீஜியே...ஆப்கோ லேனா ஹி
    படேகா" அப்படின்னு பரிமாறுவாரு...அதுல நெய் "தேசி
    கீ" வேற பட்டையைக் கெளப்பும். அந்த மாதிரி யாராச்சும் பரிமாறும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும்.

    ஊர்மிளா நடிச்ச அந்த இந்தி படம் பிஞ்சர்(Pinjar) - உபயம் : கூகிள் :)-

    சரி...அடுத்தது என்னாச்சு...ரெயிலைப் பாதியிலேயே விட்டுட்டு ரஜினி படம் பாக்க போய்ட்டீங்களே?
    :)

    ReplyDelete
  7. வாங்க கைபுள்ள,
    ஒரு பதிவுக்கு உள்ள எல்லா விஷயங்களையும் பின்னூட்டத்திலே கொடுத்துட்டீங்க. பெங்களூர் வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன்.உண்மையில் ராஜஸ்தான் உபசாரம் நம்மை அதிகமாகவே சாப்பிட வைக்கும். கிட்டத்தட்ட என் பிறந்த வீடு மாதிரி அது. தூய்மையான நெய், பால், தயிர், கோதுமை என்று கலப்படமே இல்லாத சாப்பாடு. இங்கே மாதிரி மைதா மாவில் எல்லாம் பராட்டா செய்ய மாட்டார்கள். பஞ்சாபியில் ராஜ்மாவுடன் பாஸ்மதி அரிசி சேர்ந்த சாப்பாடு சாப்பிட்டுப் பாருங்கள். உண்மையான பட்டூராவும் அவர்கள் செய்வதுதான். இங்கே சரவணபவனில் கூட அது மாதிரி இல்லை.

    ReplyDelete
  8. //பெங்களூர் வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன்.//

    பெங்களூரா? நானா? இல்லியே இங்கே சித்தூர்கட்லே தான் இருக்கேன்.
    :)

    ReplyDelete
  9. சில பேர்கள் அழுவதில் புலிகள். சிலபேர்கள் அழவைப்பதில் புலிகள். இதில் நீங்கள் எந்தவகையைச்சேர்தவர் என்பதை உங்கள் பதிலில் இருந்து தோராயமாய் தெரிகிறது.சித்தப்பாபேர்,கல்யணமான வருஷம்,அந்தபெண் என்ன ஆனாள் இதையெல்லாம் எப்போ கண்டுபிடிகிறது.சதாபிஷகதுக்குள் முடியுமா? கன்னித்தீவுகூட முடிந்துவிடும். தி ரா.ச

    ReplyDelete
  10. கைப்புள்ள, தப்பாப் பார்த்துட்டேனோ என்னமோ, நேத்திக்குத் தமிழ் மணம் முகப்பிலே பார்த்த மாதிரி இருந்தது. நம்ம கணினிக்குத் தான் தெரியுமே முக்கியமா பார்த்தால் லிங்க் கட் பண்ணி வேடிக்கை பார்க்கணும்னு. சரியாப் பார்க்கறதுக்குள்ளே லிங்க் போயிடுச்சு. அப்புறம் பார்க்க முடியலை.

    ReplyDelete
  11. trc sir,
    புலி, புலினு சொல்லாதீங்க. விடுதலைபுலினு (அம்பி சொல்றாமாதிரி) பிடிச்சுக்கிட்டுப் போயிடப் போறாங்க.
    அது சரி, இன்னும் சஷ்டி அப்தபூர்த்தியே ஆகலை, அதுக்குள் சதாபிஷேஹத்துக்கு என்ன அவசரம்? உங்க மனைவி கோபிச்சுக்கப் போறாங்க. சஷ்டி அப்த பூர்த்திக்கு மறக்காமல் கூப்பிடுங்க.

    ReplyDelete