எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 21, 2008

ராமாயணத் தொடரில் மேலாண்மைத் திறன்!

ராமாயணம் கம்பர் எழுதியதே பல நூற்றாண்டுகள் முன்பு. வால்மீகி எப்போது எழுதினார் என்பது உறுதிபடத் தெரியாவிட்டாலும் கம்பர் எழுதியது, அதற்குப் பல நூற்றாண்டுகள் பின்னரே. வால்மீகி ராமரின் காலத்திலேயே வாழ்ந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. ராமரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக, முக்கியமாய் லவ, குசர்களின் வளர்ப்புக்கு ஒரு காரணமாய், அவர்களுக்குக் குருவாய் இருந்திருக்கின்றார் வால்மீகி. பல சம்பவங்களைக் கண்ணால் கண்டறிந்ததோடு அல்லாமல், பல சம்பவங்களைக் காணும் பேறும் பெற்றிருந்திருக்கின்றார். வால்மீகியின் இந்த ராமாயணத்தில் ராமனின் குணங்களாய்ச் சொல்லப் படுபவை மனிதனாய் வாழும் அனைவருக்கும் தேவைப் படும் முக்கியமான கல்யாண குணங்கள் என்று சொல்லப் படுகின்றது.
இந்த இதிகாசம் குறிப்பிட்ட ஒரு சாராருக்கே உரியது என்றும் சொல்ல முடியாது. குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு மட்டுமே என்றும் சொல்ல முடியாது. அதே நேரம் ஒரு வாழ்க்கைச் சரிதம் என்ற அளவிலேயே இதை நாம் பார்க்கவும் வேண்டும். எந்தவிதமான உபதேச நூலும் இல்லை. ஆனால் ஒரு அரசன் எப்படி இருக்கவேண்டும்., அரச நீதி எவ்வாறு காக்கப் படவேண்டும், மந்திரிகள் அரசனுக்கு எவ்வகையில் உதவியாய் இருக்கவேண்டும், வரிகள் விதிப்பது எப்படி? குடிமக்களின் நல்வாழ்வைப் பேணுவது எவ்வாறு என அனைத்தும் இதில் வரும் அரசர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளுவது இன்றைய நாட்களுக்குக் கூடப் பொருத்தமாய் இருப்பதைக் காண முடிகின்றது.

ராமாயணம் இன்றைய நாட்களுக்குக் கூடப் பொருந்தும் வண்ணம் ஒரு மிகச் சிறந்த மேலாண்மை இயலுக்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது என்றும் ஒரு ஆய்வு செய்யப் பட்டு உள்ளது.. இந்தியன் வங்கியின் சேர்மன் ஆக இருந்து ஓய்வு பெற்ற திரு டி.எஸ்.ராகவன் அவர்கள் அத்தகையதொரு ஆய்வைச் செய்திருக்கின்றார். அதில் ஒரு தலைவனாக ராமனை அவர் போற்றுவது ராமன் காலத்தை மதிப்பதும், திறமையைப் போற்றுவதும் ஆகும். அனுமனைத் திறமை வாய்ந்த தொண்டனாக ராமன் ஏற்றுக் கொண்ட போதிலும், ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்யும்போது அனுமன் லிங்கம் கொண்டுவரத் தாமதம் ஆகவே, நேரந்தவறாமல் பூஜை செய்யவேண்டி ராமன் அனுமனுக்குக் காத்திருக்காமல் அந்த நேரத்திற்குள் தன் வழிபாட்டை முடிக்கின்றான்.
வால்மீகியில் இந்தச் செய்தி இல்லை எனினும் இது பெரும்பாலோரால் ஏற்கப் பட்டுள்ளது. அனுமன் எத்தகைய திறமை வாய்ந்தவனாக இருந்த போதிலும், காத்திருத்தல் என்பது கூடாது. ஒரு தனி மனிதனுக்காகக் காலமோ, நேரமோ காத்திருக்க முடியாது. இது அனுமனுக்கு நேர்ந்த புறக்கணிப்பு என்றும் சொல்லலாம். அதே போல் முதன் முதல் ஸ்டிரைக் செய்ததும் அனுமனே. தான் கொண்டு வந்த லிங்கத்தை வழிபடவில்லையே என வருந்துகின்றான். என்றாலும் ராமன் , சீதையால் ஸ்தாபிக்கப் பட்ட மணல் லிங்கத்துக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பூஜையை முடிக்கின்றான். அதே சமயம் அனுமன் தவறு செய்துவிட்டான் என்று அவனை வெறுத்தும் ஒதுக்கவில்லை. தான் அயோத்தி திரும்புவதற்குள் பரதன் தீக்குளித்துவிடுவானோ என எண்ணி அனுமனையே தூதும் அனுப்புகின்றான் மீண்டும். அவனின் திறமையை எந்த இடத்தில், எப்படிப் பயன்படுத்தினால் அது வெற்றி பெறும் என்பதைப் புரிந்து கொண்ட தலைவனாய் இங்கே ராமன் செயல்படுகின்றான் என்று சொல்லலாம். ஏனெனில் ஒரு முறை காலத்தில் கடமையைச் செய்யவில்லை என்பதாலும், இப்போது காலத்தில் செய்யாவிட்டால் ஒரு உயிர் போய்விடும் என்பதையும் அனுமன் நன்கு உணர்ந்திருப்பான். ஆகவே குறிப்பிட்ட காலத்தில் வேலை நடக்கும் அல்லவா? இதன் மூலம் ராமன் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிக்கும் நேர மேலாண்மை, தவறு செய்தாலும் அதைத் திருத்திக் கொள்ளத் தொண்டர்களுக்குக் கொடுக்கும் சந்தர்ப்பம், அரவணைத்துச் செல்ல வேண்டிய இடத்தில் அரவணைத்தும், கண்டிப்பாய் நடக்கும் நேரத்தில் கண்டிப்பாயும் இருந்து தலைவன் என்பதை நிரூபிக்கும் தலைமைப் பண்பு, தன் பிரச்னைகளைக் கலந்து ஆலோசித்தல் என அனைத்துமே ராமனிடம் இருந்தது. ஆகவே ஒரு தலைவனாகவும் ராமன் இங்கே சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றான்.

7 comments:

  1. அடேயப்பா. கீதாம்மா, ரூம் போட்டு யோசிப்பீங்களோ? நல்லாருக்கு :)

    ReplyDelete
  2. கீதாம்மா ரூம் போட்டு யோசிக்கலை! "ராம்" போட்டு யோசிச்சாங்க! அதான்! :))

    சூப்பர் பதிவு கீதாம்மா!
    //தவறு செய்தாலும் அதைத் திருத்திக் கொள்ளத் தொண்டர்களுக்குக் கொடுக்கும் சந்தர்ப்பம்//
    இதை இராமன் மூலம் நன்கு காட்டி இருக்கீங்க!

    ReplyDelete
  3. ஒரே ஒரு குறிப்பு:
    எளியோர்க்கு எளியோனான அனுமன் முன்பும் காலம் தவறவில்லை!

    இத்தனை காலத்துக்குள் கொண்டு வந்து சிவலிங்கம் கொணர்விக்க வேண்டும் என்று இராமன் காலத்தைச் சொல்லி அனுமனை அனுப்பவில்லை! - dissemination of resource information

    அது இராமன் என்னும் மேலாளரின் குறையே அன்றி, அனுமனின் குறை ஆகாது!
    ஆனால் தாமதத்தை உணர்ந்து, தன்னால் தான் தாமதம் ஆனது என்பதையும் இராமன் உணர்ந்தான்! அதான் சீதை பிடித்த சிவலிங்கம்! - Alternate Allocation!

