நம்ம வீட்டு விருந்தாளிகள் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சே?? ஒரு 4 நாள் முந்தி இரவில் கணினி முன்னால் உட்கார்ந்திருந்தேன் பெண்ணோடு சாட்டுவதற்குத் தயாராக. அவங்க வரதுக்கு நேரம் ஆச்சு. நான் உட்கார்ந்திருந்தது இரவு நேரம் ஆனாலும் விளக்குப் போட்டுக்கலை. விளக்குப் போட்டுட்டு உட்கார முடியாது. ம.பா.வோ சீரியல் சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தார். பொண்ணும் வரலை, சரினு மெயிலாவது பார்க்கலாம்னு ஜிமெயிலில் உட்கார்ந்திருந்தேன். ஒரு விவாத இழையில் ஆழ்ந்து போயிருந்த சமயம். காலில் ஏதோ குறு, குறு. வலக்கால் கட்டை விரலில். நமக்கு அது அடிக்கடி தொல்லை கொடுக்கும். அதுமாதிரிதான் ஏதோனு நினைச்சேன் முதல்லே. திரும்பவும் குறு, குறு, கொஞ்சம் அழுத்தமாய், வலியும் வந்தது. சாதாரணமாய் ஒரு பென்சில் விழுந்தாலே வலிக்கும் நமக்கு, அதனால் அப்படி ஏதோனு நினைச்சால், மீண்டும் அழுத்தமாய் ஒரு குறு, குறு. அவ்வளவு தான்.நாம அலறிய அலறலில் அக்கம்பக்கம் தூங்கப் போனவங்க எல்லாம் எழுந்து உட்கார, என்னோட ம.பா.வோ எனக்கு கணினி வழி ஷாக் அடிச்சுடுத்துப் போலிருக்குனு மெயினை ஆப் செய்யப் போக, நான் எழுந்து கத்திய கத்தலில், காலடியில் இருந்த ஒரு மூஞ்சுறு ரொம்பப் பயத்தோட ஓடிப் போச்சு.
அவ்வளவு தான். மொத்தமாய் நிலைமை அப்படியே மாறிப் போச்சு. அதுவரைக்கும் பயத்தோட இருந்த ம.பா.வுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு மூஞ்சுறுக்கா இப்படிக் கத்தினே?? அது ஒண்ணும் கடிக்காது. உனக்குத் தான் சும்மாவே வலிக்கும். நீ அதை மிதிச்சதிலே அது உயிரோட இருக்கிறதே பெரியவிஷயம், இப்போ அதைப் பயமுறுத்தி வேறே வச்சிருக்கே. எங்கே போச்சோ?? தேடணுமேனு ஒரே கவலை. தேடறது எதுக்குனு கேட்காதீங்க. எங்க வீட்டிலே துணி வைக்கும் அலமாரியிலே இருந்து, எல்லா இடத்திலும் தாராளமாய் வந்து போகும் ஜீவன் அது. துணி எல்லாம் அதன் கழிவுகளால் ஒரே நாசம். எப்படி என் புடவைகளைக் காப்பாத்தறதுனு ஒரே மண்டைக் குடைச்சல். அதை உள்ளே வர விடாதேனு இவர் ஆர்டர். என்னமோ நான் அதை வெத்திலை, பாக்கு வாங்கிக்க வானு கூப்பிட்ட மாதிரி. என்னத்தைச் சொல்றது?? உள்ளே வந்த அதை வெளியே விடாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, அதை வீட்டுக்குள்ளேயே ஒளிஞ்சுக்க விட்டுட்டேனு இவருக்குக் கோபம். அது என்ன கையில் பிடிக்கவா முடியும்?? எப்படியோ ஓடி, ஒளிஞ்சுக்கறது.
நேத்திக்கும் அப்படித் தான் ராத்திரி உட்கார்ந்திருந்தேன் கணினிக்கு முன்னால். அப்போ பாருங்க, பக்கத்திலேயே இருக்கும் வார்ட்ரோபில் இருந்து ஏதோ தட்டற சப்தம். விட்டு, விட்டுக் கேட்டது. இவ்வளவு உள்ளே வந்து ஒளிஞ்சுக்கக் கூடிய ஒரே நபர் மூஞ்சுறைத் தவிர வேறே எதுவாய் இருக்கும்?? உடனேயே ம.பா.வைக் கூப்பிட, அவரும் ஓடோடி வந்தார், நேத்திக்கு சீரியல் எதுவும் இல்லை! அதனால் தான்! :P வந்து கதவைத் திறந்து பார்த்தால் ஒரு குஞ்சு தெரிஞ்சது. சரிதான், பிரசவத்தை இங்கே வச்சிருக்குனு நினைச்சு, இன்னிக்குக் காலம்பர வரை வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு, பின்னே?/ அதில் இருக்கும் சாமான்களை எடுத்துட்டுத் திரும்ப வைக்க ஒரு அரை நாள் பிடிக்கும். அத்தனை வேண்டாத சாமான்கள் இருக்கு அதிலே. காலம்பர அவர் வார்ட்ரோபைத் திறந்து கொண்டு, வாளி, முறம், ப்ரஷ் (குட்டியாச்சே, துடைப்பத்தால் எடுத்தால் வலிக்கும் இல்லையா??) சகிதம் உட்கார, நான் கையில் கம்புடன், ஹாலில் நட்ட நடுவாக, ஒரு நாற்காலியில் அமர்ந்தேன், அம்மா வந்தால் வெளியே விரட்ட.
