எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 02, 2008

அவசர உதவி தேவை

தமிழ் மணம் நண்பர், நண்பிகளுக்கும், முத்தமிழ்க்குழும நண்பர்களுக்கும் ஒரு அவசர வேண்டுகோள். என்னோட கணினியில் வைரஸ் வந்து அதை நீக்கிவிட்டுப் பின்னர் கணினியை re-format செய்து ஒரு மாதம் ஆகிறது. McFee Security போட்டது முதல் ஜிமெயில் ஹாங் ஆக ஆரம்பித்தது. சில சமயம் தானே சரியாகும், சில சமயம் ஆகாது. பின்னர் இணைய இணைப்பும் விட்டு விட்டு வரவே, இணைப்பில் கோளாறு என டாடா கம்யூனிகேஷன்ஸில் புகார் செய்து அவர்களும் ஒரு மாதமாகப் பலவித முயற்சிகளுக்குப் பின்னர்,link, portal, channel, செர்வெர் எல்லாம் மாற்றி நேற்று இணைப்புச் சரி செய்யப் பட்டது. ஆனால், அப்போதும் ரொம்பவே மெதுவான வேகம் குறைந்த இணைப்பே வந்தபடியால் McFee Securityயை நீக்கிவிட்டுப் பின்னர், முயன்ற போதும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எந்த விதமான தளங்களும் திறப்பதில்லை. ஹோம்பேஜ் ஆன யாஹூ மெயில் வருகிறது.அதைத் திறந்து மெயில் பார்க்கமுடியவில்லை. கிட்டத் தட்ட ஒரு மாதமாய்த் திறக்காமல் இருந்த யாஹூ மெசஞ்சர் திறந்து கொண்டது. ஆனால், யாஹூவில் கடவுச்சொல்லைப் போட்டுத் திறக்க முயன்றால் திறப்பதே இல்லை. Javascript is not enabled in your computer என்று செய்தி வருகிறது. அதை எனேபிள் செய்துவிட்டுப் பின்னர் முயற்சி செய்யச் சொல்கின்றது. ஜிமெயில் திறப்பதே இல்லை. வலைப்பக்கம் கடும் முயற்சிக்குப் பின்னர் திறக்கிறது. ஆனால் புதுப் பதிவு போடும் பக்கத்தில் உள்ள இணைப்புக்கள், எழுத்தை போல்ட் ஆகச் செய்யும் குறியீடு, மற்றும், டாக் சேர்க்கும் குறி,இமேஜஸ், வீடியோ இணைக்கும் இணைப்பு இவை எல்லாம் காணவில்லை. ஆனால் நெருப்பு நரியில் இவை வருகின்றன. ஆகவே நெருப்பு நரியை நிறுவிவிட்டுப் பார்த்தால் வலைப்பக்கம் வருது. ஆனால் மெயில் திறப்பதில் அதே கஷ்டம்.

பின்னர் நெருப்பு நரியை நிறுவி அதில் முயன்றால் கொஞ்சம் கொஞ்சம் வலைப்பக்கங்கள் சில குறிப்பிட்டவை மட்டுமே வருகின்றன. மற்றவை வருவதில்லை. நெருப்பு நரியிலும் யாஹூ மெயில் திறப்பதில் என்னுடையது யாஹூ பீட்டா வருவதில்லை, standard mail தான் வருது, அதுவும் திறக்க நேரம் ஆகுது. ஜிமெயில் திறக்கவும் நேரம் எடுக்குது. Basic HTML-ல் தாற்காலிகமாய்ப் போய்ப்பார்க்கவும், இல்லை எனில் பக்கத்தைப் புதுப்பிக்கவும், அல்லது கூகிள் உதவிக்குப் போய்ப் பார்க்கவும்னு செய்தி வருது. இணையம் சேவை கொடுக்கும் டாட்டா கம்யூனிகேஷன் டெக்னிகல் ஆட்கள் Internet Explorerஐ மட்டும் திரும்பவும் புதியதாய் நிறுவச் சொல்கின்றார்கள். ஆனால் எங்க கணினியைப் பார்க்கும் வைத்தியர் அம்மாதிரிச் செய்தால் எல்லா பைலும் போயிடும்னு சொல்லுகின்றார். இப்போவும், ஜிமெயில் திறந்து பாதி எழுதும்போதே திடீர்னு கணினியில் செயல்பாடு நின்றுவிட்டது. மறுபடியும் எல்லா முயற்சியும் செய்து பின்னர் இப்போது என் வலைப்பக்கம் திறந்து கொண்டது. ஜிமெயில் கடும் முயற்சிக்குப் பின்னர் திறந்துள்ளது.

