எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Friday, August 15, 2008
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!
வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்
ஆமாம், வெள்ளிப் பனை மலையின் மீது உலவாமல், நம்ம நாட்டு க்குள்ளே ஊடுருவும் அண்டை நாட்டு ஒற்றர்களை எப்படிக் கண்டு பிடிக்கிறதாம்???
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்:
கப்பல் விடறோமோ இல்லையோ, கப்பல் விடற சாக்கிலே ஒருத்தருக்கொருத்தர் கட்சிகள் சண்டை போட்டுக்கிறோமே??? அடிமேலைக் கடலில் கப்பல் விடறதா முக்கியம்??
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்
அட, ஆமாம், கிராமங்களில் சுவரே இல்லாமல் பள்ளிக் கூடம், கூரையே இல்லாமல் பள்ளிக் கூடம், மரத்தடியில் பள்ளிக் கூடம், பள்ளிக் கட்டிடத்திலே கீழ்த்தரமான வேலைகள் செய்பவர்கள் தங்குமிடம் என்று பள்ளித் தலங்களை இப்படிக் கோயிலாக மாத்திட்டுத் தானே வரோம்?? இன்னும் சில ஊர்களில் பள்ளித் தலத்துக்கு அருகேயே டாஸ்மாக் இருக்கிறது என்பதும் கூடுதல் உற்சாகம். ஆகவே
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.
சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.
எங்கே இருந்து பாலம் அமைக்கிறது, இருக்கிறதையே அழிக்கலாமானு பார்க்கிறோம். வீதி சமைக்கிறதாவது, ஒண்ணாவது, ஏதானும் நடக்கிற காரியமாப் பேசுங்க! ஆகவே
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!
வங்கத்திலே ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்..
பக்கத்து வீதிக்கே தண்ணீர் தர மாட்டோம். எங்க தெருவுக்கு வந்து பாருங்க, குழாயில் தண்ணீர் வரும் நேரம் எல்லாரும் எவ்வளவு ஒத்துமைனு தெரியும்! வீதி நடக்கத் தகுதி இல்லையேனு ஏதானும் செய்யலாம்னு யாராவது முன்வந்தால் கூட அவங்களைச் செய்ய விட்டுடுவோமா என்ன??
இதிலே வங்கத்து நீரை எடுத்து மையத்து நாடுகளிலே பயிர் செய்யணுமா உங்களுக்கு?? வேறே வேலையைப் பாருங்க ஐயா! நல்லாக் கனாக் காண்கிறீங்க போங்க!
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பல பொருட்களும் குடைந்தெடுப்போம்
மதுரை- பெரிய குளம் செல்லும் பாதையில் ஒரு மலையே காணாமப் போச்சு. அதைத் தான் குடைந்தெடுப்போம்னு சொல்றாரோ என்னமோ??? இல்லைனா நாங்க என்ன, விளையற கனிகளுக்கு எல்லாம் உரிய பணம் கொடுத்து வாங்குவோமா?? கனிமம் விளைந்தால் விட்டுடுவோமா?? இன்னிக்குத் தேதிக்குக் கோலாரிலே வேலையே இல்லையே! சுரண்டிட மாட்டோமா என்ன??? நாங்க உணவுப் பொருள் கூட இறக்குமதி தான் செய்வோம், அதான் எங்களுக்குப் பிடிக்கும்!! நீங்க சொல்றது ஜுஜுபி!!!!
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!
எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.
அதெல்லாம் போறோம் எட்டுத் திசை என்ன பதினாறு திசை இருந்தாக் கூடப் போவோம், பத்தலை எங்களுக்கு. ஆனால் என்னமோ கொண்டு வருவோம்கறீங்க??? என்னத்தைக் கொண்டு வரது??? எங்களுக்கு வேண்டாம்?? நாங்க ஏன் திரும்பி வரோம் இங்கே?? பைத்தியமா என்ன நாங்க?? அப்பா, அம்மா தனியா இருந்தா என்ன?? யார் எப்படிப் போனா எங்களுக்கு என்ன?? எங்க தொழில் நுட்ப அறிவால் நாங்க பிழைக்கிறோம்.
