எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 03, 2007

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல




கிருஷ்ணன் பிறப்புப் பத்தி நான் ஒண்ணும் புதுசா எழுத வேண்டாம். இந்தியா பூராவையும் கவர்ந்த ஒரு குழந்தை கிருஷ்ணன் தான். "கனையா" என்று இந்தியிலும், "கண்ணன்" என தமிழிலும் அழைக்கப் படும் கண்ணன் பிறப்பு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்க வல்லது. இந்த ஒரு அவதாரம் தான் மனிதன் இல்லை என நிரூபித்துக் கொண்டே இருந்தது கடைசி வரையிலும். நான் கிருஷ்ண ஜன்ம பூமியான "மதுரா"வுக்குப் போய் இருக்கிறேன். போன போது நல்ல மழைக் காலம் தான். கிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலையைப் புனிதமான இடமாகக் கருதி யாத்திரீகர்கள் வருகின்றனர். அங்கே சிலா ரூபமாகக் கிருஷ்ணர் சிலை ஏதும் இல்லை. ஒரு படம் தான் வைத்திருந்தார்கள். பக்கத்திலேயே மசூதியும் இருப்பதால் பாதுகாப்புச் சோதனைகள் அதிகம். அங்கிருந்து நாங்கள் "கோகுலம்" "பிருந்தாவன்" இரண்டு இடத்திற்கும் போய்ப் பார்க்க வேண்டும் என்று போனோம். கோகுலமும் பிருந்தாவனமும் யமுனைக் கரையிலேயே இருக்கிறது.

உண்மையில் கோகுலம் இன்றளவும் கோகுலமாகவே இருக்கிறது. தாழ வீழ்ந்த ஆலம் விழுதுகளும், அதில் ஊஞ்சல் கட்டி விளையாடும் சிறுவர், சிறுமிகளும், தன்னுடைய நிறமும் அந்தக் கண்ணன் நிறம்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லும் காளிந்தி நதி என அழைக்கப் படும் யமுனையும், அந்தக் கரையில் இருக்கும் பெரிய பெரிய மரங்களை ஒட்டிய மண்டபங்களும், அதில் வந்து முதுகைச் சொறிந்து கொண்டு நிற்கும் பசுக்களும், குழந்தைகளால் மேய்க்கப் படும் பசுங்கன்றுகளும், அவற்றைத் தேடிக் கூப்பிடும் பசுக்களின் குரல்களுமாக காணக் கண்கொள்ளாக் காட்சி தான். கிருஷ்ணருக்கு ரொம்பவே கொடுத்து வச்சிருக்கு இதை எல்லாம் அனுபவிக்க. கிருஷ்ணர் விளையாடிய, ஓடியாடிய இடத்தில் நாமும் நடக்கிறோம் என்ற நினைப்பே ஆனந்தமாய் இருந்தது. கரைக்கு அப்பால் இருக்கும் மதுராவில் இருந்து வசுதேவர், கூடையில் வைத்து எம்பெருமானைச் சுமந்து வந்து யமுனையைக் கடக்க இறங்கிய துறை மிகவும் பவித்திரமாய்ப் போற்றப் படுகிறது.

பிருந்தாவனமும் யமுனைக் கரையிலே தான் இருக்கிறது. இங்கே தான் முக்கியமாகக் கிருஷ்ண ஜெயந்திக் கோலாகலங்கள் நடக்கின்றன. ராதாவுடன் கிருஷ்ணன் விளையாடிய இடங்களையும், இன்னும் கிருஷ்ணருக்கு உபநயனம் நடந்த இடம், கிருஷ்ணர் ராசலீலா நடத்திய இடம் எனக் காட்டுகிறார்கள். அனைத்தும் பார்த்து அனுபவிக்க வேண்டிய இடங்கள் தான். குழந்தைக் கிருஷ்ணனின் தவழ்ந்த கோலத்தில் உள்ள உருவச் சிலையைத் தொட்டிலில் இட்டு அலங்காரம் செய்து வைத்து, நம்மை உட்கார்த்தி வைத்துத் தொட்டிலை ஆட்டச் சொல்கிறார்கள். தரிசனம் எல்லாம் நல்லாவே கிடைக்கும். ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் பணம் கேட்கும் முறைதான் பிடிக்கவில்லை. குறைந்த பட்சமாக இந்திய ரூபாயில் 5,000/-த்தில் ஆரம்பித்துப் பின்னர் ஒருத்தருக்கு 50ரூ என்று முடித்தார்கள். நாங்கள் இருவருக்கும் சேர்த்து 50ரூதான் கொடுத்தோம். :((((

