எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 31, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

கரவீரபுரத்தை நோக்கி!

சில நாட்களில் காவி உடைகள் தரித்த இரு இளைஞர்கள், தங்கள் நீண்ட குடுமியைத் தூக்கிக் கட்டிய வண்ணம் இரண்டு துறவிகளைப் போல் குண்டினாபுரம் வந்து சேர்ந்தனர். ஒரு வைதீக பிராமணன் போல மாறி இருந்த உத்தவன் அவர்களை வரவேற்று, கெளஷிகனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அவர்களை மிகவும் மரியாதையுடனும், உற்சாகத்துடனும் கெளஷிகன் வரவேற்றான். அவர்களுக்கு உணவளித்து உபசரிக்கவென இளவரசி ருக்மிணியே அங்கே வந்துவிட்டாள். அவர்கள் வந்திருக்கும் செய்தி கிடைத்ததுமே ருக்மிணியின் இதயம் எழும்பிக் குதித்தது. கண்ணனுக்கும், பலராமனுக்கும் உணவளிக்கும்போது கண்ணனின் முகத்தையே பார்த்தாள் ருக்மிணி. அந்த முகத்தில் தெரிந்த மந்தகாசம், அவளை அன்புடனும், கருணையுடனும், நம்பிக்கை அளிக்கும் வண்ணமாகவும் பார்த்த அந்தப் பார்வை அவள் மனதை விட்டு நீங்க மறுத்தது. கண்ணனின் இளமை பொங்கும் முகம் அவ்வண்ணமே அனைவரையும் பார்த்து அனைவருக்கும் வாக்குறுதியைக் கொடுத்தது என்பதையும் அவள் புரிந்து கொண்டாள். தன்னைப் பார்த்துத் தன்னோடு பழகும் ஒவ்வொரு நபருக்கும் அவர்களோடு மட்டுமே பழகுவதாய் ஒரு பிரமையை அந்தப் பார்வையும் சிரிப்பும் ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் கண்ணன் தங்களுக்கு மட்டுமே சொந்தமானவன் என நினைக்கும் வண்ணம் இருந்தது. ஆனாலும் இப்போது ருக்மிணி பலவிதமான கட்டுக்காவல்களையும், தன் உடன்பிறந்த அண்ணனின் எதிர்ப்பையும் மீறித் தனக்குச் செய்திருக்கும் உதவிகளை அறிந்த கண்ணன் அவளுக்கு மிகவும் நன்றி செலுத்தினான் என்றால் மிகையில்லை.

கெளஷிகன் கண்ணனிடமும், பலராமனிடமும் மதுராவின் நிலைமை பற்றியும், வைவஸ்வதபுரியில் இருந்து அவர்கள் சாந்தீபனியின் மகனை அழைத்து வந்த விபரங்கள் பற்றியும் கேட்டறிந்தான். வாய் திறவாமல் அனைத்தையும் கேட்ட ருக்மிணி அந்த நாககன்னியின் மேல் கோபமும், வெறுப்பும், பொறாமையும் கொண்டாள். எனினும் அவள் கண்ணனைத் திருமணம் செய்து கொள்ளாதது அவளுக்கு ஓர் ஆறுதலையும் கொடுத்தது. என்றாலும் கெளஷிகன் விடவில்லை. ஏன் அந்த நாககன்னியைத் தடுத்து நிறுத்தி உன்னோடு அழைத்துவரவில்லை எனக் கண்ணனைக் கேட்க, ஒரு நாககன்னியைத் திருப்திப் படுத்துவது இயலாத ஒன்று எனக் கண்ணன் பதில் சொன்னான். மேலும் அவள் எப்போதும் தன் அன்னையின் நினைவாகவே இருப்பாள் என்றும் சொன்னான். கெளஷிகனுக்கு இப்போது தன் பேத்தியைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வந்தது. “ஒருவேளை அவளுக்குத் தாயே இல்லை எனில்?” என்று கிருஷ்ணனிடம் கேட்டுவிட்டுக் கோபத்தில் சிவந்த தன் பேத்தியின் முகத்தை ஜாடையாகப் பார்த்துக்கொண்டான். கண்ணனும் கிழவனின் சீண்டலை ரசித்தவண்ணமே, “ அப்போ அவள் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்திருப்பாள். இல்லையா? எல்லா அழகான பெண்களுமே அப்படித்தானே?” என்ற வண்ணம் கிழவனையும், ருக்மிணியையும் பார்க்க கெளஷிகன் அடக்க மாட்டாமல் சிரித்தான். பின்னர் தன் பேத்தியைப் பார்த்து, “அது உனக்காகவே சொல்லப் பட்டது” என்றவன் தொடர்ந்து, “ உன்னை ஒரு முட்டாள் எனக் கண்ணன் ஒரு போதும் நினைக்கமாட்டான். அவ்வாறு அவனை நினனக்க வைக்க உன்னால் இயலாது.” என்றான். அதற்கு பலராமன், “கண்ணனுக்குத் தேவை அவன் விருப்பங்களை, அவன் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய உதவும் ஒரு மனைவியே!” என்றான்.
”எனில் அது ஒருகாலும் நடவாத ஒன்று” என கெளஷிகன் கூற, கண்ணனோ, “பார்க்கலாம், ஒருவேளை கிடைத்தால்?” என்று கூறினான். அவ்வளவில் பேச்சு நிற்க கெளஷிகன் தான் ஏற்கெனவே செய்த ஏற்பாடுகளின்படி குண்டினாபுரத்தின் சில பிராமணர்களோடு கண்ணனும், பலராமனும் நகரை விட்டுப் பாதுகாப்பாகச் செல்ல வேண்டினான். ஒரு பெரிய வண்டியில் கரவீரபுரத்தை நோக்கிச் சென்ற சில பிராமணர்களோடு, கண்ணனும், பலராமனும் சேர்ந்துகொண்டனர்.

கண்ணனும், பலராமனும் சஹ்யாத்ரி மலைத் தொடர் தெரிய ஆரம்பித்ததுமே கூட்டத்தில் இருந்து பிரிந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் பயணத்தை மஹேந்திர மலை நோக்கித் தொடங்கினர். அழகு கொஞ்சும் பாதை. இயற்கை அன்னை தன் பூரண எழிலை அங்கே காட்டிக்கொண்டு காட்சி அளித்தாள். செல்லும் வழியில் தென்பட்ட கிராமவாசிகள் இரு இளைஞர்களின் மலர்ந்த முகங்களைக் கண்டதுமே அன்போடும், பரிவோடும் உபசரித்தனர். விண்ணைத்தொட்ட மலை முகடுகளின் மேல் உலவிய மேகங்களும், மேகங்கள் விலகும்போது தென்பட்ட சூரிய ஒளிக்கதிர்களும் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன. பச்சைக் கரை போல் தென்பட்ட மர வரிசைகள், கூட்டம் கூட்டமாகக் காட்சி அளித்தன. நடுவே போடப் பட்ட வெள்ளி ஜரிகைபோல தென்பட்ட அருவிகள். நீல நிற மலைத்தொடர்கள். கண்ணனின் நிறத்தோடு போட்டியிட்டாற்போல் காட்சி அளித்தது. கண்ணன் அனைத்தையும் நன்கு அனுபவித்தான் என்பது அவன் முகத்திலிருந்து தெரிந்தது.

பலராமன் சற்று நேரம் கண்ணனையே நோக்கியவண்ணம் நடந்தான். புன்னகையோடு கண்ணன் அவன் கேட்கப் போகும் கேள்விக்குக் காத்திருந்தான். “கண்ணா, உனக்கும், எனக்கும் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? நம் உறவினர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்தோடு சந்தோஷமாய்ப் பொழுதைக்கழிக்க, நாம் பார். முதலில் இடைக்குலத்தில் வளர்ந்தோம். தாய், தகப்பனோடு சேர வந்தும் சேர்ந்திருக்க முடியவில்லை. நாம் பிறந்த ஊரை விட்டு, தாய், தகப்பனை விட்டு, வளர்த்தோரைப் பிரிந்து, உறவினரையும் அன்புக்குரியவரையும் பிரிந்து, நாடோடியாகத் திரிகிறோம். உன்னைப் பார்த்தால் இதற்கு வருந்துபவன் போல் தெரியவில்லையே?” என்றான்.

கண்ணன் சிரித்தான். “அண்ணா, நாம் வாழ்க்கையை அதன் போக்கில் அநுபவித்து வாழவெனப் பிறந்திருக்கிறோம். அதன் முழுமையை நாம் உணர்ந்து வாழ்கிறோம். நம் உறவினரைப் போல் இருந்தால் இந்த மாதிரியான இடங்களைக் காணவோ, இம்மாதிரியான மனிதர்களோடு பழகவோ முடியுமா? எத்தனை இடங்கள்? எத்தனை மனிதர்கள்?” கண்ணன் வியந்தான். மீண்டும் கண்ணனையே உற்றுக் கவனித்த பலராமன், “கண்ணா, ராதையை, உன் உயிரான, அன்பான, உன் கண்ணின் கருமணியான ராதையை விட்டுப் பிரிந்து வந்திருப்பதில் உனக்குக் கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா? “

கண்ணன் சிரித்தான். “ராதையை நான் பிரிந்தேனா? எங்கே பிரிந்தேன்? அவள் என்னோடு என் கூடவே இருக்கிறாளே? என்னோடு வருகிறாளே? என்னுடனேயே என் உயிரில் கலந்து அவள் இருப்பதாலேயே நான் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்.” என்றான் கண்ணன்.

“கண்ணா, உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்னால். அல்லது நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. போகட்டும். நாம் மதுராவை விட்டுக் கோழைகள் போல் ஓடி வந்துவிட்டோமோ எனத் தோன்றுகிறது எனக்கு. அங்கேயே இருந்து எதிர்த்துப் போராடி இருக்கலாம் அல்லவா?”

Friday, May 28, 2010

காளஹஸ்தி கோயில் கோபுரமும், மக்களின் பீதியும்!

வட மாநிலங்களில் மன்னர்களின் அரண்மனைகள் பெரியவையாக இருக்கும். இன்றளவும் பல அரண்மனைகளைக் காண முடியும். அவற்றைப் பாதுகாத்தும் வைத்துச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும்படியாகச் செய்திருக்கின்றனர். அம்மாளிகைகளின் ஒரு பக்கத்திலே அவர்கள் வணங்கி வந்த கடவுளரின் கோயில்களும் காணப்படும். ஆகக்கூடி மாளிகைகளின் ஒரு அங்கமே கோயில்களாக இருந்திருக்கின்றன. ஆனால் தென்னாட்டிலோ எப்போது என்று சொல்ல முடியாத கால கட்டத்தில் இருந்தே கோயில்களே மன்னர்களின் புகழைப் பேசும் களங்கள். கோசெங்கட்சோழன் எழுப்பிய மாடக்கோயில்களுக்காகவே அவன் புகழை இன்றளவும் பேசுகிறோம். தஞ்சைப் பெருங்கோயிலோ ஆயிரமாண்டுகள் கடந்தும், ராஜ ராஜ சோழன் என்னும் சிவபாத சேகரனின் தொண்டைப் பேசுகிறது. இந்தக் கோயில்களை எல்லாம் இறைவனா கேட்டார்? இல்லையே! மன்னர்களே தங்கள் பக்தியின் மிகுதியால் எழுப்பிய கோயில்களே அவை எல்லாம். எந்த மன்னனும் சிற்பிகளையோ, ஸ்தபதிகளையோ வற்புறுத்தல் மூலம் இப்படியான அற்புதப் படைப்புகளைப் படைத்திருக்க முடியாது.

கோயில்களும், அவற்றின் மண்டபங்களும் பல வழிப்போக்கர்களுக்கும், சந்நியாசிகளுக்கும், யாத்ரீகர்களுக்கும் தங்குமிடங்களாய்ச் செயல்பட்டிருக்கின்றன. பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் எழும்போதெல்லாம் கோயிலின் உயரமான மண்டபங்களில் ஏறித் தம் உயிர்,உடைமைகளை மக்கள் காப்பாற்றிக்கொண்டதாகவும் அறிகிறோம். எத்தனையோ வீடில்லா ஏழைகளுக்குக் கோயில் மண்டபங்களே தங்குமிடங்கள். இப்படிப் பலவகையிலும் பயன்படுமாறு கோயில்களை எழுப்பின மன்னர்கள் அவற்றைப் பராமரிக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாமும் அலட்சியம் செய்து அந்தச் சொத்தையும் அபகரிக்கும் மக்களும் தோன்றுவார்கள் என அவர்கள் எண்ணிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்தான். 25 வருடத்துக்கும் மேலாகக் காளஹஸ்திக் கோயிலின் கோபுரம் பழுதடைந்திருக்கிறது. பலமுறை சுட்டிக்காட்டப் பட்டும் இருந்திருக்கிறது. இந்த தேசத்தின் பாரம்பரிய தர்மத்திற்கு மறு மலர்ச்சி கொடுத்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசரான கிருஷ்ணதேவ ராயர் கட்டியதாகும். விஜயநகரப் பேரரசும், அதன் மன்னர்களும் கோயில்களைக் கட்டியதும், ஏற்கெனவே இருந்த கோயில்களுக்குச் செய்த திருப்பணிகளும் கணக்கில் அடங்காதவை. இப்படிக் கட்டப் பட்ட இந்தக் கோபுரம் இப்போது கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தின் 500-வது ஆண்டு விழா கொண்டாடப் பட்டு வரும் சமயம் விழுந்தது, நம்முடைய அலட்சியத்தையே காட்டுகிறது.

