எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 26, 2007

218. மெல்லத் தமிழினிச் சாகும்?!!!!!!

இன்னைக்கு எழுத நினைச்சது என்னவோ திருக்கருகாவூர் பத்தித் தான். ஆனால் ஜீவா வெங்கட்ராமனின் பதிவைப் பார்த்ததும் அதில் வல்லி விளக்கம் கேட்டிருந்ததும் உடனேயே தெரிந்த ஒரு விஷயத்தை எழுதறது சுலபம்னு எழுத ஆரம்பிச்சுட்டேன். பாரதியார் "மெல்லத் தமிழினிச் சாகும்" னு சொன்னதாகப் பலபேர் சொல்லிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அவர் எழுதினதின் நோக்கமே வேறே.
அதிலே அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கையாளுவது சற்றுச் சுலபமாக அமைந்து விட்டது நம் எல்லாருக்கும்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி
போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றும்,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்"
என்றும்,

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவன் போல், இளங்கோ போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை:
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"
என்றெல்லாம் கூறியவர் அவர்.

பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட, ஒருமித்த கண்ணோட்டத்தை யாரும் புரிந்து
கொள்ளவில்லை. விடுதலைப் பாடலில் கூட மூன்று முறை "விடுதலை! விடுதலை! விடுதலை! என்று கூறுவது அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் எல்லாவற்றிலும் நாம் விடுதலையடைய வேண்டும் என்பதினால் தான். "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து"
யாவரையும் நாட்டை உயர்த்தச் சொன்னவன் பாரதி. அப்படிப் பட்ட பாரதி
தமிழ் மொழி சாகவேண்டும் என்று சொல்லமாட்டார் இல்லையா? உண்மையில் அவன் சொன்னது என்னவெனில், தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்கவேண்டித் தமிழ்த்தாய் கேட்பதாக அமைந்த அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் பின்வருமாறு:

"கன்னிப்பருவத்திலே அந்நாள்-என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு-பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும்-முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்


இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதியகலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லுந்திறமை தமிழ்மொழிக்கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் -அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் -இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

இது தான் பாரதி சொன்னது. இந்தக் கவிதையில் முதல் ஐந்து செய்யுள்களை
விட்டு விட்டு மற்றவற்றை அப்படியே கொடுத்துள்ளேன். இதற்கு மேலும் விளக்கம் நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அப்புறம் கவிதை
"பாரதியார் கவிதைத் தொகுப்பை"ப் பார்த்துத் தான் எழுதி இருக்கிறேன்.
எனக்குப் படித்தது ஓரளவுக்கு நினைவிருந்தது, ஆனால் கவிதை முழுதும்
தவறு செய்யாமல் எழுத வேண்டும் என்பதால் பார்த்தே தான் எழுதி
இருக்கேன். பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட ஒருமித்த கண்ணோட்டம் இன்றைய நாட்களில் மிக மிக அரிதாக உள்ளது. சுதந்திரத்துக்காகப் பள்ளுப் பாடிய பாரதி, "ஆனந்த சுதந்திரம் அடைய"த் தான் பாடினான். நாம் பெற்றது ஆகஸ்ட் சுதந்திரம். அதைத் தான் நாம் கொண்டாடுகிறோம். இன்னும் சொல்லப் போனால் ஆகஸ்ட் சுதந்திர நன்னாளிலோ அல்லது இந்தியா என்று சுதந்திரம் அடைகிறதோ அன்று தலை நகர் டெல்லியில் செங்கோட்டையில் பிரதம மந்திரி கொடி ஏற்ற வேண்டும் என்று
முதன் முதல் சொன்னவரே "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்" அவர்கள் தான்.
நாம் பாரதியையும் புரிந்து கொள்ள வில்லை. நேதாஜியையும் புரிந்து கொள்ள
வில்லை. ஆகவே தான் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்துக்கு இன்னும் விடியவில்லை.

38 comments:

  1. தற்போதுதான் இந்த முழுப்பாடலையும் படித்தேன். நன்றி மேடம்...

