பெட்டியின் உள்ளே போக முடியாமல் நாங்கள் தவித்ததைப் பார்த்த டி.டி.ஆர். வந்து "ஏதாவது உதவி தேவையா" என்று கேட்டார். பின் நிலைமையைப் பார்த்துவிட்டு அவரே ஒரு ரெயில்வே ஊழியரைக்கூப்பிட்டு சாமான்கள் வைக்கும் சிறு அறை போன்றதைத் திறந்து சில சாமான்களை அதில் எடுத்து வைக்கச் சொன்னார். அந்த முதல் வகுப்புப் பெட்டியில் "A to F" வரை உள்ள எல்லாரும் தங்களிடம் அதிகமாக உள்ள சாமான்களையோ, வெயிட் அதிகம் உள்ளதையோ வைக்க இடம் வேண்டும். ஆகவே ஒருமாதிரி, (ஒரு மாதிரிதான்) சாமான்களை வைக்க முடிந்தது. இன்னும் மிச்சம் இருந்தவற்றைக் கீழே மற்றும் மேலே என்று மறுபடியும் ஒரு மாதிரியாக அடுக்கி விட்டுப் பின் கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். முதல் வகுப்பு கூப்பேயில் முன்பதிவு செய்யாத பிரயாணிகள் மாதிரி போனது அநேகமாக நாங்களாகத்தான் இருக்கும். ஏற்கெனவே, உட்கார படுக்க இடம் இல்லை. இந்த அழகில் மத்தியப் பிரதேசச் சம்பல் பள்ளத்தாக்கு அப்போது ரொம்பப் பிரசித்தம். அது வேறு நினைவில் வந்து பாடாய்ப் படுத்தியது. ஒரு சாயந்திரம், ஒரு பகல், இரண்டு இரவு பிரயாணத்திற்குப் பின் நாங்கள் ஒரு வழியாக ஆக்ரா கண்டோன்மெண்ட் ஸ்டேஷனை அடைந்தோம். மூன்றாம் நாள் காலையில். நாங்கள் இது வரை வந்தது அகலப்பாதையில். இனிமேல் போக வேண்டியது மீட்டர் கேஜ் எனப்படும் குறுகிய பாதை வண்டியி. அது ஆக்ரா கோட்டை ஸ்டேஷனில் லிருந்து கிளம்பும். கண்டோன்மெண்டில் இருந்து ஒரு டாக்ஸி வைத்துக்கொண்டு போனோம். டாக்ஸியிலும் அதே கதைதான். சாமான் மட்டும் வைக்க முடிந்தது. கிட்டத்தட்ட நாங்கள் தொங்கிக்கொண்டு போனோம். சீக்கியரான அந்த டாக்ஸி டிரைவர், எதற்கும் கலங்காமல் எங்களைப் பத்திரமாகக் கொண்டு சேர்த்ததோடு, சாமான்களை இறக்கி ஸ்டேஷன் உள்ளே கொண்டு போகவும் மிகவும் உதவினார். அந்த முதல் வகுப்பு பயணிகள் தங்கும் அறையே மிரண்டு போய் எங்களைப் பார்த்தது. எங்கள் சாமான்களை வைத்ததும் எல்லாரும் வெளியில் தான் உட்கார வேண்டும். சாமான்களை வைத்துவிட்டு சற்று ஆஸ்வாசப் படுத்திக் கொண்டோம். ஒரு போர்ட்டர் வந்து விவரம் கேட்டுவிட்டு, "வண்டி இரவுதான். 9மணிக்கு வரும். 10 மணிக்கு மேல் எப்போ வேண்டுமானாலும் கிளம்பும்" என்று ஹிந்தியில் சொன்னான். மேலும் அவன் சொன்ன யோசனை என்னவென்றால், "ஒரு நாள் பூரா இருக்கிறது. சாமான்கள் இங்கேயே இருக்கட்டும். நீங்கள் இருவரும் குழந்தையுடன் ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் எல்லாம் பார்த்து விட்டு வாருங்கள்." என்பது தான். மனதுக்குள் ஷாஜஹானும், மும்தாஜும் டூயட் பாடிக் கூப்பிட்டாலும் போக மனம் இல்லை.