6 மாத காலச் சுற்றுப்பயணத்தில் இருந்த தலைவி திடீரெனத் தாயகம் திரும்பினார். (6 மாசம் முடியப் போகுது, அப்படி இருந்தும் இந்த பில்ட்-அப்பா?) நாசாச் சுற்றுப் பயணம் செல்லவிருந்த தன் பயணத்தை ரத்து செய்து விட்டுத் தாயகம் திரும்பிய தலைவி, தன் பயணத்தை மிக மிக ரகசியமாக வைத்திருந்தும், விமான நிலையத்தில் தொண்டர்கள் கூட்டம் தாங்கவில்லை, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் திரண்டிருந்து பெரும் வரவேற்பு அளித்திருந்தனர். (விமானத்தில் ஸ்டான்டிங்க் அனுமதித்தால் கூட வருவாங்க போல, அவ்வளவு கூட்டம் சென்னைக்கு! அவங்களை வரவேற்க வரும் கூட்டத்துக்குக் கேட்கணுமா? அதைத் தான் சொல்றாங்க!) ஹிஹிஹி, கண்டுக்காதீங்க, வழக்கம் போல் மனசாட்சி புலம்பல்.
புஷைச் சந்திக்கும் நோக்கத்துக்கும், (எல்லாம் இந்த அணுசக்தி விவகாரத்துக்குத் தான்! :P), ஹிலாரி கிளின்டனின் உதவிக்காகவும் சென்றிருந்த அவர், தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாய் முடித்துக் கொண்டு திரும்பினார். திரும்பிய அவரைத் திரு தி.ரா.ச. அவர்கள், அம்பியின் எதிர்ப்பையும் மீறி வரவேற்றார் என்பது குறிப்பிடத் தகுந்தது. (அவர் கூப்பிட்டுப் பேசும்போது, வேறு யாரோனு "தலைவி" அசடு வழிஞ்சது தனிக் கதை!)
தலைவி அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள இருந்தபோதும், திரு தி.ரா.ச. அவர்கள், இதே மாதிரியாக அவர் பயணம் வெற்றி பெற வாழ்த்தினார் என்பதும் அம்பியால் கவனிக்கத் தகுந்தது. அவரைப் பயணம் வெற்றிகரமாய் முடிந்து தாயகம் திரும்பும் வேளையில் வாழ்த்தி வழி அனுப்பிய தொண்டர்களில் ஒருவரான திரு கண்ணபிரான் ரவிசங்கருக்கும் தலைவி தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். அவர் தலைவியைத் தாயகம் திரும்பும் வேளையில் சூடான் சென்றுப் புலியை ஒரு உலுக்கு உலுக்கச் சொல்லி இருந்தும் தலைவி பெருமனதுடன் புலியை முறத்தால் அடிக்க விரும்பால் விட்டு விட்டார். புலியும் அந்த நன்றியை மறவாமல் தலைவி ஜிமெயிலைத் திறந்ததுமே வந்து தாயகம் திரும்பியதற்கு வாழ்த்தும், தன்னைச் சும்மா விட்டதுக்கு நன்றியும் தெரிவித்தார். அவருக்குத் தலைவி பார்த்து வைத்திருக்கும் பொண்ணு இம்முறையும் அவருக்குப் பிடிக்கவில்லையாம், கோவிச்சுக்கிட்டார்! :P இதற்காகத் தலைவி கூடிய விரைவில் நாகைப் பயணம் மேற்கொள்ளுவார் எனத் தெரிகிறது.
அப்புறம் அம்பி, நீங்க மெயில் கொடுத்தாப்பலேயே பதிவு போட்டுட்டேன். பிடிச்சதா?
கண்ணன், நீங்க சொன்னாப்பலேயே "புலி"யைப் பத்தி எழுதிட்டேன், புலிகிட்டே சாட்டிங்கிலேயும் சொல்லிட்டேன்! சரியா?
அம்பி, நீங்க திருந்தவே மாட்டீங்களா?
TBCD நீங்க திருந்த மாட்டீங்கனு புரிஞ்சு தான் "லூசுலே" விட்டுட்டேன்! தலை எழுத்து! நச், நச், நச்,
அடிச்சுக்கிறாங்க போல ரெண்டு பேரும் சத்தம் இங்கே வந்து கேட்குது! என்னனு பார்த்துட்டு வரேன்!
varuka varuga...
ReplyDeletethalaivi irukkum idathaliye intha thondanum..
seekrram thalaviyenai neril parthu aaci vanga pogum
unmaih thondan
//அம்பி, நீங்க திருந்தவே மாட்டீங்களா?
ReplyDelete//
இந்த கேள்வியை நான் கேக்கனும். கர்ர்ர்ர்ர். வேலை மெனக்கட்டு போன் போட்டு விசாரிச்சேன் பாரு! :p
:-))))
ReplyDeleteஏன் ரவிண்ணன், என் மேலும் அப்படி என்ன கொல வெறி உங்களுக்கு....
ReplyDeleteவந்த வுடனே பதிவு போட்டாச்சு... நெட் வேலை செய்யாட்டியும் வேறு எங்காச்சும் போய் பதிவு போடும் உங்க கடமை உணர்ச்சி பாக்கும் போதும்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நாகைக்கு நீங்கள் என்றும் வரவேற்கப்படுகின்றீர்கள்... :)
ReplyDeleteவந்துட்டீங்களா?...மழை பெய்து ஓய்ந்தமாதிரி அப்பாடான்னு இருந்தோம் 4-5 நாட்கள்....ஹிஹிஹி
ReplyDeleteஎன்ன கொடுமை ஆண்டவா, என் ஸ்டார் பதிவு கொடுமையிலே இருந்து தலைவி தப்பிக்கவே அந்த வாரத்தில் பயணம் வைத்து கொண்டதாக கோபி சொன்னது உண்மயா?பரவாயில்லை இப்ப ஒரு பதிவு போடுறேன்:-)) தப்பிக்க விட மாட்டேன் தலைவியே:-))
ReplyDeleteவரணும் வரணும். போன்ல கூட உங்களை[ப் பிடிக்க முடியலியே:)))
ReplyDeleteதாயகம் திரும்புனதுக்கு வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteஆறுமாசம்?
ஆமாம்.விஸா முடிஞ்சு போயிருக்கும்.
இல்லே?
ஹலோ, நீங்க எங்கேயும் போனதா எனக்கு தெரியலெயே... எப்பவும் இங்கிட்டுத்தான் உலாத்திகிட்டு இருந்தீக போல... இதுலெ வேறெ இவ்வளவு பில்டப்பா? ம்ம்... வந்துட்டோம்லெ.
ReplyDeleteதிரும்பியாச்சா? வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிமே அகப்பை இல்லை, கலப்பை இல்லைன்னு சாக்கு சொல்லாம ஒழுங்கா எழுதணும். புரிஞ்சுதா? :))
வந்துட்டீங்களா? வந்துட்டீங்களா?
ReplyDeleteஆஹா, அதான் ஒரு வாரமா ஒரு போஸ்ட்டும் இல்லயா? நா கூட கணிணிக்கு உடம்பு சரியில்லயோன்னு நெனைச்சேன். சென்னையில் நான் இல்லாவிட்டலும் என் குடும்பத்தின் சார்பில் உங்களை வரவேற்கிறேன்.
ReplyDelete