நகரமும் ரொம்பவும் மோசமான நிலையில் சற்றும் பராமரிப்பு இல்லாமலே இருக்கிறது. சென்னைத் தெருக்களைத் தூக்கிச் சாப்பிடும்போல உள்ளது மதுரா நகரின் தெருக்கள். பேருந்து நிலையமோ மழைத் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தது. பயணிகள் நிற்கவோ, ஒதுங்கவோ இடமும் இல்லை. பேருந்துகள் உள்ளே போகவும் முடியவில்லை. சாலையிலேயே நிற்கவேண்டியதாய் இருந்தது. நாம் பயணம் செய்ய வேண்டிய பேருந்தைத் தேடிப் பிடித்துத் தான் ஏற வேண்டும். மொழி படிக்கத் தெரியாமல் போனால் கொஞ்சம் கஷ்டம் தான். மொழி தெரியாதவர் குழுவாகப் போவது தான் நல்லது. துவாரகை கிருஷ்ணரும் பார்த்திருக்கேன். அவர் குழந்தை இல்லை, பெரியவர் தவிர ராஜா! ஒரு நாட்டை ஆட்சி செய்தவர். ஆகையால் அவரைப் பற்றிப் பின்னர் ஒருநாள் எழுதுகிறேன். குஜராத்தில் பெரும்பான்மையான மக்கள் தாங்கள் கிருஷ்ணருடன் வந்தவர்கள் தான் எனச் சொல்கிறார்கள். துவாரகை தரிசனம் பின்னர்.


விரைவில் வெளி வருகிறது "காஃபி ரகசியம்"!

15 comments:

  1. me thaan pashtuuuuuu.

    edunga seedai, murukku, appam, adhirsam ellaam.
    tmrw i'll comment about post.
    good nite here :)

    ReplyDelete
  2. கங்கைக் கரை மன்னனடி உள்ளம் கவர் கள்வனடி. மதுரா செல்லுவதே ஒரு அனுபவம். நான் டெல்லியி இருந்தபோது சென்று வந்தது இன்னமும் மறக்கமுடியவில்லை.
    முதல் நான் தானே. சீடை முறுக்கு எல்லாம் பார்சல் அனுப்புங்கள்

    ReplyDelete
  3. ரெண்டு பேருக்கும் சீடையும் கிடையாது, முறுக்கும் இல்லை. நானே சாப்பிட்டுக்கறேன். :P

    ReplyDelete
  4. //கிருஷ்ணருக்கு ரொம்பவே கொடுத்து வச்சிருக்கு இதை எல்லாம் அனுபவிக்க. //
    இதேல்லாம் டூ மச். கிருஷ்ணரையும் விட்டு வைக்கலையா? :)))

    முக்யமா ஒன்னு கேக்க மறந்துட்டேன், மதுராவில் காப்பி கிடச்சதா? :p

    இப்ப தான் Scrolling செய்ய பழகி இருக்கீங்க போல, இல்ல வழக்கம் போல Outsourcing தானா? :p

    ReplyDelete
  5. //முதல் நான் தானே. சீடை முறுக்கு எல்லாம் பார்சல் அனுப்புங்கள் //

    @TRC sir, he hee, Just miss. half share for U. :)))

    //ரெண்டு பேருக்கும் சீடையும் கிடையாது, முறுக்கும் இல்லை. நானே சாப்பிட்டுக்கறேன்//

    @geetha paati, அதானே! எங்க கிருஷ்ணர் மறந்து போய் நல்ல புத்தி குடுத்துடாரோனு பயந்துட்டேன். :)))

    ReplyDelete
  6. நீங்களே எல்லாத்தையும் சாப்பிடற வயதை தாண்டிவிட்டீர்கள்

    அவங்க ரெண்டு பேருக்கும் தான் அனுப்ப மாட்டீங்க சரி, எனக்காவது அனுப்புங்க....

