எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 24, 2008

டாமும் ஜெர்ரியும் நண்பர்கள் ஆகிட்டாங்களே! :P


நம்ப முடியாத அதிசயம் ஏதாவது ஒண்ணு உண்டென்றால் அது கே ஆர் எஸ் நிகழ்த்திக் காட்டி இருப்பது தான். கேஆரெஸ் பதிவுகளிலே வைணவம் சற்றுத் தூக்கலாய் இருக்குனு யார் சொன்னாங்களோ தெரியலை, (நான் சொல்லலைப்பா, அந்தச் சமயம் பார்த்து எனக்கு ஏதாவது பிரச்னை வந்து இணையத்துப் பக்கமே வந்திருக்க மாட்டேன்! :) எல்லாம் முடிஞ்சப்புறம் தான் எட்டிப் பார்க்கவே முடியும்!) அது போல இப்போவும் நடந்திருக்கு. எனக்கு குமரன் ஒரு பக்கம் கேஆர் எஸ் சார்பிலே மெயில், கே ஆர் எஸ்ஸே ஒரு தனி மெயில்னு மெயிலுக்கு மேலே மெயில், நானோ, என் பாட்டுக்கு இந்த மழை பெய்யறதாலே சுண்டைக்காயை எப்படிக் காய வச்சு எடுக்கிறதுனு கவலைப்பட்டுட்டு, தொலைக்காட்சியிலே திரைப்படங்களுக்கு மேலே திரைப்படமாப் பார்த்து மனசை ஆறுதல் படுத்திட்டு இருந்தேன். ஆனால் நடந்திருக்கு பாருங்க, ஒரு நடக்கக் கூடாத விஷயம், சென்னையிலே இந்தக் காலமில்லாத காலத்திலே மழை பெய்யறதுக்கே அது தான் காரணம்னு அப்புறமாத் தான் புரிஞ்சது.

கிட்டத் தட்ட நாலு நாள் கழிச்சு சனிக்கிழமை சாயங்காலத்துக்கு மேலே தான் இணையத்திலேயே உட்கார்ந்தேன். கே ஆர் எஸ் மெயிலைப் பார்த்துட்டு அவரோட பதிவுக்குப் போய்ப் பார்த்தா என்ன ஆச்சரியம்? அங்கே என் சார்பில் இருவர் வாதாடி இருந்தார்கள். ஒருத்தர் திவா. இன்னொருத்தர் அம்பி. திவா வாதாடியது ஒண்ணும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அம்பி வரிஞ்சு கட்டிட்டுக் கிளம்பி வாதாடியது தான் எனக்கு இன்னும் ஆச்சரியம் அடங்கவே இல்லை. ஒரு வேளை ஏதாவது தப்பாப் படிச்சுட்டேனோன்னு கூடச் சந்தேகம். ஆனால் அப்படி இல்லைனு புரிஞ்சது. கே ஆர் எஸ், சைவமும், வைணவமும் இணையுதோ இல்லையோ, உங்க பதிவுகள் வைணவத்தை மட்டுமே ஆதரிக்கிறதுனு சொல்றோமோ இல்லையோ தெரியலை, உங்களை அறியாமல் அம்பியை எனக்குச் சப்போர்ட் பண்ண வைத்து விட்டீர்கள். நடக்கவே முடியாத ஒன்று நடந்து விட்டது. டாமும், ஜெர்ரியும் இப்போ நண்பர்கள்! இது போதாது உங்களுக்கு? இனி கே ஆர் எஸ்ஸின் கேள்விகள் என்னைப் பார்த்துக் கேட்டது.

//கீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை//

நிச்சயமா எங்க ஊர்ப் பெருமாள் கோயில் பத்தி நிறையவே எழுதி இருக்கேன், நீங்க படிச்சது இப்போ சமீபத்தில் எழுதியது மட்டுமே. அதுவும் தவிர அந்தப் பெருமாள் கோயிலுக்குப் பரம்பரை அறங்காவலர்களே எங்க குடும்பம் தான். நான் கல்யாணம் ஆகிவந்து 5,6 வருஷங்களுக்குப் பின்னரே அரசு அறங்காவலர் கையில் ஒப்படைக்கப் பட்டது. இது மட்டுமில்லாமல், திருநரையூர் எனப்படும் நாச்சியார் கோயில் பெருமாள் கோயிலும், உப்பிலியப்பன் கோயிலிலும் அறங்காவலர்களாக என் மாமனார் குடும்பத்தினரே பல வருஷங்கள் இருந்திருக்கிறார்கள். எந்தச் சிவன் கோயிலும் இல்லை என்பதே நிஜம்! எனக்கும் ஸ்ரீரங்கம் கோயில் பத்தி எழுதத் தான் ஆசை. ஆனால் பெருமாளைப் பார்க்கிறதே குதிரைக் கொம்பாக இருக்கே? பணம் கொடுத்தாலும் வரிசை நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்டு வருது. பணம் கொடுக்கலைனாலோ பிரகாரத்தில் நின்னால் எப்போ தரிசனம்னு சொல்லவே முடியலை. கோயிலில் ஒரு சிற்பத்தையோ, சிலையையோ நின்னு தரிசிக்கவும் முடியலை. கூட்டம் அள்ளுது! மதுரை மீனாட்சி கோயிலில் அதுக்கு மேலே. நான் மதுரையிலே பிறந்தேன்னு எனக்கு மீனாட்சி எங்கே தரிசனம் கொடுத்தாள், இந்த முறை டிசம்பரில் ஸ்ரீரங்கத்து அண்ணனும் சரி, மதுரையின் தங்கையும் சரி முறைச்சுக்கிட்டதிலே இன்னும் மனசு வலிக்குது!

//இவிங்க எல்லாரும் என் இனிய நண்பர்கள்!
இவிங்க எத்தினி பேரு ஆழ்வாரை எழுதினார்கள்? எத்தினி பேரு திவ்யதேசங்களைச் சொன்னார்கள்?
சதவிதம் மூனுக்கும் கீழே????//

அட, ஆழ்வார்கள் பத்தி நிறையப் படிச்சிருந்தாலும், தவறு நேரிடக் கூடாது என்பதாலேயே எழுதுவதில்லை. திவ்யதேசங்கள் என்ன, நவதிருப்பதி பத்தியும் எழுதணும்னு தான் ஆசை. ஆனால் நேரம் இல்லையே? ஏற்கெனவே செய்துகொண்ட வேலைகளை முடிக்காமல் ஆச்சு, போச்சுனு எழுத முடியுமா என்ன? தவிர எல்லாத் திவ்ய தேசங்களுக்கும் போனதில்லை. உடனேயே பெருமாளிடம் பக்தி இல்லைனு நினைச்சுக்காதீங்க. முக்திநாத் போயிட்டு வந்து அது பத்தி எழுதி இருக்கேனே? படிக்கலை? பத்ரிநாத் போயிட்டு வந்திருக்கேன், ஆனால் எழுதலை, துவாரகை பத்தி எழுதலை, எப்போவோ போனது அங்கே எல்லாம் அதனால் எழுதலை, சமீபத்தில் போயிட்டு வந்த உடுப்பி பத்தி எழுதினேனே பார்க்கக் கூடாது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்போ அம்பி கிட்டே போகலாமா? அம்பி என்ன சொல்றார்னா,

//கீதா மேடம் கை வைக்காத தெய்வங்களே இல்லை, நவராத்திரினா அம்மனை கூப்டு சுண்டல் குடுக்கறாங்க,
ஆடி மாதமானா கூழ் ஊத்தி வேப்பிலை எடுத்து ஆடறாங்க. சிவராத்ரினா பதிவு போட்டு கைலாசத்தை கலங்கடிக்கறாங்க, பிள்ளையார் சதுர்த்தினா வேகாத கொழுகட்டைய போட்டோவா போட்டு பதிவு போடறாங்க,
அட கூடாரவல்லிக்கு பதிவு போட்டாங்கய்யா அவங்க!