    ReplyDelete
  2. முழுப்பாடலையும் எங்கே கொடுத்திருக்கேன்? முதல் ஐந்து செய்யுள்களைக் கொடுக்கலை. முக்கியமா அர்த்தம் எடுத்துக்க வேண்டிய பாகம் மட்டும்தான் கொடுத்திருக்கேன்.

    ReplyDelete
  3. //வள்ளுவன் போல், இளங்கோ போல்,//

    புத்தகத்தைப் பார்த்து எழுதினீர்களா, மெட்டு உதைக்குதே.

    -------------

    மற்றபடிக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதவர்களுக்குச் சொல்லிப் பயனில்லை என்று விட்டுவிட்டவர் பலர்.

    ஆனால் யாராவது ஒருவர் மறுபடியும் மறுபடியும் இதை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. மேடம்!!!தலைப்பு பாத்து பயந்திட்டேன். என்னோட ஸ்பெல்லிங் மிஸ்டேக்க வச்சி பதிவு போட்டு கிழிக்க போறீங்கன்னு பயந்துகிட்டே வந்தேன்!! அப்பாடா!!(எனக்கு தெறியும், நீங்க என்னய மாதிரி எறும்புகளை நசுக்கமாட்டீங்கன்னு!!)

    ReplyDelete
  5. கீதா!
    இன்னுமா? அன்பர்களுக்கு இப்பாரதி பாடல் பற்றிய தெளிவின்மையுண்டு. ஆச்சரியமாக உள்ளது.
    பாரதி மிகத் தெளிவாகச் செட்டாகக் கூறிய விடயத்தில் வேண்டியதை வெட்டி, வைத்து
    விம்மியளும் வெறும் தலைகளை என்ன? செய்வது ; பாரதி பாவம், இப்படி எல்லாம் புல்லர்கள்
    இருந்து தொல்லை தருவார்கள் என்பது தெரியாமல் எழுதிவைத்து விட்டார்.
    இவர்கள் புரிந்து தான் பேசிகிறார்களா? புரியாமல் பேசிகிறார்களா? தெரியவில்லை;
    இது பற்றி என் தமிழாசிரியர் சுமார் 40 வருடத்துக்கு முன் ;மிகத் தெளிவாக பாரதி சொன்ன விடயத்தை
    விளக்கினார்.
    அரசியல் வாதிகள் பேச்சைத்தான் வெட்டி ஒட்டி விவாதிப்பார்கள்;என்றால் பாரதி போன்ற உத்தமர்களையும் இந்த வரிசையில் சேர்ப்பது அழகில்லை.அவசியமுமில்லை;

    ReplyDelete
  6. அம்மாடி, அடுச்சுடுவிங்க போல,

    முன்னாடி எனக்கு அந்த வரி மட்டும் தான் தெரியும், தற்போது அவர் எதற்கு சொன்னார் எனவும் தெரிந்தது.... அம்புட்டுத்தேன்.

    ReplyDelete
  7. இதுவரை (out of contextல்) கேட்டதை வைத்து, (எல்லோரும் தமிழை வளர்க்க முயலாமல் இருக்கிற) கோபத்தில், பாரதி அப்படி கூறியிருக்கிறான் என்றல்லாவா நினைத்தேன்.
    ஆக 'மெல்லத்தமிழினி சாகும்' என்று எவனோ சொன்னதாக கூறி பாரதி சாடியல்லவா இருக்கிறான்.
    பாடலைத் தந்ததற்கு நன்றி

    ReplyDelete
  8. நன்றி கீதா.

    பாரதியார் இப்படிக் கூறியதாகப் பலர் கூறும்போது அவர்களது அறியாமையை நினைத்துச் சிரிப்புத் தான் வரும்.

    முழுப் பாடலும் இதோ (இணையத்திலிருந்து கிளப்பியது):

    தமிழ்த் தாய் !


    தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்
    (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

    ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

    மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை
    மூண்டn-aல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
    ஆன்ற மொழிகளி நுள்ளே - உயர்
    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

    கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
    காற்றையும் வானவெளியையும் சேர்த்துத்
    தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
    தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

    சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
    தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
    நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
    நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

    நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்பு
    நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
    சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
    சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

    கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன்
    காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
    என்னென்ன வோபெய ருண்டு - பின்னர்
    யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!

    தந்தை அருள்வலி யாலும் - முன்பு
    சான்ற புலவர் தவவலி யாலும்
    இந்தக் கணமட்டும் காலன் - என்னை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.

    இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
    ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
    கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
    கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

    "புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
    பூதச் செயல்கலிண் நுட்பங்கள் கூறும்;
    மெத்த வளருது மேற்கே - அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

    சொல்லவும் கூடுவ தில்லை - அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை,
    மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

    என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லோமோ!
    சென்றி டுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

    தந்தை அருள்வலி யாலும் - இன்று
    சார்ந்த புலவர் தவவலி யாலும்
    இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

    ReplyDelete
  9. Gheetha samabasivam!

    தற்போதுதான் இந்த பாடலையும் படித்தேன். நன்றி

    ReplyDelete
  10. மோகன் தாஸ், தமிழைப் பற்றிய அந்த முதல் பாடல் புத்தகத்தைப் பார்த்து எழுதலை. அதனால் வித்தியாசம் இருக்கு, நீங்க சொன்னதும் தான் பார்த்ஹேன். "வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்' அப்படின்னு வந்திருக்கணும், தவறைச் சுட்டியதுக்கு நன்றி.

    ReplyDelete
  11. ஹிஹிஹி, அபி அப்பா, இப்போ இருக்கிற சூடான நிலையிலே உங்க பேச்சு ஒண்ணுதான் குளிர்ச்சி தரும் நிலவு. ரொம்ப நன்றி, உங்களோட வரவுக்கு. (ம.சா. எத்தனை சொன்னாலும் தான் நீங்க எழுத்துப் பிழை இல்லாமல் எழுத மாட்டீங்கன்னு தெரியும், அதான் உங்களைக் கிழிக்கலை! :D) ஹிஹிஹி, அடைப்புக் குறிக்குள்ளே என்னோட மனசாட்சி பேசினது வெளியே வந்துடுச்சு, இப்படித்தான் அடிக்கடி பேசும்.

    ReplyDelete
  12. அபி அப்பா, இங்கேயே எங்கே தெரிஞ்சுட்டு இருக்கீங்க? தெறிஞ்சுட்டு இல்லை இருக்கீங்க? :D

    ReplyDelete
  13. ரொம்பவே சரி, யோகன், நீங்க சொல்றது. இருந்தாலும் சில சமயம் மனசு கேட்கவில்லை. அதான் எழுதினேன். ரொம்ப நாளா மனசிலே ஊறிட்டு இருந்தது. இன்னிக்கு இந்த ஒரு பாட்டிலே கொஞ்சம் வெளியே வந்திருக்கு, அவ்வளவு தான்.

    ReplyDelete
  14. ஹிஹிஹி, மதுரையம்பதி, எங்கே அடிக்கிறது? பெங்களூருக்கு இதுக்காக வர முடியுமா? அதெல்லாம் இல்லை, நானே பாட்டைப்பார்த்து எழுதற நிலைமை வந்ததுக்கு நொந்து போயிருந்தேன், உங்க நன்றியைப் பார்த்ததும் என் மேலேயே எனக்குக் கோபம் வந்தது.

    ReplyDelete
  15. சுல்தான், பாரதி இன்னும் நிறைய விஷயங்களைக் கூறி இருக்கிறார். ஆனால் அவர் சொன்னதிலே இருந்து ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு பேசறவங்கதான் அதிகம். என்ன செய்யறது?

    ReplyDelete
  16. வைசா, என் கிட்டேயும் இருக்கு, முழுப் பாடலும் இருந்தாலும் நான் தான் எது தேவையோ அது மட்டும் போதும்னு நினைச்சேன். ஏற்கெனவே என்னோட பதிவு எல்லாம் பெரிசா இருக்குன்னு சொல்லுவாங்க, முழுப்பாடலும் என்றால் ரொம்பவே பெரிசா இருக்குமேன்னு நினைச்சேன். இருந்தாலும் நீங்க தந்ததுக்கு ரொம்பவே நன்றி.

    ReplyDelete
  17. நன்று சொன்னீர்கள்.

