எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 11, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

அன்னை வந்தாள்!


“இப்போது ராணியாகவும் தெய்வீகம் பொருந்திய அன்னை மாதாவாயும் இருக்கும் அரசிக்குப் பின்னர் இப்போதைய பட்டத்து இளவரசி ராணியாவாள். மேற்சொன்ன முறைகளில் கடைசியாக இளவரசி ராணியாக ஆகும்போது எவன் அவள் கணவனாய் இருக்கிறானோ அவனே அரசனாவான். இந்த இளவரசியை எவ்வாறு தெய்வீக அன்னை என்கின்றனரோ அப்படியே அவனையும் தெய்வத் தந்தை என்கிறார்கள். அவனுக்குச் சில அதிகாரங்களும் கொடுக்கப் படும். முக்கியமாய் அவனை மரணக்கடவுளாகச் சித்திரிக்கிறார்கள். இங்கே அந்த அரசனே யமன் போல் செயல்படுகிறான். அவ்வளவு ஏன் யமன் என்றே அழைக்கின்றனர் அவனை. அனைவர் உயிரையும் எடுக்கும் அதிகாரம் அவனுக்கு உண்டு. ஆனாலும் அவன் ராணியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவனே ஆவான். அவளை மீறி அவனாலும் ஒன்றும் செய்யமுடியாது.” புநர்தத்தன் நீண்ட விளக்கம் கொடுத்தான்.

கண்ணன் அன்பு ததும்பப் புநர்தத்தனைப் பார்த்தான். “புநர்தத்தா, இங்கிருந்து தப்பிச் செல்ல நான் வழி கண்டுபிடித்துவிட்டால், நீ என்னோடு வருவாயல்லவா?” என்று அவன் தோளின் மேல் கையை வைத்து அவனை ஆதரவுடன் தட்டிய வண்ணம் கேட்டான்.

“கண்ணா, நீ ஒரு முட்டாள். இங்கிருந்து தப்புவது என்பது கனவிலும் நடவாத ஒன்று. மேலும் நான் இங்கிருந்து வர விரும்பவில்லை. உன் இஷ்டத்துக்கு எதுவும் செய்யமுடியும் என நினையாதே! எச்சரிக்கை!” என்றான் புநர்தத்தன்.

“சரி, தப்ப வழி கண்டு பிடிக்கிறேன், சீக்கிரமாகவே. உன்னையும் அழைத்தே செல்வது என முடிவு செய்துவிட்டேன்.” என்றான் கண்ணன் தனது வழக்கமான மென்சிரிப்போடு.

புநர்தத்தன் அங்கிருந்து சென்றதும், உத்தவனைப் பார்த்துக் கண்ணன், “உத்தவா, மாபெரும் சதிச் சூழலில் சிக்கிக்கொண்டுள்ளோம். யமனின் கைகளில் விழுந்துவிட்டோம். எப்படியாவது தப்பவேண்டும்.” என்று சொன்னான். அன்று மதியம் ஒரு பெண் காவலாளி வந்து தெய்வீக அன்னையும், ராணியுமாக இருப்பவள், சர்வசக்தி படைத்த அவர்கள் தலைவி, கண்ணனையும், உத்தவனையும் பார்க்க விரும்புவதாய்ச் சொன்னாள். கண்ணனும், உத்தவனும் அவளுக்கெனக் கொண்டு வந்திருந்த விலை உயர்ந்த பரிசுகளைப் புண்யாஜனா கப்பலின் ஊழியர்களை எடுத்துவரச் சொல்லிவிட்டு அந்தப் பெண்மணியோடு சென்றனர். வழியெங்கும் ஆயுதங்கள் தரித்த பெண் காவலாளிகள் கடுமையான காவல். உலகுக்கே அன்னை என அவர்களால் அழைக்கப்படும் அந்த ராணியைப் பார்ப்பதே புனிதமான ஒன்றென அவர்களால் சொல்லப் பட்டது. அவளைப் பார்க்கச் செல்லும் இடமும் மிகவும் புனிதமானது என வர்ணிக்கப் பட்டது. அரை இருட்டான ஒரு பெரிய கூடத்தில் இரு புறமும் ஆயுதபாணியான பெண்கள் அணி வகுத்து நின்றனர். அறையின் ஒரு கோடியில் ஒரு யாக குண்டம் போன்ற அமைப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் செந்நாக்குகள் அவ்வப்பொழுது மேலெழும்பியது, கண்ணன் வந்துவிட்டனா எனப் பார்ப்பது போல் இருந்தது. அந்தத் தீயை, புனிதத் தீ என அழைக்கின்றனர். அந்த அரைகுறை இருட்டில் அந்தத் தீயிலிருந்து கிளம்பிய மெல்லொளியில் அந்த அறையின் அனைத்துப் பொருட்களுமே ஏதோ சொப்பன உலகில் இருப்பதைப் போல் காட்சி அளித்தது.

எதிரே ஒரு பெரிய மேடை. மேலே ஏறப் படிக்கட்டுகள். அதன் ஒருபக்கத்தில் பட்டத்து இளவரசியும், அவளின் இளைய சகோதரியும் நிற்கப் பின்னால் பட்டத்து இளவரசியின் அப்போதைய கணவன் ஆன புநர்தத்தன் நின்றுகொண்டிருந்தான். இன்னொரு பக்கம் தெய்வத் தந்தை என அழைக்கப்படும் அரசன் பூரண ஆயுதபாணியாக நின்று கொண்டிருந்தான். இந்த தெய்வீக அரசிக்கு முன்னர் ஆயுதங்களைப் பூரணமாய்த் தரிக்க அரசன் ஒருவனுக்கு மட்டுமே அநுமதி உண்டு. அரசனின் ஐம்பது வயதுக்கு அவன் பார்க்க மிகவும் இளமையாகவே இருந்தான். வசீகரமான முகத்தோடு திறந்த மனம் படைத்தவன் போல் காணப்பட்டான். திடீரெனச் சங்குகள், எக்காளங்கள் போன்ற வாத்தியங்கள்முழங்க, எதிரே இருந்த யாககுண்டத்தின் தீ ஆள் உயரத்துக்குக் கொழுந்து விட்டெரிந்தது. அதன் ஒளி மங்கும் முன்னர் திரைக்குப் பின்னே தெரியும் ஓவியம் போல் அன்னை ராணி அங்கே நிற்பது லேசாகத் தெரிந்தது. எங்கே இருந்து எப்படி வந்தாள்??

ராணியின் அழகு கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது. அவள் நடு வயதுக்கு மிக மிக அழகாக இருந்தாள். அழகோடு இணைந்த கம்பீரம் மெருகூட்டியது. கழுத்தில் ஒரு கெட்டியான ஆபரணமும், தலையில் பாம்பு படம் எடுக்கும் தோற்றத்துடன் கூடிய ஒரு கிரீடமும், அணிந்திருந்தாள். அந்தக் கிரீடத்தின் ரத்தினங்களின் ஒளி கண்ணைப் பறித்தது. அதன் சிவந்த ஒளி, கீழே எரிந்துகொண்டிருந்த தீயோடு போட்டி போட்டுக்கொண்டு ஜொலித்தது. எல்லாவற்றுக்கும் மேலே, ஆஹா, இது என்ன? உயிருள்ள நிஜப் பாம்பே அவள் கழுத்தை அலங்கரிக்கிறதே!