(மேடம், சைடு கேப்புல கிடா வெட்டி இருக்கேன், இப்போதைக்கு கண்டுகாதீங்க என்ன?) :p//

ஆமாம், எனக்கு எல்லாத் தெய்வத்தையும் பத்தி எழுத இஷ்டம் தான் எழுதறேன், இல்லைனு சொல்லலை, அதுக்காகச் சுண்டலுக்கு எல்லாம் அலையாதீங்க, உங்களுக்குத் தனியா பாகல் விதைச் சுண்டல் மட்டுமே வழங்கப் படும்! நறநறநறநற

ஆடிக் கூழா, பாயாசமே ஊத்தறேன், ஆனால் உங்களுக்கு இல்லை, வேப்பிலையை அரைச்சு வச்சது தான் உங்களுக்கு. சிவராத்திரிக்குப் பதிவு போடாமல் உங்களை மாதிரி திரைப்படம் அதுவும் தங்கமணிக்குத் தெரியாமல் பார்த்துட்டு, "அசின், நமீதா"னு ஜொள்ளறீங்களே? அது பாவம் இல்லை? :P க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வேகாத கொழுக்கட்டையா? இருங்க வரேன், வெறும் மாவு கூடக் கண்ணிலே காட்டப் போறதில்லை உங்களுக்கு, வந்தா இருக்கு இங்கே, விளக்கெண்ணெய்க் கேசரி, கத்திரிக்காய் மாலை எல்லாம், தயாரா இருங்க! :P கூடாரவல்லி அக்கார வடிசல் கூட உங்களுக்கு இல்லை, நீங்க வழிய அசடை ஏற்கெனவே பங்களூரில் பார்த்தாச்சு! கணேசன் ஒருத்தன் மாட்டிட்டு முழிக்கிறானே பத்தாது! சைடு காப்பிலே நீங்க கடா வெட்டுங்க, உங்க வழக்கம், ஆனால் நான் சைகிள் காப்பிலே சாண்ட்ரோவோ ஓட்டுவேன்னு கே ஆர் எஸ்ஸே சொல்லி இருக்காரே?

இப்போ கொஞ்சம் சீரியஸ்:
கண்ணபிரான், உங்க இஷ்ட தெய்வத்தைப் பத்தி எழுதாமே வேறே எதைப் பத்தி எழுதுவீங்க?
மேலும் எல்லாரும் ஒரே மாதிரி எழுதினாலும் படிக்கிறவங்களுக்கும் எரிச்சலா வராது? எனக்குப் பிள்ளையார் தான் இஷ்ட தெய்வம், ஆனால் பிள்ளையார் பத்தி மட்டுமே எழுத முடியுமா என்ன? எல்லாக் கடவுள்கள் பத்தியும் தான் எழுதணும். ஆனால் கொஞ்சம் லாஜிகலாயும் இருக்கணும் இல்லையா? அதனாலேயே சிலவற்றை நான் தவிர்க்கிறேன். மேலும் ராகவேந்திரர் பத்தியும், மந்திராலயம் பத்தியும், நவபிருந்தாவனம் பத்தியும் எழுதத் தகவல் சேமித்து வைத்திருக்கிறேன், நேரப் பற்றாக்குறை, வீட்டில் வேலை அதிகம், கணினி பிரச்னைனு இப்போ ஒரு 4 மாசமா சரியா எழுத முடியலை! உங்க கருத்தை நீங்க எழுதுங்க, எங்க கருத்தை நாங்க முன் வைக்கிறோம், இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாதீங்க! உங்கள் வசதியைப் பொறுத்துச் சந்திக்கலாம்.

