ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவினில் அவள் முகம் கண்டேன்
அங்கே தொலைந்தவன் நானே!"
காலம்பர ரயிலுக்குக் காத்துண்டு இருந்தப்போ யாரோட செல்லிலேயோ இந்தப் பாட்டுப் போட்டிருந்தாங்க ரிங்டோனாக. அப்போலேருந்து இந்தப் பாட்டுத் தான் சுத்திச் சுத்திவருது. படமோ, கதையோ, படத்தோட பேரோ அப்படி ஒண்ணும் என்னைக் கவரலைனாலும் பாடலும், பாடலில் வரும் சொற்களும், பாடிய குரலும் இனிமையோ இனிமை. கேட்கக் கேட்க நல்லா இருக்கு. சுகமான ராகம்.
அடுத்து நினைப்பு வந்தது, காப்டன், காப்டன் குஸ்தி கேர்ள் என்பது தான். ஹிஹி, இது நினைவிலே வந்ததே அங்கே சில குழந்தைங்க விளையாடிட்டு இருந்ததைப் பார்த்ததும். பள்ளியிலே படிக்கும்போது அஞ்சாப்பு வரைக்கும் (:P) தமிழிலே தான் படிச்சேன். என் தம்பிக்கு மூணாப்பிலே இருந்தே ஆங்கிலம் ஆரம்பிச்சது. எனக்கு அப்படி இல்லை. ஆறாப்பிலே தான் ஆங்கிலம் A,B,C னு கத்துக்க ஆரம்பிச்சதும், 'wind of the western sea! father will come to the baby in the nest," அப்படிங்கற lullaby யும், ஜாக் அண்ட் ஜில்லும் அப்போத் தான் படிச்சேன். (யாருப்பா அங்கே கேலி செய்யறது?? அப்போ நான் குழந்தையாக்கும்!சேச்சே, இந்த அநன்யாவாலே பாலக்காட்டுத் தமிழ் போகமாட்டேனு அடம்) அஞ்சாப்பு வரைக்கும் விளையாடின விளையாட்டிலே இந்த "காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்!" என்பதும் ஒண்ணு.
இரண்டு செட் இருக்கும். எதிர் எதிர் அணி.வரிசையா நிப்பாங்க. இரண்டு கைகளையும் பின்னாடி கட்டிக்கணும். இரண்டு தலைவலிகள், சீச்சீ, தலைவிகள். ஒரு குழுவின் தலைவில் தன் அணியில் உள்ளவர்களில் யாரானும் ஒருத்தியிடம் ஒரு பொருளைக் கொடுத்து மறைத்து வைப்பாள். அது எதிரணியில் உள்ளவர்கள் கண்டு பிடிக்கணும். பொருள் எதுவா வேணுமானாலும் இருக்கலாம். அப்போ நாங்க மறைச்சு வச்சு விளையாடினது, பென்சில், சிலேட்டுக் குச்சி, சாக்பீஸ் போன்றவையே. தலைவி மறைச்சு வச்சதும் எதிர் அணித் தலைவியைப் பார்த்து, "காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்?" அப்படினு கேட்பா. அதாகப் பட்டது, ஆங்கிலம் தெரியும் வரைக்கும் நான் அப்படினு நினைச்சுட்டு இருந்தேன்,
ஆறாப்பிலே இந்த விளையாட்டை விளையாடினோமா? நாங்க ஆறாப்பிலே உள்ள சில மாணவிகள், ஏழாப்பா, எட்டாப்பா தெரியலை, பெரிய கிளாஸ் மாணவிகள் சிலர். இரண்டு அணியா விளையாடினோம். அன்னிக்குனு பார்த்து, என்னைத் தலைவியாத் தேர்ந்தெடுத்துட்டாங்க. (ஹிஹிஹி, அப்போவோ தலைவியா இருந்திருக்கேன், குழந்தையிலேயே, குழந்தை மேதைனு சொல்லிக்கலாம் இல்லை?) நானும் அப்பாவியாய், நிஜமாவே அப்பாவியாய், கையிலே கிடைச்ச ஒரு வஸ்துவை என் குழுவில் உள்ள ஒரு பொண்ணு கையிலே வச்சுட்டு, எதிரணித் தலைவியைப் பார்த்துப் பெருமையாக் கேட்டேன் பாருங்க, "காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்?" அப்படினு! கொல்லுனு சிரிப்புச் சப்தம். அங்கே இருந்த டீச்சர் எல்லாம் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கிறாங்க. எதிரணிப் பொண்ணுங்க எல்லாம் என்னமோ நாங்க தோத்துப் போயிட்டாப்போல் சிரிக்கிறாங்க. எனக்கா ரொம்ப அழுகையா வந்துடுச்சு. பேசாம எல்லாரோடயும், ஆனைமேலே, குதிரை மேலே டூ விட்டுடலாமானு யோசிச்சேன்.