மெதுவாய்த் திறந்து பார்த்தால், ஒரு மூஞ்சுறு அசையாமல் கிடக்கு. என்னனு புரியலை, மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு. அப்புறமா எல்லாத்தையும் எடுத்துட்டுப் பார்த்தால் மேலும் 2 குஞ்சுகள். அதுங்க இரண்டும் துள்ளலோ துள்ளல். மெதுவா அதை எடுத்து வாளிக்குள் போட்டுவிட்டு, அதுக்குள்ளே அம்மா வராமல் இருக்கணுமேனு பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்லி, அசையாமல் இருக்கிறதை முதலில் வெளியே கொண்டுவிட்டு, காக்காய் வேறே கொத்தாமல் இருக்கணும், அது கண்ணுக்குப் படாமல் மறைவாய் விட்டு, மத்தது இரண்டையும் அப்படியே விட்டுட்டு வந்து, திரும்ப வார்ட்ரோபை சுத்தம் செய்து, அறையையும் சுத்தம் செய்துவிட்டுக் குளித்துச் சாப்பிடும்போது மணி 1-00 க்கு மேல் ஆயிடுச்சு.
கொல்லையில் காக்காய்க்குச் சாதம் வைத்தால் கொஞ்ச நாளாக் காணாமல் போயிருந்த அம்மாப் பூனை வருது, மெதுவாய் ஏதோ விஷயம் சொல்லிக் கொண்டே. என்னனு பார்த்தால் அதோட வயிறு பெரிசா இருக்கு. மீண்டும் குட்டி போடப் போகுதோ?? அதுக்குத் தான் தாஜா பண்ணுதோ??
கடவுளே!!!!
தலைவி இலவச பிரசவ விடுதி இன்று முதல் மீண்டும் ஆரம்பம் ;))
ReplyDeleteஅனைவரும் வருக...;)
தலைவி இலவச பிரசவ விடுதி இன்று முதல் மீண்டும் ஆரம்பம் ;))
ReplyDeleteஅனைவரும் வருக...;)
//தலைவி இலவச பிரசவ விடுதி இன்று முதல் மீண்டும் ஆரம்பம் //
ReplyDelete:)))
Next time use pannikaren :p
தலைவியின் செல்ல குழந்தைகளின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பம்!!
ReplyDeleteநான் இன்னிக்கு இங்கே கும்மி விளையாட்டு ஆடவா. தலைவியின் பர்மிஷ்ன் உண்டா????????????????????????????????????????????????????????
ReplyDeleteவேற யாருப்பா என் கூட விளையாட வர்ரீங்க?????????????????
ReplyDeleteஎலேய் கோபி புளியம்பழம் பொறுக்க போயிட்டியா, வா ஒரு கை குறையுது!!!
ReplyDelete//என்னமோ நான் அதை வெத்திலை, பாக்கு வாங்கிக்க வானு கூப்பிட்ட மாதிரி.//
ReplyDeleteநெஜமாவே நீங்க கூப்பிடவே இல்லையா?! நம்ப முடியலயே கீதாம்மா... :))
@கோபி வாங்க, அது என்ன மொக்கைன்னா மூக்கிலே வேர்க்குமா??? உடனேயே வந்துட்டீங்க??? :P
ReplyDelete@அம்பி, வாங்க, வாங்க, ஆனால் பணம் உண்டு, உங்களுக்கு மட்டும், அதுவும் பில் பெரிசா வரும், ஓகே?? :P :P :P
@அபி அப்பா, என்ன இப்போ தான் ஃபார்முக்கு வந்திருக்கீங்க போலிருக்கு???
ReplyDeleteமொக்கைக்கெல்லாம் எதுக்கு பெர்மிஷன்??? கோபியைக் கூப்பிடறீங்க துணைக்கு?? நல்ல ஆள் தான் போங்க! அவர் ஒரு பதிவு போடவே ஒரு 2 மாசம் எடுத்துப்பார், இப்போவும் யோசிச்சுட்டு இருப்பார்னு நினைக்கிறேன்.
வாங்க இ.கொ. மொக்கைக்கு மட்டுமே ஆஜர்னு வச்சிருக்கீங்க??
ReplyDeleteஅட கவிநயா, வாங்க, வாங்க, நான் எங்கே கூப்பிடறேன், அதுங்களா வருதுங்க, கீழே ஒரு பூனை குட்டி போடப் போகுதுன்னா, மாடியிலே ஒண்ணு வந்து ஒளிஞ்சுட்டு இருக்கு, அதை இன்னிக்கு இப்போத் தான் பார்த்தோம், என்னத்தைச் சொல்றது போங்க!! அடுத்து எது வரப் போகுதோ??? :P
அட என்னதிது, மொக்கை பதிவுகள் போட்டா ஒரு மெயில் அனுப்பறதில்லை....நறநற...
ReplyDeleteஅபிஅப்பா, மொக்கையில் எப்போதாவது கை குறைந்தால் எனக்கு தனி மெயில் அனுப்பலாம் :)
ஓ! நீங்க இதுங்களை விருந்தாளின்னு சொல்றதாலதான் அம்பி-கணேசன் உங்க வீட்டுப் பக்கம் வர பயப்படுறாங்க போல.. (நாராயண, நாராயண...இன்னைக்கு சாப்பாடு செரிச்சுடும்)..
//ஓ! நீங்க இதுங்களை விருந்தாளின்னு சொல்றதாலதான் அம்பி-கணேசன் உங்க வீட்டுப் பக்கம் வர பயப்படுறாங்க போல.. (நாராயண, நாராயண...இன்னைக்கு சாப்பாடு செரிச்சுடும்)..///
ReplyDeleteஅட, மெளலி, உங்க வீட்டுக்கு விருந்தாளிங்க வராம இருக்க, இப்படி ஒரு வழி செய்து வச்சிருக்கிறதாச் சொல்லவே இல்லையே?? :P :P :P :P
இது எப்படி இருக்கு??? :P