காளஹஸ்தி கோயிலின் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது பற்றிப் பலரும் பலவாறு பேசுகின்றனர். தன்னைக் காத்துக்கொள்ள முடியாத சிவனா என்றும் சிலருக்குப் பரிகசிப்பு. கோயிலைக் கட்டியது மனிதர்கள். பாதுகாக்கவேண்டிய கடமையும் மனிதர்களுக்கே. ஒரு சிலருக்கு அதனால் என்ன என்ற அலக்ஷியம். போனால் போகட்டும் என்று சொல்கின்றனர். வழிபாட்டுக்குரிய கோயில் என்று பார்க்காமல் வரலாற்றுச் சின்னம் என்ற அளவிலாவது பார்க்கலாமே? கிட்டத் தட்ட அறுபது வருடங்களாக அந்தக் கோயிலின் கோபுரம் பராமரிப்புப் பணிக்காகக் காத்துக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் அறநிலையத் துறையின் அநுமதி கிட்டவில்லையோ என்னமோ? அப்படி ஒண்ணும் ஏழைக்கோயிலாகவும் தெரியவில்லை. நாங்க போயிருந்தப்போ நல்ல கூட்டம் இருந்தது. பெரும்பாலும் கூட்டம் இருக்கும் என்றே கேள்விப் பட்டேன். இப்போ சந்தோஷம் அடைய வேண்டிய ஒரே விஷயம் கோபுரம் மக்கள் கூட்டத்தின் நடுவே இடிந்து விழுந்து அதன் மூலம் பெரும் உயிரிழப்பு ஏற்படாமல் இருந்தது ஒன்றே.

கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவரால் கட்டப்பட்ட இந்தக் கோபுரத்தின் அஸ்திவாரம் பல வருடங்களாகப் பராமரிக்கப் படவில்லை. 1988-ம் ஆண்டிலிருந்தே விரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தமிழகத்தின் தலை சிறந்த ஸ்தபதி முத்தையா அவர்கள் கூறுகின்றார். ஐநூறு ஆண்டுகள் பழமையான இந்தக் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதுமே தகுந்த பாதுகாப்புகள் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும், அஸ்திவாரத்தை, "ரேப்ட்" என்பதைப் போட்டு வலுப்படுத்தி இருக்கவேண்டும் எனவும் திரு முத்தையா அவர்களின் கருத்து. இதற்கு நடுவில் பாமர மக்களின் அறியாமையையும், பயத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஜோதிடர்களின் தவறான கணிப்புகள். உடனே ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவில் பரிகாரங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடத்தவேண்டும் என்று அவர்களின் கருத்து.

கவனிப்பாரின்றி இடிந்து விழுந்த கோபுரத்தினால் பாதிப்பு எப்படி ஏற்படும்? அரசின் மெத்தனத்தால் நடந்த ஒன்றுக்குப் பொதுமக்களின் நடுவே பீதியைக் கிளப்பி விடும் ஜோசியர்களை என்னனு சொல்றது?? கோபுரம் இடிந்து விழுந்தது என்னமோ வருந்தத் தக்க ஒன்றே. அப்படி ஒண்ணு நிகழாமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். இதனால் பலருக்கும் உடைமைகள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. பலரும் வீடுகளை இழந்துள்ளார்கள். பலரின் வியாபாரம் செய்யும் கடைகளும் இடிந்துள்ளன. இதைவிடப் பெரிய சேதம் இன்னும் என்ன ஏற்படவேண்டும் என இந்த ஜோதிடர்கள் விரும்புகின்றனர்?? ஆட்சியாளர்கள் தர்மத்தின் பாதையில் சென்று நல்லாட்சி நடைபெறவேண்டும் எனக் கூறுவது சரியே. ஆனால் அதற்காகப் பாமர மக்களிடம் பீதியைக் கிளப்பும்படியான பலன்களைக் கூறுவதும் சரியல்ல. இந்த மாதிரி வருமானங்களை நம்பிப் பிழைப்பு நடத்தும் ஜோதிடர்கள் மக்கள் நடுவே பீதியைக் கிளப்புவது ஜோதிடத்தையும் கேவலப் படுத்தி, உண்மையான ஜோதிடர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் ஒன்று. இந்த கோபுரம் விழப் போவது முன்கூட்டியே தெரிந்த ஒன்று. இப்போ இப்படிச் சொல்லும் இந்த ஜோதிடர்கள் கோபுரம் என்று, எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு இடிந்து விழப்போகிறது என்பதை முன் கூட்டியே சொல்லி எச்சரித்தார்களா?

சமீபத்திய புயலின் காரணமாகவே விரிசலும் பெரிதாகி இருந்திருக்கிறது.கோயிலின் முன்னாள் அறங்காவலர் ஆன அய்யாவு குருக்கள் சொல்கிறாப்போல் இதிலே தெய்வக் குற்றம்னு எதுவும் இல்லை. ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கே காரணம். நிர்வாகத்திற்கும் முன்னெச்சரிக்கையாக நடக்கத் தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் அரசின் அநுமதி பெறவேண்டும். அவங்களும் என்ன செய்ய முடியும்?? ஆட்சியாளர்களுக்கோ தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள கஜ கர்ணம் போடவேண்டி இருக்கிறது. இதெல்லாம் அவங்க கவனிக்க முடியுமா? போகட்டும், இனியாவது ஆகமவிதிப்படி, (ஆந்திராவில் இருந்தாலும் சைவ ஆகமங்களின் படியே தமிழ்நாட்டு சிவாசாரியார்களால் வழிபாடுகள் செய்யப் படுகின்றன காளஹஸ்தி கோயிலில்)ஆகமம் நன்கறிந்தவர்களைக் கொண்டு ராஜகோபுரம் கட்டப் படவேண்டும். அதற்கு வாயுலிங்கேஸ்வரரும், ஞானாம்பிகையும் அருள் புரியவேண்டும். கோபுரம் இடிந்து விழுந்ததால் கோயிலின் மற்ற வழிபாடுகளுக்கு எந்தக் குறையும் இருக்காது. மேலும் இந்தக் கோயிலை ராகு, கேதுவின் தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்று சொல்வதற்கும் ஆதாரங்கள் இல்லை என்கின்றார்கள். ஆகையால் மக்கள் மன வருத்தம் போகும்படி அரசு கோபுரத்தைக் கட்டிக்கொடுக்கும் என எதிர்பார்ப்போம். மத்திய அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு வரவேண்டும். இம்மாதிரியான முக்கியக் கோயில்கள் அனைத்தும் மத்திய அரசின் நேரடி கவனத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். கோயில்கள் நம் நாட்டின் செல்வங்களோடு மட்டுமல்லாமல், நம் நாட்டின் கட்டிடக் கலைத் திறமைக்கு அழிக்க முடியாத சான்றும் கூட. இனியாவது மக்களும் விழித்துக்கொள்ளவேண்டும்.

இதுவே மேல்நாடுகள் என்றால் புராதனமான வரலாற்றுச் சின்னங்கள் எந்த மாதிரியாக இருந்தாலும் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. நாமோ புதியதாய் உருவாக்கவும் தெரியாமல், இருப்பதையும் பாதுகாக்கத் தெரியாமல் நமக்கென்ன என்று இருக்கிறோம். :((((((((

Thursday, May 27, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்!

கண்ணன் கேட்ட உதவி!

விதர்ப்ப நாட்டை ஜராசந்தன் ஆக்கிரமிக்க முயன்றபோது கெளஷிகன் அரசியல் விவகாரங்களில் இருந்து முற்றிலும் ஒதுங்கினார். தன் மகன் ஆன பீஷ்மகனிடம் பொறுப்பை ஒப்படைத்த அவர் தான் தனி மாளிகையில் வசித்து வந்தார். இப்போது அவரிடம் தான் ருக்மிணி சென்றாள். தன் தகப்பனைப் பற்றியும், தன் அண்ணனைப் பற்றியும் குறை கூற ஆரம்பித்த ருக்மிணி கோபமாய்ப் பேச ஆரம்பித்துக் கடைசியில் கண்ணீரில் முடித்தாள். அவள் கண்ணீருக்கு அணை கட்ட முடியவில்லை. பாட்டனோ, இவை எல்லாம் ராஜரீகமான விஷயங்கள் எனவும், ஆண்களே புரிந்து கொள்ள முடியும் என்றும், அவர்களால் தான் இவற்றைச் சமாளிக்க முடியும் எனவும் அவளுக்குக் கூறினான். எவ்வளவு கூறினாலும் ருக்மிணியின் கோபம் அடங்கவில்லை. தேவகியின் மைந்தன் கண்ணனுக்கு என்ன நேரிடுமோ எனக் கலங்கினாள்.

ஒரு நாள் அரண்மனையின் கோயில் பூசாரி ருக்மிணிக்குச் செய்தி அனுப்பினார். செய்தியை ருக்மிணியின் செவிலித் தாய் மூலம் அனுப்பி இருந்தார். செவிலித்தாய் ருக்மிணியைப் பிறந்தது முதல் தன் குழந்தை போல் வளர்த்து வந்திருந்தாள். அவள் ருக்மிணியிடம் வந்து திரிவக்கரை செய்தி அனுப்பி இருப்பதாய்ச் சொன்னாள்.

“அம்மா, அம்மா, எவ்வளவு நற்செய்தி கூறுகிறீர்கள். திரிவக்கரை என்ன சொன்னாளாம்?” மனதுக்குள் படபடப்பு. கிருஷ்ணனுக்கு ஏதேனும் நடந்து விட்டதோ??

“ஒரு இளைஞன் திரிவக்கரையின் செய்தியைக் கொண்டு வந்துள்ளான். அவன் பெயர் உத்தவனாம், அவனை உனக்குத் தெரியும் எனச் சொல்கிறானே?”

“ஆஹா, உத்தவன்?? அம்மா, நிச்சயம் தானே? அது உத்தவனா? என்ன செய்தி கொண்டு வந்துள்ளான்?” கண்ணனை விட்டு இணை பிரியாமல் அன்றோ இருப்பான் உத்தவன்? அவனே செய்தி கொண்டு வந்துள்ளான் என்றால் அதில் ஏதோ இருக்கும் நிச்சயமாய்.

“அவன் குருதேவரிடம் சொல்லமாட்டேன் என்று சொல்லி விட்டானே. உன்னை நேரில் சந்தித்துத் தனிமையில் தான் சொல்வானாம்.”

“ஓஹோ, அதுவும் அப்படியா? அம்மா, அவரைத் தாத்தாவின் மாளிகைக்கு வரச் சொல்லுங்கள். குருதேவரிடம் சொல்லி அழைத்து வரச் செய்யுங்கள். நான் அவரை அங்கே சந்திக்கிறேன். இதோ நான் இப்பொழுதே பாட்டனாரின் மாளிகைக்குச் செல்கிறேன்.”

கெளஷிகனின் மாளிகைக்குச் சென்ற ருக்மிணி அவரிடம் உத்தவன் வந்திருக்கும் செய்தியையும், தேவகியிடம் இருந்து செய்தியைக் கொண்டு வந்திருப்பான் என்றும் சொல்ல, ருக்மிணியின் மனத்தைப் புரிந்து கொண்ட அவள் பாட்டனார் உத்தவனை அங்கே தனிமையில் எவரும் அறியா வண்ணம் சந்திக்கச் சம்மதித்தார். இளம் வயதிலேயே தாயை இழந்த ருக்மிணிக்குப் பாட்டனாரின் இத்தகைய அன்பே அவள் வாழ்க்கையின் கொஞ்சமாவது ஆறுதலைக் கொடுத்து வந்தது. இதைப் பாட்டனும் அறிந்திருந்தார். அன்று மதியம் உத்தவன் வந்தான். பெரியவரை நமஸ்கரித்துத் தன் அறிமுகத்தைச் சுருக்கமாய் முடித்துக்கொண்ட உத்தவன், “நான் தேவகியிடமிருந்து செய்தி கொண்டு வந்துள்ளேன். ஜராசந்தனின் படைகளும், ஜராசந்தனும் மதுராவை நெருங்கிவிட்டார்கள். எந்நேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம். கிருஷ்ணனின் உயிரையும், பலராமனின் உயிரையும் கேட்டு நடத்தப் போகும் இந்தத் தாக்குதலில் இருந்து மதுராவையும், அதன் மக்களையும் பிழைக்க வைக்க வேண்டி, கிருஷ்ணனும், பலராமனும் இரவோடிரவாக மதுராவை விட்டுச் சென்றுவிட்டார்கள். “ ருக்மிணியின்கலக்கம் கொஞ்சம் குறைந்தது. ஆறுதலாய்ப் பெருமூச்சு விட்டாள். மேலும் கேள்விக்குறியுடன் உத்தவனைப் பார்க்க அவன் தொடர்ந்தான்.