எங்கள் பாரத தேசெமென்று தோள் கொட்டுவோம்.
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.
அதெல்லாம் எந்தக் காலமுங்க?? நீங்க என்ன இன்னும் "கனாக் காணும் காலங்கள்" லேயே இருக்கீங்க போலிருக்கு??? இப்போ எல்லாம் ஜப்பான் முத்து, ஐரோப்பா முத்துனு கிடைக்குது, இந்த முத்தை எவன் சீண்டுவான்???
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம்ப்பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி வருவோம்.
என்ன, என்ன, என்ன , என்னங்க இது புதுசா??? சிந்து நதி, இந்தியாவிலே இருந்துச்சா என்ன?? எங்களுக்குத் தெரியாதே?? அது பாகிஸ்தானில் இல்லை இருக்கு??? நமக்குச் சொந்தமா??? அதிலே சேர நாட்டுப் பெண்களோட படகிலே போகணுமா?? ஓகே, ஒத்துக்கறோம் இதை மட்டும், ஆனால் அடுத்து இது என்ன??? தமிழ் துரோகியா நீங்க??? சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துனு சொல்லிட்டு??? தமிழ் இன, மானம் இல்லாதவர் போலிருக்கு நீங்க! அதான் இப்படி எல்லாம் சொல்றீங்க??? அதெல்லாம் ஒத்துக்க முடியாதுங்க. விளையாடறதெல்லாம் சரி, தெலுங்கில் பாட்டா??? என்ன இசைக்கு மொழி இல்லையா??? யாருங்க சொன்னது??? அரசியல்வாதிங்க வீட்டுக்குத் தான் இதெல்லாம் ஒத்து வரும், எங்களைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் இசைக்கு மொழி உண்டு, மொழி கடந்தது இசை இல்லைனு ஒத்துண்டே ஆகணும்.
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
ஹிஹிஹி, அது எப்படிங்க??? கோதுமைக்கு, வெற்றிலையா??? வியாபார நுணுக்கமே தெரியாத ஆளு போலிருக்கு??? கோதுமை விளைஞ்சால் உடனேயே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யறதை விட்டுட்டு?? பக்கத்து மாநிலத்துக்கு, அதுவும் வெற்றிலைக்குப் போய் எந்த மடையன் கொடுப்பான்?? ரொம்பவே பேராசைக் காரரா இருப்பீங்க போலிருக்கே??? வியாபாரம் உருப்பட்டாப்பல தான்! அப்புறம் நாங்க எப்படி சூப்பர் மார்கெட் எல்லாம் திறந்து எங்க பொருட்களை எப்படி விற்பனை செய்வோம்??? கொஞ்சம் நடைமுறை உலகுக்கு வாங்க ஐயா!
சிங்கமராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசு அளிப்போம்.
என்னது, சிங்கமராட்டியர் கவிதைக்கு??? சேரத்துத் தந்தங்களா?? சரியாப் போச்சு போங்க! மராட்டி மாநிலம் மராட்டியருக்கேன்னு சொல்றதெல்லாம் உங்க காதிலே விழலை??? 60 வருஷத்திலே இப்படி மொழியை ஊக்குவிக்கிறதுக்கு எங்களுக்கு மட்டும் தான் தெரியும்னு எத்தனை அரசியல்வாதிங்க தோள் கொட்டறாங்க??? அவங்க மொழி பேசறவங்க, மட்டும் அவங்க மாநிலத்திலே இருக்கலாம்னு சட்டமே கொண்டு வராமல் இருக்கோமே, அதுக்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டாம்??? என்ன மனுஷன் நீங்க???
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!
வேண்டாம், வேண்டாம், நான் போறேன், நான் போயே போயிடறேன். பாரதியார் தலை தெறிக்க ஓடுகின்றார். பாட்டு???? அதான் பாதியிலே நிப்பாட்டிட்டோமில்ல???? \
இந்தியா சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் பூர்த்தி!
ஜெய்ஹிந்த்!
வந்தேமாதரம்!