எப்படியும் இங்கே ஒரு மூன்று வருடமாவது இருப்போம். அதற்குள் எத்தனையோ முறை இந்த வழி போக வேண்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டோம். இரவு வண்டியில் ஏறினோம். இது சின்ன வண்டியா? சாமான் வைத்ததும் நிறைந்து விட்டது. பெட்டியில் காற்று வேறே இலை. விளக்கும் இல்லை. ரெயில் கிளம்பி வேகம் எடுத்தால் மின் விசிறி சுற்றும். விளக்கு எரியும். இல்லாவிட்டல் இல்லை. குழந்தை ஒரே அழுகை. வெளியே வைத்துக் கொண்டு எப்படியோ சமாளித்தோம். ஒரு வழியாக மறு நால் காலை 8 மணிக்கு அஜ்மேர் வந்தது. என் கணவரின் சிநேகிதர் வந்திருந்தார். அவர் என்ன நினைத்தார் என்றால், எங்கள் மொத்தக் குடும்பமும் வந்திருக்கிறது என்று. நாங்கள் இரண்டு பேர்தான் என்றதும், இரண்டு பேருக்கு இவ்வளவு சாமானா? என்று திகைத்துப் போனார். பின் சொன்னார். "நல்லவேளை. க்வார்ட்டர்ஸ் எல்லாம் ரொம்பப் பெரிது." இப்படியாக எங்கள் ராஜஸ்தான் குடித்தனம் ஆரம்பித்தது.
அங்கே இருந்த சில வருடங்களில் 6 மாதத்துக்கு ஒருமுறை சென்னை ஏதாவது காரணம் காட்டி வந்து விடுவோம். குழந்தை சின்னதாக இருந்ததாலும், பள்ளிக்குப் போகும் வயசு இல்லை என்பதும் வசதியாக இருந்தது. அந்த மாதிரி ராஜஸ்தான் போனதும் ஒரு 6 மாதம் கழித்து ஊர்ப்பக்கம் வரும்படி மாமனாரின் சஷ்டி அப்த பூர்த்தி வந்தது. (ராஜஸ்தான் குடித்தனக் கதை தனியாக வரும்). சஷ்டி அப்த பூர்த்திக்காகத் தயார் ஆனோம். என் கணவர் தான் மூத்த பையன் என்பதாலும், வீட்டில் ஒரே சம்பாதிக்கும் நபர் என்பதாலும் எங்கள் பொறுப்பு அதிகம். ஆகவே முன்னாலேயே போக வேண்டும் என்று டிக்கெட் வாங்கினோம். என் கணவருக்கு ஒரு விபரீத ஆசை வந்தது. ஏன் நாம் காச்சிகுடா எக்ஸ்ப்ரஸ்ஸிலேயே போகக் கூடாது என்பது தான் அது.இந்த வழியில் போய்ப் பார்க்கலாமே என்று தான். சிகந்திராபாத்திற்குச் சில ஸ்டேஷன் முன்னே உள்ள காச்சிகுடா என்னும் இடத்தில் இருந்து கிளம்பும் அது அஜ்மேர் வரை செல்லும் அப்போதெல்லாம். திரும்ப அஜ்மேரில் இருந்து காச்சிகுடா வரை செல்லும். அந்தக் காச்சிகுடாவை நான் இது வரை பார்த்ததே கிடையாது. ரெயிலில் எல்லாரும் சிகந்திராபாத்தில் தான் ஏறுவார்கள், இறங்குவார்கள். இந்த வண்டி யானது மெதுவாக அஜ்மேரில் இருந்து கிளம்பி (அப்போதெல்லாம் அஜ்மேரில் இருந்து காலை நேரம் கிளம்பும்) நசீராபாத் வரும்போது 9-30 (காலை) மணி ஆகும். மிலிட்டரி கண்டோன்மெண்ட் என்பதால் ஆட்கள் ஏறுவது இறங்குவது, சாமான் ஏற்றுவது எல்லாம் இருக்கும். மேலும் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருப்பவர்களுக்கும் இது ஒரே போக்குவரத்து வண்டி. ஆகவே உள்ளூர் ஜனக்கூட்டமும் இருக்கும். இப்படியே இந்த வண்டி ராஜஸ்தானின் தென் எல்லையைத் தொட இரவு ஆகும். அதற்குப் பின் மத்தியப் பிரதேசம். வண்டி போபோபோபோபோபோபோபோபோபோய்க் கொண்டே இருக்கும். இந்த வண்டியில் ஏறி உட்கார்ந்து போவது