அப்போத் தான் எதிரணியில் இருந்த ஒரு பொண்ணு சொன்னா, "அது குஸ்தி கேர்ள் இல்லை, Who is the Girl(ஹூ இஸ் த கேர்ள்) அப்படினு". ரொம்ப வெக்கமாப் போச்சு. அப்புறமா அந்த ஆட்டம் ஆடும்போதெல்லாம் இதை நினைச்சுச் சிரிச்சுப்பேன். இன்னிக்குச் சில பொண்ணுங்க ஆடிட்டு இருந்ததைப் பார்க்கும்போது இதெல்லாம் நினைப்பு வந்தது. மைலாப்பூர் போய் ஓசிச் சாப்பாடு சாப்பிட்டுட்டு, தெருவிலே இருக்கும் நண்பர் ஒருத்தர் அவங்க வண்டியிலே கூட்டிட்டு வந்தாங்களா, இன்னிக்கு வெயில் கொடுமையிலே இருந்து தப்பினேன். இல்லாட்டிக் கொடுமைதான். ஓசிச் சாப்பாடு வேண்டாம்னாலும் விட மாட்டேங்கறாங்க, என்ன கொடுமை போங்க! அப்புறம் நம்ம வெறும்(வெல்லம் போட்ட) அநன்யா என்னோட ஃபோட்டோ ஒண்ணு கேட்டிருக்காங்க. எதுக்குனு கேட்கிறீங்களா? லேட்டஸ்டா, அவங்க ரங்க்ஸ் நம்ம உளவுப் படையிலே குண்டர் படைத் தலைவராச் சேர்ந்திருக்கார். தக்குடு ரொம்பவே துரோகம் செய்யவே அவனை நீக்கிட்டேன். இவர் பாருங்க சேர்ந்ததுமே என் படத்தைக் கேட்டிருக்கார். பூஜை பண்ணி, காவடி எடுத்து, அலகு குத்திண்டு, தீச்சட்டியும் ஏந்தி, அடுத்து என்னனு கேட்டுட்டு இருக்கார். அதுக்காகப் போட்டிருக்கேன். பாருங்க. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!
அநன்யா அக்கா, சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன் பாருங்க, இந்தப் படம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா??
//நல்ல நகைச்சுவையான பதிவு
ReplyDelete//வெறும்(வெல்லம் போட்ட) அநன்யா//
அது என்ன வெறும் அநன்யா???
//ரங்க்ஸ் நம்ம உளவுப் படையிலே குண்டர் படைத் தலைவராச்//
ரங்கஸ் அவ்ளோ குண்டா???
மிக நல்ல பாடல்
//
படம் ஜோர் மாமி.. உங்க குண்டர் படைத்தலைவர் சாரி, தொண்டர் படைத்தலைவர் கண்ல ஒத்திண்டாச்சு, ஸ்டூடியோல குடுத்து, என்னமோ டச்சப்ஸ் பண்ணி ஆளுயர கட்டவுட் பண்ணச்சொல்லப்போறாராம். சாயந்திரமே ஸ்பெஷல் பூஜைக்கு ஏற்பாடு பண்ணியாச்சு. வாத்தியாரை வெச்சுண்டு. ஆத்துல ஃபோட்டோ பிரதிஷ்டை எல்லாம் ஆகணும்.