    'மெல்லத் தமிழினிச் சாகும்'

    பாரதி இது போல் சொல்லவே இல்லை. ஒரு பேதை அவ்வாறு சொன்னதாகவே பாரதி சொல்லியிருக்கிறார். என்னுடைய இந்த பதிவை படித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  18. அருமையா சொல்லிருக்கீங்க கீதா மேடம்...

    சமீப காலமாகத்தான் நானும் அந்த வரிகளை இணையத்தில் காண்கிறேன். ஆனால், நான் கண்ட மட்டும், அந்த வரிகளை நல்ல நோக்கோடுதான் பயன்படுத்தியிருக்கிறார்கள்...

    முன்னால் இதனை தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம். அறியத் தந்தமைக்கு நன்றி....

    ReplyDelete
  19. //நாம் பாரதியையும் புரிந்து கொள்ள வில்லை. நேதாஜியையும் புரிந்து கொள்ள
    வில்லை. ஆகவே தான் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்துக்கு இன்னும் விடியவில்லை.//

    வைர வரிகள்!

    ReplyDelete
  20. சுவனப்பிரியன், உங்களோட பின்னூட்டத்தை இப்போத் தான் பார்த்தேன், ரொம்பவே நன்றி,

    ReplyDelete
  21. ஓகை, உங்க பதிவையும் பார்த்தேன். ரொம்பவே நன்றி,

    @ஜி -Z என்னங்க பேரு இது? ரொம்பவே கஷ்டமா இருக்கு, இரண்டு தரம் கீ-போர்டை மாத்தவேண்டி இருக்கே? உங்களோட கருத்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  22. எஸ்.கே.சார், உங்களோட கருத்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  23. //@ஜி -Z என்னங்க பேரு இது? ரொம்பவே கஷ்டமா இருக்கு, இரண்டு தரம் கீ-போர்டை மாத்தவேண்டி இருக்கே?//

    நீங்க ஜி ன்னு சொன்னா போதும்... அது ஆங்கிலத்துல எழுதுறவங்க Ji னு தப்பா டைப் பண்ணிடுறாங்க.. அதான் Z சேத்துட்டேன் :)))))

    ReplyDelete
  24. இது பற்றி ஓகையும் ஜெயஸ்ரீயும் பேசி இருக்கறதை இந்த பதிவின் பின்னூட்டங்களில் பாருங்க- http://solorusol.blogspot.com/2007/02/blog-post_21.html

    ReplyDelete
  25. சிங்காரவேலன் என்ற படத்திலும் இந்த வரிகள் தப்பாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனக்குத் தெரிஞ்சதை சொல்லியாச்சு!

    ReplyDelete
  26. நல்ல விளக்கம் மேடம்.. பாரதியாரை பற்றி யாருக்காவது சிறிது உண்மைக்கு புறம்பான செய்திகள் தெரிந்தாலும் முன்னால் வந்து சரியான விளக்கம் தருகின்றீர்கள். நன்றி மேடம்

    ReplyDelete
  27. உங்களுடைய ஒரு பதிவு பூங்காவில் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  28. // கீதா சாம்பசிவம் said...

    @ஜி -Z என்னங்க பேரு இது? ரொம்பவே கஷ்டமா இருக்கு, இரண்டு தரம் கீ-போர்டை மாத்தவேண்டி இருக்கே? உங்களோட கருத்துக்களுக்கு நன்றி. //

    காப்பி பேஸ்ட் / control c control v உபயோகப்படு்த்துங்க. (நீங்க குழந்தையாக இருந்ததபோது அதைத்தான் கொடுத்தாங்க)
    :-)))

    ReplyDelete
  29. ஐய்ய்ய்.. பாரதி,,

    ஆகா சீரியசான விசயம்... நான் இதனை வேறுவிதமாக எடுத்துக் கொண்டு பார்க்கிறேன்.


    //நாம் பாரதியையும் புரிந்து கொள்ள வில்லை. நேதாஜியையும் புரிந்து கொள்ள
    வில்லை. ஆகவே தான் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்துக்கு இன்னும் விடியவில்லை//

    ஆமாம் புரிந்து கொள்ளவில்லைதான். அவர்கள் புரிந்துகொள்ளாததற்கு காரணம் என்னவாய் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.

