எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Sunday, April 11, 2010
ஆஞ்சநேயரின் காலில் மிதிபடும் பெண் யார்?
அனுமன்
சனைச்சரன் அனுமனைப்பிடிச்சதையும், அனுமனால் சனைச்சரன் பட்ட பாட்டையும் இங்கே நம்ம திராச அவர்கள் விரிவாக எழுதி இருக்காங்க. (சார், ஓசியிலே விளம்பரம் கொடுத்தாச்சு) அங்கே போய்ப் படிங்க எல்லாரும். அதிலே சனைச்சரன் அனுமன் காலைப் பிடிச்சதைப் பத்தியும் எழுதி இருக்கார். சனைச்சரனாக அனுமன் காலைப் பிடித்துக் கெஞ்சியும் விடவில்லையாம் ஆஞ்சநேயர். காலில் போட்டு மிதிக்க ஆரம்பித்தாராம். உடனேயே தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக்கொண்டானால் சனைச்சரன். என்றாலும் அவனுடைய தந்திரம் புரிந்து, பெண்ணாக இருந்தாலும், தன் மனம் மாற்றமடையாது என்பதை நிரூபிக்கவும் பெண்களைக் கண்டும் தன் மனம் நைஷ்டிகப் பிரம்மசரியத்திலிருந்து சிறிதும் வ்ழுவாது எனவும் நிரூபிக்கவே பெண்ணாக மாறியபோதும், பெண்ணாய் இருந்தாலும் இது சனைச்சரனே என்பதால் காலில் போட்டு அநுமன் மிதிக்கிறாராம். இது சமீபத்தில் நான் பரோடா போயிருந்தப்போ அங்கே இருந்து டகோர் துவாரகா போனோம்.
இது நம்ம துளசி இந்தச் சிற்பத்தைப் பார்த்துட்டு வியப்புடன் எழுதி இருந்த பதிவு. இங்கே பார்க்கவும்.
டகோர் துவாரகை பற்றி ஏற்கெனவே எழுதி உள்ளேன்.
இங்கே
இங்கேயும்
இம்முறை செல்லும்போது ஆட்டோகாரர், பரோடாவில் இருந்தே 500ரூக்கு டகோர் கூட்டிச் செல்வதாய்க் கூட்டிச் சென்றார். வீட்டு வாசலிலேயே ஏறி, வீட்டு வாசலிலேயே இறங்கியாச்சு. கிட்டத்தட்ட எண்பது கிலோமீட்டர் இருக்கும். எங்களுக்கே ஆச்சரியம். ஆட்டோக்காரர் வருஷத்துக்கு ஒரு வண்டி வாங்கறாராம். மூன்று வண்டிகளுக்கு மேல் வைத்திருக்கிறார். என்றாலும் குஜராத்தில் ஆட்டோவில் போக இரண்டு அல்லது மூன்று கிமீ தூரம் என்றால் ஒரு நபருக்கு ஐந்து ரூபாயே, கவனிக்கவும் ஐந்து ரூபாய் தான் வாங்கறாங்க.
டகோரில் இம்முறை ஜ்யோதிஷ் மடத்துக்குப் போனோம். இது ஆதிசங்கரர் பத்ரிக்கு அருகே உள்ள ஜ்யோதிஷ்மடத்தில் ஏற்படுத்திய பீடத்தின் கிளையாகும். நம்ம ஊர் ஞாநாநந்தகிரி, அவர் சீடர் ஹரிதாஸ்கிரி எல்லாம் இங்கே இருந்து வந்தவங்களே. அருமையான கோயில். சுரங்கப்பாதை மாதிரி வடிவமைத்து மேலே ஏறி ஈசனையும் கீழே பாதாளத்துக்குப் போய் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவையும் தரிசிக்குமாறு செய்திருக்கிறார்கள். மூலஸ்தானத்தில் சாரதை. இங்கேயும் ஆஞ்சநேயர் இதே போல் காலில் பெண்ணை மிதித்த வண்ணமே காட்சி அளித்தார். எனக்குக்கொஞ்சம் சந்தேகம் ஆகவே அங்கே இருந்த அர்ச்சகர் (உண்மையில் அவரும் துறவியே) அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவர் மேற்சொன்ன கதையைத் தான் கூறினார். பெரும்பாலும் வடமாநில நகரங்களிலேயே இம்மாதிரி வைப்பார்கள் எனவும், குஜராத்தில் ஆஞ்சநேயர் காலில் பெண்ணை மிதிக்கும் காட்சியுடன் கூடிய சிலைகளை அதிகம் காணமுடியும் எனவும் சொன்னார். இதைத் தவிரவும் ஜுனாகட் மாவட்டத்தின் கொடினார் என்னும் ஊரின் பிரசித்தி பெற்ற அம்மனும் முதலை வாகனத்தில் அங்கே காட்சி அளித்தாள். இந்த அம்மனை குஜராத்தில் மட்டுமே காணமுடியும். படம் எடுக்க அநுமதி இல்லாததால் படம் எடுக்க முடியவில்லை. கூகிளில் கொடிநார் அம்மன் கிடைக்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான விளக்கம்.