“அவர்கள் இருவரும் மஹேந்திர மலைப்பக்கம் பார்கவ பரசுராமரைச் சந்திக்கப் போகின்றனர். இன்னும் சில நாட்களில் கால்நடையாக விதர்ப்பாவை அவர்கள் தாண்டிச் செல்வார்கள். நான் விரைந்து செல்லும் குதிரையில் முன்னால் வந்து இளவரசி ருக்மிணிக்கு தேவகி அன்னையின் செய்தியைச் சொல்ல வந்துள்ளேன்.”

ருக்மிணியின் முகம் செக்கச் சிவந்த அந்திவானச் சூரியனைப் போல பிரகாசித்தது. நாணம் அவள் முகத்தைக் கவ்வியது. இது தேவகியின் செய்தி எனச் சொல்லப் பட்டாலும் கிருஷ்ணனின் சம்மதத்தின் பேரிலேயே வந்துள்ளது என அவளால் உணர முடிந்தது. கெளஷிகன் தன் பேத்தியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அதில் தென்பட்ட ஆச்சரியமான உணர்ச்சிப் பிரவாகத்தைக் கண்டு அதிசயித்தான். இந்தப் பெண் அதிசயமானவள், கிருஷ்ணனின் இதயத்தை இவள் வென்றாளா? இவளைக் கிருஷ்ணன் வென்றானா? சொல்வது கஷ்டம் தான். உத்தவனைப் பார்த்து, மேலே சொல் என்னும் பாவனையில் கை அசைத்தான்.

உத்தவன் சற்றே தயக்கத்துடன், “தேவகி அன்னை, விதர்ப்பாவின் வழியாகச் செல்லும் தன்னிரு குமாரர்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தித் தரும்படி இளவரசி ருக்மிணியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பட்டத்து இளவரசர் ருக்மி ஜராசந்தனின் படைகளோடு தன்னை இணைத்துக்கொண்டது இந்தத் தேசமெங்கும் பேச்சாய் இருக்கிறது. இந்நிலையில் விதர்ப்பாவைத் தாண்டிச் செல்லும் தேவகியின் குமாரர்களின் பாதுகாப்பைப் பற்றி தேவகி அன்னை கவலை கொள்வது நியாயம் அல்லவா?”

ருக்மிணிக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. அவளுடைய சொந்தக் கட்டுப்பாட்டில் ஒரு சிறு படை அவள் பாதுகாப்புக்கென இருக்கிறது. பாட்டனாரின் முகத்தைக் கேள்விக்குறியோடு பார்த்தாள். “குழந்தாய், உன் சகோதரனோ, உன் தகப்பனோ அநுமதிக்கவேண்டும்.” என்று கவலையுடன் கெளஷிகர் சொன்னார். “தாத்தா, நீங்கள் தான் இதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும். உத்தவரே, என் தாத்தா இதற்கான ஏற்பாடுகள் செய்வார். என் தமையனின் சகோதரியான நான் உதவி செய்வேன்.” என்று ருக்மிணி சொல்லக் கடுமையாக மறுத்தார் கிழவர். ருக்மிணிக்குக் கண்ணீர் பொங்கியது. வழக்கம்போல் கண்ணீர்ப் பிரவாகத்தினூடே அவள், புலம்பினாள்.

“இந்தப் பரந்த உலகில் எனக்கு உதவி செய்வார் யாருமே இல்லையா? என் தந்தை, என் தமையன், என் அண்ணி, அவ்வளவு ஏன்? என்மேல் உயிரையே வைத்திருப்பதாய்ச் சொல்லும் என் தாத்தா! அனைவருமே என்னைக் கைவிட்டுவிட்டனரே? அம்மா, என் அம்மா, என்னைப் பெற்றுவிட்டு நீ போய்விட்டாயே? என்னையும் கூடவே அழைத்துச் சென்றிருக்க மாட்டாயா?” தன்னிரு கரங்களாலும் முகத்தை மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள் ருக்மிணி. மெல்லிய அவள் தேகமே நடுங்கியது. புயலில் அசைந்தாடும் கொடி போலக் காட்சி அளித்தாள் அவள். துக்கமாகிய புயல் அவளை ஆட்டியது. கிழவனாரால் அவள் துயரத்தைக் காணச் சகிக்கவில்லை,. அவளைத் தன் மடியில் போட்டுக்கொண்டு அவளைத் தேற்றினார். “குழந்தாய், உன் கண்களில் நீர் வர நான் பார்த்துக்கொண்டிருப்பேனா? என் உயிர் உள்ளளவும் அது நடக்காது. நீ என்ன கேட்கிறாயோ அப்படியே நடக்கும். இப்போது சந்தோஷம் தானே?” என்று சொல்லிவிட்டு உத்தவனைப் பார்த்து, “உத்தவா, உன் துணிகளை மாற்றிக்கொண்டு ஒரு பிராமணனைப் போல் உடை தரித்துக்கொண்டு வா. என்னுடன் தங்கி இரு. தேவகியின் குமாரர்கள் வந்துவிட்ட செய்தி உனக்குக் கிடைத்ததும், அவர்களை அழைத்துக்கொண்டு என்னிடம் வா. நான் உதவி செய்கிறேன்.” என்றான்.

Tuesday, May 25, 2010

108 தரம் சொன்னாப் புரியுமா??

மேற்கத்திய நாகரீகமும் சரி, விஞ்ஞானமும் சரி பல விஷயங்களை நமக்குச் சொல்லிக் கொடுப்பதாய்த் தான் நாம் அறிகிறோம். இந்தியர்களுக்கு எதுவுமே தெரியாது என்ற பொதுவானதொரு கோட்பாடு உலகமுழுதும் உள்ளது. இந்தியர்கள் உள்பட இவற்றை நம்புபவர்களே அதிகம். நம் நாட்டையும், நம் திறமையையும் பற்றி நமக்கே சந்தேகம், தாழ்வு மனப்பான்மை. சூரியன் பூமியில் இருந்து 93 மில்லியன் மைல்கள் தள்ளி இருக்கிறான் என்பதை நமக்குச் சொல்லிக்கொடுத்தது மேற்கத்திய விஞ்ஞானம் தானே என நம்புகிறோம். அதுக்கு முன்னால் நம்மில் யாருக்கு இது தெரிந்தது என்ற எண்ணமும் சிலருக்கு உண்டு. ஒளியின் வேகம் நொடிக்கு 186,000 மைல்கள் என்றும் அறிவியல் பாடங்கள் மூலம் அறிந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் என்ன இருக்கிறது இதெல்லாம் சொல்லிக் கொடுக்கும்படியாக?? பக்தி, ஞானம், யோகம் என்றுதானே சொல்கின்றனர்? பக்தி மனிதனின் அறிவைக் குறைக்கிறது என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம். அதிலும் அறிவுஜீவிகளும், நாத்திகர்கள் எனப்படும் பகுத்தறிவாளர்களும் பக்தி என்றாலே மூட நம்பிக்கை என்றே சொல்கின்றனர். பக்தி இருந்தாலே மூட நம்பிக்கையும் சேர்ந்தது என்பது அவர்கள் எண்ணம். ஏனெனில் கற்றறிந்த நம் யோகிகளும், ஞானிகளும், ரிஷி, முனிவர்களும் இறைவனுக்கு முன்னே தாங்கள் பலபடிகள் தாழ்ந்தவர்களே எனச் சொல்லிக்கொண்டதே காரணமாய் இருக்கலாம். ஆனால் இது பக்தியின் ஒரு பாகம், அல்லது ஞானத்தின் ஒரு பக்கம், அல்லது யோகக்கலையின் ஒரு பாடம் என எவரும் புரிந்து கொள்ளவில்லை. சரி யோகம் என்ன சொல்லிக் கொடுக்கிறது? நான் கூறுவது யோகா என இன்றைய நாட்களில் பிரபலம் அடைந்திருக்கும் ஆசனப் பயிற்சி இல்லை. அதற்கும் மேலே யோகத்தின் படிகள் உள்ளன. அவை நமக்குள்ளே இருக்கும் இறையை நமக்குக் காட்டுகின்றன. சரி, ஆனால் இவை வானவியலையோ, அறிவியலையோ நமக்குப் போதிக்கிறதா? மேலை நாட்டு விஞ்ஞானம் இல்லை என்று சொல்லவில்லை. நாம் தான் சொல்கிறோம். நம் யோகமும், ஞானமும், பக்தியும் அறிவியலையும், விஞ்ஞானத்தையும், வானவியலையும் கற்பிக்கவில்லை என நாம் தான் சொல்கிறோம். ஆனால் உண்மையில் அப்படியா???

இதோ உங்கள் மேலை நாட்டில் வாழும் பேராசிரியர் ஒருவர் மூலமாகவே நாம் உண்மையை அறிந்து கொள்வோமா?? யு.எஸ்.ஸில் லூசியானா மாகாணத்தின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுபாஷ் கக் என்பவர். ஒரு அருமையான செய்தியைக் கூறுகிறார். பதினான்காம் நூற்றாண்டின் இந்திய மாணாக்கன் ஒருவன் ரிக் வேதத்தின் ஒரு சின்ன ஸ்லோகத்தைப் பற்றிக் கூறும்போது அவன் சொன்னதாய்க் கூறப்படும் வார்த்தைகள் அவை. சயானா என்ற பெயருள்ள அந்த மாணவன் என்ன கூறினான் என்றால்:"

"என் மன ஆழத்திலிருந்து வரும் உள்ளார்ந்த மரியாதையுடனும், பக்தியுடனும், நான் அரை நிமிடத்தில் 2,202 யோஜனைகள் பிரயாணம் செய்யும் ஒளிக்கடவுள் சூரியனை வணங்குகிறேன். "

இதிலே இங்கே கவனிக்க வேண்டியது அரை நிமிஷத்தில் சூரியன் பிரயாணம் செய்யும் வேகம் 2,202 யோஜனைகள் எனத் தெரிவிக்கப் பட்டிருப்பது. அதுவும் இது எதிலே இருக்கு? ரிக் வேதத்தில் இருக்கிறது. மிகப் பழமையான வேதம் என்று சொல்லப் படுவது அது. ஒரு யோஜனை என்பது ஒன்பது மைல்கள் என்று சொல்லப் படுகிறது. ஒரு நிமிஷம் என்பது கண் இமை கொட்டும் காலம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். கண் இமைகொட்டும் காலத்தின் அரைப்பங்கு நேரத்தில் சூரியன் செல்லும் வேகமே மேலே சொல்லப் பட்டிருக்கிறது. அதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவே அந்த நிமிஷம் என்பது நாம் செகண்டுகள் என்று சொல்லும் விநாடியில் 16/75 பாகம் ஆகும் என்கின்றனர். இப்போக் கணக்குப் போட்டால்

2,202 யோஜனைகளை ஒன்பது மைல்களாலும், 75/8 நிமிஷங்களாலும் பெருக்கினால் வரும் விடை 185,794 m.p.s. இப்போ மேலே சயானா சொல்லி இருப்பது உத்தேசமாய் சூரியனின் பயணம் 186,000 மைல்கள் ஒவ்வொரு விநாடிக்கும் என்று கூறுகின்றான். இந்த வேதம் 1387 கி.மு. என்று சொல்லப் படும் கணக்கையே நாம் எடுத்துக்கொண்டாலும் எப்படித் தெரிஞ்சது அவங்களுக்கு என நாம் யோசிக்க வேண்டாமா? அதிலும் இவ்வளவு துல்லியமாய்க் கணக்கிட எப்படி முடிந்தது? சும்ம்ம்மா ஒரு ஊகம்னே வச்சுண்டாலும் எவ்வளவு சரியான ஊகம் இது??? ஆனால் உண்மையில் ரிக்வேதம் 9,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம்முடைய யோகப் பாரம்பரியம் இம்மாதிரியான பல நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இப்போ அடுத்து நாம் தெரிஞ்சுக்கப் போறது 108-ன் மகிமை பற்றி.

அநன்யா கூட பஸ்ஸிலே பேசும்போது 108 பத்தி இப்போத் தான் படிச்சேன்னு சொன்னேன். அவங்க உடனே எனக்கும் சொல்லுங்களேன்னு கேட்டாங்க. அவங்களுக்கு மட்டும் சொல்றதை விட பதிவாக எழுதினால் பலருக்கும் தெரியும் என்று தோன்றியது. அதனாலேயே இந்தப் பதிவு. இப்போது நாம் அனைவரும் ஜபமாலைகள் பற்றி நன்கு அறிவோம். பலவிதமான ஜபமாலைகள் உண்டு. என்றாலும் எல்லாவற்றிலும் 108 மணிகளே காணக் கிடைக்கும். அவை உருத்திராக்ஷம் ஆனாலும் சரி, துளசி மணியானாலும் சரி, மற்ற மணிகளானாலும் சரி. 108 இருக்கும். நாம் ஜபம் செய்யும் போது எண்ணிக்கைக் குறைவாக இல்லாமல் இருப்பதற்காகவும், எத்தனை முறை திரும்பித்திரும்பிச் சொல்கிறோம் எனப் புரியவும் தான் ஜபமாலையைக் கையில் வைத்துக்கொண்டு உருட்டுகிறோம். இதில் ஏன் 100 மட்டும் இருக்கக் கூடாது? ஏன் 108 இருக்கவேண்டும்?