    1.எடுத்துரைத்தல்

    சரியாக எடுத்துரைக்க படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

    வேறும் தேர்வுக்காக பாரதி பாடலையோ, அல்லது இலக்கியத்தின் வேறு பகுதியா படிக்கும் ஒருவனுக்கு அதன் உள்ளர்த்தம் எப்படி தெரிந்துவிட போகிறது..

    உங்களுக்கு ஒரு நல்ல தமிழாசிரியர் கிடைத்துவிட்டார்கள். நீங்கள் நன்றாய் புரிந்துகொண்டுவிட்டீர்கள்

    ஆனால் அனைவருக்கும் அவ்வாறே கிடைத்து இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்..

    அதுவும் இப்போது எல்லாம் தமிழ் சரியாய் உச்சரிக்கத் தெரியாத நபரே ஆசிரியராய் இருக்கும் போது அவரிடம் எப்படி தமிழறிந்து கொள்ளுவது..

    இப்பவே இப்படி என்றால் இன்னும் சில காலம் கழித்து எப்படி இருக்கும்.


    அப்படியே ஒருவன் புரிந்து கொள்ள தானாய் முயலும் போது அதனை பற்றிய பின் விளக்கங்கள் எங்கும் இருப்பது இல்லை..


    உதாரணமாய் ஒரு பாடலின் விளக்கம்,
    அது எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது?
    என்ன என்ன தாக்கங்களை ஏற்படுத்தியது என்று எங்கும் குறிப்பு இல்லை..

    ReplyDelete
  30. என்னமோ சொல்றீங்க...அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறேன் :-)

    ReplyDelete
  31. கீதா நன்றி நன்றி நன்றி.
    நேரம் கழித்து எழுதவதற்கு மன்னிக்கணும்.
    நமக்கு பள்ளிக்கூடத்திலிருந்தே காந்தி பாடல்களும், பாரதி பாடல்களும் மனப்பாடம் செய்யச் சொல்லிக் கொடுக்கப் பட்டது.
    //என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
    இந்த வசை எனக்கெய்திடலாமோ?
    சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!//
    ஜீவா பதிவிலும் பாரதியைன் மீலிருப்த பாசத்தினால்தான் தமிழ் சாகாது என்று எழுதினேன்.
    நீங்களும் அதைப் படித்து பதில் பதிவும் இத்தனை அருமையாகப் போட்டு விட்டீர்கள். எத்தனை பாராட்டினாலும் தகும் உங்களை.
    தீர்க்கதரிசி அவன்.

    நல்ல எழுத்தாளருக்கு அழகு இப்படி உண்மையாக எழுதுவதுதான்.
    ஜீவாவுக்கும் உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  32. அருமையான பதிவு...

    (அபி அப்பா சொன்னாது போல் பயந்து போய் தான் இங்கு வந்தேன்.)

    இதற்கு முன்னால் எனக்கும் அந்த வரிகள் மட்டும் தான் தெரியும். உங்கள் பதிவின் மூலம் மற்ற வரிகளும் அதன் அர்த்தமும் தெரிந்துக் கொண்டேன்.

    மிக்க நன்றி மேடம்

    ReplyDelete
  33. இப்பத்தான் உங்க பதிவைப் பார்த்தேன்.
    பாரதி கோபத்திலத்தான் அப்படி சொன்னதாக நிறையபேர் சொல்லிக் கொண்டு இருக்காங்க.
    ஆனால், ஓகை விளக்கியது போல - ஒரு பேதை நினைப்பதாகத் தான் சொல்லுகிறார். நீங்களும் ஒரு வரி பதிவிலேயே விளக்கியிருக்கலாமே...

    ReplyDelete
  34. @ஜி-Z, அது சரிங்க ஏற்கெனவே ஒரு ஜி-3, ஜி-4, ஜி-5 எல்லாம் இருக்காங்களே? அதான் கேட்டேன். எல்லாம் HEAD LETTER, வேறே என்ன சொல்றது?

    @இ.கொ. நீங்க சொல்ற பதிவை ஏற்கெனவே பார்த்துட்டேன்னு நினைக்கிறேன். இருந்தாலும் திரும்பப் பார்க்கிறேன். என்ன சொன்னாலும் என்னங்க, எடுத்துக்கறவங்க எடுத்துக்கணுமே!

