ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி!
திருக்கைலை மலையே லிங்க வடிவாக வழிபடப் படுகின்றது. மேலும் திருவண்ணாமலையும் அக்கினி ஸ்வரூபமாய் லிங்க வடிவிலே இருப்பதாயும் கேள்விப் படுகின்றோம். மேலும்
"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே"
என்று சொல்லுகின்றார் மாணிக்கவாசகர். இங்கே ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியாய் நின்றவர் அந்த ஈசனே தான் அல்லவா? விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒரு பெரும் சோதி ரூபமாய் நின்றார் அவர். அந்த உருவமே லிங்கமாய் ஆவிர்ப்பவித்தது. மனிதனை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் வடிவமே லிங்கம் ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே இரண்டிரண்டாய் இருப்பதை அறிவோம் அல்லவா?? பகல்-இரவு, ஒளி-இருட்டு, இன்பம்-துன்பம் என்பது போன்ற இருவகை நிலைகள் இருக்கின்றன அல்லவா?? இதைத் தான் மாயை என்று சொல்கின்றனர். இந்த இருமை வகையான மாயையில் இருந்து நாம் விடுபட்டு இவற்றை எல்லாம் கடந்த நிலையையே லிங்க ஸ்வரூபம் நமக்கு உணர்த்துகின்றது.
ஆன்மீகப் பெரியோர் அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்று இது. ஒரு சமயம் விவேகானந்தர் கலந்து கொண்ட ஒரு சமய வரலாற்று மகாநாட்டில் ஒரு ஜெர்மானியத் தத்துவப் பேராசிரியரால் லிங்க வழிபாடு, பாலுணர்வோடு தொடர்பு படுத்திப் பேசப் பட்டது. அப்போது அந்தப் பேரவையில் இருந்த ஸ்வாமி விவேகானந்தர் அதே மேடையில் அதை ஆணித்தரமாய் மறுத்ததோடு அவற்றுக்கு எடுத்துக்காட்டாய் புராணங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி எடுத்துரைத்து மறுத்தார். ஆகமவிதிகளின் படி ஆவுடையாரின் வடிவமானது, பத்மபீடம் அல்லது சமவடிவிலான நாற்கோணமாகிய பத்திரபீடம் ஆகும் எனவும் எடுத்துக் காட்டினார். மேலும் பழைய காலங்களிலேயே லிங்க வழிபாடு இருந்திருப்பதோடு அப்போதெல்லாம் பீடங்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் விவேகானந்தர். காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்திலும், சீர்காழி தோணியப்பர் கோயிலிலும் பீடமற்ற லிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரியவருகின்றது.
லிங்கம் என்பது சிவலிங்கம் என்ற ஒரே பொருளையும் கொண்டதல்ல. இறைத் தன்மையின் வடிவமே லிங்கம் ஆகும். திருமூலர் சொன்னபடி இவற்றின் உட்பொருளை அறிதல் மிகக் கடினம்.
இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே. 1712
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 1752
நம் நாட்டில் சநாதன தர்மத்தோடு அடையாளப் படுத்தப் பட்ட இந்த லிங்க வடிவானது அனைத்துச் சமயங்களையும் கடந்த ஓர் அற்புத தத்துவமாகும். தவஞானிகளின் ஆற்றல்களாலும், கோயில்களில் சொல்லப் படுகின்ற மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பேராற்றல் படைத்த இந்த லிங்கத்தின் சக்தி அளப்பரியது என அறிவியல் வல்லுநர்களும் கூறுவதாயும் தெரியவருகின்றது. அமெரிக்கக் கண்டத்தின் பெரு என்னும் நாட்டின் தத்துவத் துறை திறனாய்வாளர் John Stephen என்பவர் இந்தக் கருத்தை வலியுறுத்தி SIVALINGAM என்றதொரு ஆய்வு நூலை எழுதி இருப்பதாயும் தெரியவருகின்றது.
நம்நாட்டில் மட்டுமில்லாமல் அநேக உலக நாடுகளிலும் அணுமின் நிலையங்களின் கொதிகலன்கள் லிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. எல்லையற்று விரிந்து, பரந்து இருக்கும் ஓர் அளப்பரிய சக்தியின் அல்லது இறைத் தன்மையின் ஆதிவடிவம் என்று சொன்னாலும் மிகையில்லை. குறிப்பிட்டதொரு சமயத்துக்கும் சொந்தம் எனக் கூறமுடியாது. தமிழ்த்தாத்தா திரு உ.வே.சா. அவர்கள் வைணவத்திருத்தலங்களிலே கூட சிவலிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள் எனவும் தெரிய வருகின்றது. அரியலூர், காரமடை, மொண்டிப்பாளையும், திருமருகல் போன்ற தலங்களில் கூம்பு வடிவிலும், செவ்வக வடிவிலும் லிங்கங்கள் உள்ளன எனத் தமிழ்த்தாத்தா குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்டம் காரமடையில் உள்ள அரங்கநாதர் கோயிலில் செவ்வக வடிவில் லிங்கம் உள்ளதாயும் தெரியவருகின்றது.
மாசிமாதத்தில் அந்தக் கோயிலில் நடக்கும் பந்தசேவையின் போது ஏற்றப்படும் தீப்பந்தம் வட்ட வடிவமாய் இருப்பதாயும், அது குண்டலினி சக்தியின் குறியீடு எனவும் சொல்கின்றனர். நம் ஆழ் மனதில் உள்ள குண்டலினி சக்தியையே லிங்கமாய் உருவப் படுத்தி வழிபட்டிருக்கலாம் சித்தர்களால் என்பதும் ஒரு தகவல். மேலும் லிங்க வடிவு நெருப்போடும் தொடர்பு கொண்டதாய்ச் சொல்கின்றனர். ஆதி மனிதன் தனக்கு ஏற்பட்ட விழிப்புணர்வின் உச்சத்தில் இறைத் தன்மையை லிங்க வடிவில் உணர்ந்து வழிபட்டிருக்கலாம் என்பதும் ஓர் ஆய்வின் மூலம் தெரிய வருகின்றது. நெருப்பு ஆற்றலைக் கொடுக்கும். அது போல் மனிதனின் உள் உணர்வுக்கும் நெருப்பின் தொடர்பு என்பது குண்டலினியை எழுப்புவதன் மூலம் ஏற்படும் அல்லவா? ஆற்றலைக் குறிக்கக் கூடிய ஒரு சக்தியே லிங்கம் என்பது சமயச் சான்றோர்களின் கருத்து.இறைவனை அறியாமையை இருள் என்றும் அவனை அறிதலுக்கு ஒளி பெற்றான் என்றும் சொல்லுவதுண்டுஅல்லவா? அத்தகைய பேராற்றல் படைத்த ஒளிவடிவே லிங்கம் ஆகும். இதைத் தம் சுய அனுபவத்தில் கண்டே வள்ளலார் அருட்பெருஞ்சோதி, தனிப்பெரும் கருணை என்று விளக்கியதோடு அல்லாமல் சமரச சன்மார்க்கத்தையும் ஏற்படுத்தினார். இன்றைக்கும் வடலூரில் ஜோதி வழிபாடு என்பது நடந்து வருகின்றது என்பதையும் அறிவோம். லிங்கம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பிரகாசம், ஒளி வீசுவது என்ற பொருளும், வடமொழிச் சொல்லுக்கு சூக்ஷ்மமான தேகம் என்றும் பொருள் உண்டு. ஆகவே தன்னுள்ளிருந்து ஒளி வீசி சூக்ஷுமமாய் இருக்கும் ஒன்றே லிங்கம் என்று கொள்ளவேண்டும்.
தஞ்சைப் பெரிய கோயில் தக்ஷிணமேரு என அழைக்கப் படுவதையும் நாம் அறிந்துள்ளோம். கைலை மலையை நினைவு படுத்தும் விதத்திலேயே அந்தக் கோயில் அவ்வாறு கட்டப் பட்டுள்ளது. உள்ளே ஆவுடையாரும் லிங்கமும் மட்டும் பெரியதல்ல. உள் கூடும் ஆகாசலிங்கத்தை உணரச் செய்யும் விதமாக வடிவமைக்கப் பட்டது. உள்ளே பெருவுடையாரை நாம் வழிபடுவது உருவ வழிபாடு எனில், அதற்கு மேலே விமானத்தின் மேல் வரையிலும் அருவுருவ வழிபாட்டை நினைவு செய்யும் விதமாக வடிவமைக்கப் பட்டது. மகுடாகம வழிபாடு என ஏதோ ஒரு தளத்தில் படித்த நினைவும் கூட.(இது குறித்து சரியான ஆதாரம் என்னிடம் இல்லை.) ராஜராஜ சோழன் தன் கடைசி நாட்களில் சிவபாதசேகரன் என்ற துறவறப் பெயர் பெற்றதாகவும், அவன் குருவிடம் அவன் தீக்ஷை வாங்கும் காட்சியும் சித்திரங்களாகத் தீட்டப் பட்டவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆகையால் சிவலிங்கத்தின் உள் அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்டே ராஜராஜன் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளான் என்பதற்கும் சந்தேகமே இல்லை. இனியாவது லிங்க சொரூபத்தைப் பார்க்கும்போது அதன் பரிபூரணத்துவத்தைப் புரிந்து கொண்டு பார்ப்போமா???
நன்றி கீதா.
ReplyDeleteplease read this link
ReplyDeletehttp://www.vallalyaar.com/books
துளசி,
ReplyDeleteபாலு, வருகைக்கு நன்றி.
வள்ளலார் தளத்தின் புத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றி பாலு.
நல்ல விளக்கம்.
ReplyDeleteமாதவிப் பந்தலிலும் இது குறித்த பதிவு படித்தேன்.
பிறரது திருபுகள் குறித்து அதிக கவலை நாம் கொள்ள வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
எல்லாம் சிவம் என்றால் எல்லாமுமே சிவம் தானே
http://www.virutcham.com
"சிவலிங்கம், பற்றி மிகவும் தகுந்த குறிப்புகளுடன் கொடுத்து இருக்கும் முறை பாராட்டப் படவேண்டிய ஒன்று . பகிர்வுக்கு நன்றி . தொடரு ங்கள் மீண்டும் வருவேன்
ReplyDeleteவாங்க விருக்ஷம், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க பனித்துளி, பாராட்டுக்கு நன்றிப்பா.
ReplyDeleteநிறைய புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteநல்ல விளக்கங்கள். மிக்க நன்றி.
ReplyDeleteஅகம் ,புறம் . அண்டம் என்கிற ப்ரக்ருதி வெளியே : பிண்டம் என்கிற ரசம்/ புருஷா உள்ளே. அங்கம் என்கிற உடம்பு = ஆத்மா வும் ப்ரக்ருதி ( MATTER) ஒட சங்கம்
ReplyDeletea அப்படி பாக்கறச்சே the body is a vessel containing Jeevaathma, the apparently individualised Self-effulgent Divinity. அப்ப நம்ப எல்லாருமே அண்ட பிண்ட லிங்கம் தான் இல்லையா? அட !!அப்படின்னா எல்லா மஹாவாக்யாவும் இதுதான் சொல்லறது!! தத்வமசி (ஞான லிங்கம் ), அயம் ஆத்மா ப்ரம்மா ( சதாசிவ லிங்கம் )அஹம் ப்ரஹ்மாஸ்மி ( ஆத்ம லிங்கம் ),ப்ரக்ஞானம் ப்ரம்மா ( பிரம்மாண்ட லிங்கம் ) இது எல்லாம் மைக்ரோ மாக்ரோ காஸ்மாஸ் ப்ரின்ஸிபில் தானே சொல்லறது? முந்தி ஒரு மஹானின் discourse கேட்டப்போ ஒருமாதிரி அர்தமாச்சு. இப்ப it makes sense! லிங்கம் வெளியே பாக்கறது ie: ப்ரக்ருதி -பஞ்ச பூதத்தினால் ஆனது - வெளீ தோற்றம்.புறக்கண் கொண்டு பார்க்க முடியாதது உணர மட்டுமே முடிவது is the sublime consciousness... everywhere!! அகண்டாகாரம் கொட்டிக்கிடக்குது ஐயோ!!- தாயுமானவர்!!
திருக்கதவம் திறவாதோ திரைகளெல்லாம் தவிர்தே திரு அருளாம் பெருஞ்சோதி திரு உரு காட்டாயோ !!-வள்ளலார்... interesting Mrs Shivam .Thanks:)))
நல்ல பதிவு. நம்ம ஆசாமிங்களே வெள்ளக்காரன் சொல்லறதை கேட்டு அதான் சரின்னு நினைக்கிற நேரத்திலே இது வரவேற்கத்தக்கது.
ReplyDeleteஅருமை!
ReplyDelete