இது என்ன?? அனைவரும் அவளை வணங்குகின்றனர். சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து நமஸ்கரிப்பவர்கள் அவள் சொல்லும்வரை எழுந்திருப்பது இல்லை. ஆச்சரியமாய் இருக்கிறதே? நம் நாட்டு ரிஷி, முனிவர்கள் கூட இவ்வித வணக்கங்களை ஏற்றதில்லை. கம்பீரமும், அதிகாரமும் நிறைந்த குரலில் அவள் ஆணையிட்டதுமே அனைவரும் எழுந்தனர். பின்னர் அவள் கண்ணால் காட்டிய சைகையைப் புரிந்துகொண்ட அரசன், இளவரசனை அழைக்க, இளவரசனாகிய புநர்தத்தன் கண்ணனை அழைத்து, அரசிக்கு அவன் கொண்டு வந்திருக்கும் செய்தியைக் கூறச் சொன்னான். கண்ணன் இரண்டடி முன்னால் வைத்து தெய்வீக அரசியைப் பார்த்துக் கீழ்க்கண்ட செய்திகளைக் கூறினான்.

"தெய்வீக அன்னையே, நான், வாசுதேவ கிருஷ்ணன், ஷூரர்களின் ஒப்பற்ற தலைவனான வசுதேவனின் மகன், இந்த பூமியின் ஒரு பகுதியை ஆண்டு வரும் யாதவகுலத் தலைவன் ஆன உக்ரசேனனிடம் இருந்து நட்புக் கரம் நீட்டிக்கொண்டு வரும் செய்தியைச் சுமந்து வந்துள்ளேன். தங்களுக்கேற்ற விலை மதிக்க முடியாத பரிசுகளையும் அவர் சார்பாய்க் கொண்டு வந்துள்ளேன். இந்தப் பரிசுகளை ஏற்று, அவரின் உந்நத நட்பையும் ஏற்று எங்களைக் கெளரவிக்க வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்." கண்ணனின் மென்மையான குரலில் கூறப்பட்ட இந்தச் செய்தி அனைவருக்கும் புரியாவிடினும் மனதில் ஓர் மூலையில் இளக்கம் மிகுந்தது. அங்கே ஓர் ஆழ்ந்த அதே சமயம் சற்று நேரம் நீடித்த மெளனம் நிலவியது.

9 comments:

  1. hmm intha suspense vaikarathuthan enakku pidikala

    ReplyDelete
  2. எல்கே தாத்தா, வயசாச்சு இல்லை?? அதான்! பொறுத்துக்க முடியலை!

    க்ர்ர்ர்ர்ர் மறுபடியும் நம்பியார் படமா????:P:P:P

    ReplyDelete
  3. ம்ம்..அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;)

    ReplyDelete
  4. கதை சொல்லும் பாங்கு அருமை!கீதா!
    நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  5. கோபி, வருகைக்கு நன்றி.

    அம்மா, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி. நீங்க என்னோட பதிவுகளைப் படிக்கிறது சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  6. நல்ல வழுக்கையோட இருக்கா???

    இம்ம் என் தலை மாதிரி.

    பெருமாள் கோவிலுக்கு நிதி உதவி என்ன முகவரி, வங்கிக் கணக்கு போன்றவற்றைத் தெரியப்படுத்தவும்.

    அனுமனின் கதை லாஜிக் இடித்தாலும், நல்லா இருக்கு.

    வழக்கம் போல கண்ணனின் கதை சஸ்பென்ஸ்ஸில் முடிந்து விட்டது. உங்களுக்கு விருதுடன் சஸ்பென்ஸ் மகாராணின்னு(அகதா கிறிஸ்டி மாதிரி) ஒரு பட்டமும் கொடுக்கனும் போல இருக்கே.

    நாங்க ஆவலுடன் அடுத்த இடுகைக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  7. வாங்க பித்தனின் வாக்கு. உண்மையாவே ஒரு கதை(தழுவல் தான்) எழுதினேன். ஆசை யாரை விட்டது???விளம்பரம்தான் போய்ப் பார்த்துப் படிச்சுட்டுச் சொல்லுங்க! :D

    ReplyDelete
  8. Happy New Year Mrs Shivam:)

    ReplyDelete
  9. வாங்க ஜெயஸ்ரீ, உங்களுக்கும் எங்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete