யாருமே சரியாப் புரிஞ்சுக்கலை. சீரியல் நிகழ்வைப் பத்திச் சொன்னதும் எல்லார் கவனமும் திசை திரும்பி விட்டது. போகட்டும், இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லி இருக்கலாமோ? சொல்லி இருக்கலாம் தான். ம்ம்ம்ம் இப்போப் பார்த்த ஜெயஸ்ரீயின் பின்னூட்டத்திலே சொல்ல வந்ததை அவங்க புரிஞ்சுண்டு இருக்கிறது தெரியுது. ஓகே. :D கொஞ்ச நாட்களாகவே வெயில் அதிகமா இருக்கிறதாலே மத்தியானமாய் ஜாஸ்தி உட்கார முடியலை. சாயந்திரம் தான் வர முடியுது. இருக்கிற நேரத்துக்குள்ளே எழுதணும். போதாக்குறைக்கு இந்த மின்வெட்டு வேறே. யுபிஎஸ் வேறே பாட்டரி வீக்காகி ஒரே கத்தல். முதல்லே அதனாலேனு புரிஞ்சுக்கலை. வோல்டேஜ் பிரச்னைனு நினைச்சேன். அப்புறம் பார்த்தா பாட்டரி மட்டும் வீக்காகலை. கூடவே ரெசிஸ்டர் என்னும் சின்ன உறுப்பு ஒண்ணும் உடைஞ்சு போயிருக்கு. அது உடைஞ்சிருந்ததே தெரியலை. ஏதோ கீழே விழுந்திருக்கேனு எடுத்தா ரெசிஸ்டர்னு மெகானிக் சொல்றார். நல்லவேளையா உள்ள உள்ள சின்ன காயில்(எவ்வளவு அழகாச் சுத்தி இருக்காங்க? ஆச்சரியமா இருந்தது!) எரியலை. நான் பாட்டுக்குக் கணினியைப் போட்டுட்டு இருந்தேன் இத்தனை நாளா. கவனிக்கலைனா வெடிச்சிருக்கும்னு மெகானிக் சொல்றார். தொழில் நுட்பம் தெரிஞ்சவங்கதான் இது பத்திச் சொல்லணும்.
ஆனால் கொஞ்ச நாட்களாகவே இப்படி ஏதாவது ஒண்ணு நடந்துட்டு இருக்கு. சில நாட்கள் முன்னால் மீட்டர் ரொம்பவே வேகமாய் ஓடுதேனு எலக்ட்ரீஷியனைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொன்னால் இன்வெர்ட்டர் போட்டப்போ அதுக்குத் தனியா ந்யூட்ரல் கொடுக்காமல் ஏற்கெனவே மெயின் லைனில் ஓடிட்டிருந்த ந்யூட்ரலிலேயே கொடுத்திருக்காங்க. அது என்னன்னா, மெயினை அணைச்சாக் கூட இன்வெர்ட்டர் கனெக்ஷன் கொடுக்காத லைட்டெல்லாம் எரிய ஆரம்பிச்சது. ந்யூட்ரலில் கொஞ்சம் ஷார்ட் சர்க்யூட் ஆகி எரிஞ்சும் போயிருக்கு. கவனிக்கலை, அதையும். நல்லவேளையாப்ப் பார்த்தோம். அதுக்கு அப்புறம் அதுக்குத் தனியா ந்யூட்ரல் போட்டு அதைச் சமாதானம் செய்ததுக்கு அப்புறம் இப்போ மீட்டரும் சரியா ஓடுது.
இந்த எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பொருட்கள் வசதினு நினைக்கிறோம். உண்மையில் இவற்றால் மேலும் மேலும் செலவு தான் ஏற்படுகிறதுனு என்னோட எண்ணம். கொஞ்ச நாட்கள் முன்னர் நண்பர் தமிழ்த்தேனீ தன்னோட லாப்டாப்பினால் பட்ட கஷ்டத்தை எழுதி இருந்தார். அதீத செளகரியங்களினாலே சங்கடங்களா? சங்கடங்கள் எல்லாருக்கும் ஏற்படுபவைதான். நான் சொல்றேன், பலரும் சொல்றதில்லைனு தோணுது. இதை எல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் இல்லாமல் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாதானு ஒரு பக்கம் தோணுது. கூடவே நாம இருக்கிற எச்சரிக்கை உணர்வோடு இருந்தால் எல்லாம் சரியாய் இருக்கும்னு தோணுது. அதோட எல்லாத்துக்கும் மேலே இருப்பவனும் சரியான சமயத்தில் நமக்கு புத்தியைச் செயல்பட வைக்கணும். என்னோட வாழ்க்கையிலே பல சமயங்களிலே இம்மாதிரியான பயங்கர நிகழ்வுகளும், அதிலிருந்து மயிரிழையில் தப்பினதும் நடந்திருக்கு. கூடவே அம்மாவோ, அப்பாவோ கையைப் பிடிச்சுண்டு வராப்பல இறைவனும் வரார்னும் புரிய வைச்சிருக்கு. அன்றாட நிகழ்வுகளிலே கூட எதிர்பாராமல் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கு.
