எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 02, 2007

ஹூஸ்டனா? சென்னையா?

ம்ம்ம்ம்ம்,., மதுரை மீனாட்சி படமும், ஹூஸ்டன் மீனாட்சி படமும் பதிவிலே போட எடுத்தேன். மதுரை மீனாட்சி படம் அப்லோடே ஆகலை. வல்லிசிம்ஹன் எப்படித்தான் இவ்வளவு நல்லாப் படம் காட்டறாங்களோ? பெருமூச்சுத் தான் விட வேண்டி இருக்கு. ஹூஸ்டன் மீனாட்சி கோவில் படம் அப்லோட் செஞ்சு பதிவிலேயும் போட்டேன். அப்புறம் பார்த்தால் அதிலே என்னோட திருமுகம் நல்லாத் தெரியுது. சரி வேணாம்னு டெலீட் செஞ்சுட்டேன். ம்ம்ம்ம்., மனசு இருந்தால் போடப் பார்க்கிறேன். கட்டாயமாய்த் திருமுகத்தை எடுத்துட்டுத் தான். இங்கே வந்து 4 நாள் ஆகியும் இன்னும் சிதம்பர ரகசியம் ஆரம்பிக்க முடியலை. கவனமா எழுத வேண்டிய விஷயம் இல்லையா? சும்மா நான் பாட்டுக்கு எழுதமுடியாதே! ஏற்கெனவே எழுதறதுக்கே பின்னூட்டமே வராமல் ஆள் விரட்டி, விரட்டிக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு. இந்த நாகை சிவா, மதுரையம்பதி, தி.ரா.ச. இவங்க எல்லாம் மத்த பதிவுகளிலே எல்லாம் எனக்கு முன்னாலேயே போய்ப் பார்த்து விசாரிச்சுட்டு வராங்க. இங்கே எட்டியே பார்க்கிறதில்லை. நறநறநறநற. எல்லாம் தலை எழுத்து!
*************************************************************************************

அமெரிக்காவில், அதாவது யு.எஸ்ஸில் "ஃப்ரீவே" எனப்படும் "ஹைவே"யில் போவது பற்றிப் பார்த்தோம். இந்த மின் அடுப்பு பத்தி ஒரு தகவல் சொல்லியே ஆகணும். ஆரம்பத்தில் சூடு இல்லாத மாதிரி இருந்தாலும் சமையல் செய்யும் நேரம் போகப் போக சூடு அதிகமா இருக்குமாதலால் அடுப்புக் கிட்டே நின்னு யாரும் சமைக்காதீங்க. எனக்கு இந்த 4 மாசத்திலே கையில் தோல் நிறமே மாறிப் போச்சு! :(((((((. மேலும் முன்னால் உள்ள பர்னரில் சமையல் செய்து கொண்டே பின்னாலும் வைக்காதீர்கள். சுட்டுக் கொள்ள நேரும். இங்கேயே இருந்து பழக்கம் ஆனால் கூட சில சமயம் கவனக் குறைவு ஏற்படலாம். கூடியவரை பின்னாலேயே வைத்துச் சமைக்கவும். நம்ம ஊர் அலுமினியம் வாணாய், இரும்பு தோசைக் கல் எல்லாம் சரிப் படாது. வாணாய் எல்லாம் நாட்டியம் ஆடுது, அப்பளம், வடாம், வடை, பஜ்ஜி செய்வதானால் கூடத் தட்டையான அடிப்பாகம் உள்ள கூடியவரை நான் ஸ்டிக் பாத்திரங்களே உபயோகிக்கவும். இங்கே உள்ள டிஷ்-வாஷர் என்னதான் நீங்க சோப்புப் போட்டாலும் நம்ம ஊர் வாணாய்க்கு எல்லாம் மசிந்து கொடுக்காது. தவிர தீ படுவது நடுவில் மட்டும்தான் இருக்கும். சுற்றிப் படாது. எரியும் கம்பிகள் வெளியே தெரியும். கூடிய வரை தட்டையான அடிப்பாகம் உள்ளதிலேயே சமைப்பது நல்லது.மறந்து போய்க் கையை வச்சுட்டோம்னா அவ்வளவு தான், பயமுறுத்தறதுக்காகச் சொல்லவில்லை. கவனம் இருக்கவேண்டும். இந்தியாவின் காஸுக்குப் பழகிவிட்டுத் திடீரென மாறும்போது கட்டாயம் ஒரு 2 நாளுக்காவது தடுமாறும்.


