எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 07, 2008

யோசனை சொல்லுங்க ப்ளீஸ்!

யப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ, இந்தப் பூனை ரொம்பவே பிடிவாதமா இருக்கு. எல்லாம் எங்க வீட்டிலே குட்டி போட்டிருக்கே, அதைத் தான் சொல்றேன், ஒரே அடம், குட்டி போட்டு ஒரு வாரம் ஆயிடுச்சு, போனால் போகுது, பிள்ளை, குட்டியோட இருக்கேனு, சாதம் மோர் விட்டுக் கொடுத்தால், அதைச் சாப்பிட்டுட்டு, என்னையே பார்த்து மிரட்டுது. துணி உலர்த்த வீட்டின் கிழக்குப் பக்கத்துக்குப் போகவே முடியலை. எப்போவும் அங்கே உள்ள குளியல் அறை வாசலில் உட்கார்ந்துட்டு, மிரட்டிட்டே இருக்கு. அந்தப் பக்கமே வராதேனு சொல்லுது. அங்கே தான் துணி காய வைக்கக் கொடி கட்டி வச்சிருக்கோம். வீட்டில் வெயில் சிறிது நேரமாவது வரும் இடமும் அது மட்டும் தான். இந்த அநியாயம் எங்கேயானும் உண்டா? வீட்டின் கொல்லைப்புறம் பெருச்சாளி எடுத்துட்டது. அதை விரட்டிட்டு, சமையல் அறையில் கொஞ்சம் சுத்தப் படுத்தும் வேலை செய்வோம் என்றால் அணில் குட்டி போட்டு இருக்கு. கூடு கலையாமல், அதை எடுத்து வச்சுட்டுச் சுத்தம் செஞ்சு பின்னர் அதை மறுபடி வைக்கிறதுக்குள்ளே, அம்மா அணிலா, அப்பா அணிலா தெரியலை, ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு, வெடுக், வெடுக், னு ஒரே கூச்சல்.

ஜன்னலைச் சாதாரணமாய் முழுக்கத் திறக்கிறதில்லை. வலை போட்டிருக்கும். ஆனால் இந்த அம்மா அணில் எப்படியோ ஜன்னல் திறந்து வைக்கும் நேரமாய் உள்ளே வந்துட்டு, வலையைக் கடிச்சு வழி ஏற்படுத்திட்டுப் போயிட்டுப் போயிட்டு வருது. சரி, போகட்டும்னு வலையை எடுத்து வச்சிருக்கோம் அணிலுக்காக. அந்த நன்றி கூட இல்லை, பாருங்க, சமைக்கும்போது குறுக்கேயும், நெடுக்கேயும் போறதும் வரதும், ஜன்னல் கதவைச் சாத்தினால் ஒரே கூப்பாடு போடறதுமாய் அமர்க்களம் பண்ணுதுங்க. அதை மிதிக்காமல் இருக்கோமே அதுவே பெரிய விஷயம். குடுகுடுனு ஏதோ வச்சதை எடுக்கறப்போல ஜன்னல் வழியா தென்னை மரத்துக்கு ஒரே ஜம்ப். அப்புறம் அங்கே இருந்து வீட்டு ஜன்னலுக்கு ஒரே ஜம்ப்.

இப்போ இந்தப் பூனை வீட்டின் சைடு பக்கமே வராதேனு சொல்லிட்டு இருக்கு. இத்தனைக்கும் காக்காய்க்கு வைக்கிற சாதம் எல்லாம் கூட இதுவே தான் சாப்பிடுது. காக்காய் காம்பவுண்டு சுவரில் உட்கார்ந்து கொண்டு பரிதாபமாய்ப் பார்த்துட்டு இருக்கும். ஆனால் இந்தக் காக்காய் இருக்கு பாருங்க, அது கூடு கட்டினது என்னமோ மாமரத்தில் தான். மாமரம் பட்டுப் போச்சுனு போன மாசம் வெட்டினப்போ அதிலே காலியாக இருந்த காக்காய்க் கூட்டை எடுத்தால் இரும்புக் கம்பியை எல்லாம் வச்சுக் கூடு கட்டி இருக்கு ரொம்பவே அழகாய், கம்பி தான் அஸ்திவாரம் போலிருக்கு. அதன் மேலே கூட்டைக் கட்டி இருக்கு, சின்னச் சின்ன நார், வைக்கல், சணல், நூல், போன்றவைகளை மெத் மெத்னு ஆக்கிட்டு இத்தனை அழகாய் நம்மளாலே எல்லாம் முடியாது, அதுங்க தன்னோட குஞ்சுகளுக்கும், குட்டிகளுக்கும் பண்ணற ஏற்பாடுகளைப் போல நம்மாலே முடியுமா? நாம செய்யறோம், ஆனால் பிரதிபலனன எதிர்பார்க்கிறோம், அதுங்க குஞ்சோ, குட்டியோ பெரிசா ஆனதும், அதனதன் வாழ்க்கை அது, அதுக்கு. அப்பாவோ, அம்மாவோ எதுவும் எதிர்பார்க்காது.