இந்நிலையில் என்ன செய்யலாம் என்று யோசனை கொடுத்தால் உதவியாக இருக்கும். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மட்டும் தனியாக நிறுவ முடியுமா, அல்லது கணினியில் மீண்டும் re install or re format செய்யவேண்டுமா? அல்லது இணையம் கொடுக்கும் டாடா கம்யூனிகேஷன்ஸ் தான் இதுக்குப் பொறுப்பா? ஒரே குழப்பமாய் இருக்கிறது. டிசம்பரில் இருந்தே பிரச்னைதான், என்றாலும் போயிட்டுப் போயிட்டு வந்தது. இப்போ இணைப்பு வருகிறது. ஆனால் brousing பிரச்னை. தொழில்நுட்ப நிபுணர்களால் உதவ முடியுமா?

10 comments:

  1. கொதிக்க கொதிக்க சுடுதண்ணியிலே கம்ப்பியூட்டரை குளிப்பாட்டினா சரியாகுன்னு தோணுது தலைவி! :-))

    ReplyDelete
  2. உங்கள் பிரச்சனைகளை பார்த்தால், இணைப்பின் வேக குறைவும் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    ஆனாலும், விண்டோஸ் இயங்குதளம் என்றால், மீள நிறுவிக்கொள்ளுதல் பயன்தரலாம்.

    அதன் பின்னர் சரியாகாவிட்டால், உங்கள் இணைய சேவை வழங்குனரை தொடர்பு கொள்ளலாம்.

    நான் சொன்னவை என்னுடைய அனுபவ அறிவுக்கு எட்டியவை மட்டுமே. :)

    இங்ஙனம்,
    நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

    ReplyDelete
  3. அக்கா, இதை செய்து பாருங்க

    1. Install firefox and see if that works properly for you

    2. If that doesnt help, check your system for Antispyware (not virus, but spyware) - Microsoft used to offer a free tool

    3. If both donot work, ஹ்ம்ம்...
    ஹிஹி.. இதுவும் வேலைக்கு ஆகலனா சொல்லுங்க...

    நட்போடு
    நிவிஷா

    ReplyDelete
  4. //இணையம் சேவை கொடுக்கும் டாட்டா கம்யூனிகேஷன் டெக்னிகல் ஆட்கள் Internet Explorerஐ மட்டும் திரும்பவும் புதியதாய் நிறுவச் சொல்கின்றார்கள். ஆனால் எங்க கணினியைப் பார்க்கும் வைத்தியர் அம்மாதிரிச் செய்தால் எல்லா பைலும் போயிடும்னு சொல்லுகின்றார்.//


    உங்களது கணினியில் எது செயல்படுகிறது ?
    win 98 ? windows professional ? or windows xp ?
    windows xp
    ஆக இருந்தால்,
    help and support
    க்கு சென்று,
    system restore
    தனைத் தேர்ந்தெடுத்து,
    அதில் என்று உங்களது கணினி சரியாக‌
    செயல்பட்டதோ, அன்ற தேதியைத் தேர்ந்தெடுங்கள்.
    அதிலேயே என்னென்ன தேதிகள் select
    செய்யவேண்டும் என வரும். அதில் ஒன்றை எடுத்துப்பின்,
    அதில் வரும் instructions
    முழுமையாக follow
    செய்யவும்.
    2. Internet options
    சென்று எல்லா குப்பைகளையும் (temporary files, cookies, etc.)
    களையவும்.
    3. system
    க்கு ச் சென்று, என்று உங்கள் கணினீ சரியாக செயல்பட்டதோ
    அதற்குப்பிறகு ஏதாவது programme
    download (with or without your knowledge)
    ஆகியிருந்தால், அதனை delete
    செய்யவும்.
    4. இது எல்லாம் சரியாக வில்லை யென்றால்,
    copy entire C drive to any other drive. Then take a back up in some CD
    பிறகு internet explorer
    தனை reinstall
    செய்யவும்.
    4(a) did you instal any new modem ?
    if you are getting linked to server of service provider directly, give the same facility to IE also.
    (b) Check up properties in tools. and change the home page