ஹூஸ்டன் மீனாட்சி கோவிலுக்கு வந்த மறுநாளே போனோம். முக்கியமா அங்கே உள்ள நூலகத்துக்குத் தான். 2 வருஷங்களில் நூலகம் முகமே மாறி விட்டதோடு அல்லாமல் பல புத்தகங்களை விலைக்கு எனச் சொல்லி விட்டார்கள். போன முறை படித்த மாதிரி புத்தகங்கள் அவ்வளவாய்க் கிடைக்கவில்லை. இங்கே உள்ள மீனாட்சி கோவில்தான் யு.எஸ்ஸிலேயே மிகப் பழமையானது எனச் சொல்கின்றனர். சிலர் பிட்ஸ்பர்க் வெங்கடசலபதி என்று சொல்கின்றனர். போன முறை மதுரைக் காரர்களே இருந்த கோவிலில் இப்போது நிர்வாகமும் மாறி இருப்பதாய்த் தெரிகின்றது. இங்கே உள்ள "பாரதி கலை மன்றம்" 25 வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டது. பொங்கல் சமயம் பெரிய விழா நடக்கும். தனி ஆடிட்டோரியம் உள்ளது. கோவில் சொசைடி மூலம் பல நற் சேவைகள் நடைபெறுகிறது. தமிழர்கள் அதிக அளவில் இங்கே இருப்பதாயும் சொல்கின்றனர்.

பொங்கல் மட்டுமில்லாமல் தீபாவளி, நவராத்திரி போன்ற சமயங்களில் கூடக் கோவிலை ஒட்டிய மைதானத்தில் சாப்பாடுத் திருவிழா மட்டுமின்றித் துணிவகைகள், சேலைகள், மற்றும் பல்வேறுவிதமான இந்தியப் பொருட்கள் விற்பனைக்கு வரும். கூட்டம் சொல்லி முடியாது. ஆகவே கோயில் கமிட்டி உறுப்பினர்களின் வாகனங்கள் மட்டும் கோவில் வளாகத்தில் அனுமதிப்பார்கள். மற்றவர்கள் வண்டியை ஒரு மைல் தூரத்தில் இருக்கும் தனிப்பட்ட அனுமதி வாங்கப் பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கும் மினி பஸ்களில் போய்வர வேண்டும். நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழ்த் திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் போன்றவை மட்டுமில்லாது தமிழும் கற்பிக்கப் படுகிறது. 2 அல்லது 3 உடுப்பி ஹோட்டல்களும் இருக்கின்றன. பொதுவாக எல்லாமே இங்கே முழு சைவ உணவு விடுதிகள் தான். இரண்டும் கலந்த இந்திய உணவு விடுதிகள் ஒன்றிரண்டுதான் உள்ளன. உணவு விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரிசையில் நின்று நம் தேவைக்கான ஆர்டரைக் கொடுத்தால் நமக்கு என்று குறிப்பிட்ட வரிசை எண் கொடுத்து விடுவார்கள். பின்ன்னர் அந்த எண் ஒட்டப்பட்ட தட்டுக்களில் நம்முடைய உணவு நம்மைத் தேடி வரும். என்ன, கொஞ்சம் நேரம் ஆகும்.

12 comments:

  1. எங்க ஊரில் எல்லாம் கேஸ் அடுப்புதான். நம்ம பாத்திரங்கள் எல்லாம் ஒரு முறை நல்லா சோப் போட்டுட்டு டிஷ்வாஷரில் வெச்சா சரியா சுத்தமாகிடும்.

    கோவில், விழா எல்லாமும் இங்க இதைப் போலவேதான்.