    ReplyDelete
  7. குழந்தை கிருஷ்ணன் நிஜமாகவே Butter Baby. குறும்புக்கு அளவே கிடையாது. எக்ஸ்ட்ரீம்லி ஹைப்பர் ஆக்டிவ் பேபி:-))

    இளைஞனான கிருஷ்ணன் ஆநிரை முதல் அனைத்து ஜீவராசிகளும் நின்று கேட்டு மகிழுமளவுக்கு வலக்காது தோளில் தொடுமாறு சாய்ந்து குழல் இசைத்த பெரும் இசைமேதை!

    வளர்ந்த கிருஷ்ணனோ உலகின் Eternal Global Management Guru (be it political or self management)

    கிருஷ்ண பரமாத்மா மகிழ்ச்சியின் முழு வடிவம்.

    மகிழ்ச்சியான கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

    சீடை மட்டும் பத்தாது. அனைத்து வகை கோகுலாஷ்டமி பட்சணங்கள் அனுப்பி வைக்கவும்.

    ReplyDelete
  8. 4th commentku vennaiyavadhu anupunga, seedai risk edukavirumbalai

    ReplyDelete
  9. @அம்பி, மறந்துட்டேனே, விளக்கெண்ணெய் எல்லாம் விமானப் பயணத்திலே கொண்டு வரக் கூடாதுனு அதிலேயே சீடை, முறுக்கு பண்ணி உங்களுக்கு "FEDEX" -ல் பார்சல் அனுப்பிட்டேன். ஜாஸ்தி இல்லை. ஒரு 1,000 $ தான் பில் வரும். வந்ததுக்கு கமென்ட் கொடுத்தாலே போதும், வந்ததுனு புரிஞ்சுப்பேன்! :P

    ReplyDelete
  10. @அம்பி, அப்புறம், கிருஷ்ணர் எங்க வீட்டுப் பிள்ளை தானே, அவரை நான் என்ன வேணாலும் சொல்லிப்பேன்.
    ம்ம்ம்., அப்புறமா இந்தக் காஃபி விஷயம், டெல்லியில் கிளம்பும்போதே காஃபி சாபிட்டுட்டுத் தான் போனோம்! :P

    @மதுரையம்பதி, இது நல்லாவே இல்லை, இந்த வலை உலகின் ஒரே "சின்னப் பெண்" ஆன என்னைப் பார்த்துச் சீடை முறுக்கு தின்ன வயசு ஆயிடுச்சுனா சொல்றீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., அதுக்காகவே உங்களுக்கு ஒண்ணும் கிடையாது! :P

    @ஹரிஹரன், வாங்க, எங்கே உங்களைப் பார்க்கவே முடியலை இப்போதெல்லாம், நான் பிசியா, நீங்க பிசியானு தெரியலை? அது சரி, என்ன கரெக்டாச் சீடை முறுக்குக்கு வந்துட்டீங்க?