என்பது ஒரு புது அனுபவம். நாங்கள் திட்டமிட்டபடி வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். கூடவே சில உள்ளூர் ஜனங்கள். அவர்களிடம் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் "இது பதிவு செய்யப்பட்ட பெட்டி. யாரும் ஏறக்கூடாது." என்று புரிய வைப்போம். அவர்களும், "டீக் ஹை, பஹின் ஜி, ஹம் லோக் கிஸ் லியே ஹை? ஹம் ஆப் கே மதத் கரேங்கே! இஸ் பேட்டி மே கிஸி கோ ஆனே நஹி தேங்கே!." என்று சொல்லி விட்டு அங்கேயே கழிவறை செல்லும் வழியில் அழுத்தமாக உட்கார்ந்து கொள்வார்கள். நாம் கழிவறைக்குப் போவது என்றால் கேட்கவே வேண்டாம். கிட்டத்தட்ட நடைபாவாடை விரிப்பார்கள். அந்த அளவு மரியாதை. குழந்தை போக வேண்டுமென்றாலோ இன்னும் கேக்கணுமா? குழந்தையை வாங்கி அவளுக்கு வேண்டிய சிசுரூஷை செய்து, இப்படி ஒரு ராணி போல என்னை உணர வைத்தார்கள். சாய்வாலா போனால் கூப்பிட்டால் போதும் அவர்களே நேரே கடைக்குப் போய் ஸ்பெஷல் சாய் போடச் சொல்லிக் கொண்டு வந்து கொடுத்து உபசரிப்பார்கள். இப்படியே வண்டியில் போகும்போது பிக்கானீர் ஸ்டேஷன் வந்தது. (இங்கே ராஜஸ்தான் பெயிண்டிங்கும், மசாலா அப்பளமும் பிரசித்தம். கைபுள்ள, மறக்காதீங்க) பிக்கானீர் ஸ்டேஷனில் ஒரே கூட்டம். ஒரு இளம்பெண். என் வயது இருப்பாள். கூடவோ அல்லது குறைத்தோ ஒரு வயது அல்லது இரண்டு வயது இருக்கும். விம்மி விம்மி அழ சுற்றிக் கூட்டமாக எல்லாரும் சமாதானப் படுத்துகிறார்கள். ஒவ்வொருவராக அவளைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். கையில் புதுசாக மெஹந்தி. கை நிறைய வளையல்.நெற்றியில் சிந்தூரம். பார்த்தால் புதுக் கல்யாணப் பெண் மாதிரி இருக்கிறது. ஏன் இப்படி அழுகிறாள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்துப் போனேன்.
மனுவிற்கு எனக்கு எப்படி இது எல்லாம் நினைவு இருக்கிறது என்று ஆச்சரியம். அது ஒன்றும் இல்லை, மனு, வல்லாரைக்கீரை சாப்பிடுவேனா, இப்போ பூர்வ ஜென்ம நினைவு எல்லாம் வர ஆரம்பிக்கிறது. அதான் என் கணவர் பயந்து கொண்டு நிறுத்தி விட்டார். (வல்லாரைக்கீரையைத் தான்.)
ReplyDelete// ஒரு இளம்பெண். என் வயது இருப்பாள். கூடவோ அல்லது குறைத்தோ ஒரு வயது அல்லது இரண்டு வயது இருக்கும்.//
ReplyDeleteஅவருக்கு(ம்) இப்போது வயது 15 அல்லது 17 தானே இருக்கும் ?
:-)))
லதா,
ReplyDeleteஅவர் என்னை விட இப்போது பெரியவர், தெரியுமா? நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன், என் வயதை. என்னனு நினைச்சீங்க என்னை, அதான் நான் வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலியாக இருக்கிறேன். மனசுக்குள் அவங்க எல்லாம் இந்த அம்மா விடவே மாட்டேங்குது, நற நற நற நற நறனு எவ்வளவு சொன்னாலும் என் காதில் விழவே விழாது.