6 comments:

  1. அட, இப்படிக்கூட ஒரு புது கூட்டணி உருவாயிருக்கா?. ஆமாம், இந்த புதுக்கூட்டணில திராச அவர்கள் பங்கு என்ன?.

    நீங்க தாணைத்தலைவி இல்லையா அதுனால ரொம்ப சீரியஸா மெயில்லாம் அனுப்பி கருத்துக் கேக்கறாங்க....எடுத்துவிடுங்க உங்க கருத்துக்களை. மினிமம் 2 பதிவு வேணும். :-)

    ReplyDelete
  2. //மேடம், சைடு கேப்புல கிடா வெட்டி இருக்கேன், இப்போதைக்கு கண்டுகாதீங்க என்ன?) //

    அதானே! என்னடா இவ்ளோ நாள் சும்மா இருந்தீங்களேனு பாத்தேன். :p

    நான் தான் சொல்லி இருக்கேனே சைடு கேப்பில் உங்களுக்கு கிடா வெட்டி இருக்கேன்னு. கர்ர்ர்ர்ர்ர்ர்.

    இப்பவும் சொல்லிக்கறேன், கன்டீஷன்களின் பேரில் தான் உங்களுக்கு ஆதரவு அளிக்கபடும். நீங்க மொக்கை போட்டா அதை மொக்கைனு தான் சொல்லுவோம். :D

    இன்னும் என் கல்யாண மொய்பணமே வந்து சேரலை, கர்ர்ர். :))

    ReplyDelete
  3. நீங்க கைலாச யாத்ரையில் காப்பி கேட்ட கதை எல்லாம் பாவம் ரவி அண்ணாவுக்கு தெரியாது போலிருக்கு. :p


    @ரவி அண்ணே! நீங்க சைவமும் எழுதுங்க, கெள்மாரமும் எழுதுங்கனு தான் சொல்லுறோம். :))

    சைடு கேப்புல தியாகராஜருக்கே சம தர்மத்தில் நம்பிக்கை இல்லை! எனவே எனக்கும் இல்லைனு புள்ளி விவரம் குடுத்தா விட்ருவோமா என்ன? :p

    ReplyDelete
  4. ஆமா, டாம் யாரு ஜெர்ரி யாரு? அம்பி தம்பி சாக்கிரதை. சென்னைப்பக்கம் 4 மாசம் தலையே வச்சு படுக்காதீங்க!

    ReplyDelete
  5. \\"டாமும் ஜெர்ரியும் நண்பர்கள் ஆகிட்டாங்களே! :P"\\

    அதெல்லாம் செல்லாது...செல்லாது. எல்லாம் எதிர்கட்சியின் சதி ;)

    ReplyDelete
  6. //@ரவி அண்ணே! நீங்க சைவமும் எழுதுங்க, கெள்மாரமும் எழுதுங்கனு தான் சொல்லுறோம். :)) ://

    அம்பி, எப்படி சைவமும், கெள்மாரமும் மட்டுமா?, அப்ப சாக்தம் என்ன குறைந்ததா?.... என்ன நினைப்பு உனக்கு?....கே.ஆர்.எஸை நல்வழிப்படுத்துவதாக நினைத்து சாக்தத்தை மறைக்கும் உன் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம் நானும், தம்பியும். அதுவும் எப்போது தெரியுமா?, கே.ஆர்.எஸ் பெங்களூர் வரும் சமயத்தில்...அவர்தான் தலைமை. :-)

    //சைடு கேப்புல தியாகராஜருக்கே சம தர்மத்தில் நம்பிக்கை இல்லை! எனவே எனக்கும் இல்லைனு புள்ளி விவரம் குடுத்தா விட்ருவோமா என்ன?//

    டிச்சுட்டு பேசாம போவீயா?... இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்டா கே.ஆர்.எஸ் கோவிச்சுக்கிட்டு பெங்களூர் வராம போயிடப்போறாரு.. :-)

    ReplyDelete