    @கார்த்திக், அது என்னமோ தெரியலை,. போன பிறவியிலே நானே பாரதியாரா இருந்திருப்பேனோ என்னமோ? :D, அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்படறேன். அப்புறம் பூங்காவிலே வந்திருக்கா? தெரியாதே? போய்ப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  35. @பாலராஜன் கீதா, வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, என்னோட குழந்தையிலே என்ன கொடுத்தாங்கன்னும் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே தாத்தா! இந்த கண்ட்ரோல் கீயெல்லாம் நம்ம கண்ட்ரோலிலே எங்கே இருக்கு? சமயத்திலே ஏதாவது தப்பா ஆயிடுது. அப்புறம் மொத்தமும் கோவிந்தா, கோவிந்தா தான். நான் ஏதோ புண்ணியத்திலே பதிவு போடறேன், தாத்தா, நீங்க வேறே வந்து என்னோட நிலைமை புரியாமப் பேசறீங்க! :D

    @மணிப்ரகாஷ், ஐ, பாரதி இல்லை, சுப்ரமணிய பாரதி, ஹிஹிஹி, கடுப்படிக்கிறேனோ? சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம். ஆசிரியர்கள் எல்லாரும் அநேகமாய் நல்லாத் தான் சொல்லிக் கொடுப்பாங்க. ஆனால் இப்போ ஆசிரியர் தேர்வு, வேண்டாம், நான் சர்ச்சைக்குரிய விஷயங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கை வச்சிருக்கேன். இதே போதும். நீங்க எல்லாம் புரிஞ்சுக்கறீங்க இல்லை,. அது போதும். உங்க மாதிரி இளைய தலைமுறைக்குப் புரியறதுக்காகத் தான் நடு நடுவே மருந்து மாதிரிச் சில விஷயங்கள் சொல்லறேன். புரிதலே எனக்குத் திருப்தி தான். ரொம்பவே நன்றி.

    ReplyDelete
  36. ஹிஹிஹி, ச்யாம், நேத்து உங்க வீட்டுக்கு வந்தா "சாரி" சொல்லிடுச்சே ப்ளாக்கர், ஒருமுறையாவது நீங்க எழுதினதும் வரணும்னு பார்க்கிறேன். முடியலை.

    @வல்லி, நேரம் எல்லாம் ஆகலைம்மா, உங்க வேலை எனக்கும் புரியும், நீங்க இந்த அளவுப் பின்னூட்டம் கொடுக்கிறதே போதும். பாடல் முழுதும் படிக்காமல் அதிலே ஒரு வரியை மட்டும் வைத்து மேற்கோள் காட்டுவது தவறு என்று தான் நான் சொன்னேன். கொஞ்சம் அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்னு நினைக்கிறேன். :D

    @கோபிநாத், எதுக்குப் பயம்? (அதெல்லாம் உங்களோட தமிழையோ, அபி அப்பா தமிழையோ திருத்த முடியாதுன்னு பின்வாங்கிட்டேனே! :D)
    உங்களோட கருத்துக்களுக்கும், புரிந்து கொள்ளலுக்கும் என்னோட நன்றி.

    ReplyDelete
  37. @ஜீவா, ஒரு வரியிலே சொல்லலாம்தான், உங்களுக்கு மட்டும் தெளிவாக்கிட்டுப் பேசாமலும் இருந்திருக்கலாம்தான். ஆனால் ரொம்ப நாளாகச் சில கவிதைகள் (எல்லாமே பாரதியோடது தான்) தப்பாகப் பேசப்படுவது கண்டு கொஞ்சம் தார்மீகக்கோபம் வந்ததுன்னு வச்சுக்குங்களேன். இதனால் உங்க மனசு புண்பட்டிருந்தா மன்னிப்புக் கேட்டுக்கறேன்.
    தவிர, பார்க்கிறீங்க இல்லையா,எத்தனை பேர் புரிஞ்சுக்கலைன்னும்?

    @வேதா, உங்க மாதிரித் தெரியாதவங்களுக்குத் தான் இந்தப் பதிவே.

    ReplyDelete
  38. Ellaarum thamizh meedhu poi sathiyam vechu veche, thamizh sethu pochu...

    ReplyDelete