மீண்டும் நம் சூரியனும், சந்திரனுமே வருகிறார்கள். சூரியனின் ஒளிப்பாதையும், சந்திரனின் ஒளிப்பாதையையும் அவற்றின் பிரயாணத்தையுமே குறிக்கும் இந்த ஜபமாலையும். அட? நாம் கையில் வைச்சிருக்கும் ஜபமாலை சூரியனையும், சந்திரனையுமா குறிக்குது?? ஆமாங்க, ஆமாம். இந்த ஒளிப்பாதை விண்ணில் இருந்து தானே பூமிக்கு வருது? அந்தப் பாதையானது 27 சமமான பாகங்களாய்ப் பிரிக்கப் பட்டிருக்கிறது நம் முன்னோர்களாலே. அவங்க வான சாஸ்திரங்களிலேயும் எவ்வளவு அருமையா, அறிவோட செயல்பட்டிருக்காங்க! இந்த 27 சமபாகங்கள் தான் 27 நக்ஷத்திரங்களாய்க் குறியீடு செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு நக்ஷத்திரமும் நான்கு சமபாகங்களாய்ப் பிரிக்கப் பட்டு அவை பாதங்கள் என்று சொல்லப் படுகிறது. 27ஐ நாலால் பெருக்குங்க. 108 வருதா? இவைதான் சூரியனும், சந்திரனும் விண்ணில் எடுத்து வைக்கும் 108 அடிகள்னு வச்சுப்போமா??

இந்த ஒவ்வொரு அடியும் சாமானியமானதோ, சாதாரணமானதோ அல்ல. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தேவதை அல்லது கடவுளரின் ஆசிகளோடு எடுத்து வைக்கப் படுகிறது. அதனாலே ஜபமாலையை உருட்டறவங்க கூடவே யார் தலையையும் உருட்டாமல் ஜபநாமாவை மட்டுமே உருட்டுங்க, சரியா?? 108 மணிகளையும் கோர்த்திருக்கும் சங்கிலியானது கடைசியில் ஒரு பெரிய உருத்திராக்ஷம் அல்லது மணியால் சேர்த்து இணைக்கப் பட்டிருக்கும். இந்தப் பெரிய மணியை குருமணி, அல்லது குருபீடம்னு சொல்லுவாங்க. இன்னும் யோகத்தில் தேர்ந்தவர்கள் இதையே மேருனும் சொல்றது உண்டு. மாலையை உருட்ட ஆரம்பிச்சதும் முதலில் முன்னோக்கிப் போனவங்க இந்த மேரு கிட்டே வந்ததும், பின்னோக்கி வர ஆரம்பிப்பாங்க. உங்க பாட்டியோ, தாத்தாவோ மாலையை உருட்டினால் கூர்ந்து பாருங்க, புரியும்.

இந்த மேருதான் கோடையையும், குளிரையும் சுட்டுவதோடு, அங்கே ஜபமாலையை மீண்டும் முன்னோக்கி உருட்டாமல் பின்னோக்கிச் செல்வது சூரியன் தன் பாதையை மாற்றிக்கொண்டு செல்வதையும் சுட்டிக் காட்டுகிறது. இப்படி நம் பிரார்த்தனைகளும், ஜபங்களும் இயற்கையையோடு இணைந்தே செயல்பட்டு வருகிறது. இந்த ஜபமாலையை நாம் பயன்படுத்துவது எதைக்குறிக்கிறதெனில் நாம் இயற்கையோடு முற்றிலும் ஆழமாகப் பிணைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, விண்ணுலகமும் நம்மை மேற்பார்வை செய்து வருகிறது என்பதையும் காட்டுகிறது. நாம் அண்டவெளியின் நாயகர்களோடும் பிணைந்து தான் செயல்படுகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

இப்போது பேராசிரியர் சுபாஷ் கக் அவர்களின் சில குறிப்புகளில் இருந்து.

பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரத்தின் அளவு உத்தேசமாக சூரியனின் விட்டத்தில் இருந்து 108 முறைகள் இருக்கும். சூரியனின் விட்டமோ பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு பெரியது. பூமியிலிருந்து சந்திரனுக்கு உள்ள தூரமும் இதே போல் சந்திரனின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம். நம்முடைய சாதாரண அறிவுக்கும், தெய்வீக அறிவுக்கும் இடைவெளியை இது சுட்டுகிறது எனலாமா? நாம் 108 முறை ஒரு மந்திரத்தைச் சொல்லி ஜபமாலையை உருட்டுவதின் மூலம் நம்முள்ளே இருக்கும் தெய்வீக ஒளியை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறோம் எனலாமா?

இந்த சூரிய சித்தாந்தம் நம்முடைய இந்தியப் பாரம்பரியக் கல்வி முறையில் மிகவும் பழமையான ஒன்று.

டிஸ்கி: தினமும் நிறைய மடல்கள் பலரால் அனுப்பப் படுகின்றன. என்றாலும் எல்லாமுமே நல்ல செய்திகளோ, விஷயங்களோ இருப்பதில்லை. அபூர்வமாய் இன்று வந்த மடலில் காணப்பட்ட செய்தி என்னைக் கவர்ந்தது. அதைக் கொஞ்சம் தமிழாக்கம் செய்யலாம்னு நினைச்சேன். அப்புறமா முழுசும் செய்யாமல் முக்கியமான கருத்தை மட்டும் எனக்குப் புரிஞ்ச அளவில் எழுதி இருக்கிறேன். இதை எனக்கு அனுப்பி வைத்த என் மைத்துனருக்கு என் நன்றி.

படங்கள் கூகிளாண்டவர் தயவிலே. நன்றி.

Monday, May 24, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்

ருக்மியின் திட்டமும், ருக்மிணியின் கோபமும்!


ருக்மிணி கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் அண்ணன் ருக்மி ஜராசந்தனிடம் ஒரேயடியாகச் சரணடைந்துவிட்டானே. கம்சன் இறந்தது அவனை மிகவும் பாதித்துவிட்டது. தன்னுடைய எதிர்காலமே இருளடைந்துவிட்டதோ என எண்ணிவிட்டான். ஹூம், உடனேயே அந்த மூர்க்கன் ஜராசந்தனிடம் சென்றுவிட்டான். அவனும் இவனுக்குக் கண்ணனை எங்கே, எந்த நிலையில் கண்டாலும் அழிக்கவேண்டும் என ஆணை இட்டு விட்டானாம். ஹா!! நடக்குமா அது?? கண்ணன், கண்ணா, கண்ணா, அவனை மறக்க முடியுமா? தன் தாயிடம், பல வருடங்கள் கழித்துப் பார்த்தப் பெற்ற தாயிடம் எவ்வளவு அன்பும், பாசமும் கொண்டிருந்தான். தனக்கெனக் கொடுக்கப் பட்ட மதுராவின் கிரீடத்தைக் கூட வேண்டாம் என மறுத்துவிட்டானே? ம்ம்ம்ம்ம்?? மதுராவில் இருந்து செய்தி வரவேண்டுமானால் திரிவக்கரை மூலம் தான் வரவேண்டும். ஆம், ருக்மிணியையும், திரிவக்கரையையும் கண்ணன் நன்கு பிணைத்துவிட்டான். மதுராவில் இருந்து தூர தேசங்களுக்குச் செல்லும் பிராமணர்கள் மூலம் திரிவக்கரை ருக்மிணிக்குச் செய்திகள் அனுப்பி வருகிறாள். அதோடு அவள் தகப்பனுக்கும் மதுராவின் செய்திகள் வருகின்றன.

புண்யாஜனா கப்பலையும், அதன் தலைவன் பாஞ்சஜனாவையும் கண்ணன் அழித்ததையும், நாகலோகம் சென்று புநர்தத்தனை மீட்டு வந்ததையும் குறித்த கதைகள் இங்கே விதர்ப்ப நாட்டுக்கும் வந்துவிட்டன. ருக்மிணிக்குப் பெருமை தலைக்கு ஏறியது. என்னவோ கண்ணன் அவள் சொல்லித் தான் எல்லாம் செய்தாற்போல மனம் மகிழ்ந்தாள். கண்ணனை நினைக்கும்போதெல்லாம் அவன் அழகிய மலர்ந்த புன்னகையுடன் கூடிய முகம் நினைவில் வருகிறது ருக்மிணிக்கு. ஆனால் அவனைப் பற்றியே இங்கே பேசமுடியவில்லை. என்னதான் இடைக்குலத்தோரால் வளர்க்கப் பட்டாலும், அவனும் ஒரு யாதவகுலப் பையன் தானே? அது ஏன் இந்தப் பெரியவர்களுக்குப் புரியவே இல்லை?? அவள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசியாம். அவளைக் கரம் பிடிக்கும் தகுதி மற்றொரு மன்னனுக்கோ அல்லது பட்டத்து இளவரசனுக்கோதான் இருக்கிறதாம். யாருக்கு வேண்டும், அரியணை எல்லாம். ஆனால் அவள் அண்ணன் ருக்மி இருக்கிறானே? அவள் திருமணத்தின் மூலம்தான் அவனுடைய சாம்ராஜ்யக் கனவுகள் பூர்த்தி அடையவேண்டுமாம். அதற்கு அவன் சொல்லும் அரசகுமாரனைத் தான் அவள் திருமணம் செய்தாகவேண்டுமாம். சொல்கிறான். இதை எவரும் எதிர்க்கிறார்களா என்றால் இல்லை, அனைவரும் தயங்குகிறார்கள். ருக்மியின் கோபம் அவ்வளவு பிரபலம். என்ன செய்யலாம்?? ருக்மிணிக்கு மீண்டும் கோபம் தலைக்கு ஏறியது. அப்போது அவளின் அந்தரங்கச் சேடி வந்து ஒரு தகவல் சொன்னாள். ஜராசந்தன் கண்ணனையும், பலராமனையும் எவ்விதத்திலேனும் கொல்லப் போகின்றானாம். அவர்களை ஒப்படைக்கவில்லை எனில் மதுராவையே அழிக்கப் போகிறானாம். அதற்கு அவள் அண்ணனும் உதவி செய்யப் போகிறானாம். அவள் தகப்பனும், அவள் அண்ணனும் இதைப் பற்றி விவாதிக்கின்றனராம். ருக்மிணிக்குத் தலையோடு கால் வரையிலும் நடுங்கியது. உடனே ஒரு புயல் போலக் கிளம்பித் தன் அண்ணனையும் தகப்பனையும் பார்க்கக் கிளம்பினாள்.

வேகமாய் உள்ளே வரும் ருக்மிணியைப் பார்த்ததுமே ருக்மிக்குப் புரிந்து விட்டது. ருக்மிணி கோபத்துடன் அண்ணனைப் பார்த்து, “அண்ணா, என்ன இது நான் கேள்விப் படுவது? கிருஷ்ணனையும், பலராமனையும் ஜராசந்தன் கொல்ல நீ உதவி செய்யப் போகிறாயாமே? வேண்டாம், விட்டு விடு, நீ போகாதே!” என்றாள்.
அவளுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. ருக்மி அவளை அலட்சியமாய்ப் பார்த்து, “நீ அந்தப் புரத்தில் இருக்கவேண்டியவள். இங்கே ஏன் வந்தாய்?? ராஜாங்க விஷயங்களில் நீ தலையிடாதே!” என்று கோபம் மீதூறக் கத்தினான். ருக்மிணியின் கோபம் கண்களில் மின்வெட்டுப் போல் தெறித்தது.

“ஏன் கூடாது? இது எப்படி உனக்குத் தகப்பனின் நாடோ, அப்படியே எனக்கும் என் தகப்பனின் நாடு ஆகும். உனக்குள்ள அதே உரிமைகள் எனக்கும் உண்டு. தந்தையே, என்ன இது? நீங்கள் சும்மா எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே? அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை உணர்ந்துதான் பேசாமல் இருக்கிறீர்களா? உங்களையும், இந்த விதர்ப்ப நாட்டையும் ஜராசந்தனுக்கு அடிமையாக்க நினைக்கிறான்.”

“உனக்கு அரசியல் பற்றியோ அரசியல் தந்திரங்கள் பற்றியோ என்ன தெரியும்?? குண்டினாபுரம் இன்று ஒரு வலுவான நாட்டின் தலைநகராய் இருக்கிறாதென்றால் அதற்குக் காரணம் ஜராசந்தனுடனான நமது நட்பே ஆகும். நானும் உன்னை ஒரு மஹா சாம்ராஜ்யத்தின் மஹாராணியாக்க விரும்புகிறேன். அதே போல் ஒரு பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியின் சகோதரி என உன்னை அனைவரும் கூறவும் நினைக்கிறேன். இது என் வாழ்நாள் கனவு.”

“நீ செய்யும் எந்த உதவியும் எனக்குத் தேவையில்லை. நான் இப்போது இருக்கிறமாதிரி இருப்பதிலேயே சந்தோஷமாய் இருக்கிறேன். தந்தையே, இந்த முரட்டு அண்ணனின் வாயை அடக்காமல் வேடிக்கை பார்க்கிறீர்களே? இது உங்களுக்கே நியாயமாய் இருக்கிறதா?