Subscribe to:
Post Comments (Atom)
:))))
ReplyDeleteசுதந்திர(?) தின வாழ்த்துக்கள்!
சுதந்திரத்தை கொண்டாடுவோம்!
ReplyDeleteசுதந்திர தினநல்வாழ்த்துக்கள்!
http://mohideen44.blogspot.com
இவ்வளவு விரக்தி இருக்கலாமா?
ReplyDelete61 வருடம் இத்தனை இடர்களையும் தாண்டி நாம் சிதறாமல் இருக்கிறோம்.
அதே போல் நம் அண்டை நாடுகளைப்போல் மக்களாட்சியை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறோம். கொஞ்சமாகவாவது முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்.
தொடர்ந்து முன்னேறுவோம். பெருமை கொள்வோம்.
இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாரதியின் கனவும், இன்றைய பாரதத்தின் நிலையும் என்கிற வகையில் அழகாச் சொல்லி இருக்கீங்க.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்
ReplyDeleteஆமாம், வெள்ளிப் பனை மலையின் மீது உலவாமல், நம்ம நாட்டு க்குள்ளே ஊடுருவும் அண்டை நாட்டு ஒற்றர்களை எப்படிக் கண்டு பிடிக்கிறதாம்???//
கீதா அம்மா,
வெள்ளிப் பனிமலை மீது உலவ சீன மற்றும் நேப்பாள அரசுகளிடம் அனுமதி பெறனும், ஏனென்றால் வெள்ளிப்பனிமலை அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. அவர்களிடம் அனுமதி பெறாமல் உலாவ போனால் சுட்டுபோட்டுவிடுவார்கள் !
:)
@ஸ்ரீநி,
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி. இனிய சுதந்திர (????????) தின வாழ்த்துகள்.
@புதுகைச் சாரல்,
சாரல் எல்லாம் "மதுரை, திருநெல்வேலி"யோட சரினு நினைச்சேன், புதுகையிலும் உண்டா?? :P சுதந்திர தின வாழ்த்துகள்.
@சத்தியா,
ReplyDeleteவிரக்தினு தப்பாப் புரிஞ்சுக்கறீங்க, கீழே ஜோதிபாரதி சொல்லி இருப்பதைப் பாருங்க, அது தான் சரி, ஆனாலும் 60 ஆண்டுகள் ஆகியும், மனத்தளவில் இன்னும் நாம் ஒன்று என்ற எண்ணம் வரவில்லையோனு சந்தேகமாத் தான் இருக்கு. என்றாலும் ஒரு பிரச்னை என்று வரும்போது ஒன்றுபடுகிறோம், அதுக்காகப் பிரச்னைகளையே எதிர்பார்க்கவும் கூடாது இல்லையா?? எப்போ விட்டுக் கொடுப்போம்???
@ஜோதி பாரதி,
ReplyDeleteரொம்ப நன்றி புரிதலுக்கு, இன்னும் கடுமையாகவே எழுதி இருந்தேன், அப்புறமா எடிட் செய்ய வேண்டியதாப் போச்சு. கடுமை வேண்டாம்னு தோணிச்சு. நன்றிங்க.
@கோவி.கண்ணன்,
வாங்க, கடைசியா இந்த முறை நான் பதில் சொல்லும்படியான ஒரு பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க, நன்றி. சியாச்சின் பக்கம், இன்னும் பத்ரிக்கு மேலே, லே பகுதியில், இன்னும் சில இடங்களில் எல்லாம் வெள்ளிப் பனிமலை தான், நம்ம கிட்டேயும் கொஞ்சமாவது வெள்ளிப் பனி மலை இருக்கு. போய்ப் பார்த்துத் தெரிஞ்சுட்டே சொல்றேன். ஆகவே சரியாத் தான் எழுதி இருக்கேன். :))))))))))))))
என்னவோ சுதந்திரதினமும் அதுவுமா ப்ளாகர் ரொம்பத் தொந்திரவு செய்யுதே?? என்னனு புரியலை! டாஷ்போர்டைப் பார்த்தாலே என்னோடதானு சந்தேகமா இருக்கு! :P
ReplyDeleteஅருமை. கண்ணு கலங்குது.