இந்த வாரம் ஆரம்பத்திலே இருந்து கண்கள் தளும்பும்படியான நிகழ்வுகள் முக்கியமாய் மூன்று. ஒரு மணி ஆர்டரை அனுப்பினவர், அதை எடுத்து வந்த தபால் பெண். தபால்காரி?? அடுத்து நாங்க உதவிகள் செய்யும் ஒரு ஏழைக்குடும்பத்திற்கு இம்மாத ரேஷன் வாங்கி வைக்கறதுக்காக ரேஷன் கடைக்குப் போனார் என் கணவர். ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வது ஒரு பெண். மணி ஆர்டரை அனுப்பினவர் கண்கள் தளும்ப வைத்தாரென்றால் அதை எடுத்து வந்த தபால்காரப் பெண். விடிய விடிய 22 வயதிருக்குமா? நல்ல கொளுத்தும் வெயிலில், அந்த முரட்டுக் காக்கிப் புடைவை/சல்வார் குர்த்தா?? சரியாக் கவனிக்கலை, ஆனால் பருத்தித் துணி இல்லை. யூனிஃபார்ம் ஆச்சே? காற்றே வராத அந்தத் துணியை உடுத்தியவண்ணம் வீடு வீடாக ஏறி, இறங்கி தபால் பட்டுவாடா பண்ணிக்கொண்டு வேர்க்க, விறுவிறுக்க! கடவுளே! என் பெண்ணாய் இருந்தால் இப்படி ஒரு வேலையே வேண்டாம்னு சொல்லி இருப்பேன். அந்தப் பெண் கிட்டேயும் கேட்டேன்! ஏன் இப்படி ஒரு வேலைக்கு வந்தேனு!
மத்திய அரசு உத்தியோகம். இப்படிக்கிடைச்சால் தான் உண்டு. மூணுவருஷம் இப்படி அலைஞ்சால் அப்புறமாய் ஒரு தேர்வு எழுதிட்டு அலுவலகத்தில் உட்கார்ந்த வண்ணம் வேலை செய்யலாம். தேர்விலும் தேர்ச்சி பெறணும்! :(( பெண்கள் முன்னேற்றம் என்பது இதுதானா?? ஒரு வாரமாய் மனசைக்குடையுது. சில வீடுகள் அடுக்குமாடிக்குடியிருப்புகள். இங்கே எல்லாம் இன்னும் கீழேயே அவரவர் குடியிருப்பு எண்ணோடு கூடிய தபால் பெட்டி வசதி கிடையாது. ஆகவே கீழேயே எல்லாத் தபாலையும் கொடுத்துட்டுப் போகமுடியாது.அடுத்துவர மழைக்காலம், மேடு, பள்ளம் தெரியாமல் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சைகிளை ஓட்டிக்கொண்டு வரணும்! வெயிலில் காய்ந்து, மழையில் நனைஞ்சு, அந்தப் பெண் கொஞ்சம் முன்னேறுவதற்குள் உடம்பு காய்ந்து வடாமாகிப் போயிடுமே!
ரேஷன் கடைப் பெண்?? உட்கார்ந்தவண்ணம் வேலைனு நினைக்கக் கூடாது. அரசு ரேஷன் பொருட்களை மட்டுமே கொடுக்கும் பொறுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறதா? கட்டிடங்கள் அரசின் பொறுப்பில் இல்லையா? இதோடு மூணு இடம் மாறியாச்சு. எல்லாம் காற்று வசதிக்காக ஒரு சிறு சாளரம் கூட இல்லாமல் கட்டப் பட்ட ஒரு இருட்டு அறை. சுற்றிச் சாமான் மூட்டைகள். நடுவில் தராசு. நல்லவேளையா எலக்ட்ரானிக் தராசு. பஸ் கண்டக்டர்கள் வைத்திருக்கும் கணக்கு இயந்திரத்தில் பில் போட்டுக் கொடுக்கிறாங்க. நாள் பூராவும் உட்கார்ந்திருக்கணும். வேலை நேரம்னு இருந்தாலும், கூட்டம் வந்துட்டால் எப்படித் தான் சமாளிக்கிறாங்களோ? எல்லாருமே கொஞ்சம் சாமான் தான் வாங்குவாங்களா என்ன?? சிலர் 20 கிலோ, எல்லாம் நிறுத்து அவங்க அவங்க பையில் கொட்டி, உதவிக்குக் கூட யாரும் இவர் போனப்போ இல்லை. என்ன கொடுமை இது?
எல்லா வேலைக்கும் பெண்கள் வரணும், வரலாம்னு ஆண்கள் சொல்வது ஒருவேளை இம்மாதிரிக்கஷ்டங்களில் இருந்து தங்களைக் காப்பாத்திக்கவோனு சில சமயம் தோணுது. அப்படி நினைப்பதைத் தவிர்க்கமுடியலை. இதிலே பெண்கள் முன்னேற்றமே இல்லை. கடுமையான பின்னேற்றம்! படிப்பு இல்லாமல் கட்டிட வேலைகள் செய்யும் பெண்கள் வருந்துவதைக் கண்டிருக்கிறேன். இது படிச்சுட்டுப் பெண்கள் செய்யும் கடுமையான வேலை. இதுக்கு என்ன சொல்றது???
ரேஷன் கடைப்பெண்ணை விட, அந்த போஸ்டுவுமன் தான் ரொம்ப பாவம். கால நிலை அநியாய் உக்கிரம் சென்னையில். அந்தப்பெண் சீக்கிரம் அலுவலகத்தில் உயர பிரார்த்தனைகள். ஆண்களும் பாவம் தான், இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் ஸ்டாமினா வேறு என்றே எண்ணத்தோன்றுகிறது.
ReplyDeleteஇல்லை அநன்யா, இரண்டு பெண்களுமே பரிதாபமாய்த் தான் இருக்கிறாங்க. நீங்க சொல்றாப்போல் ஆண்களின் ஸ்டாமினா தனிதான். ரேஷன் கடைப்பெண் உட்கார்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தால்...... கடவுளே! என்ன பாவமோ??:((((((
ReplyDeleteநீங்க சொல்லறாப்பல பாக்க பாவமா தான் இருக்கு.படிப்புக்கு ஏத்த வேலைங்கறயது முக்காவாசி பேருக்கு அமையறது இல்லை.இங்கேயும் post women உண்டு. அவாளுக்கும் extremes of weather ஒரு ப்ரச்சினை தான்.அங்க வெயில்னா இங்க பல்லு எல்லாம் கொட்டற குளிர்.இதுல மழையும் , ஊசக்காத்தும் சேந்தா சாமீ :(((( (வந்துண்டு இருக்கு winter.)ஆனா இந்த ஊருல அதுக்கு graduate எல்லாம் தேவையில்லை. நம்ப ஊரு population ல survival of the fittest . நடுத்தர வர்கம்லேயே கொஞ்சம் வசதி இருக்கறவா இப்பல்லாம் professional degrees க்கு காசு கொடுத்து வாங்கி படிக்க வைக்க முடியவும் முடியறது தயங்குவதும் இல்லை. இதே lower middle class பாடு திண்டாட்டம் தான்.BA, BSc படிச்சிட்டு ஆட்டோஓட்டிண்டு அதை ஒரு PRIDE ஓட பண்ணிண்டு இருக்கிற இளைஞர், பீச் ல பட்டாணி சுண்டல், பக்கோடா விக்கிற பெண் (ASTUTE BUSINESS WOMAN!!) என்ற இருவரும் போனதடவை வந்திருந்தப்போ எங்கள் மனதை தொட்டார்கள். அந்த பையன் சொன்னது "முதல்ல வருத்தமா இருந்தது மேடம், இப்ப பிடிச்சிருக்கு என்னையே எனக்கு. தங்கைக்கு கல்யாணம் பண்ணிட்டேன். BLIND CHILDREN க்கு வாரம் ஒருமுறை உதவி செய்வேன். கார் மெகானிக்கு பார்ட் டைம் படிச்சிட்டு இருக்கேன்.ஆட்டோ கடன் அடைச்சிட்டேன். நியாயமா வண்டி ஒட்டறேன். அதுனால நிம்மதியா தூங்கறேன்"" நு சொல்லிட்டு சிரிச்சது அந்தப் பிள்ளை. அந்தப்பொண் 26 வயசுல வீட்டுல ஒரு small scale industry யே வைச்சிருக்கு. விதவைத் தாயார் தம்பி எல்லாரும் சேர்ந்து கார்தாலையில் எடுப்பு சாப்பாடு . மத்யானம் முருக்கு தட்டை தேங்குழல் சாயந்திரம் ப. சு !! நானும் இருக்கேனேனு ஒருவேளை சமைக்கவே பெருமூச்சு விட்டுண்டுனு ரொம்ப small ஆ feel பண்ணினேன்.அனுசரிச்சு ஏதுவா இருக்கறவானு தோனித்துன்னா கல்யாணம் இல்லேனா மாட்டேன். இப்ப என்ன கெட்டு போச்சுனு , நான் இப்ப வீடு வாங்கிட்டேன் என்று அகம்பாவமா இல்லாம சமத்தா சொல்லிட்டு சிரிச்சது!! நமக்கு அது பரிதாபமா இருந்தாலும் DIGNITY OF LABOUR அது அவாளுக்கு னும் இருக்கலாம் இல்லையா?. கண்ணியத்துக்கு, டிக்னிடி க்கு வேண்டி செய்யப்படற எந்த வேலையும் வேலை செய்யறவாளும் RESPECT பண்ண வேண்டியவர்களே . அவா இல்லைனா நம்பளும் நாறிடுவோம் சில வேலையில். என்னால முடிஞ்சது ஒரு வாய் juice, tea or coffee ஆறுதலான பேச்சு acknowldgement of their labour ஆத்மார்த்த நன்றியோட
ReplyDeleteதபால் பெண்கள், பால் கொண்டு வரும் பெண்கள்,
ReplyDeleteஇன்னும் டோர் டு டோர் வியாபாரம் செய்ய வரும் பெண்கள், ஈபி கணக்கு எடுக்க வரும் பெண்கள், சர்வீஸ் செய்யும் பெண்கள் எல்லாருக்கும் இதேதான்மா கீதா.
இந்த வெய்யிலும் ஓயும் வழியாகக் காணோம்.
படிப்பும்,சம்பளமும் வேறாக இருந்தாலும் கஷ்டம் என்னவோ ஒண்ணுதான்.
ம்ஹும் நீங்க புரிஞ்சுக்கலை ஜெயஸ்ரீ, நான் அவங்க செய்யற வேலையை மதிக்கிறேன். அந்த தபால்காரப் பொண்ணை எங்க வீட்டு வாசல்லேசித்த நேரம் உட்காரவும் சொன்னோம். வேப்பமரக் காத்து, குளுகுளுனு இருக்கும், இருந்தாலும் கண்ணிலே ரத்தம் வருதே! :(((((((((
ReplyDeleteஆமாம், வல்லி, நீங்க சொல்றாப்போல் மத்தவங்களையும் சொல்லி இருக்கணும்தான். ஆனால் எங்களுக்கு அவங்க சேவை செய்யறதில்லை, அதுக்கெல்லாம் ஆண்களே வரதினாலே தோணலையோ?? :((((((
ReplyDeleteரேசன் கடை மகா மோசமா இருக்கும். சுத்தமா காத்தும் வராது. நம்ம மக்களுக்கும் பொறுமை இல்லை, கத்திண்டே இருப்பா
ReplyDeleteகூட்டம் இருந்தால் கஷ்டம் தான் தாத்தா, ரேஷன் கடையிலே, ஆனால் அந்தப்பொண்ணு முடியாதவங்களுக்கு சாமான்களைத் தூக்கி வண்டியிலேயும் வைச்சு உதவி செய்யறாங்களாம், பாவம்! இப்படி ஒரு நாளைக்கு 4,5 பேர்னாகூடக் கஷ்டமே! :((((((((((
ReplyDeleteமனுஷனா இருக்கிற எல்லோருக்கும் இது மனசுல சிம்பதி யை உண்டாக்கறதுதான். நம்ப ஸ்ய்ம்பதி அவாளுக்கு சோறு போடாதேனு எனக்கு வருத்தமா இருக்கும்.
ReplyDeleteநாட்டுல வேலையிலா திண்டாட்டம், லஞ்சம் CURRUPTION இதுக்கு நடுவுல இந்த குடும்பங்களின் பிரச்சனைகளை சமாளிக்க அவா என்ன செய்வா பாவம்
ஆனா கடுமையான வேலைனு இந்த வேலையையும் விட்டா வறுமை அதனினும் கொடியது இல்லையா . இங்க நிறைய பேர் immigrants விவரம் தெரியாம வந்து இருக்கற வேலைனு accept ப்ண்ணற job எல்லாம் இப்படித்தான் Mrs Shivam. பாதிப்பேர் accidental injury னு shoulder back injury, depression ஓட வர 26,28 வயசு இளம் எஞ்சினீயர்கள், PHd,டாக்டர்கள். டாக்ஸி ஓட்டினா அடி ஓதை மிரட்டல் என்கிற ரிஸ்க் வேற :(((
ரேஷன் கடை மாதிரி இடங்களுக்கு occupational safety அமைப்புகள் வந்து health reasons நு சொல்லி கடைக்காரர் இந்த மாதிரி குறிப்பிட்ட ஸ்டண்டர்ட் ல கடை அமைப்பு காற்றோட்டம் இருக்கச் செய்யணும்னு செய்ய வைக்க முடியும். ஏன்னா அது human rights
ReplyDelete