வாசலில் கேட்கவே வேண்டாம். பைரவர்கள் வருவாங்க, போவாங்க, இஷ்டத்துக்கு இருப்பாங்க, அவங்களுக்கு இஷ்டம் இருந்தால் எழுந்துப்பாங்க, இல்லைனா, என்ன கெஞ்சினாலும் இடத்தை விட்டு அசையாதுங்க. ஆனால் சாதம் வச்சால் கூடச் சாப்பிடாதுங்க சில சமயம். வந்து பார்த்துட்டுப் போயிடும், பத்தாக் குறைக்கு வாசலில் ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கா, அதன் நிழல் தெருவின் பாதியை அடைச்சுக்குமா, எங்க காம்பவுண்டுக்கு இரண்டு பக்கமும், தெருவில் உள்ள எல்லார் வீட்டு வண்டிகளும் நிறுத்தப் படும். சில சமயம் வீட்டு வாசலில் கதவுக்கு நேரேயே கூட நிறுத்திப்பாங்க, அது அவங்க இஷ்டம், நாம் கேட்க முடியாது, கேட்கவும் கூடாது. நமக்கு வெளியே போக முடியலைனாலோ, வண்டியை எடுக்க முடியலைனாலோ அவங்களா பொறுப்பு? நாம ஏன் வீட்டைக் கட்டிட்டுச் சும்மா இருக்காம, மரம் செடி, கொடினு வைக்கிறோம், அது தப்பில்லையா? அதனால் அப்படித் தான் இருக்கும். சில சமயம் வண்டியை நிறுத்திட்டு டிரைவர் எங்கேயாவது போயிடுவார். யாருக்கு வந்ததுனு தெரியாமல் யாரைக் கூப்பிடறதுனும் தெரியாம நாம முழிச்சா அவங்க என்ன பண்ண முடியும். ரோட்டில் தானே நிறுத்தறோம்னு சொல்லுவாங்க, இல்லையா, ரோட்டுக்கு வராப்பலே வீட்டைக் கட்டினது தான் நம்ம தப்பு. யாராவது யோசனை சொல்லுங்களேன், ப்ளீஸ்!

20 comments:

  1. //ரோட்டுக்கு வராப்பலே வீட்டைக் கட்டினது தான் நம்ம தப்பு.//
    :-))))))))))))))))

    //யாராவது யோசனை சொல்லுங்களேன், ப்ளீஸ்!//

    ரொம்பவே சுலபம். வீட்டை அதுகளுக்கு வாடகைக்கு விட்டு விட்டு வேற எங்காவது குடி போயிடுங்க!

    ReplyDelete
  2. மொதல்லே அந்தப் பூனையை(அம்மாப்பூனை) 'வெட்'கிட்டே கொண்டுபோய் ஃபிக்ஸ் பண்ணுங்க.

    நிஜம்மா இவ்வளோ மக்கள்ஸ் இருக்காங்களா? நான் வரும்போது உங்க வீட்டுக்கு விஸிட் அடிக்கட்டா?

    ReplyDelete
  3. //
    சரி, போகட்டும்னு வலையை எடுத்து வச்சிருக்கோம் அணிலுக்காக. அந்த நன்றி கூட இல்லை, பாருங்க, சமைக்கும்போது குறுக்கேயும், நெடுக்கேயும் போறதும் வரதும், ஜன்னல் கதவைச் சாத்தினால் ஒரே கூப்பாடு போடறதுமாய் அமர்க்களம் பண்ணுதுங்க.
    //
    என்னங்க கீதா, உங்களுக்கு அணில் பாஷை சுத்தமா புறியல போல இருக்கு. சமைக்குறப்போ அணில் குறுக்கும் நெடுக்குமா ஓடுதுன்னா அதை அடிச்சு பார்பிக்யூ பண்ணச்சொல்லுதுனு அர்த்தம்!