    இந்த வலை உலகின் தங்கமணிகள் எல்லாம் சீடை முறுக்கை ரங்கமணிகளுக்குக் கண்ணிலேயே காட்ட மாட்டாங்க போலிருக்கு! :P

    @ஆணி பிடுங்கணும், லன்டணிலே கிடைக்காத வெண்ணெயா? க்ர்ர்ர்ர்ர்., சீடை முறுக்கு கேட்டு ரிஸ்க் எடுக்க மாட்டேன்னு சொன்னதுக்காகவே உங்களுக்கு ஒண்ணும் கிடையாது! :P

    ReplyDelete
  11. @அப்புறம் அம்பி, கமென்ட் கொடுக்கிற தொண்டர்களே இப்போ எல்லாம் வரதில்லை, இதிலே "out sourcing" நான் எங்கே போறது? :(((((( எல்லாம் உங்க கண்ணு பட்டு பட்டுத் தான் தொண்டர் படையே பதுங்கி இருக்கு! நானே ஓவர்டைம் போட்டு உழைக்கிறேன்! :P

    ReplyDelete
  12. @ வேதா, ரொம்பப் பேருக்குத் தெரியறதில்லை, பிர்ந்தாவனம், கோகுலம் பத்தி, டூரிஸ்டில் போனால் அவங்களும் அங்கே எல்லாம் பெரிய வண்டிகள் ஊருக்குள் போவது சிரமம் என்பதால் அவ்வளவாய் இதைப் பத்தி எடுத்துச் சொல்றதில்லை. கட்டாயம் கோகுலம், பிருந்தாவனம் பார்க்கணும். அப்புறம் வெண்ணை இங்கே 1/2 பவுண்டு வாங்கினதுக்கே இன்னும் பெருமுச்சு விட்டுட்டு இருக்கேன், விலை மலிவுனு இங்கே எல்லாரும் பேசிக்கறாங்க. நமக்கு இந்திய ரூபாயில் மாத்திப் பார்த்துட்டு மயக்கமே வருது! :P

    ReplyDelete
  13. //அப்புறம் வெண்ணை இங்கே 1/2 பவுண்டு வாங்கினதுக்கே இன்னும் பெருமுச்சு விட்டுட்டு இருக்கேன், விலை மலிவுனு இங்கே எல்லாரும் பேசிக்கறாங்க. நமக்கு இந்திய ரூபாயில் மாத்திப் பார்த்துட்டு மயக்கமே வருது! :P
    //
    Nagesh nadicha oru padathula indha Dialogue varum,

    Josiyakaraar: Oru 4yrs Nai padathapadu paduvahnu,

    Nagesh: apparam sariya poedumah,?

    Josiyakaraar: Ellai, adhuveh apparam pazhagidum...

    Idhu edhuku sonnenah, indha dollars to Rupees conversion initialaah irukum, once when got used to living there, ellam pazhagidumnu sollavandhaen...
    //
    க்ர்ர்ர்ர்ர்., சீடை முறுக்கு கேட்டு ரிஸ்க் எடுக்க மாட்டேன்னு சொன்னதுக்காகவே உங்களுக்கு ஒண்ணும் கிடையாது! :P
    //
    Enga oorula ellam (metturla - nearby salem) pakkathu aathulerndhu vara seedai ellam goli vilaiyada use pannuvoam, muruku thinnaila ooruti vilaiyada nalla irukum, andha ninaipula sollita, unga veetu seedai adhai vida better (strong nu artham ellai), irundha risknu sollamataen, okvah! :p

    ReplyDelete
  14. By the way, Neenga பிர்ந்தாவனம், கோகுலம் ellam poetuvandhurundhinganaa, why not try writing about it!, would be interested to know more about it.
    ஆஆஆஆஆஆஆஆஆஆணி

    ReplyDelete
  15. @ஆணி, என்ன ஆப்பீஸுலே ஆணி கம்மியோ? ம்ம்ம்ம்ம்., பார்த்து, அப்புறம் கடப்பாரையைக் கொடுத்துடப் போறாங்க! :P

    பிருந்தாவனம் பத்தி எழுதணுமா? க்ர்ர்ர்ர்ர், கிண்டலா இருக்கு?
    அப்புறம் "" நாங்க இந்தியா தான் பெர்மனன்ட், அதனாலே இந்திய ரூபாயில் மாற்றிப் பார்க்கும் புத்தி கூடவே தான் இருக்கும்! :P

    ReplyDelete