    பணியில் வேகம், உறுதி மட்டும் இல்லாமல், final product-இன் மீதுள்ள இறையாண்மை தான், அனுமன் சிவலிங்கத்தை அசைத்துப் பார்க்க வைத்தது!
    (அனுமன் அதை Backup என்று நினைத்துக் கொண்டான் போல! அதான் Backup முடிந்தவுடன் Production System-ஐ வைத்து replace செய்ய நினைத்தான் போல! ஹா ஹா ஹா :)))))))

    ஆனால் அதை முறையாகச் செய்யாதது மட்டுமே அனுமன் குற்றம்! இறுதிப் பொருளின் மீதுள்ள பற்றுதலால் வழிமுறைகளை மறந்து விடக் கூடாது என்பது அன்றைக்கு அனுமன் படித்த பாடம்!

    இறுதிப் பொருளில் இருந்த உறுதியைக் கண்டு தான், அனுமனையே மீண்டும் அனுப்புகிறான் இராமன்! இந்த முறை இத்தனை நாள் தான் டைம் இருக்குன்-னு சொல்லியே அனுப்புகிறான்!

    அதுவும் பரதனைப் பார்க்கப் போகும் முன்னர், குகனிடமும் நின்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போகச் சொல்கிறான்!
    இடையில் வந்த தம்பி தானே குகன்! அவனோ உயிர் போகும் நிலையில் உள்ள ஒரிஜினல் தம்பி ஆயிற்றே என்ற எண்ணமெல்லாம் இல்லை!

    தம்பி என்று வரித்துக் கொண்ட பின், சிந்தையில் தூயோன் இராமன்!
    அவன் எண்ணங்களின் வாயோன் அனுமன்!

    எண்ணம் நன்றாக இருந்ததால், எல்லாமே நன்றாக இருந்தது!

    ReplyDelete
  4. கீதாம்மா,

    சூப்பர் பதிவு.
    //அவனின் திறமையை எந்த இடத்தில், எப்படிப் பயன்படுத்தினால் அது வெற்றி பெறும் என்பதைப் புரிந்து கொண்ட தலைவனாய் இங்கே ராமன் செயல்படுகின்றான் என்று சொல்லலாம்.//

    ஆனால் ஒரு வேலை சொன்னாலும் என் சார் என்னை மாட்டுவுட்டீங்கன்னு சொல்றாங்க! பிறரிடம் சொல்லிவிட்டால் என்ன சார் என்னை கழட்டிவுட்டீங்கன்னு கேக்குறாங்க என்ன சொல்றது
    "தலைவனாக இருப்பதற்க்கு பொறுமை அதிகம் வேண்டுமம்மா!"

    ReplyDelete
  5. //எண்ணம் நன்றாக இருந்ததால், எல்லாமே நன்றாக இருந்தது!//

    கலக்கிட்டீங்க! இதுவும் சூப்பர்!

    ReplyDelete
  6. @கவிநயா, ரொம்ப நன்றி, ரூம் போட்டுத் தானே யோசிக்கணும்?? :)))))) கீழே பாருங்க, கேஆரெஸ்ஸுக்குக் கொடுக்கும் பதிலில்!

    கேஆரெஸ், ரூம் போட்டோ, ராம் போட்டோ யோசிக்கலை, படுத்து, எழுந்து, உட்கார்ந்து, நின்று, நடந்து யோசிக்கும் சங்கத் தலைவி யாம்! ஆகையால் யாமார்க்கும் குடியல்லோம், எவர்க்கும் அஞ்சோம்!! ஓகே??? :)))))))))))))

    அப்புறம் உங்க பின்னூட்டத்துக்குப் பதில் ரெடியாயிட்டு இருக்கு! வரேன், கொஞ்ச நேரத்திலே பதிலோடு. :P

    சிவமுருகன், வாங்க, ரொம்ப நாள் கழிச்சுப் பின்னூட்டம்??? அல்லது வருகை??? ரொம்ப நன்றி.

    ReplyDelete
  7. Good one. Very nice to read.

    ReplyDelete