    ReplyDelete
  4. என்ன திவா வாடகைக்குன்னு சொல்லிட்டீங்க. இங்க நடக்கிறதைப் பார்த்தா இவங்கதான் வாடகைக்கு இருக்கிற மாதிரி இருக்கு. அதனால,

    வேற நல்ல ஓனர்ஸ் இருக்கும் வீடா பார்த்து வாடகைக்குப் போயிடுங்க. :)

    ReplyDelete
  5. அழகான ரசனையான அங்கலாய்ப்பு..யோசனை சொல்லத் தெரியாட்ரியும்..உங்க நடையை ரசிக்கத் தெரியுது..

    ReplyDelete
  6. ம்

    பூனை, அணில், பைரவர் இதோட முடிஞ்சதேன்னு சந்தோஷப்படுங்க!!!!!

    ReplyDelete
  7. தலைவி...பூனை, எலி, ஆணில் இவுங்க எல்லாம் உங்க வீட்டுல இருக்காங்களா!!? இல்லை நீங்க அவுங்க வீட்டுல இருக்கிங்களா!?

    ;))

    ReplyDelete
  8. @பொன்வண்டு,
    நன்றி, வரவுக்கு

    @திவா,
    ஏற்கெனவே இருக்கிறது அதுங்க தான், நல்ல எண்ணம், நல்லா இருங்க சாமி, நல்லா இருங்க! :P

    ReplyDelete
  9. @துளசி,
    வாங்க, வாங்க, எப்போ வேணாலும் வாங்க, ஆனால் நீங்க வரப்போ எதுக்குப் பிரசவம்னு என்னாலே சொல்ல முடியாது, ஒருவேளை பெருச்சாளியாக் கூட இருக்கலாம், பரவாயில்லையா???
    அப்புறம், அம்மாப் பூனையையாவது, பிடிக்கிறதாவது? ஏற்கெனவே அதோட ஓடிப் பிடிச்சு விளையாடி, ரொம்பக் களைப்பா இருக்கு, நீங்க வேறே! :P

    ReplyDelete
  10. @கருப்பன்,
    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    @இ.கொ.
    அட? இ.கொ? ரொம்ப நாள் கழிச்சு, இந்தப் பக்கம் வழி தெரிஞ்சு, நல்வரவு, நல்வரவு, வாங்க, வாங்க,

    ReplyDelete
  11. @பாசமலர்,
    நன்னி,நன்னி. இதையும் ரசிக்க ஒருத்தர் இருக்காங்கங்கிறதே சந்தோஷமா இருக்கு.

    @மங்களூர், என்ன இது பத்தாதாக்கும் உங்களுக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    @கோபிநாத், எனக்கும் சந்தேகம் தான், நம்ம வீடா? அதுங்க வீடான்னு? :)))))))))

    ReplyDelete
  12. இலவசக்கொத்தனார் said...

    என்ன திவா வாடகைக்குன்னு சொல்லிட்டீங்க. இங்க நடக்கிறதைப் பார்த்தா இவங்கதான் வாடகைக்கு இருக்கிற மாதிரி இருக்கு.//

    ஆமாம்! இவங்க என்னதான் சோறு போட்டு வாடகை கட்டறதா நினச்சாலும் போதலை போல இருக்கு. அதுதான் மிரட்டுதுங்க! வேறே எங்க போனாலும் பின்னாலேயே வாடகை பாக்கி வசூல் பண்ண வரும் போல இருக்கு. சாக்கிரதையா அதுகளுக்கு தெரியாம போங்க!

    ReplyDelete
  13. //ஆமாம்! இவங்க என்னதான் சோறு போட்டு வாடகை கட்டறதா நினச்சாலும் போதலை போல இருக்கு. அதுதான் மிரட்டுதுங்க! வேறே எங்க போனாலும் பின்னாலேயே வாடகை பாக்கி வசூல் பண்ண வரும் போல இருக்கு. சாக்கிரதையா அதுகளுக்கு தெரியாம போங்க!

