சானியா-சோயப் திருமணம் செய்து கொண்டதுமே நாட்டின் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அவங்களைத் துரத்தித் துரத்திச் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சிச் செய்தி சேகரிப்பாளர்களும் இனி என்ன செய்வார்கள்? அடுத்து எந்தப் பிரபலம்னு பார்த்துட்டே இருக்கணும், பாவம் இல்லை??? அவங்க அவங்க திருமணம் அவங்க அவங்க தனிப்பட்ட விஷயம் என்பது நம் நாட்டில் இப்போல்லாம் மறந்தே போச்சு.
இப்போப் பாருங்க, தமிழ்நாட்டின் தலையாய பிரச்னை ஒண்ணும் தீர்ந்து போச்சு. நடிகை ரம்பா திருமணம் செய்து கொண்டாராம். ஆஹா, எவ்வளவு பெரிய தீர்வு??? அடுத்து இப்போதைய கவலை, சுஷ்மிதா சென், வாசிம் அக்ரமைத் திருமணம் செய்துக்கப் போறாரா இல்லையா என்பதே! பாவம் பத்திரிகைக்காரங்க. இதெல்லாம் சேகரிக்க வேண்டி இருப்பதால் தான் அவங்களுக்கு மத்த விஷயங்கள் சேகரிக்க முடியலை போல! ரொம்பப் பாவம் இல்லை????
பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் எந்தப் பத்திரிகையும் சரி, தொலைக்காட்சியும் சரி சளைக்கவே இல்லை. நாட்டின் விலைவாசி உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் என்ன?? எங்க தெருவிலே(தெருவா அது??) காஸ் சிலிண்டர் கொண்டு போடுபவர் ரூ 20/- கொடுத்தால் தான் சிலிண்டரைக் கொண்டு வருவேன் என்று சொல்கிறார். அதைச் சொன்னால் மட்டும் என்ன?? உடனேயே நகராட்சி தெருவா போட்டுக் கொடுக்கப் போகுது??
நகராட்சிக் கமிஷனரிடம் விண்ணப்பம் வைத்தால் இன்னும் இரண்டு வருஷங்களுக்குப் போட முடியாதுனு சொல்றார். பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர்க் குழாய்த் திட்டம் முடியணுமாம். அம்பத்தூரில் உள்ள எல்லாத் தெருக்களிலும் இவை எல்லாம் போட்டு முடிச்சாச்சு. எங்க தெருவைத் தவிர. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குமே, வீட்டினுள் புகுந்துடுமே என்றால், விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரம் செய்துட்டு, எங்கேயானும் போய்த் தங்கிக்குங்க என்று கமிஷனர் சொல்கிறார். கமிஷனரைப் பேட்டி கண்டவர்கள் அனைவரும் பெண்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க, ஒதுக்கீடு கொடுக்கப் போராடும் கட்சிகள் எதுவும் இந்த விஷயத்தில் வாயே திறக்கலை.
என்றாலும் விடாமல் நாங்கள் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவோமில்ல??? நாளைக்கு நேரம் இருக்குமா, வர முடியுமா தெரியலை. மத்தியானங்களில் மின்சாரமே இருக்கிறதில்லை. சாயங்காலம் அதிக நேரம் இணையத்தில் உட்கார முடியாது. அதனால் முன் கூட்டிய வாழ்த்துகள்.
அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் புத்தாண்டில் அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும், நிம்மதியும் பொங்கவும் வாழ்த்துகள். பிரச்னைகள் தீரும்னு சொல்லலை, ஆனால் அதைத் தாங்கும் வல்லமையைத் தருவாள் பராசக்தி!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteபிரச்சினைகள் தீராது.. ஆனால் பழகிப்போய்டும்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஒரு பிரச்சினை போனா இன்னொன்னு! கிடக்கட்டும். புதிய ஆண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க எல்கே, புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteவாங்க மஞ்சூர் ராஜா அவர்களே, நன்றி.
ReplyDeleteசிபி, நன்றி.
ReplyDeleteவாங்க திவா, பிரச்னைகள் இல்லாட்டி வாழ்க்கையிலே என்ன ருசி இருக்கும்?? அது பாட்டுக்கு அது! :D
ReplyDeleteமனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் தலைவி ;-)
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகீதா, இதைவிட அழுத்தமா நம் நாட்டு அவலத்தைச் சொல்ல முடியாது. பொறுமைக்குப் பூமாதேவின்னு சொல்கிறா மாதிரி, இன்னும் பொறுமையா இருக்கிறவங்க உங்க தெரு மனிதர்களாத்தான் இருக்கணூம்.
ReplyDeleteஎல்லாஅ இன்னல்களையும் கடந்துவர இந்தப் புத்தாண்டிலாவது வழி பிறக்கட்டும். எங்கள் மனம் நிறைந்த சித்திரை ஆண்டு வாழ்த்துகள்.