ReplyDeleteமாமியின் அருளே அருள்! அருளே அருள்! ஜெய் ஸ்ரீ கீத்தானந்த மயி!
கீத்தா மாமி முன்னெல்லாம் போடில ஐஸ் பாய் விளையாடுவோம். ஏய் வாப்பா ஐஸ் பாய் வெளையாடலாம்ன்னு ஒவ்வொரு வீட்டாப்போயி பிள்ளைகளை கூட்டிண்டு வர்றது. சில வருஷத்துக்கு முன்னாடி தான் அது eye - spy ன்னு தெரிஞ்சுண்டேன். அருமையான நிகழ்வு. ரசித்து சிரித்தேன். தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDeleteதலைப்பின் வாலாக வந்த கதை சுவாரஸ்யம்:))!
ReplyDeleteபடம் கேட்ட அநன்யா வாழ்க!
இல்லைன்னா எங்களுக்குக் காணக் கிடைச்சிருக்குமா:)?
வாங்க தாத்தா,முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. ரங்க்ஸ் குண்டர் தான்னு அவரே ஒத்துக்கிட்டாராமே, அநன்யா தான் சொன்னாங்க. குண்டரைப் பின்னே எப்படிச் சொல்றது?
ReplyDeleteஹிஹிஹி நன்னிங்கோ அநன்யா அக்கா. நன்னியோ நன்னி!பூஜை எல்லாம் நல்லா இருக்குங்க.
ReplyDeleteஅப்புறம் அது eye spy யா இல்லாட்டி I spyயா?? ஹிஹிஹி, ஒரு சின்ன சந்தேகம்!
ReplyDeleteவாங்க ரா.ல. இந்தப் படம் எல்லாம் மூணு வருஷம் முன்னாடியே காட்டியாச்சே. அப்புறமாத் தேடி எடுத்து லிங்கறேன்.
ReplyDeleteமாதா கீதானந்தமயீகி ஜெய்!!!
ReplyDeleteகண்ணன் கதையும், இந்தக் கட்டுரையும் படித்தேன். இரண்டும் அருமை. சாட் பூட் திரி, ஜஸ்பாய் எல்லாம் நாங்களும் விளையாடி இருக்கின்றேம். நல்ல நிறைவான புகைப் படம்.
ReplyDeleteஹை இந்த வசனம் நல்லாயிருக்கு. எப்ப இருந்து? இருங்க நானும் ஒரு தரம் சொல்லிக் கொள்கின்றேன்.
ஜெய் ஸ்ரீ கீத்தானந்த மயி!
மாமி,
ReplyDeleteஅது Eye-Spy தான்! செக் பண்ணியாச்சு கேட்டேளா?
;-))))))) குஸ்தி தலைவி ;))
ReplyDeleteஹிஹிஹி, அமைதிச் சாரல், வாங்க, நன்னி ஹை!
ReplyDeleteவாங்க பித்தனின் வாக்கு,
ReplyDeleteஐஸ்பைக்குத் தான் இப்போ எனக்கும் அநன்யாவுக்கும் பட்டி மன்றம் நடக்குது! :)
நீங்க என்னடான்னா ஐஸ்பாய்னு சொல்லிட்டுப் போயிட்டீங்க! :)))))))))))
அநன்யா கேட்டேளா, அது I spy you அப்படினு சொல்றாங்க, ! நீங்க சொல்றது இல்லையாக்கும் அது!
ReplyDeleteவாங்க கோபி, இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?? :P
ReplyDelete:-)))))))))))
ReplyDeleteஅப்பத்தான் குஸ்தி ஆரம்பிச்சதா?:)))
ReplyDeleteஇது நான் டூவின் டஸ்கர் நு படிச்சமாதிரி இருக்கு:)) தமிழ்ல அப்படித்தான் எழுதி ரெண்டு யானை படம் போட்டிருக்கும்பா!! 6 வயசுக்கு மேல தான் அது ஓஹோ twin tusker ஆ இருக்குமோனு தோனித்து.
அட!! யரோ இந்த திலகவதியார்!! அந்த கால விஜய குமாரி?