Hahaaa, so funny...
ReplyDeletealot of work pressure today, so i just wanted to took a break and decided to read your blog. you didn't deceived me today also..
"Less luggage, more comfort" i think this line is printed in every trains,after your case only...
sorry for commenting in englipess..
அப்பா..என்ன ஒரு நீளமான பயணக் கதை..முக்கியமா ரயிலில் ரிசர்வ் பெட்டிகளில் வருகின்றவர்கள் எவ்ளோ நல்லவர்களா என்ன.. நல்ல உரைநடை காயத்திரி. வாழ்த்துக்கள்
ReplyDeleteதேவனின் சி.அய்.டி. சந்துரு நாவல் படிப்பது போல் உள்ளது.நல்ல சஸ்பென் ஸ்.நகைச்சுவை எல்லாம் கலந்து நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மைக்கதையா அல்லது 16 வயது போலத்தானா? தி ரா ச
ReplyDeleteதேவனின் சி.அய்.டி. சந்துரு நாவல் படிப்பது போல் உள்ளது.நல்ல சஸ்பென் ஸ்.நகைச்சுவை எல்லாம் கலந்து நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மைக்கதையா அல்லது 16 வயது போலத்தானா? தி ரா ச
ReplyDeleteகார்த்திகேயன் முத்துராஜன்,
ReplyDeleteஎன்ன புதுசா எனக்கு காயத்திரினு பேர் வச்சிட்டீங்க. ஒருவேளை உங்க மனைவி பேரோ?
அப்பாடி,,உங்க பேர் எவ்வளவு பெரிசா இருக்கு, கொஞ்சம் சின்னதா வச்சுக்கக்கூடாது?
வாங்க trc sir,
ReplyDelete"தேவனோட" லெவெலுக்கு என்னை உயர்த்தி எழுதினது உங்க பண்பாட்டைக் காட்டுது. சஷ்டி அப்த பூர்த்தி கொண்டாட முடியலனு கேட்டதும் ரொம்ப வருத்தமாஇருந்தது. இப்போ கை தேவலையா?
நான் எழுதுவது எல்லாம் கலப்படமில்லாத உண்மைதான். Agmark உண்மை.
16 வயசுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. வேணும்னா என்னோட கணவரைக் கேட்டு confirm பண்ணிக்கலாம். அது சரி, 16 வயசுன்னா ப்ளாக் எழுதக்கூடாதா என்ன? இதைப் படிக்கற மத்தவங்க எனக்கு 16 வயசு இல்லைனு நினைச்சுக்கக் கூடாது பாருங்க அதுக்காக இந்தக் கேள்வி.
அம்பி, உங்கள் நகைச்சுவை உணர்ச்சி என்னால் அதிகரிக்கப் படுவதும் என் ப்ளாக்குக்கு நீங்க சிரிக்க வருவதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். கீழே பாருங்க ஒருத்தர் என்னை "தேவன்" ரேஞ்சுக்கு ஏத்தி வைச்சுருக்கார். ஒருவேளை வஞ்சப் புகழ்ச்சியா இருக்குமோ? தெரியலை.
ReplyDeleteஓ..மன்னிக்கவும்..கீதா என்பதை மாற்றியதற்கு..ஏதோ ஒரு ஞாபகத்தில் அப்படி பின்னூட்டம் செய்துவிட்டேன்..என்னை நீங்கள் கார்த்தின்னே கூப்பிடலாம்..முழுவதும் சொல்லனும்னு அவசியமில்லை..
ReplyDeleteஎன்னுடைய பதிவுக்கு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி கீதா சாம்பசிவம்..அப்பாடா! உங்கள் பெயரையும் முழுசா சொல்லி பிராயசித்தம் தேடிகிட்டேன்..
மேலும் காயத்திரி என்பது மனைவி பேர் இல்லை..என் தோழி பேர்..நான் இன்னும் பிரம்மசாரி தான்..