ReplyDelete"" நம்ம ஊர் ஞாநாநந்தகிரி, அவர் சீடர் ஹரிதாஸ்கிரி எல்லாம் இங்கே இருந்து வந்தவங்களே "" ??!!! அப்படியா ?
ReplyDeleteஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் மங்கள்வாடில தங்கினப்போ ஞானானந்த ஸ்வாமி வந்து பண்டரிபுரம் போக சொன்னதா அவர் சொல்லி கேட்டிருக்கேன்.ஞானானந்தகிரி ஸ்வாமி எவ்வளவு வயசானவர், எந்த ஊர், எங்க தீக்ஷைனு யாருக்குமே தெரியாதுன்னு தான் ஹரிதாஸ்கிரி ஸ்வமிகளோட discourse ல கேட்டதா ஞாபகம். நிறைய தடவை ப்த்ரி போயிருக்கார், இந்தியா முழுக்க எப்பவேணாலும் எங்கேயும் இருக்கும் சித்தர், சித்தலிங்க மடத்தில் தவம் செய்தவர், மார்க்கண்டேய ஸ்வாமி போன்றவர்னு குருஜி தன் குருநாதரை சிலாகித்து சொல்லுவார். குருஜியின் சங்கீர்த்தன் குரு பக்தி ரெண்டுமே நெகிழ வைக்கும் . எங்களுடைய ஆன்மீக பாதையின் நண்பர்களில் இவரும் ஒருத்தர்.ராதே க்ருஷ்ணா, மீராவின் ஹே கோவிந்த ஹே கோபால என்று அவர் பாடுவது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
நன்றி எல்கே,
ReplyDeleteஆமாம் ஜெயஸ்ரீ, ஆதிசங்கரரின் சீடர்களில் கொஞ்சமும் ஞாநமே இல்லாதவர் என அனைவராலும் அறியப் பட்ட கிரி என்னும் சீடரே தோடகாஷ்டகத்தால் தன் குருவைத் துதித்து அதன் மூலம் தோடகர் என்னும் பெயர் பெற்றார். ஜ்யோதிஷ் மட் என்னும் பீடத்தின் முதன்மை குருவாக தோடககிரி என்னும் நாமத்தோடு ஆதிசங்கரர் அவரை நியமித்தார். இவருடைய சீட பரம்பரையினர் அனைவருக்குமே கிரி என்னும் பெயர் உண்டு. ஞாநாநந்தர் ஜ்யோதிஷ் மடத்திலேயே பலவருடங்கள் இருந்ததாயும் கேள்விப் பட்டிருக்கேன். பின்னர் அவர் குருவின் ஆணை மூலம் தென்னிந்தியா வந்து தமிழ்நாட்டில் தபோவனம் நியமித்ததாயும், அதன் மூலம் நாம சங்கீர்த்தனத்தைப் பிரபலப் படுத்தும் முயற்சி துவக்கப் பட்டதாயும் சின்ன வயசிலே கேள்விப் பட்டிருக்கேன். இந்தத் தோடகர் பற்றி ஆசார்ய ஹ்ருதயத்தில் ஒரு சின்ன அறிமுகக் கட்டுரையும் எழுதினேன். திறக்க முடியுதா பார்த்துச் சுட்டியும் தரேன். பாருங்க.
ReplyDeleteசிருங்ககிரியா இங்கே போய்ப் பாருங்க.
ReplyDeleteநாம சங்கீர்த்தனத்துல தோடகாஷ்டகம் மிக முக்கியம். நாம சங்கீர்த்தனம் பரவ முக்கிய காரணம் ஹரிதாஸ் கிரியும் அவரோட குருவும்தான்
ReplyDelete"சனைச்சரன்" கதை நல்ல விளக்கம். மிக்க நன்றி.
ReplyDeleteஅட! சனியனா அது!!!!!
ReplyDeleteபோனஸா, முதலை வாகனத்துக்கும் விளக்கம் கிடைச்சிருச்சு எனக்கு!!
குந்தவர்மாவின் கொசுவத்திப் பதிவில் படம் போட்டுருக்கேன் பாருங்க:-)))))
கதாநாயகன் பொம்பளை வேஷம் போட்டுத் தப்பிக்கும் ஸீனுக்கு சனிதான் முன்னோடியா:-)))))
வாங்க மாதேவி, நன்றிம்மா.
ReplyDeleteதுளசி, அம்பாளின் பலவித ரூப அவதாரங்களில் இந்தக் கொடிநார் அம்மனும் ஒன்று எனச் சொல்கின்றனர். அம்மன் பற்றிய கதை கொஞ்சம் மறந்துடுச்சு, பக்கத்திலே இருக்கும் குஜராத்தியரிடம் கேட்டுச் சொல்றேன். கோல்ஹாப்பூரில் மஹாலக்ஷ்மி ஆமை வாகனத்தில் இருப்பாள் எனக் கேள்வி. பார்த்ததில்லை. அதுக்கும் காரணம் உண்டுனு சொல்றாங்க. அதையும் ஆதாரபூர்வமா நிச்சயம் செய்துட்டுச் சொல்றேன்.
ReplyDeleteபயத்தை தெளிவிச்சிட்டீங்க கீதாம்மா.இனி அனுமனை நேரில் பாத்தாகூட பயம் இருக்காது. :-)))
ReplyDeleteசாரல், அநுமனைப் பார்த்து பயமா???? ஆச்சரியமாத் தான் இருக்கு, போகட்டும், அநுமன் நேரிலேயே கூடிய சீக்கிரம் உங்களுக்கு தரிசனம் கொடுத்து உங்கள் பயத்தைப் போக்கி மகிழ்வைத் தர வாழ்த்துகள். அநுமனைப் போல் துணை வேறு யாரும் இல்லை, என் அநுபவத்தைப் பொறுத்த வரை!
ReplyDeletenalla vilakkam geetha amma.
ReplyDelete//நாம சங்கீர்த்தனத்துல தோடகாஷ்டகம் மிக முக்கியம்// ?????? thodakastakam naamasankeerthanathukkula varumaa geetha madam?? i have the doubt. konjam sonnaa santhosham. I think he is confused with Thodaiyamangalam and Thodakastakam...am i right???
ReplyDelete@thakkudu
ReplyDeleterightu chinan confusion
ஹிஹிஹி, தக்குடு, தோடகாஷ்டகம் அர்த்தத்தோட போட்டு சந்தேகத்தைத் தீர்க்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே நீ வந்துட்டே! :P:P:P தோடையமங்களம் பத்தி நீ ஒரு பதிவு போட்டுடு, சந்தேகம் போயிடும்!
ReplyDelete//i have the doubt. konjam sonnaa santhosham. I think he is confused with Thodaiyamangalam and Thodakastakam...am i right???//
ReplyDeleteஅதே, அதே! சபாபதே!
ஆச்சரியமான தகவல்!
ReplyDeleteஞானானந்தரும் கதிர்காம ஸ்வாமிகளும் ஒண்ணா இலங்கையிலேந்து வந்தவங்க.(அதுக்கு முன்னே எங்கே எவ்வளவு வர்ஷம் எல்லாம் தெரியாது.) சீர்காழி வந்த பின் கதிர்காம ஸ்வாமிகளால் மேலே செல்ல முடியாமல் ஏதோ தடுக்க அங்கேயே தங்கிவிட்டார். ஞானானந்தர் திருக்கோவிலூர் போய் சேர்ந்தார்.இப்படி கேள்வி பட்டு இருக்கேன்.
வாங்க மெளலி, இரண்டு வார்த்தையும் எங்கே இருந்து காப்பி, பேஸ்ட் பண்ணினீங்க??
ReplyDeleteதிவா,
ReplyDeleteஅப்படியா?? ஞாநாநந்தரோட ரிஷிமூலம் அறியறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் அவர் ஜ்யோதிஷ் மடத்தில் இருந்ததாய் ஹரிதாஸ்கிரி சொல்லிக் கேட்டிருக்கேன். கதிர்காமத்திலிருந்து வந்தார் என்பது எனக்குப் புதிய செய்தி. நன்றி. நாம சங்கீர்த்தனத்தைப் பரப்பணும்னு அவரோட குருவின் ஆக்ஞை என்பதும் ஹரிதாஸ்கிரி சொல்லிக் கேட்டதே. நான் ஞாநாநந்தரைப்பார்த்தது இல்லை. ஹரிதாஸ்கிரியைத்தான் பார்த்திருக்கேன். அவர் பிரசங்கங்கள், பஜனைகள் நிறையக் கேட்டும், பார்த்தும், பங்கு பெற்றும் இருக்கேன்.
//தோடகாஷ்டகம் அர்த்தத்தோட போட்டு சந்தேகத்தைத் தீர்க்கலாம்னு நினைச்சேன்// இவ்ளோ அர்த்தம் இதுல இருக்கா?னு தோடகரே ஆச்சர்யப்படற மாதிரி நீளமானா இருக்கும் உங்க விளக்கம்!..:) எழுதுங்கோ படிக்க வரோம்.
ReplyDelete