    5. இத்தனையும் செய்தபின்னும் சரியாக வில்லை என்றால்,
    என்னை மாதிரி ஒரு ஏழைக்கு உங்கள் கணினியைத் தானம்
    செய்து விட்டு, புது lap top
    ஒன்று வாங்கவும்.

    அடிக்காதீர்கள்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  5. உறலோ பயப்படாதீங்க நீங்க இப்ப பயன்படுத்துறது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 தானே? அதுலே அப்படித்தான் செக்யூ்ரிட்டியை பலப்படுத்துறேனனனு சொல்லிட்டு ஏகப்பட்ட விசயங்களை பார்க்க உடாமா செய்திருக்காக, நீங்க சிரமம் பார்க்கமாமல் ஐஇ 6.0 ரீஇன்ஸ்டால் அல்லது பார்மேட் செய்து புதியதாக எக்ஸ்பியை நிறுவி அதுலே 7.0 அப்டேட் செய்யமால் விட்டால் போதும்,

    துரை.தியாகராஜ், திருச்சி

    ReplyDelete
  6. பயப்படாதீங்க இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 தான் பிராப்ளத்திற்கு காரணம் உடனே பார்மேட் செய்து ஐஇ 6.0 இண்ஸ்டால் செய்து பாருங்க ஒரு பிரச்சினையிம் இல்லை. துரை.தியாகராஜ், திருச்சி

    ReplyDelete
  7. நிறைய பேர் நிறைய யோசனை சொல்லி இருக்காங்க போலிருக்கே!

    ஒன்னும் அவசரமில்லை, ஒரு நாளைக்கு ஒன்னு விதம் ட்ரை பண்ணி பாருங்க. அதுலயே ஒரு வாரம் ஓடி போயிடும்.

    ReplyDelete
  8. //ஒரே குழப்பமாய் இருக்கிறது. டிசம்பரில் இருந்தே பிரச்னைதான், என்றாலும் போயிட்டுப் போயிட்டு வந்தது. இப்போ இணைப்பு வருகிறது. ஆனால் brousing பிரச்னை. தொழில்நுட்ப நிபுணர்களால் உதவ முடியுமா?//

    தலைவியாரே! ஒன்னு சொல்றேன் தப்பா நெனச்சிக்காதீங்க. எல்லாரும் உங்க கஷ்டத்தைப் போக்க ஒன்னொன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு உங்களோட இந்த மாதிரி பதிவுகளைப் பாக்கும் போது Pogo Channelல வர்ற "Just for laugh gags" நிகழ்ச்சி பாத்த எஃபெக்ட்டுல சிரிப்பு சிரிப்பா வருது
    :)

    ReplyDelete
  9. சிம்பிளான் யோசனை.
    ஒன்று உங்கள் கணினியின் RAM கூட்டுங்கள்.
    இரண்டு கண்ட்ரோல் பானல் சென்று, add remove programs ல் windows component ல் explorer ஐ தெரிவு செய்து repair செய்யுங்கள்.
    McFee,waste.Try Avast-very good-freely downloadable,just need to register.

    ReplyDelete
  10. அபி அப்பா சொன்ன முறை தான் சரி என்று தோனுகிறது!! :-)

    பேசாமா லினக்ஸும் போட்டிருந்தால் இதில் வேலை செய்யாவிட்டால் அதில் என்ற முறையில் முயற்சிக்கலாம்.

    கூடிய விரைவில் ஃபார்மெட் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்,அப்போதாவது லினக்ஸ் போட்டுவிடுங்கள்.அதற்கு முன்பு உங்கள் மோடம் லினக்ஸில் வேலை செய்யுமா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete