ஹிஹிஹி, நேத்திக்குப் பதிவைப் பார்த்து பயந்தவங்களுக்கெல்லாம் நன்னி. இன்னிக்கு ஒரு நல்ல நாள். இந்த நாள் இனிய நாள். பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய நன்னாள். இந்த வலை உலகினர் அனைவரையும் ஒரு மாபெரும் புரட்சித் தலைமையை ஏற்றுக்கொள்ளவேண்டிய உந்நத நிலைக்குக் கொண்டு சென்ற நாள். வலை உலகின் பதிவர்களான அனைத்து உறவுகளுக்கும் இது ஒரு பொன்னாள்.
என்னனு புரியலையா? இன்னியோட நான் தமிழிலே பதிவுகள் எழுத ஆரம்பிச்சு நாலு வருஷம் முடியுது. ஆதரவு தெரிவிச்சவங்களுக்கும், இனி தெரிவிக்கப் போறவங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஆதரவு தெரிவிக்கலைனா நான் போயிட்டாக் கூட வேதாளமா வந்து பயமுறுத்துவேன் இல்லை? அது!!! அதைத் தான் முந்தின பதிவிலே குறிப்பிட்டு வச்சேன். நீங்க பதிவு எழுதும்போது உங்க கையிலே ஆவிவடிவில் புகுந்து (ஹை ஜாலியா இருக்கும் போலிருக்கே) என் இஷ்டத்துக்கு எழுத வைப்பேன். மாட்டேங்கறவங்க தூக்கத்திலே ராக்ஷசியா வந்து பயமுறுத்துவேன். (இது இன்னும் நல்லா இருக்கும் போலிருக்கே!) பதிவுகள் எழுத ஆரம்பிச்ச புதுசிலே ஆதரவு தெரிவிச்சவங்கள்ளே முக்கியமான நபர் சூப்பர் சுப்ரா. அவராலே தான் ஏதோ கொஞ்சமாவது என்னைப் பார்த்து நானே சிரிச்சுக்க ஆரம்பிச்சேன். அவரைத் தான் முதல்லே மிரட்டணும். இதுக்காகவே அவர் எப்போவோ ஒரு வாட்டி எட்டிப் பார்க்கிறதோடு சரி. அதனால் முதல்லே ஆவியாய் மாறி மிரட்டப் போறது சூப்பர் சுப்ராவைத் தான். ஏண்டா இவங்களுக்கு ஆதரவா எழுதினோம்னு நொந்து போயிடுவாரோ! அடுத்து நம்ம அம்மாஞ்சி அம்பி மாட்டிப்பார். எனக்குத் தமிழ் எழுதச் சொல்லிக்கொடுக்காததோடு பதிவுக்கு வந்து கிண்டல் வேறே பண்ணிட்டுப் போனார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்பியைப் பயமுறுத்தணும், கத்தரிக்காய் சாப்பிட வைக்கணும், கேசரினாலே ஓடும்படி பண்ணணும், போர்க்கொடியை ரெண்டு கையாலேயும் பார்த்துடணும் , தக்குடுவை ஒரு வழி பண்ணணும். , கைப்புள்ளயை, அதியமான், நக்கலா பண்ணறீங்க?? ஸ்மைலி போட்டு வெறுப்பேத்தறேனா? ஸ்மைலி தவிர வேறே எதுவும் எழுத மாட்டீங்க அப்புறமா, அப்படிப் பண்ணிட மாட்டேன்?, இன்னும் யாரு?? அபி அப்பா?? சரி போனால் போகுதுனு ஒரு முறை பயமுறுத்தலாம், இந்த நட்டு ஆண்ட்டினு கூப்பிட்டதாலே ஒரே முறை. புலி?? வேண்டாம், நல்ல புலி. விட்டுடுவோம், கல்யாணம் வேறே இப்போத் தான் ஆகி இருக்கு. கோபி?? சேச்சே, ரொம்ப நல்ல பையர், அழுதுடுவார் அப்புறமா.
திராச சார், திவா, மெளலி இவங்களை எல்லாம்?? ம்ம்ம்ம்ம்??? ஆன்மீகம் இல்லை எழுதறாங்க?? ஆஹா, அவங்க எல்லார் கிட்டேயும், நான் தான் உம்மாச்சினு சொல்லிடலாம். நல்ல ஐடியா! திவா கிட்டே நான் தான் பிரம்மம்னு சொல்லிடலாம். வேண்டுமானா மகாநதி ஷோபனாவோட குரல்லே "பிரம்மம் ஒன்றுதான், பரப்பிரும்மம் ஒன்றுதான்!" பாட்டைப் போட்டுக் காட்டிடலாம். பாட்டு மட்டும் கேட்கும். உருவம் தெரியாது. பிரம்மமே நாந்தான்னு எழுத வச்சிடலாம். திராச அவர்கள் கிட்டே திருத்தணி முருகன்னு சொல்லிடணும். உருகிடுவார். மெளலி கிட்டே மீனாக்ஷி மாதிரி போயிடணும். சர்வ சக்தி வாய்ந்த அந்த ஆதிபராசக்தியே நான் தான்னு சொல்லிடணும். ஆஹா, அம்பாளே வந்துட்டாளே! என்ன பண்ணறதுனு மெளலி நல்லா யோசிக்கணும். அப்புறமா கேஆரெஸ், குமரன் இருக்காங்க. குமரன் தான் வலை உலகில் முதல் முதல்லே என்னை "கீதாம்மா"னு கூப்பிட்டுட்டுக் கூப்பிடலாமா?னு கேள்வியும் கேட்டுட்டுக் கூப்பிடவும் ஆரம்பிச்சார். இன்னிக்கு இண்டநேஷனல் லெவல்லே கீதாம்மா ஆகி இருக்கேன். அதனால் குமரனை மன்னிச்சு விட்டுடலாமா?? கேஆரெஸ்ஸை?? ம்ம்ம்ம்ம்? அவரைக் கட்டாயமாய் பயமுறுத்தியே ஆகணும். பேசாம நான் காரைக்கால் அம்மையாரோட கணவர் பரமதத்தன் ஆவி மாதிரி வந்து நின்னுட்டு எனக்கு ஆதரவா அவரை எழுத வச்சிடலாம். ஹிஹிஹி, ஜாலியா இருக்கும் போலிருக்கே இதெல்லாம்! நல்ல ஐடியா! அப்புறமாப் பெண்பதிவர்கள்ளே முதல்லே ரேவதி?? வேண்டாம், வேண்டாம், பாவம், பயந்துடுவாங்க. அதோட என்னடா கண்ணானு கூப்பிடுவாங்களே! அதைக் கேட்டதுக்கப்புறமும் எப்படிப் பயமுறுத்தறது?? துளசி, வேண்டாம் வேண்டாம், நம்மளையும் மதிச்சு அவங்க எங்கே சுற்றுப் பயணம் போனாலும் உடனே எனக்குத் தனி மடல் கொடுத்து ஆலோசனை கேட்கிறாங்க. ஆலோசனைகளை வேணாச் சொல்லிடலாம் ஆவி வடிவில் , அவங்க தூங்கும்போது. இன்னும் யாரு?? கவிநயா? வேண்டாம், கவிதை சொல்லிப் பயமுறத்தறேம்பாங்க, அது நமக்கு வராது, நாம தானே பயமுறுத்தணும், ம்ம்ம்ம்??? யோசிக்கலாம், கவிதைன்னா நாமளே ஓடிடணும். அதனாலே நல்லா யோசிச்சுச் செய்யணும். பேசாம நான் எழுதறதையே மடிச்சு மடிச்சுக் கவிதை மாதிரி காட்டிடணும். தலையில் அடிச்சுண்டு போயிடுவாங்க. ரா.ல. பாவம் உடம்பு சரியில்லை போல, ஆளே காணோம். விட்டுடுவோம், போனால் போகட்டும். :( ஆஹா, எல்கே தாத்தா, அவரை விட்டுட்டேனே! விதம் விதமாப் படம் போட்டு குழப்படி பண்ணறாரே! ஒரிஜினல் படத்தைப் பார்த்துப் போட வைக்கணும். அந்தக் காலத்து நம்பியார் போல இருக்கிற இவரை எப்படிக் கல்யாணம் செய்துட்டீங்கனு அவரோட தங்கமணியைப் பார்த்துக்கேட்கணும். ம்ம்ம்ம்ம் இப்போதைக்கு இவங்க போதும். அப்புறமா ஒவ்வொண்ணா வரலாம்.
ஆஹா, வலை உலகப் பதிவர்களே, காத்திருங்க. நான் போனாலும் என்னோட ஆவி எந்த உருவத்திலாவது வந்து உங்க எல்லாரையும் சுத்துமே! I will haunt you all!
//இவரை எப்படிக் கல்யாணம் செய்துட்டீங்கனு அவரோட தங்கமணியைப் பார்த்துக்கேட்கணும்.//
ReplyDeleteதங்கமணிக்கும் கத்தை கத்தையா,விதவிதமான படங்களை அனுப்பி குழப்பியிருப்பாரோ என்னவோ!!! :-)))
கைக்குள் புகுந்து எழுத வைக்கிறது நல்ல ஐடியா.. கீதாம்மா.
பெரிய மனசு பண்ணி மன்னித்ததற்கு நன்றியும் சொல்லி பெரிய ரோஜாப்பூ மாலையுடன் வாழ்த்த வந்திருக்கிறேன் நான்காண்டு நிறைவுக்கு:))! வாழ்த்த வயதில்லை என்றால் க்ர்ர்ர்ர் என்பீர்கள். ஆகையால் இன்று போல் என்றும் இளமையும் உற்சாகமும் பொங்க தொடர்ந்து பதிவுகள் தாருங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
தமிழ்மணத்திலே சேர்த்துட்டுப் பரிந்துரையும் செய்த உங்க இரண்டு பேருக்கும் நன்றி, அமைதிச்சாரல், ரா.ல.
ReplyDelete//தங்கமணிக்கும் கத்தை கத்தையா,விதவிதமான படங்களை அனுப்பி குழப்பியிருப்பாரோ என்னவோ!!! :-)))//
ReplyDeleteஅதான் நினைச்சேன் நானும்! :)))))))))) இன்னிக்கு லீவு, ஒருத்தரும் வரலை அதான்!
வாங்க, ரா.ல. வாங்க, ரோஜா மாலை எங்கே காணோம்??? இந்த வருஷம் விட்டுட்டேன், அடுத்த வருஷம் பிழைச்சுக் கிடந்தா வட்டியும், முதலுமா இருக்கு இல்லை?? :D
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் கீதா.
ReplyDelete@அமைதி சாரல்
ReplyDeleteஏற்கனவே என்னோட திருமண நாள் பதிவுல சொன்னமாதிரி பெண்பார்க்க போகும் முன் நான் என் மனைவியை பார்த்தது இல்லை, அவள் என்னை பார்த்தது இல்லை . புகைப்படமும் பார்த்தது இல்லை. இதை பற்றி எனது விளக்கத்தை எனத்து பதிவில் கூறி இருக்கிறேன் பார்த்து கொள்ளலாம்.
@கீதா
பாட்டி இன்று போல் என்றும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்
உங்கள் அன்பு பேரன்
LK என்கின்ற கார்த்திக்
வாங்க அறிவன், வருஷங்கள் கழிச்சு நினைவு வைத்துக்கொண்டு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
ReplyDeleteவாங்க எல்கே தாத்தா, த.ம. உங்க படத்தைக் கூடப் பார்க்கலையா?? பாவம் அவங்க! :P
ReplyDeleteவந்ததுக்கும், வாழ்த்துக்கும் நன்றி தாத்தா!
வாழ்த்துக்கள் கீதா பாட்டி!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteயப்பா....5வது வருமா!! நல்லது ;) மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))
ReplyDeleteiniya vaazhththukkaL
ReplyDelete4வது ஆண்டுக்கும் அடி எடுத்து வைக்கும் எங்கள் தானைத்தலைவி கீதா மாமிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅடுத்த வருஷப்பதிவில என் பெயர் வராம இருந்தா சரிதான்! :)
தக்குடு, என்ன ஒரே வார்த்தையோட நிறுத்திட்டே? :P
ReplyDeleteவாங்க லதா, நினைவு வச்சுட்டு வருஷத்துக்கு ஒரு தரம் வரதுக்கு நன்னிங்கோ.
ReplyDeleteகோபி, கணக்குச் சரியாப் போட்டிருக்கீங்க, கீழே பாருங்க அநன்யாவை! :P
ReplyDeleteவாங்க துளசி பிசி ஷெட்யூலுக்கு நடுவிலும் வாழ்த்தினதுக்கு நன்னிங்க.
ReplyDeleteஅநன்யா, உங்க கணக்கு டீச்சரை நான் பார்த்தே ஆகணும், இது ஐந்தாம் ஆண்டு ஆரம்பம், அடுத்த வருஷம் என்ன இந்த வருஷமே உங்க பேரைப் போடத் தான் நினைச்சேன், ஆனால் பதிவுகள் ஒண்ணும் இல்லை, அப்புறமா இப்போத் தான் கணக்குத் தப்பாப் போட்டு மாட்டி இருக்கீங்க! :P:P:P அதான் பிழைச்சீங்க!
ReplyDeleteநான்கு ஆண்டுகளாய் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி தங்கள் பதிவுகளை படிப்போரின் இதயத்தில் பதித்து கொண்டிருக்கும் கீதாம்மா (கீதாஜி) என்கிற தானை தலைவிக்கு இந்த நான்கு மாத வலைப் பதிவுலக கத்து குட்டியின் (மர மண்டையின்) இதய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅஷ்வின்ஜி (கிரிதர்ஜி)
திராச அவர்கள் கிட்டே திருத்தணி முருகன்னு சொல்லிடணும். உருகிடுவார்
ReplyDeleteஇந்த ஐஸ்க்கெல்லாம் நான் உருகமாட்டேன்.
வாழ்த்துக்கள் இன்னும் பல பதிவுகளை பதிக்க.
நாலு வருஷங்களில் நல்ல முன்னேற்றம். சின்ன பொண்னு,பொண்ணு, மாமி, பாட்டி என்ன சரிதானே பொற்கொடி!பாட்டின்னு சொன்ன உடனே சிலிர்ப்பிகினு பொங்கி எழுந்து வந்துடுவியே
ஆமாம் உங்க உ பி ச வேதாளம் என்ன ஆனாங்க விட்டுடீங்களே அவுங்களை ஞாயமா?
முதலில் வாழ்த்துக்கள் கீதாம்மா....
ReplyDeleteபதிவைப் படித்தவுடன், 'நானே வருவேன்' அப்படின்னு சினிமால வரும் பாடல்போல வருவதாக ஒரு கற்பனை பண்ணிப் பார்த்தேன்...ஹிஹிஹி
அஹா!, நான் வணங்கும் மீனாக்ஷியாக நீங்கள் உருமாற்றம் செய்யணும் அப்படின்னு நினைச்ச உடனேயே உங்களிடம் ஏமாற்றணுங்கற எண்ணம் போயிடும்...ஏன்னா மீனாக்ஷி என்னை என்றும் ஏமாற்றிட மாட்டாள்... :)
வாங்க கிரிதர்ஜி?? சிரிதர்ஜியை விட்டுட்டு வந்துட்டீங்க?? நீங்களும் ஜோதியிலே ஐக்கியமானதுக்கு நன்னிங்கோ.
ReplyDeleteவாங்க திராச சார், உங்க பிசியான வேலைகளுக்கு நடுவிலும் வந்து வாழ்த்தினதுக்கு என்னோட மனமார்ந்த நன்றி முதல்லே.
ReplyDeleteஅப்புறம் நான் எப்போவுமே சின்னப் பொண்ணுதான், போர்க்கொடிக்கென்ன சொல்லிட்டு இருப்பாங்க. அப்புறம் உபிச வை யார் மறந்தாலும் நான் மறப்பேனா என்ன?? அவளுக்கு கணினி இருக்கா, பார்ப்பாளானு சந்தேகம், அதான் அவங்க பேரைச் சேர்க்கலை. ம்ம்ம்ம்ம்??? தொலைபேசிப் பார்க்கணும், ரொம்ப நாளாச்சு! பேசி! :((((((((
many happy returns of the day! wishing all the best
ReplyDeletethivaa from salem camp
// நான் வணங்கும் மீனாக்ஷியாக நீங்கள் உருமாற்றம் செய்யணும் அப்படின்னு நினைச்ச உடனேயே உங்களிடம் ஏமாற்றணுங்கற எண்ணம் போயிடும்...ஏன்னா மீனாக்ஷி என்னை என்றும் ஏமாற்றிட மாட்டாள்... :)// மிகவும் ரசித்தேன் ம'பதி அண்ணா!
ReplyDeleteமெளலி, காலம்பர மின்சாரம் போயிடுத்து, அப்புறமா மின்சாரம் வந்தும் இணையமே இல்லை. இப்போத் தான் வந்தது, அதான் பதிலுக்கு தாமதம்.
ReplyDeleteஇப்போ பதில், நான் எங்கே ஏமாத்தப் போறதாச் சொன்னேன்?? மீனாக்ஷி மாதிரி உங்க கையிலே புகுந்து எழுத வைப்பேன்னு தான் சொல்லி இருக்கேன். திருப்பிப் படிங்க,இப்போ நோ மதிப்பெண்! 0/0
வாங்க திவா, ஊருக்குப் போயிருக்கிறச்சேயும் பார்ப்பீங்கனு தோணித்து, அதே போல் உங்க பின்னூட்டமும் வந்திருக்கு, ரொம்ப நன்னிங்கோ.
ReplyDeleteதக்குடு, மெளலி இருக்கிறது பெண்களூர், இங்கே சென்னையிலே இருக்கிறச்சேயாவது ஐஸ் வச்சிருக்கலாம், என்னமோ போ! :P
ReplyDeleteதிருப்பிப் படிங்க,இப்போ நோ மதிப்பெண்! 0/0//
ReplyDeleteநல்ல வாத்யாரிணிப்பாட்டி :))
மெளலி, மெதுவாப் படிச்சு வைங்க, நாளைக்குப் பரீக்ஷை நான் இப்போத் தூங்கப் போறேன், முக்கியமான விருந்தினர், வெகு நாட்களாக எதிர்பார்த்தவர் வந்தாரா இன்னிக்கு! அதான் லேட் படுத்துக்க. குட் நைட்!
ReplyDeleteஉங்க விருந்தினர் எனக்கும் தெரிந்தவரா? :)
ReplyDeleteHappy fifth birthday!!!:))))))
ReplyDeleteGreetings from Wanaka!!
@மெளலி, தெரியலை, உங்களுக்குத் தெரிஞ்சவரா இல்லையா என்று! :)))))
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, வாழ்த்துக்கு நன்றி. பதிவு ஒண்ணும் எழுதறதில்லை, அதனாலே நீங்க அநன்யா எல்லாம் தப்பிச்சுட்டீங்க! :P
ReplyDelete//@மெளலி, தெரியலை, உங்களுக்குத் தெரிஞ்சவரா இல்லையா என்று! :))))//
ReplyDeleteநான் உங்க வீட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆயிடுச்சு...அதே எனக்கு இப்போத்தான் நினைவுக்கு வருது...:))
ஹைய்யா நானும் தப்பிச்சேன். என் கனவில் வரமாட்டிங்கல்ல. ஏன்னா நான் எல்லாம் குறக்களி வித்தை தெரிஞ்சவன். ரொம்ப டேஞ்சர் பார்ட்டிங்க.
ReplyDeleteகண்ணன் கதை நல்லா இருக்கு. ஆமா ஒருவாரம் மட்டம் போட்டுவிட்டு ஊருக்குப் போன அனுபவங்கள் இன்னமும் வரவில்லையம்மா?
நல்லாயிருக்கீங்களா. ஜந்தாம் ஆண்டு மட்டும் அல்ல. இன்னமும் பல ஆண்டுகள் பூரண ஆரோக்கியத்துடன் கண்ணனின் கட்டுரைகள் எழுத வேண்டும் என கண்ணனின் திருவருளை வேண்டுகின்றேன். வாழ்த்துக்கள் அம்மா.
வாங்க பித்தனின் வாக்கு,
ReplyDeleteஅதெல்லாம் தப்பிக்கலை, உங்க போஸ்ட் ஒண்ணிலே குரங்கைக் காணோம், சித்தரைக் காணோம்னு சொன்னீங்களா?? அந்த மாதிரி எதுவானும் எழுதணும்னு நினைச்சேன். சரியா வரலை, அதனாலே விட்டுட்டேன்! இன்னொரு வாட்டி பார்த்துடுவோம் இல்லை??? உங்க வாழ்த்துகளுக்கு நன்றி.
ஊருக்குப் போனதே மாமியாரின் உடல்நலம் சரியில்லை என்பதால். இங்கே திரும்பவேண்டிய சூழ்நிலையும் கூட. அவங்களாலே இங்கே இப்போதைக்கு வரவும் முடியாது. அதனால் பெரிய அளவில் அநுபவங்கள் எதுவும் இல்லை. அநேகமாய் வீட்டிலேயே இருந்தேன். காலை, சாயங்காலம் கொஞ்சம் நடைப்பயிற்சியோடு சரி. இரண்டு கோயில் போனேன். அது மெதுவா எழுதணும்! :))))) சில காலமாவே கோயில்கள் சுற்றுலா போக முடியலை. :( பார்க்கலாம்,
அன்பு கீதா,கண்ணா:)
ReplyDeleteவாழ்த்துகள். இன்னும் நிறைய விஷயங்கள் இதே போல முனைப்போட
எழுதி எங்களையெல்லாம் மகிழ்விக்கணும்.
மீண்டும் மீண்டும் வாழ்த்துகள்மா.
வாங்க வல்லி, தாமதமாய் வந்தாலும் வந்து வாழ்த்தினதுக்கு நன்னிங்கோ. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
ReplyDelete