    08 March, 2008//

    ஆஹா, தம்பி தங்கக் கம்பி தான்! :P

    ReplyDelete
  14. ஓஒ இப்படிக்கூட சலிச்சுக்கலாமா - சலிச்சுகறதுலேயும் தனித்தனமை- நன்று நன்று

    பூனை, பெருச்சாளி, அணில், காக்கா, பைரவர்கள், வண்டிகள் அதனோட ஓட்டுனர்கள் - ம்ம்ம் - இவங்க இருக்கற காம்பௌண்டிலே தான் குடி இருக்கீங்களா - சரி சரி சரி - ஒழுங்கா வாடகை கொடுங்க இல்லன்னா பாத்துக்குங்க ....

    ReplyDelete
  15. ரொம்ப புண்ணியம் செய்தவங்க - நீங்க:-‍)

    புள்ளைங்களுக்குப் படிச்சு காண்பிக்கப் போறேன் - ரொம்ப ரசிப்பாங்க. எங்க வீட்டு பின்னாலே ஓர் அணில் குடியிருக்கு. சரியான கிறுக்கு, ‍சரக் சரக் நு இலை மேல போய் என்னப் பயமுறுத்தும், உசரக் கிளையிலிருந்து இன்னொரு மரத்துக்குத் தாவும். "நட்டி"ன்னு பசங்க பேரு வச்சருக்காங்க அதுக்கு.

    யோசனையா? வீட்டு முன்பக்கம் வெட் டாக்டருக்கு ப்ராக்டிஸ்க்கு விட்டுடுங்க. அதுக்கு மேல உங்க இஷ்டம்.

    ReplyDelete
  16. வாழ்கைல்ல சோதனை வரலாம். ஆனா சோதனையே வாழ்க்கை ஆனா. பாவம் தலைவி நீங்க>>>>>>>>>>>>

    ReplyDelete
  17. //
    @கருப்பன்,
    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    //
    ஆஹா... அணில் பாஷை சொல்லிக்குடுத்து ஒரு தப்பா...??!! அணில் வேற ரெம்ப டேஸ்டா இருக்கும்.

    ReplyDelete
  18. //அதுங்க தன்னோட குஞ்சுகளுக்கும், குட்டிகளுக்கும் பண்ணற ஏற்பாடுகளைப் போல நம்மாலே முடியுமா? நாம செய்யறோம், ஆனால் பிரதிபலனன எதிர்பார்க்கிறோம், அதுங்க குஞ்சோ, குட்டியோ பெரிசா ஆனதும், அதனதன் வாழ்க்கை அது, அதுக்கு. அப்பாவோ, அம்மாவோ எதுவும் எதிர்பார்க்காது.//

    எளிமையா சொல்லிட்டாலும், ஆழமான உண்மை பொதிந்திருக்கு:)

    ReplyDelete
  19. //சில சமயம் வீட்டு வாசலில் கதவுக்கு நேரேயே கூட நிறுத்திப்பாங்க, அது அவங்க இஷ்டம், நாம் கேட்க முடியாது, கேட்கவும் கூடாது.யாராவது யோசனை சொல்லுங்களேன்//

    டயர்ல காற்றை பிடுங்கி விடுற விளையாட்டெல்லாம் தெரியாதா?..
    குறைஞ்ச பட்சம் வண்டி நிறுத்துற இடத்துல ஒரு பெரிய கல்லை போட்டு வைச்சா.. இறங்கி வந்து எடுத்து போட்டுட்டு,மறுபடியும் வண்டில ஏறி, அங்க நிறுத்துற சுறுசுறுப்பு நம்ம நாட்டுக்காரங்களுக்கு இல்லைன்னு தான் தோனுது.(இல்லாட்டி மாம்ஸோட ,அந்த கால பைக் படம் போட்டிருந்திங்க இல்ல.. அதை நிரந்தரமா வாசல்ல சங்கலி போட்டு(பின்ன? யாராவது எடுத்துக்கிட்டு போயி ,பேரிச்சம் பழத்துக்கோ/பழைய இரும்பு கடையிலயோ போட்டுட்டா? :P ) நிறுத்தறது தான் ஒரே உபாயம்.

    ReplyDelete