    ReplyDelete
  2. தலை(வ)லி! தங்கள் திருமுகம் தெரிந்தால் என்ன பரவாயில்லை படத்தை போடுங்கள்! தம்பி நடராஜ் வால் தனம் பண்ணும் போது காட்டி மிரட்ட வசதியாக இருக்குமே!:-)

    ReplyDelete
  3. Houston kovil-la sunday supermasal dosai kedaikume :D (naanga breakfast lunch dinnerkku-nu parcel vaangittu vanthuduvom :D)

    ReplyDelete
  4. அபி அப்பா சொல்வதை நான் வழி மொழிகிறேன். ஆனால் இவ்ளோ ரிஸ்க் எடுக்கனுமா?னு அபி அப்பா யோசித்து கொள்ளவும்.:p

    பெங்க்ளுரில் நேரில் பாத்து குழந்தை(me only) ஆடி போயி இருக்கு. இன்னும் தெளியலை. :))

    ReplyDelete
  5. இந்த பதிவினை படித்தவுடன் 2003 நவராத்திரி விழா ஹீஸ்டனில் கழிந்தது நினைவில் வந்தது....அந்த வருட சஹஸ்ர நாம அர்ச்சனை அங்கு பண்ண கண்ணன் பட்டர் அனுமதித்தார். அவருடன், நான் மற்றும் இன்னும் மூன்று நண்பர்களாக சேர்ந்து நவராத்திரி 10 நாளில் இலட்சார்ச்சனை.....

    ReplyDelete
  6. ஆகா, தலைவலி இங்கேயும் வந்தாச்சா? வந்த உடனேவா?

    ReplyDelete
  7. //ஹூஸ்டன் மீனாட்சி கோவிலுக்கு வந்த மறுநாளே போனோம். முக்கியமா அங்கே உள்ள நூலகத்துக்குத் தான். 2 வருஷங்களில் நூலகம் முகமே மாறி விட்டதோடு அல்லாமல் பல புத்தகங்களை விலைக்கு எனச் சொல்லி விட்டார்கள். போன முறை படித்த மாதிரி புத்தகங்கள் அவ்வளவாய்க் கிடைக்கவில்லை.//

    Books are still available for rental.

    // இங்கே உள்ள மீனாட்சி கோவில்தான் யு.எஸ்ஸிலேயே மிகப் பழமையானது எனச் சொல்கின்றனர். சிலர் பிட்ஸ்பர்க் வெங்கடசலபதி என்று சொல்கின்றனர்.//

    Pittsburg is the oldest temple. Houston Meenakshi is the second bigeest (also oldest) temple.

    // போன முறை மதுரைக் காரர்களே இருந்த கோவிலில் இப்போது நிர்வாகமும் மாறி இருப்பதாய்த் தெரிகின்றது.//

    The management(board) is elected by members (i think) once every 2 years. There is no mamanement change, but the people who have interest gets elected. if you are talking about priests 2 have been retired and new priests have come.

    //ஆகவே கோயில் கமிட்டி உறுப்பினர்களின் வாகனங்கள் மட்டும் கோவில் வளாகத்தில் அனுமதிப்பார்கள். மற்றவர்கள் வண்டியை ஒரு மைல் தூரத்தில் இருக்கும் தனிப்பட்ட அனுமதி வாங்கப் பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கும் மினி பஸ்களில் போய்வர வேண்டும்.//

    parking lot has been expanded; but during festivities only "early birds" get spots. all othere have to park elsewhere.

    // 2 அல்லது 3 உடுப்பி ஹோட்டல்களும் இருக்கின்றன. பொதுவாக எல்லாமே இங்கே முழு சைவ உணவு விடுதிகள் தான். // true only for south indian restaurants (number about 10)

    //இரண்டும் கலந்த இந்திய உணவு விடுதிகள் ஒன்றிரண்டுதான் உள்ளன.'//
    there are about 40 north indian (houston + suburbs sugar land , pearland etc) restaurants serving veg/non veg foods here!

    your writng on Chidambaram temple has been good

    ReplyDelete
  8. இ.கொ. கொடுத்து வச்சிருக்கீங்க, இன்னிக்குப் புளிக்காய்ச்சலைக் காய்ச்சிட்டு அதோடு சேர்ந்து நானும் காய்ந்ததைச் சொன்னால் எல்லாரும் அடிக்க வருவாங்க, முக்கியமா மெளலியும், குமரனும், கட்சி கட்டிக்கிட்டு வராங்களே! என்னத்தைச் சொல்றது போங்க? அது சரி, என்ன இந்தப் பக்கம் எல்லாம் வரீங்க? :P

    @அபி அப்பா, நீங்க அனுப்பின அல்-அயன் படத்தைப் பார்த்துட்டு ஜுரமாப் படுத்தது தான், இப்போத் தான் எழுந்து நடமாட ஆரம்பிச்சிருக்கேன், இது வேறேயா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    @சிங்கம், இந்தச் சிங்கம் பசித்தாலும் அந்தப் புல்லைத் தின்னாது, தெரியுமா? அது ஒரு தோசையா? எங்க வீட்டுக்கு வாங்க, நான் செஞ்சு போடறேன் அருமையான மசால் தோசை!
    அது சரி, இங்கேயேவா இருக்கீங்க? தெரியாமல் போச்சே, வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யாமல் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? இருங்க, உங்க பேரிலே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும். தலைமைக் கழகத்திலே இருந்து மெமொ வரும். :P

    ReplyDelete
  9. @ஆப்பு, என்ன ரொம்பவே ஆட்டம் ஜாஸ்தியாப் போயிட்டு இருக்கு? என்ன? என்ன விஷயம்?

    @மதுரையம்பதி, மெயிலி இருக்கேனே, பார்க்கலை? வாங்க, வாங்க ரொம்ப நாள் கழிச்சு வந்ததாலே நீங்க என்ன சொன்னாலும் வாயை மூடிக்க வேண்டியது தான். எல்லாம் ஹெட் லெட்டர்! :P

    @ஆஹா, விவசாயி, இது என்ன சொல்லாமல் கொள்ளாமல், இங்கேயுமா நீங்க? அது சரி, என்னோட படம் போடற விஷயம் என்ன ஆச்சு?

    ரொம்பவே நன்றி தியாகராஜன், கொடுத்த விவரங்களுக்கு. இருந்தாலும் ஜெயமோகன் புத்தகம் விஷ்ணுபுரம், பாரதியார் பத்தி சீனி.விஸ்வநாதன் எழுதினது, இன்னும் பல புத்தகங்கள் உள்ள 2 அலமாரிப் புத்தகங்கள் விலைக்கு என்றே சொன்னார்கள். ம்ம்ம்ம்ம், விலைக்கு வாங்கினால் எப்படிச் சென்னை எடுத்துப் போக முடியும்? லக்கேஜ் எடைக்கு மேல் ஆயிடும். வருத்தத்துடனேயே வந்தேன். மேலும் என்னை விட்டால் படிக்க ஆளும் இல்லை, எங்க வீட்டிலே!

    ReplyDelete
  10. வணக்கம் தலைவி. அமெரிக்கா பற்றிய தகவல்கள் அருமை. ஒரு மாத லீவுக்கு சென்னை சென்று மீண்டும் சவுதி அரேபியா வந்தாச்சு.தி.ரா.சா அவர்களிடம் போனில் பேசினேன். நேரில் சந்திக்க முடியவில்லை.மற்ற விபரங்களுக்கு என் வலைக்கு வந்து எட்டிப்பார்க்கவும்.

    ReplyDelete
  11. வாங்க மணிப்பயல், உண்மைத் தொண்டரா நீங்களாவது இருக்கீங்களேன்னு ரொம்பவே சந்தோஷமா இருக்கு! அடிக்கடி வந்து போங்க, ஏதோ ஒரு பின்னூட்டமாவது தேறும்! :P ஹிஹிஹி, :D கொடுத்திருக்கணும், பழக்க தோஷத்தில் :P வந்துடுச்சு, நீங்க ஒண்ணும் நினைச்சுக்காதீங்க, கல்கண்டுப் பொங்கலையும், சம்பா சாதம், கொத்ஸுவையும் நினைச்சுப் பெருமூச்சுடன்...............:(((((((

    ReplyDelete
  12. பரவாயில்லை முகத்தை போட்டு விடலாம்.ஒரு 14 வயது பெண் குழந்தயைப் பார்த்து யார் பயப்படபோகிறார்கள் அம்பியைத்தவிர

    ReplyDelete