ஆனாலும் தொ(கு)ண்டர் படை தலைவரிடம் கருணைகாட்டி இருக்கலாம்.இப்படி நார் நாரா அலகும் குத்தி ... பாவம்ப்பா!
திவா, என்ன இது சிரிப்பு?? :P
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, ஹிஹி, விஜயகுமாரி?? ம்ஹும், எல்லாரும் மு.மு.னு சொல்லுவாங்க, நீங்க மாத்திச் சொல்றீங்க? :P:P:P
ReplyDeleteஅப்புறம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தொண்டர்கள் எல்லாம் இப்படித் தான் அலையணுமாக்கும்! :P
நல்ல வேளை நான MRS AND MR Bachchan மாதிரினு சொல்ல வந்தேன். அலகு மனக்கண் முன்னால வந்து அப்படி இப்படின்னு பூச்சாண்டி காமிச்சதாக்கும்:)))))))))))))) முதுகுல வேற டின் இல்லை:) ஓடிடறேன்ப்பா
ReplyDelete@ஜெயஸ்ரீ, ஹெஹெஹெ, அதுவும் சொல்லி இருக்காங்க. :P:P:P அப்புறம் தொண்டர்கள் தானே அலகு குத்திக்கணும், நாம பார்க்கத் தானெ போறோம்? :)))))
ReplyDeleteஅட நீங்கவேற புரியாம பேசிண்டு. எம் தலைவியை இப்படி ஹிந்தி ஆளு வச்சா உவமானம் காட்டற இந்தி வெறிச்சினு( வெறியனோட female gender என்னப்பா? ) பிடுச்சு தன் அலக பிடுங்கி சதக்.. சதக்... கிச்சங்க்... கிய்ங்க்.. நு தொண்டர் படை எனக்கு குத்திட்டா.see பயங்கள் பலவிதம் :)))
ReplyDelete//"அது குஸ்தி கேர்ள் இல்லை, Who is the Girl(ஹூ இஸ் த கேர்ள்) அப்படினு". //
ReplyDeleteஎனக்கு சிரிச்சு மாளலை.
// பூஜை பண்ணி, காவடி எடுத்து, அலகு குத்திண்டு, தீச்சட்டியும் ஏந்தி, அடுத்து என்னனு கேட்டுட்டு இருக்கார்.//
ReplyDeleteமிச்சத்தை நா சொல்றேன்.
தீ மிதிச்சு, அங்கப்பிரத்ட்ஷணம் செஞ்சு, மண் சோறு தின்னு, மொட்டை அடிச்சு(யாருக்கு?), சாமியாடி, ஆத்தாவை மலையேத்தி...
யப்பா! சொல்லவே கண்ணைக் கட்டுதே!!!
ஜெயஸ்ரீ, அது!!! அந்த பயம் இருக்கணுமாக்கும், நம்ம தொண்டர்கள் கிட்டே! இந்தி அரக்கினு இல்லை சொல்லுவாங்க?? :)))))))
ReplyDeleteவாங்க நானானி, ரொம்ப நாளாச்சு இந்தப்பக்கம் வந்து! ஹிஹிஹி, அன்னிக்கு எல்லாரும் சிரிச்சதை விடவா??/ :P:P:P இன்னும் மறக்கலைனா பாருங்க! :D
ReplyDelete//தீ மிதிச்சு, அங்கப்பிரத்ட்ஷணம் செஞ்சு, மண் சோறு தின்னு, மொட்டை அடிச்சு(யாருக்கு?), சாமியாடி, ஆத்தாவை மலையேத்தி...//
ஹிஹிஹி, இதுக்கெல்லாம் தனியா ஒரு நாள் வச்சிருக்கேனாக்கும். அன்னிக்குத் தொண்டர்கள், தொண்டிகள் எல்லாரும் இதெல்லாம் செய்வாங்க! கொஞ்சம் பொறுங்க! :D
ஹார்வே ட்வின் டஸ்கர் துணிகள் வாங்கி அணிந்து மகிழுங்கள்!
ReplyDelete80 years munnadi neenga schoolla vilayaatiya vilaiyaattai yabagam vachchundu sonna vitham arumai geetha pati!...:)
ReplyDelete