ReplyDeleteஅந்தாளுக்கு அன்னிக்கு இருந்த அறிவுல, இன்னிக்கு தம்பட்டியும் இல்லாம இருக்கரானுவளே எல்லாரும் (நம்மளையும் சேத்து).
வாங்க Surveyசன், வராத பெரிய மனுஷங்க எல்லாம் வந்திருக்கீங்க, நல்வரவு, கருத்துக்கும், கொடுத்திருக்கும் லிங்குக்கும் நன்றியோ நன்றி, we, the people of India பார்க்கிறீங்க தானே, அதிலே தான் நாளைக்கு நம்ம பெட்டிஷன் வரப் போகுது, அதே தான் உங்களுக்கும் கொடுக்க நினைச்சேன், பாருங்க கொஞ்சம் ஏதாவது இந்த மழைக்குள்ளே செய்ய முடிஞ்சால் என்னை மாதிரி ஆஸ்த்மா பேஷண்டுகளுக்கு நடக்கவாவது முடியும், சாலையிலே! இல்லைனா நீஞ்சணும்!
ReplyDelete//we, the people of India //
ReplyDeleteஎன்னது இது? ஜெய்சங்கர சொல்றீங்களா? எனக்கு தெரிஞ்ச wpi அவருதான் :)
தோழி கீதா அவர்களே..
ReplyDeleteநம்முடைய இன்றைய கீழ்நிலைக்கும் நாமே காரணம்,தகுதியற்றவர்கள் தலைவனாகும் அவலமே இன்றைய இந்தியாவின் பெரும்பாலான கீழ்மைகளுக்குக் காரணம்.
ஓட்டுநர் வண்டியை எங்காவது இடித்தே தீருவேன் என்று அடம்பிடிக்கும் சூழலில் பயணிகளான நமது இணைந்த செயலால் வண்டி முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.
வெறுத்துப் போய் பயணிகளிலிருந்தே நல்ல ஒரு ஓட்டுநர் வரும் வாய்ப்புமிருக்கிறதே !!!
நம்புவோம்,அதுதான் வாழ்க்கை !!
இது நையாண்டின்னு சொல்லலாமோ என்னவோ தெரியாது. ஆனா நகைச்சுவை இல்லே! படு சோகம். என்ன இப்பல்லாம் சோக பதிவாகவே போடறீங்க?
ReplyDelete:P
@surveyசன், ஏற்கெனவே ம.ம. நான், ஒரு கை.நா. வேறே, இப்போத் தான் கல்யாணராமனின் பேட்டியின் தாக்கம் வேறே, நீங்க சொல்றது எதுவும் புரியலை போங்க! :P
ReplyDelete@அறிவன், நீங்க சொல்றது முழுசும் உண்மை, :(((((((
@திவா, நான் என்னமோ நகைச்சுவையாய்த் தான் எழுதினேன், எல்லாம் பார்க்கிற பார்வையில் இருக்கு! என்ன சொல்றீங்க???
வந்தேமாதரம்.
ReplyDeleteவந்து ஏமாத்துரோம்ன்னு தானே
அரசியல்வாதிகள் சொன்னாங்க?
சரியாத் தானே செய்றாங்க
சகாதேவன்
:((
ReplyDelete@சகாதேவன்,
ReplyDeleteஎப்படிப் பட்ட அரிய மந்திரச் சொல்லின் அர்த்தம் இன்று எப்படி மாறி விட்டது என்பதை நினைத்தாலும் வருத்தமாய்த் தான் இருக்கு! :((
@அட, இ.கொ. back to pavilion?????????? அதான் ஸ்ரீதர் நாராயணனையும் பார்க்க முடிஞ்சுதா?? :P :P
பின்னி ஜடை போட்டு பூ வெச்சுட்டீங்க.
ReplyDeleteஎங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்... என் பாரதி கண்ட தேசம், பாரத தேசம் என்று ஒளி வீசும்..
ReplyDelete