அட எங்க ஊர்லே 3 வருஷமா இதே தொல்லை. நாங்க சும்மா இருக்கோமே! பாதாள சாக்கடை எல்லாம் 3 மழை பாத்தாச்சு!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருஷமாவது உங்க ஊருக்கு கரண்டு ஒழுங்கா வரட்டும்!..:)
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹிஹி, திவா, கொஞ்சம் ஆறுதல், நம்மை மாதிரியே மத்தவங்களும் கஷ்டப் படறதைப் பார்த்து! :P:P:P என்ன போங்க! உங்க கடலூர் பேப்பரிலே வராத நாள் இல்லை, ஆனால் இதெல்லாம் வரதில்லை! :))))
ReplyDeleteதக்குடுபாண்டி, கரண்ட் இங்கே மட்டுமில்லையாக்கும், உங்க ஊரிலேயும் தான்! அங்கே எல்லாம் ஆறு மணி நேரம். இங்கே இரண்டு இரண்டு மணியாக மூணு முறை! :))))))))
ReplyDeleteபாகி, இன். நன்றிங்க
ReplyDeleteபித்தனின் வாக்கு, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் சார்பில் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
கோபி, நன்றிப்பா, சென்னைக்கு அடுத்த முறை வரச்சே இங்கேயும் வாங்க.
ReplyDeleteஜீவி சார், ரொம்ப நன்றி வரவுக்கும், வாழ்த்துக்கும்,
வாங்க வல்லி, பொறுமைனு சொல்றதை விட, மரத்துப் போச்சுன்னா, சரியா இருக்குமோ?? என்னவோ போங்க, நேத்திக்கு ஹிந்துவிலே இருந்து ரிப்போர்ட்டர் வந்திருந்தார். வரவழைச்சோம். வந்து பார்த்துட்டுப் படங்கள் எடுத்துட்டுப் போயிருக்கார், நாங்க எடுத்த படங்களும் கொடுத்திருக்கோம். முதலமைச்சரின் தனிக் கவனத்திற்கும் இரு முறை மனு கொடுத்தாச்சு! :(
ReplyDeleteஅடடா, விலை உயர்ந்த பொருளே வச்சுகாதீங்கனு சொல்லாம விட்டாரே. அம்பத்தூர் தண்ணீர் தேங்கும் அவலத்தை நான் அங்கே வேலைக்கு வரும் நேரங்களில் அனுபவித்திருக்கிறேன். Small scale Ind என்ற நிலை மாறி Big scale ஆகி விட்ட பின்னும் மாற்றங்கள் பெரிதாக இல்லை என்று நினைக்கும் போது ...
ReplyDeleteமின்சாரத் தடை ? இது ஏன்? தொழிற் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குடியிருப்புகளை இருட்டடிப்பு செய்கிறார்களோ
விக்ருதி என்றால் மாற்றங்கள் என்று பொருளாம். நல்ல மாற்றங்கள் வர புத்தாண்டு நல வாழ்த்துக்கள். எங்க வீடு கனி காண வாங்க
http://www.virutcham.com/?p=1343
இன்றுதான் இந்தப் பதிவினைப் பார்த்தேன்...புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், மாமாவுக்கும். பிரச்சனையுடனேயே வாழ்வு நமக்கென்ன புதுசா?...எப்போதும் போல இருப்போம் :))
ReplyDeleteவாங்க விருட்சம், கனி கண்டு வந்தாச்சு, கை நீட்டம் தான் இன்னும் வந்து சேரலை, ஒரு கிலோ தங்கத்தில் பத்து காரட் வைரம் பதிச்சிருந்தாத் தேவலை! :)))))))
ReplyDeleteவாங்க மெளலி, ஆஹா, இந்தப் பின்னூட்டத்துக்காகவே ஜமாய்ச்சுட மாட்டோம்??? நன்றிப்பா. :)))))))
ReplyDeleteகாசு எவ்வளவோ பண்ணிக்கத்தான் பண்ணறா அரசியல்வாதிகள் எல்லாம். கொஞ்சம் மனச்சாக்ஷியோட இருக்க மாட்டாளா? 81 வயசு சித்தப்பா சொல்லறார்,இவாகிட்ட பேசறதுல ப்ரயோஜனம் இல்லை, நம்ப மரியாதையைக் காப்பாத்திக்கணும்னா பேசாம இருக்கவேண்டி இருக்குனு வருத்தப்பட்டார் நேத்து:((
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, என்ன செய்ய முடியும்?? உங்க சித்தப்பா சொல்வது முற்றிலும் உண்மை. கடைசியா தெருக்காரங்க கிட்டேயே பணம் வசூலித்துப் போடலாமோனு ஒரு எண்ணம். என்ன பிரச்னைனா எல்லாருமே சொந்த வீட்டுக்காரங்க இல்லை. சிலரால் கொடுக்கவும் முடியாது. அதான் யோசனை. பத்து வருடங்கள் முன்னால் அப்படித் தான் போட்டுக் கொண்டோம். இப்போவும் அது ஒரு எண்ணம் இருக்கு. பார்க்கலாம். :((((((((
ReplyDeleteகீதா Mam
ReplyDeleteஅடடா வந்தது தெரியாம போச்சே. சடார்னு காலிலே விழுந்து எழுந்து கை நீட்டி இருப்பேனே.
வெத்தலை பாக்கு குங்குமம் எல்லாம் போகும் போது மறக்காம எடுத்துக் கொண்டீங்க தானே.
வருகைக்கு நன்றி