“குழந்தாய், ருக்மிணி, ஜராசந்தன் ஒரு பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி. அவனை எதிர்ப்பது என்பது சாமானியமான ஒன்றல்ல மகளே. அதற்குரிய படை பலமோ, அரசர்களின் உதவியோ நம்மிடம் இல்லை. அவனோடு நாம் நட்பாக இல்லை எனில் அவன் நம்மையும், நம் நாட்டையும் என் தந்தை கெளஷிகரின் ஆட்சிக்காலத்தில் அழித்தாற்போல் அழித்துவிடுவான். அவனோடு சமாதானமாய்ப் போவதே நமக்கும், நம் நாட்டுக்கும் நன்மை பயக்கும்.”

“கோழைகள், கோழைகள், வீரமே இல்லாதவர்கள்!” ருக்மிணி கத்தினாள். “ஆஹா, நான் ஒரு ஆண்மகனாய் இருந்திருக்கக்கூடாதா?” ருக்மிணி கோபத்துடன் கால்களை உதைத்தாள். வேகமாய் அங்கிருந்து வெளியேறி வயது முதிர்ந்த தன் பாட்டன் ஆன கெளஷிகனைத் தேடிக் கொண்டு சென்றாள். ருக்மி அவள் கோபத்தைக் கண்டு பலமாகச் சிரித்தான். பாட்டனிடம் சென்ற ருக்மிணி தன் கோபத்தைக் கொட்டினாள் அங்கேயும். கிழவரும் சிரித்துக் கொண்டார். "என் அருமைக் குழந்தாய்! ஆண்கள் செய்வது செய்வதாய் இருக்கட்டும். இது ராஜாங்க விஷயம், நீ இதில் தலையிடாதே! இப்போ நீ செய்ய வேண்டிய முக்கியமான வேலை உன்னைக் கைப்பிடிக்கப் போகும் இளைஞன் எவன் எனக் கற்பனை செய்து கொண்டிருப்பது ஒன்றே." என்றார்.

"பாட்டனாரே, என்னால் அது இயலாது. ருக்மி எந்த நாட்டு இளவரசனுக்கோ, அல்லது அரசனுக்கோ என்னை விற்க நினைக்கிறான். அதனால் அவனுக்குக் கிடைக்கப் போகும் அரசியல் ரீதியான லாபங்களையே அவன் நினைக்கிறான். அவன் எனக்காகப் பார்க்கப் போகும் அரசனோ, இளவரசனோ அவன் ருக்மியை விட முழு முட்டாளாகத் தான் இருப்பான் நிச்சயமாக. நான் அப்படி எல்லாம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை." ருக்மிணியின் பதில் திட்டவட்டமாக இருந்தது. கிழவர், "குழந்தாய், நீ அழகாயும், இளமையோடும், திறமையோடும், புத்திசாலியாகவும் இருக்கிறாய். உனக்காகச் சுயம்வரம் நடத்துவதே சரி. அப்போது நீ உனக்கேற்ற மணமகனை நீயே தேர்ந்தெடுக்கலாம்." என்றார். "தாத்தா, புத்திசாலியான எந்த மணமகனையும் என் அண்ணன் அழைக்கவே மாட்டான். சுயம்வரம் அவன் ஏற்பாடுகளில் அவன் அழைக்கிறவர்களை மட்டும் வைத்துத் தானே நடத்துவான்?? என்னை ஒரு அசையும் சொத்தாக நினைக்கிறான் என் அண்ணன். நான் நிச்சயம் அப்படி இருக்கமாட்டேன்."


ஆயிரமாவது பதிவு

Saturday, May 22, 2010

புயலடிச்சு ஓய்ந்தது!

அம்பி அண்ட் கோ பட்டாசு வெடிச்சு, ஸ்வீட் எடு, கொண்டாடுனு கொண்டாடி இருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன?? எத்தனை நாளைக்கு?? அதான் வந்துட்டோமுல்ல??? "லைலா" புயல் ஆந்திராவில் அடிச்சாலும் அதன் தாக்கம் இங்கேயும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. செவ்வாய்க்கிழமையன்னிக்கு இருந்தே இணையம் சரியா இல்லாமல், புயல் அடிச்சதுதான் சாக்குனு கோமா நிலைமைக்குப் போயிட்டது. இத்தனைக்கும் முக்கியமான இணைப்புகளை ராத்திரி எடுத்துட்டுத் தான் படுத்தேன். அப்படியும் இடி இடிச்சதில் செர்வரில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கு. ஆனால் யாருக்கும் அதை முதலில் கண்டுபிடிக்கத் தோணலை. மோடம் தான் போயிடுச்சுனு சொல்லிட்டு அதை மாத்தித் தரோம்னு சொல்லிட்டாங்க. நான் ஒரு தொழில் நுட்ப நிபுணி மோடத்திலே எந்தப் பிரச்னையும் இல்லைனு சொல்றதைக் காதிலேயே போடலை. காது வலிச்சிருக்குமோ??

இங்கேயும் அதைச் சோதனை செய்யும் வல்லுநர் ஒருத்தரே எல்லா இடத்துக்கும். அம்பத்தூருக்கு எனத் தனியா இருந்தவரைத் தூக்கிட்டாங்களாம். பாவம், நல்ல பையர். கூப்பிட்டதும் ஓடி வருவார். :( இன்னிக்கு மதியம் பனிரண்டு மணிக்கு வந்தவங்க சாயந்திரம் நாலரை மணியோடு வேலையை முடிச்சாங்க. எங்கே கோளாறுனு கண்டுபிடிக்கவே ஒன்றரை மணி நேரம் ஆச்சு. ஆங்காங்கே வேலை இல்லாத் திண்டாட்டம், வேலையிலே இருந்து ஆள் எடுக்கறதுனு இருக்கு! என்னத்தைச் சொல்ல!!!! இதிலே ஒழுங்கா வேலை பார்க்கிற ஆளை எடுத்துட்டாங்க! எப்படியோ ஒரு நாலு நாளிலே(ஹிஹிஹி, இதுவே அதிகம் தான், இல்லாட்டிப் பதினைந்து நாளாவது ஆகி இருக்காது?) பிரச்னையைத் தீர்த்தாச்சு. இப்போ இதுக்கான கொண்டாட்டம் தனியா வச்சிருக்கேன்.

முன்னாடி முப்பெரும் விழா எடுக்கணும். என்னனு கண்டு பிடிங்க பார்ப்போம். அநன்யா அக்கா, உங்க ரங்க்ஸைத் தயார் பண்ணுங்க, அவர் தானே லேட்டஸ்ட் கு/ப/த, அதனாலே அவர் தான் அலகு குத்திண்டு, காவடி எடுத்து, அங்கப் பிரதக்ஷிணம் பண்ணி, மண் சோறு சாப்பிட்டுட்டு, ராத்திரி தீமிதியும் பண்ணணும், கூடவே உங்களுக்கு வேலை கிடைக்கிறதுக்காக நீங்களும் எல்லாப் பிரார்த்தனையும் செய்யணும்னு வேண்டிண்டிருக்கேன். எங்கே ரெண்டு பேரும் ஜோடியாக் களத்திலே இறங்குங்க பார்ப்போம்! ரெடி, ரெடி, ரெட்ட ரெடி, ஷ்டார்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் ம்யூஜிக்!

Monday, May 17, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

கண்ணன் மதுராவை விட்டு வெளியேறினான்!



மேலும் தொடர்ந்த விகத்ரு, வசுதேவரின் ஒரு சகோதரியான குந்தி தேவி பரத குலத்து அரசனான பாண்டுவின் விதவை மனைவி எனவும் அவளுடைய ஐந்து குமாரர்களும் கண்ணனுக்கும், பலராமனுக்கும் அத்தை வழி சகோதரர்கள் ஆகின்றார்கள் என்பதையும் கூறிவிட்டு மேலும் சேதி நாட்டு அரசியான ஷ்ருதஷ்ரவா வசுதேவனின் மற்றொரு சகோதரி என்றும், அவர்கள் குமாரன் சிசுபாலன் கண்ணனுக்கும், பலராமனுக்கும் அத்தைவழி சகோதரன் எனவும் தெரிவித்தான். யாதவ குலம் பாரதம் என அழைக்கப் பட்ட இந்தப் பரந்து விரிந்த பிரதேசம் முழுதும் பரவி இருப்பதாயும் விந்திய மலைப்பகுதிகளும், சஹ்யாத்ரி மலைப்பகுதிகளும் யாதவர்களின் ஆதிக்கத்திலேயே இருப்பதாயும் கூறினான். இவ்வளவு பெரியதொரு குலத்தின் கண்ணின் கருமணியாகக் கண்ணன் தோன்றி இருப்பதாகவும் விகத்ரு தெரிவித்தான். ஜராசந்தன் அவர்கள் இருவரையும் செல்லுமிடமெல்லாம் துரத்தினாலோ, அல்லது ஸ்ரீகாலவன் இவர்களை ஏமாற்றினாலோ என்ன செய்ய முடியும் என வசுதேவன் கவலை அடைந்தான். கண்ணனோ தான் தர்மத்தின் பாதையை விட்டு அகலாமல் இருப்பதாகவும், ஆகவே தன்னைக் குறித்துக் கவலை கொள்ளவேண்டாம் எனவும் தான் மேற்கொண்டிருக்கும் தர்மம் தன்னைக் காக்கும் எனவும் திடமாய்க் கூறினான்.

“ஓஓ. அங்கே தர்மம் நிலைத்து வாழ்கின்றது கண்ணா,” கர்காசாரியார் உற்சாகமான குரலில் தொடர்ந்தார். “ஜமதக்னியின் குமாரன், பார்கவன் அங்கேதான் வாழ்கின்றான் எனக் கேள்விப் பட்டேன். அவர் ஷுர்பராகாவில் (இந்த ஷுர்பராகா தற்சமயம் மும்பைக்கு அருகே உள்ள சொபாரா என்னும் இடம் எனவும் சரித்திர காலத்துக்கு முன்னால் இங்கே ஒரு துறைமுகம் இருந்ததாகவும் முன்ஷிஜி சொல்கின்றார்.)வாழ்கின்றார் எனச் சொன்னாலும், அடிக்கடி சஹ்யாத்ரி மலைத்தொடர்களின் அரசர்கள் அரசாட்சி செய்யும் பகுதிகளுக்கு வந்து செல்கின்றார். உன்னுடைய பாதுகாப்புக்காக நான் அவரைத் தனியே சந்தித்து வேண்டிக்கொள்கிறேன்.” என்றார் கர்காசாரியார்.

“குருதேவா! அவரால் என்ன விதத்தில் எனக்கு உதவ முடியும்?? அவர்தான் தற்போது ஆயுதங்களைப் பிரயோகம் செய்யப் போவதில்லை எனச் சபதம் எடுத்துள்ளாரே?” என்றான் கண்ணன். “இருக்கலாம் கண்ணா, ஆனால் அவருடைய புத்தியும், விவேகமும், ஞானமும் அவர் க்ஷத்திரியர்களைக் கொல்லவேண்டி முன்பு உபயோகித்து வந்த பரசு என்னும் கோடரியை விட பலம் பொருந்தியதாகும்,” என்றார். “ம்ம்ம்?? சரி, பேசிக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் காலை பொழுது விடியும் முன்னரே நாங்கள் கிளம்பிவிடுகிறோம். மரியாதைக்குகந்த அரசரே, நாங்கள் சென்றதும் ஜராசந்தனுக்குத் தெரிவியுங்கள், கண்ணனையும், பலராமனையும் மதுராவில் காண முடியாது, அவர்களைத் தேடி வேறெங்கேனும் தான் அலையவேண்டும் என. அவன் எங்களைத் தேடி ஓடி வந்தானெனில் மதுரா நகருக்கு எந்தவிதமான ஆபத்தும் நேரிடாமல் காப்பாற்றலாம்.” என்றான் கண்ணன்.

கண்ணனுக்குத் தன்னைப் பெற்ற தாய் தேவகியிடம் விடை பெறுவது ஒரு கஷ்டமான காரியமாக இருந்தது. தேவகியின் அந்தப் புரம் சென்று அவளை வணங்கி விடைபெற்ற கண்ணனைக் கட்டிக்கொண்டு அழுத தேவகி, “என் குழந்தாய், உன்னை எனக்கே எனக்கென்று நான் அடையும் நாள் எந்நாளோ? அந்நாள் வருமா என்றே சந்தேகமாய் உள்ளது. உன்னைப் பற்றிய நினைப்பும், அதன் காரணமான பரிதவிப்பும் இல்லாமல் நான் இருக்கப் போகும் நாளும் எந்நாளோ?” எனச் சொல்லி விட்டுக் கண்ணீரை உகுத்தாள்.

“தாயே, நான் என்ன செய்வது? என்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு காரணங்களாலேயே ஏற்படுகின்றது. ஜராசந்தன் இப்படித் துரத்தவில்லை எனில் நாங்கள் இங்கிருந்து கிளம்ப மாட்டோமே? மேலும் படைத் தலைவர் விகத்ரு சொன்னதில் இருந்து செல்லும் இடத்திலும் எனக்கு ஒரு வேலை காத்திருக்கிறதாய்த் தெரிகிறது.” கண்ணனின் இளநகை மேலும் விரிந்தது.

“கோவிந்தா, உனக்கு யாரும், எவரும் எந்தத் தொந்திரவும் ஒருபோதும் செய்யமுடியாது.” என்றாள் தேவகி. “யார் அம்மா என்னைத் தொந்தரவு செய்யப் போகின்றார்கள்? நான் தான் அவற்றைத் தேடிப் போய் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றேனே? அவை என்னைத் தேடிப் பாதி வழி வருவதற்குள் நான் அவற்றைப் போய் அடைந்து விடுகிறேன். ஆகையால் நீ என்னைக் குறித்துக் கவலை கொள்ளவும் வேண்டாம். மேலும் செல்லுமிடத்தில் எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கப் போவது யார் தெரியுமா? ஜமதக்னியின் புதல்வர் பார்கவர். யாருடைய ஆணையைக் கேட்டுக் கடலரசன் ஒதுங்கிச் சென்று நிலத்தை வெளியிட்டானோ, அவருடைய பாதுகாப்பு எங்களுக்குக் கிடைக்கப் போகிறது.”

“வேறு எவரேனும் உன்னுடன் வருகின்றனரா கண்ணா?”

“இல்லை தாயே! கூட்டமாய்ச் சென்றால் அனைவரின் கண்காணிப்பிலும் விழுவோம். நாங்கள் இருவர் மட்டுமே சென்றால் அதிகம் எவரும் கவனிக்கமாட்டார்கள். உத்தவன் மட்டுமே வருவான். எங்களுடன் குண்டினாபுரம் வரையிலும் சேர்ந்து போய்விட்டுப் பின்னர் கரவீரபுரத்திற்கு முன்னால் சென்று எங்கள் வரவை அவன் அறிவிப்பான். “

“குழந்தாய், மனதைத் தளரவிடாதே! எல்லாவற்றிலும் கவனமாய் இருந்து கொள்வாய்!”

“தாயே, நான் உனக்கு உறுதி அளிக்கிறேன். என்ன நேர்ந்தாலும் நான் தேவகியின் குமாரன் என்பதற்கு ஊறு விளைவிக்காவண்ணம் நடந்து கொள்வேன். நீ என்னை ஒரு கடவுள் என நினைத்திருக்கின்றாய் என்பதை நான் நன்கறிவேன். அப்படி ஒரு அவதாரமாகக் கடவுளாக நான் இருந்தால் அதற்குக் காரணம் உன்னைப் போன்ற ஒரு தெய்வீகமான அன்னையின் வயிற்றில் பிறந்ததே. நான் அதை ஒரு போதும் மறக்கமாட்டேன். எனக்கு அது தான் மேலும் பலம் சேர்க்கிறது.” கண்ணன் மனமாரச் சிரித்தான். அவன் உள்ளத்து மகிழ்ச்சி பேச்சிலும், சிரிப்பிலும் நன்கு புலப்பட்டது. அங்கிருந்து கண்ணன் விடைபெற்றுச் செல்லும்போது திரிவக்கரை வந்தாள். அவள் இப்போது தேவகியின் அந்தரங்கத் தோழியாகி இருந்தாள். கண்ணனைக் கண்டதும் தனியே அழைத்து அவனை வணங்கிய திரிவக்கரை தன்னை ஒருபோதும் மறக்கக் கூடாது என வேண்டிக் கொண்டாள். பூக்களையும், அவை அளிக்கும் சுகந்தத்தையும் எங்கே கண்டாலும் திரிவக்கரை தான் நினைவில் வருவாள் எனவும், அவளை மறப்பது இயலாத ஒன்றென்றும் கண்ணன் உறுதி அளித்துவிட்டுச் சென்றான். மறுநாள் விடிவதற்கு முன்னாலேயே கண்ணன், உத்தவனுடனும், பலராமனுடனும் ரதத்தில் ஏறிக்கொண்டு மதுரா நகரை விட்டு மக்கள் எவரும் அறியா வண்ணம் வெளியேறினான்.

விதர்ப்ப நாட்டில் இருந்த ருக்மிணி இந்தச் செய்தியைக் கேட்டதும் உள்ளம் துடிதுடித்துத் தவித்தாள். அவள் தமையனை எண்ணி எண்ணி மனம் கலங்கினாள். ஜராசந்தன் கண்ணனையும் பலராமனையும் அழிப்பதற்கு ருக்மியின் உதவியைக் கேட்க ருக்மியும் அதற்குத் தன் சம்மதத்தை அளித்திருந்தான். என்ன செய்யலாம்?? கலங்கிய ருக்மிணிக்குத் தன் தந்தையின் தகப்பன் ஆன கைஷிகனைக் கலந்து ஆலோசிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அவளிடம் மிக்க அன்பும், பாசமும் கொண்டிருக்கும் அவள் பாட்டனார் கட்டாயம் அவள் மனத்தைப் புரிந்து கொள்வார். என்ன தான் அவள் தந்தையான பீஷ்மகன் அரசனாக இருந்தாலும் அது பெயரளவுக்கே. உண்மையில் ருக்மியின் கொடுங்கோலாட்சி தான் அங்கே நடந்து கொண்டிருந்தது. இதைச் சகிக்க முடியாமல் தன்னால் இயன்ற அளவுக்கு ராஜரீக விஷயங்களில் தலையிட்டாள் ருக்மிணி.

பரசுராமரின் நேரடி சீடனான ருக்மியோ கண்ணனால் மதுரா நகரில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறக்கவே இல்லை. எவ்வகையிலேனும் கண்ணனைப் பழிவாங்கத் துடித்த அவனுக்கு ஜராசந்தனின் இந்த அழைப்புத் தேனாய் இனித்தது. உடனே தன் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டான். ஜராசந்தனின் உதவி கிடைப்பதோடு அல்லாமல்,கண்ணனையும் பழி வாங்கிவிடலாம். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதென்றால் சாமானியமா? அதன் மூலம் தனக்குக் கிடைக்கப் போகும் பலாபலன்களை எண்ணிக் கனவு காண ஆரம்பித்தான் ருக்மி. ருக்மிணியும் அந்த இடைச் சிறுவனை மறக்கவே இல்லைதான். ஆனால் அவள் எண்ணங்களோ ருக்மியின் எண்ணங்களிலிருந்து மாறுபட்டிருந்தது. தன் அண்ணனை ஒரு பிடிவாதக் காரக் குழந்தையைப் போல் அன்றோ அந்தக் கண்ணன் நடத்தினான்! எவ்வளவு சாதுர்யமாகக் கம்சனைக் கொன்றான்? தனக்குக் கொடுக்கப் பட்ட அரசபதவியைக் கூடவன்றோ நிராகரித்துவிட்டான்! எவ்வளவு பாசம் கொண்டிருக்கின்றான் அவன் அன்னையான தேவகியிடம்! அந்தக் கூனிப் பெண் திரிவக்கரை...... ஆஹா, ஆம், அதுதான் சரி. ருக்மிணி ஒரு முடிவுக்கு வந்தாள்.

Sunday, May 16, 2010

சங்கரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி!

சங்கரா தொலைக்காட்சியில் காஞ்சி காமகோடி பீடம் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 75-வது ஆராதனை விழாவைப் பற்றிய நேரடி ஒளிபரப்பு வந்தது. குஜராத்தில் அஹமதாபாதில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். மாற்று மதங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் விழாவுக்கு அழைக்கப் பட்டு முதல் வரிசையில் மரியாதையுடன் உட்கார்த்தி வைக்கப் பட்டனர். வயலின் வித்துவான் திரு எல். சுப்பிரமணியம், தன் மகனோடு சேர்ந்து இன்னிசை மழை பொழிந்தார். வெங்காடாசல நிலையம் பாடல் மிக அருமையாக வாசித்தார். பக்கவாத்தியக்காரர்களும் அவரின் வேகத்துக்கு ஒத்துழைக்க ஒரு அருமையான கச்சேரி அரங்கேறியது.

பின்னர் எல். சுப்பிரமணியம் அவர் மனைவி கவிதா கிருஷ்ணமூர்த்தி, மகன், பக்கவாத்தியக் கலைஞர்கள் அனைவரும் கெளரவிக்கப் பட்டனர். பின்னர் திரு ஹரீஷ் என்பவர் முன்னுரை ஆற்றினார். குஜராத் பூகம்பத்தின் போது பாதிக்கப் பட்ட கட்ச் பகுதியில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஒரு நாளைக்குக் குறைந்த பக்ஷமாய் 700 மைல்கள் பிரயாணம் செய்து ஆங்காங்கே பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணத் தொண்டு ஸ்ரீமடத்தின் மூலமாய் நடக்க ஏற்பாடுகள் செய்ததைச் சுட்டிக் காட்டினார். அதில் குஜராத்தின் போரா முஸ்லீம்களும் அடங்குவார்கள் என்றும் அவர்களும் இன்றைய விழாவில் பங்கேற்கின்றனர் என்றும் கூறினார். குஜராத்தின் ஒவ்வொரு மூலை, முடுக்குக்கும் ஸ்ரீ ஸ்வாமிகள் விஜயம் செய்து பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ஸ்ரீமடத்தின் சார்பில் நிவாரணங்கள் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்ததையும், இது போல் ஸ்ரீ ஸ்வாமிகள் இந்தியா முழுமையும், நேபாளம் போன்ற நாடுகளிலேயும் மூன்று முறை சுற்றுப் பயணம் செய்து ஆங்காங்கே சமூகப் பணி ஆற்றியதையும் குறிப்பிட்டார். சிதம்பரத்திலிருந்து வந்திருந்த பட்டு தீக்ஷிதரும், சிவராம தீக்ஷிதரும் ஸ்ரீ ஸ்வாமிகளுக்குப் பொன்னம்பலத்தான் படமும், குஞ்சிதபாதமும், மாலையும் கொடுத்தனர். அதே போல் நரேந்திர மோடிக்கும் கொடுக்கப் பட்டது.


டாக்காவின் டாகேஸ்வரி கோயிலுக்கு ஸ்ரீஸ்வாமிகள் விஜயம் செய்தபோது அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா ஸ்வாமிகளை வரவேற்றுப் பேசியதையும் டாகேஸ்வரி கோயிலின் திருப்பணிக்கு அரசின் தரப்பிலிருந்து நிதி உதவி செய்ததையும், அங்கே உள்ள ஒரு வாயிலுக்கு ஸ்ரீஜெயேந்திரா தர்வாஜா எனப் பெயரிட்டிருப்பதையும் குறிப்பிட்டார். பின்னர் இலக்கியம், இசை, சங்கீதம், சமூகசேவை, சாஸ்திர விற்பன்னர்கள் எனத்தேர்ந்தெடுக்கப் பட்ட நபர்களுக்கு ஸ்ரீஸ்வாமிகளால் மரியாதைகள் செய்யப் பட்டு விருதுகள் வழங்கப் பட்டன. பின்னர் திரு நரேந்திரமோடி பேசினார். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்ரீராமன் என்ற பெயர் ஒவ்வொரு மாதிரி வழங்கப்பட்டாலும் அடிப்படையில் அனைத்துமே ஸ்ரீராமனின் பெயர் தான். இந்தியா முழுதும் இப்படிப்பிணைக்கப் பட்டுள்ளது என்ற மோடி ஸ்ரீஸ்வாமிகளின் தொண்டையும் பாராட்டிப் பேசினார். குஜராத் மாநிலத்திற்கு அடிக்கடி விஜயம் செய்து அங்கே அவர் நடத்திவரும் பணிகளையும் குறிப்பிட்டார்.

பின்னர் ஸ்ரீஸ்வாமிகள் சிற்றுரை வழங்கி அனைவரையும் ஆசீர்வதிக்க, எம். எஸ், அம்மாவின் குரலில் மைத்ரிம் பஜதே பாடல் முழங்கியது. கூடவே பாடின ஸ்ரீ ஸ்வாமிகள் பின்னர் வந்த தேசீய கீதத்தின் போதும் எழுந்து நின்று தாமும் கூடவே பாடினார். படங்கள் எடுத்திருக்கேன். காலம்பரதான் கணினியில் இணைக்கணும். காலம்பரச் சுட்டி கொடுக்கிறேன்.


படங்கள்

உப்பு வாங்கலையோ உப்பு!


அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?

அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!

மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.

அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.



அன்ன தானம்


எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர்.

குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.

பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.


எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகாமையில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.

Saturday, May 15, 2010

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே!

அரைச்ச மாவையே அரைக்கிறேன்னு சிலபேரோட விமரிசன்ம். அதோட பின்னூட்டங்களே வரதில்லை, யாரும் படிக்கிறதில்லைனு சில அறிவு ஜீவிகளோட கருத்து. இதே கருத்து ராமாயணம் எழுதும்போதும் வந்தது. பொதுவா மொக்கைனா யாரும் சீக்கிரமாப் படிச்சுட்டுப் போயிட்டே இருக்கலாம். இன்றைய அவசர உலகில் எல்லாமே அவசரத்துக்கு ஏற்றாற்போல் கொடுக்கணும்னு எதிர்பார்ப்பு. ஒரு சில பதிவுகள் அர்த்தமுள்ளதாய் சமூகத்துக்கு ஏற்றாற்போல் பிரச்னைகளை அலசும் வண்ணமாய் இருக்குனும் சிலர் கருத்து. அப்படியும் எழுதலாம் தான். ஆனால் சமூகத்தை மாற்ற முக்கியத் தேவை மனப்பக்குவம். அதை ஏற்படுத்த பக்தி ஒண்ணால் தான் முடியும். பலரும் புராணங்களையும், அதன் தத்துவங்களையும் கட்டுக்கதை, இடைச்செருகல்னு சொல்லிட்டுப் புறந்தள்ளும்போது அதில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்காட்டும் ஒரு சிறு முயற்சியே இது. உண்மையான பக்தியையே மூட நம்பிக்கை என்று விமரிசிக்கிறவர்களுக்கு அல்ல. ஏனெனில் பக்தி என்பது இதயத்தின் ஆழத்தில் இருந்து ஊற்றுப் போல் பொங்கி வரும் ஓர் உணர்வு. உணரத் தான் முடியும். இப்போ இது புதுசா இல்லை ஏற்கெனவே அரைச்ச மாவானு பார்ப்போமா? :))))))))

எங்க வீட்டிலே இட்லிக்கு ஊற வைக்கும்போது அஞ்சுக்கு ஒண்ணு, நாலுக்கு ஒண்ணுனு எல்லாம் போடறதில்லை. புழுங்கலரிசி 41/2 பங்குனா, பச்சரிசி அரைப்பங்கு சேர்ப்போம். (பச்சரிசியே போடாமல் இட்லிக்கு அரைப்பவர்களைப் பார்க்கிறேன். தோசைக்குனு பச்சரிசி அதிகம் போட்டு அரைப்பவர்களும் உண்டு.) நான் அப்படி எல்லாம் போடறதில்லை. பச்சரிசியும், புழுங்கலரிசியுமா மேலே சொன்னாப்போல் போட்டுட்டு, உளுந்து ஒண்ணு போட்டுட்டு, அரைக்கும் வழக்கம் உண்டு. இட்லிக்குனு தனியாவோ, தோசைக்குனு தனியாவோ அரைக்கிறதில்லை. மாவையும் கெட்டியா அரைச்சு வைத்தால் சீக்கிரம் புளிக்காது. தோசையோ, இட்லியோ செய்யும்போது வேணுங்கற மாவை எடுத்துத் தேவையான நீர் சேர்த்துக் கரைச்சுக்கலாம். அரைச்சதும் அதை தோசையோ, இட்லியோ எதுவேணாலும் செய்துக்கலாம். ஆகக்க்கூடி அரைச்ச மாவையே அரைக்கிறதில்லை. புது விகிதாசாரம், புதுப்பக்குவம். சாதாரண இட்லி, தோசைக்கே இப்படினா முக்கியமான விஷயம் எழுதும்போது இன்னும் கவனம் எடுத்துக்கணும் இல்லையா? அப்படிக் கவனம் எடுத்துக் கொண்டு செதுக்குவதே கண்ணன் கதைகள். படிக்கும் பலரும் அதில் உள்ள பல விஷயங்கள் தெரியாதென்றே கூறி வருகின்றார்கள். ஆகவே பாராட்டியோ அல்லது குறை கூறியோ பின்னூட்டம் வந்தாலும் வராவிட்டாலும் இவை அனைவரையும் சென்றடையவேண்டும் என்பதே என் எண்ணம்.

"போற்றுவார் போற்றட்டும்,
தூற்றுவார் தூற்றட்டும்,
எல்லாப் புகழும் கண்ணனுக்கே!"


திங்களன்று கண்ணன் வருவான்.
*************************************************************************************
Adventures in being a wife!

Respect his work. When you marry a man, you also marry his job. At times you may even feel that the job comes before you. It doesn’t really, but doing his work well means as much to a man as motherhood does to a woman—and for much the same reasons.

Learn the tricky and challenging art of absorption. A lot of unsuccessful wives seem to regard themselves as divinely-appointed receiving stations for love. They’re constantly concerned with how much attention and affection they’re getting. Certainly, a wife is entitled to love and loyalty. But she also has to be ready to absorb irritability on the part of her husband at times, flashes of displaced anger, discontent with his own performance. These things have to find an outlet somewhere. If a wife can think of herself as a kind of lightning rod that conducts fear and frustration harmlessly into the ground, not only will she be of inestimable value to her husband but she will grow tremendously as a person herself.

And remember:even when a man becomes successful, and knows it, some hidden, sensitive, unsure part of him continues to need the unquestioning support and loyalty of a loving woman.

Most men desperately need a sounding board against which to test ides, hopes, dreams, ambitions, problems, inner conflicts that they can’t resolve alone. They need a woman to whom they can confide their innermost thoughts and feelings without fear of ridicule or rejection.

Creative listening involves response, communication, exchange of ideas. But there are also times when a wife has to be silent, has to bit her tongue, hold back the sharp words that will turn an argument into a fight, or a bad situation into a worse one. No doubt her husband has an equal responsibility. But I think that a man’s job, basically, is to tame the world; a wife’s job is to control herself—and indirectly her husband.

Let him know that you need him. Not long ago an outraged young wife told me that she was fed up with her husband’s roving eye. She was going to tell him off, divorce him if he so much as looked at another woman. I said to her, ‘Do you really want a solution to all this? Then go to your husband. Ask him to put his arms round you. When he does say to him, ‘Darling, I’m hurt. I’m unhappy, and I think you know why. I’m your wife. Please hold me. Please help me.”That’s all you have to do. The admission of your need of his love will work miracles that no amount of anger can.”

Use your talents. Marriage need not limit your horizons. If you have a gift for design, or photography, or decorating, or writing poetry—any talent at all—don’t let it gather dust; use it to expand your marriage.

A brilliant girl I know, who got a first-class degree and went on to graduate work, now has three small children and all the attendant household chores. “I need every single thing I learned at University.”she maintains, ‘to understand my husband’s business, to run his home efficiently and to keep myself aware of what’s going on in the world.”

There are so many little commonsense don’ts that help a wife to make marriage an adventure. For example, don’t make an issue over small things. Overlook them and you will find that your opinion carries a lot more weight in big things.

Don’t be afraid to compromise—compromise doesn’t mean giving in. It’s simply an adult way of acknowledging that there are points of view other than your own in this complex world, and realizing that some of them may occasionally be right.

Don’t be alarmed if you and your husband differ about somethings. Marriage is a partnership, not a merger of identities. Don’t keep fretting over irretrievable mistakes. Everybody makes them. The best things to do is learn from them and them forget them.

There are may small commonsense do’s as well as don’ts. Expand and develop the art of sharing—not just the big, serious things, but the little, delightful things: the book you’re reading, the joke that you hear and hoard for him, the sunset you call him out to watch, the entrancing, unbelievable thing your three-year-old said.

Perhaps the simplest and most inclusive of all rules for successful wives is this; try to please your husband. Does he like neatness? You can be neat. Does he like friends around him? Learn to entertain . Is his job an exacting one? Make his home an oasis of quietness in a noisy world. Does he want you near?? Thank heaven--- and be available.

“To love and to cherish, till deat do us part-----“ this is the great, soul-satisfying role of a wife. And never make the mistake of thinking it a secondary role. Where the ship of matrimony is concerned, your husband may be the engine, but you’re the rudder--- and it is rudder that determines where the ship will go.

Friday, May 14, 2010

புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே!

நாலு நாளாய் இணையம் இல்லை. கேபிள் கட்டாகி இருந்திருக்கு. அதுக்கு முன்னாடியே ரங்க்ஸ் ஊருக்குப் போனதிலே புத்தக அலமாரியை ஒழிக்கிறேன் பேர்வழினு உட்கார்ந்தேனா?? புத்தகங்களிலே ஆழ்ந்து போயாச்சு. ஜஸ்டிஸ் ஜகந்நாதனைத் தொளாயிரத்து முப்பத்தி எட்டாம் முறையாகப் படிச்சு முடிச்சு, சி.ஐ.டி. சந்துருவை லக்ஷமாவது முறையாகவும் படிச்சிட்டிருக்கேன். இணைய இணைப்புக்குத் தொலைபேசித் தொந்திரவு கொடுக்கவும் கொஞ்சம் சுணக்கமே. ஏனென்றால் இந்தப் புத்தகங்களைத் தொட ஆரம்பிச்சா லேசிலே முடியாது.அதை முடிக்கணும்னு. நானும் நம்ம புதுகை மாதிரி ரங்க்ஸ் ஊருக்குப் போனால் ஏதோ நமக்குப் பிடிச்ச ஐடம் பண்ணிச் சாப்பிடலாம்னு தான் நினைச்சேன். ஆனால் பாருங்க, முதல்நாள் வெறும் சப்பாத்தியோட பொழுது போக்கியாச்சு. மறுநாள் புதினாத் துவையல், கத்திரிக்காய்க் கூட்டோட சரியாப் போச்சு. மிச்சம் இருந்த சாதத்திலே மோர் விட்டு ராத்திரிக்கு அருமைச்செல்லங்களுக்குப் போட்டாச்சு. ஆக மொத்தம் நாலு நாளாப் புத்தகம், புத்தகம், புத்தகம் தான். இன்னிக்குத் தான் ஏதோ கொஞ்சம் மனசு வந்து டாடா இண்டிகாம்காரங்களைக் கூப்பிட்டு ஒரு கத்துக் கத்தினேன். இப்போத் தான் வந்து இணைப்புக் கொடுத்துட்டுப் பரிசோதனையும் பண்ணிட்டுப் போனாங்க. வல்லியும், துளசியும் ஒரு நாள் இணையத்துக்கு வரலைனா எப்படியோ இருக்குனு சொன்னாங்க. அதையும் பார்க்கலாமேனு உள்ளூர ஒரு எண்ணம். வெளி ஊருக்குப் போறது வேறே விஷயம். வீட்டிலேயே இருந்துண்டு இணையம் இல்லாம இருக்கிறது வேறே இல்லையா? அந்தப் பரிசோதனையும் பண்ணியாச்சு.என்ன இருந்தாலும் புத்தகம் படிக்கிற சுவை தனிதான். அதுவும் எல்லா வேலையும் முடிச்சுட்டுப் படுத்துண்டு, எந்தத் தொந்திரவும் இல்லாம, கையில் புத்தகம் மட்டும்........ சொர்க்கம்! படிச்சதிலே மிகப் பிடிச்ச ஒரு கட்டுரையை இப்போப் பகிர்ந்துக்கப் போறேன். இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும். ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த கட்டுரைத் தொகுப்பு ஒண்ணு புத்தக வடிவில் 90களின் கடைசியில் வந்தது கையில் கிடைச்சது. அதிலே ஏதோ ஒரு பக்கம்னு பிரிச்சேன். இந்தக் கட்டுரை கிடைச்சது. கிட்டத் தட்டத் தமிழிலும் இதுபோன்ற ஒரு கதையை ஒரு தீபாவளி மலரில் படிச்சேன். அதன் விபரங்கள் பின்னால்: இப்போ இந்தக் கட்டுரையைப் படிக்கலாமா?? பகுதி பகுதியாவே கொடுக்கிறேன்.





Adventures in being a Wife

By Ruth Stafford Peale


As a clergumani’s wife, I’m asked to speak occasionally to church groups and women’sclube. Quite often, when I do, a woman will come up to me afterwards and bewail the monotony of her life. She feels trapped, she’s frustrated, her talents are withering on the vine. But what, she adds with a despairing shrug, can she do? After all, she’s only a wife.

Only a wife! At times I feel like taking the woman by the shoulders and shaking her. Here you are, I want to say, caught up in the most marvelous adventure a woman can experience, and you don’t even know it.

Thirty-six years of being awife have utterly convinced me that no job, no hoppy, no activity on earth can compare with the drama and exhilaration of ling with a man, loving him, doing your best to understand his infinitely complex mechanism and helping to make it hum and sing and soar the way it was designed to do.

Is this easy?? Of course not. It takes skill and selflessness. You have to use your heart and your head. But it can be done, and when it is…… well, what is adventure?? It is the discovery of new powers and new dimensions, the opportunity for self-testing, the happiness that comes fromhigh achievement. These are the promises hidden in every marriage—if only a woman will reach out and claim them.

If I were invited into a young wife’s kitchen to have a cup of coffee and talk about what she might do to make and keep her marriage exciting, here are some of the suggestions I would offer.

Study your man, as if he were a strange and rare and fascinating animal- which indeed he is!! Study him ceaselessy, because he well be constantly changing. Take pride in his strengths and achievements, buy analyse his areas of weakness, too. Before my two daughters were married, I told them:”You have fallen in love. You’re dazzled by a man’s brilliance, his confidence, his charm. You have yet to encounter his uncertainties and inadequacies. But this is where you can relly love him, really help him, really be a wife.”

(to be continued)

வசதிக்காக ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையை அப்படியே தட்டச்சி இருக்கேன். மொழி மாற்றம் செய்தால் கட்டுரையின் ஜீவனை என்னால் அப்படியே கொண்டுவரமுடியுமா? சந்தேகமா இருந்தது.

Monday, May 10, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

மதுராபுரி எப்படிக் கிடைத்தது??



“ம்ம்ம்ம்ம்?? போதுமான உணவுப் பொருட்களும் இல்லை, படைகளும் தயாராக இல்லை. எனில் முற்றுகையை எவ்விதம் எதிர்கொள்வது? கிருஷ்ணன் என்னமோ மதுராவின் இளைஞர்களுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பதாய்க் கேள்விப் பட்டேனே?” உக்ரசேனர் கேட்க, வசுதேவரோ அந்தப் படை எல்லாம் இத்தனை பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும் அளவு பலமில்லாதது எனத் தெரிவித்தார். கண்ணன் எழுந்து நின்று உக்ரசேனரை வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிய வண்ணம், “அரசே, போர் என்பது வெறும் உடல்பலத்தால் மட்டுமின்றி, புத்தியாலும் இதயத்தாலும் போரிடவேண்டிய ஒன்று. அப்படிச் சில இளைஞர்கள் மதுராவைக் காக்கவேண்டித் தங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராய் இருக்கின்றனர்.” என்றான்.

“யாரெல்லாம் நமக்கு உதவ முடியுமோ அவர்களுக்கு எல்லாம் இப்போது நம் உதவிக்கு வரமுடியாததொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாசுதேவ கிருஷ்ணா, உன்னைத் தான் நம்பி உள்ளோம். ஏதேனும் வழி இருக்கிறதா?”

“அரசே, இப்போது நாம் செய்யவேண்டியது ஒன்றே தான். நாம் மிகப் பலவீனமான நிலையில் இருக்கிறோம். மதுராவையும் அதன் மக்களையும் காக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஜராசந்தன் கேட்டிருப்பது என்னையும், பலராமனையும் மட்டுமே. நாங்கள் இல்லை எனில் அவன் மதுராவுக்குள் நுழைய மாட்டான். நாங்கள் இங்கே இருந்தால் மதுராவுக்குப் பல வகைகளிலும் நாசம் ஏற்படும். ஆகவே நாங்கள் இருவரும் நகரை விட்டுத் தொலை தூரம் சென்று விடுகிறோம். நாங்கள் இங்கே நகருக்குள் இல்லை என்பது தெரிந்தால் ஜராசந்தன் முற்றுகையைக் கைவிட்டு எங்களைப் பின் தொடருவான்.” என்றான் கண்ணன்.

“ஆஹா, இது என்ன?? எங்கே செல்வீர்கள் நீங்கள் இருவரும்? அவன் மஹா சக்கரவர்த்தி தெரியுமா? அவனின் செல்வாக்கும், பராக்கிரமமும், சஹ்யாத்ரி மலைகளையும் தாண்டி பரந்து விரிந்துள்ளது. அவனுக்கு நீங்கள் எதிரி என்பது தெரிந்தால்????” உக்ரசேனருக்கு நினைக்கவே நடுங்கியது. அக்ரூரரோ, “ஆனால் அவன் நெருங்கிவிட்டானே? நாளைக்குள் மதுராவுக்குள் நுழைந்துவிடுவான் போலிருக்கிறதே?” என்றார். கண்ணன்,”இதோ உடனே நாங்கள் கிளம்பிவிடுகிறோம். விகத்ரு, நீங்கள் சொல்லுங்கள், இந்தப் பரந்த பூமியின் எல்லாப் பாகங்களுக்கும் சென்றவர் நீர். உமக்குத் தெரியும் எங்கே சென்றால் எங்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என. சொல்லுங்கள்.” என்றான் கண்ணன்.

“இதை விட நல்ல முடிவு எதுவும் இல்லை.” அனைவரும் ஒரு மனதாக ஆமோதிக்க, கிருஷ்ணனின் தந்தை வசுதேவனுக்கோ கண்ணன் எங்கே செல்லமுடியும் என்று கவலை. சேதிநாட்டு அரசனான தாமகோஷன் வசுதேவனின் தங்கை கணவனாக இருந்தும் ஜராசந்தனின் நண்பனாகிவிட்டபடியால் கண்ணனுக்கு உதவ முடியாது. ஆகவே கண்ணன் சேதிநாட்டுப் பக்கம் செல்ல முடியாது. விதர்ப்பநாட்டு இளவரசன் ருக்மியோ கண்ணனைக் கண்டாலே கொல்லும் வெறியோடு உள்ளான். ஆகவே அங்கும் செல்லமுடியாது. மற்ற நாடுகளோ ஏதோ ஒரு வகையில் ஜராசந்தனுக்குக் கட்டுப்பட்டுள்ளது. வசுதேவன் கவலையில் ஆழ்ந்தான். கண்ணனோ அவனைத் தேற்றினான். ஜராசந்தன் நியாயமாகவும், தர்மத்தின் வழியிலும் செல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய கண்ணன், அவனுடைய அழிவு தனக்குத் தெரிவதாயும் கூறினான். ஆனால் அவனை அழிக்கவேண்டிய தக்க தருணம் இன்னும் நெருங்கவில்லை என்பதால் தாமதிக்க வேண்டி இருக்கிறது என்ற கண்ணன், மீண்டும் தாங்கள் எங்கே சென்றால் பத்திரமாய் இருக்க முடியும் எனக் கேட்டான்.

அதற்கு விகத்ரு, விண்ணைத் தொடும் சஹ்யாத்ரி மலைத் தொடரின் மறுபக்கம் கரவீரபுரம் என்னும் நகரம் இருப்பதாகவும், யாதவ குலத்து முன்னோர்களில் ஒருவனான மாதவன் என்பவனால் அங்கே ஒரு நாடு ஸ்தாபிக்கப் பட்டதாகவும், இந்த நகரம் அதன் வழித்தோன்றல்களின் ஒருவனான பத்மவர்மாவால் ஏற்படுத்தப் பட்டதாகவும், தற்சமயம் அங்கே ஸ்ரீகாலவன் என்னும் அரசன் ஆண்டு வருவதாகவும் கூறினான். ஸ்ரீகாலவன் எவ்வகையில் நமக்கு உறவினன் ஆகின்றான் என பலராமன் கேட்க, யாதவர்களின் முன்னோர்களைப் பற்றிக் கண்ணனும் தெரிந்து கொள்ள ஆசைப்பட வசுதேவன் கூற ஆரம்பிக்கிறான்.

யாதவர்கள் எவ்வளவு தூரம் பரந்து விரிந்திருக்கிறார்கள் என ஆச்சரியமடைந்தான் கண்ணன். வசுதேவன் கூறினார்: யயாதியின் பிள்ளைகளில் ஒருவனான யதுவின் வம்சாவழியான நம் குலத்து முன்னோர்களில் ஹர்யஷ்வா என்னும் அரசன் மதுவனத்தை ஆக்கிரமித்திருந்த மது என்னும் துர்த் தேவதையின் மகளான மதுமதியை மணக்க நேரிட்டது. அதற்குப் பரிசாக அவனுக்கு அநர்த்தம், சுராஷ்டிரம் என்ற நாடுகள் பரிசாய்க் கிடைத்தது. அவனே கிரிநகரை நிர்மாணம் செய்தான். யாதவ குல இளவரசிகள் ஐவரை மணந்த நாக குல அரசன் ஆன தூம்ரவர்ணனுக்கு அவர்கள் மூலம் ஐந்து இளவரசர்கள் பிறந்தனர். அவர்கள் முசுகுந்தன், இவன் மூலம் விந்திய மலையில் மாஹிஷ்மதி அரசும் பூரிகாவும் நிர்மாணிக்கப் பட்டது. பத்மவர்மன் மூலம் கரவீரபுரம் நிர்மாணிக்கப் பட்டது. சரஸன் மூலம் க்ரெளஞ்சபுரியும், ஹரிதா மூலம் முத்துக்களும், பவளங்களும் கிடைக்கும் தீவுகளும், மாதவன், நமது முன்னோர்களில் ஒருவன் மூலம் இந்த அரசும் கிடைக்கப் பெற்றோம். மாதவனின் காலத்தில் தான் ஸ்ரீராமனின் சகோதரன் ஆன ஷத்ருகனன் மதுவனத்தை ஆண்டு வந்த கொடிய அரக்கத் தன்மை வாய்ந்த மதுவின் பிள்ளைகளை அழித்துவிட்டு மதுராவை நிர்மாணம் செய்தான். பின்னால் நமது மாதவரின் வழித்தோன்றலான பீமன் என்பவனால் மதுராபுரி ஷத்ருகனின் வாரிசுகளிடமிருந்து பெறப்பட்டு நம் கைக்கு வந்தது. இதுவே மதுரா நமக்குக் கிடைத்த முறை” என்றான் வசுதேவன்.

Saturday, May 08, 2010

அநன்யா அக்கா மாட்டி விட்டுட்டாங்களே!

இது என் கணவரோட அப்பாவின் அப்பா. 1940கள் வரையிலும் பிரபலமானவராக இருந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர். இவரின் பெரிய மகனும், என் பெரிய மாமனாரும் ஆன பாபு என்ற வெங்கட்ராம ஐயரும் புல்லாங்குழல் இசைக்கலைஞரே. ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சில சோகங்களால் அப்புறம் வாசிக்கிறதையே விட்டுட்டார்னு சொல்வாங்க. எனக்குத் தெரிஞ்சு நான் கல்யாணம் ஆகி வந்ததும், அவங்க வீட்டுக்கு முதல் முறை போனப்போ வாசிச்சார். புதுசா குடும்பத்துக்கு முதல் முதலாய் மறுமகள் வந்திருப்பதால் வாசிச்சார்னு சொல்வாங்க. அதன் பின்னர் அவரும் புல்லாங்குழலைத் தொட்டதில்லை. நானோ அப்படி ஒண்ணும் சங்கீதம்னால் உயிரைக் கொடுக்கும் குடும்பத்தில் பிறக்கலைதான். வாழ்க்கைப்பட்டதோ சங்கீதக் குடும்பத்திலே. என் கணவரின் தாத்தா அந்தக் காலங்களிலே பிரபலமான சங்கீத மேதை. அந்தக் காலத்தில் பரவாக்கரை வேணுகானம் ஸ்ரீநிவாசையர் என்றால் தெரியாதவங்க இல்லைனு இப்போ எண்பது வயசுக்காரங்க எல்லாரும் சொல்லுவாங்க. இவரிடம் சங்கீதம் படித்த பிரபலங்களில் ஃப்ளுட் நவநீதம் அம்மாள், செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்(குருகுலவாசம்போல்), மஹாராஜபுரம் சந்தானம் (சில காலம் மட்டும்) என்று என் கணவரோட அத்தை மகன்கள் இப்போவும் கூறுகின்றனர். அதில் ஒருஅத்தை மகன் சங்கீதத்திற்கெனத் தளம் அமைத்து, மேலே கண்ட தாத்தாவின் படத்தை அதில் போட்டிருப்பதாய்க் கூறுகின்றார். ஆனால் எங்க கண்ணில் அந்தத் தளம் இன்று வரை படவில்லை. ஃப்ளூட் நவநீதம்மாள் மட்டுமே ஒரு முறை தினமணி கதிரில் சங்கீத மலரில் இவர் பெயரைக் குறிப்பிட்டு நன்றாகப்பிரபலம் ஆகிக்கொண்டிருந்த சமயம் திடீரென இறந்து போனதைக் குறிப்பிட்டிருக்கிறார். அம்மா வீட்டில்(அம்மாவின் பிறந்த வீடு) படிக்கவோ, பாடவோ, ஆடவோ எதற்கும் தடை இல்லை. ஆனால் அப்பாவைக் கல்யாணம் செய்துண்டு வந்ததும் அம்மா பாடினாள் என்றால் எனக்கு விபரம் தெரிஞ்சு என் தம்பியைத் தூங்க வைக்க மட்டுமே. அதுவும் அப்பா இல்லாத நேரம் மட்டும். அப்பாவோ வீட்டில் எங்களைப் பாடவேண்டாம்னு சொல்வாரே தவிர, கச்சேரிகளுக்கு அவர் மட்டும் போவார். சங்கீதத்தோடு எனக்குத் தொடர்பு இது தான். அம்மா பாடும் தாலாட்டுப் பாடல், "ஜகதீஸ்வரி நம்பினேன், ஜகதாம்பிகே!" என்று தொடங்கும் பாடல் தான். அம்மாவின் கெஞ்சும் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது.

அதுக்கப்புறமாய் நான் அதிகமாய்க் கேட்டது பெரியப்பாவின் பஜனைகளில் பாடும் பாட்டுகள். ஐயப்பன் சமாராதனைகளில் பாடும் பாடல்கள். வீரமணியெல்லாம் அப்போ பிரபலமே இல்லை. மதுரை மீனாக்ஷி கோயில் ந்வராத்திரி விழாக்களில் பாடப்படும் பாடகர்களின் பாடல்கள். அவற்றில் சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் "சின்னஞ்சிறு பெண்போலே" பாட்டு. அழ வைக்கும் பாட்டு அது. அதுவும் ஒரு முறை ஆடி வீதியில் பாடும்போது, "சிவகங்கைக் குளத்தருகே" என்பதைப் "பொற்றாமரைக் குளத்தருகே" என்றும் "அன்னை சிவகாமி"யை "அன்னை மீனாட்சி" என்றும் பாடினார். அப்போது கிடைத்த standing ovationஐ சமீபத்தில் அருணா சாயிராமிற்குக் கிடைத்ததோடு ஒப்பிடலாம். தினமும் விடிகாலையில் எங்க வீட்டிற்குப் பின்னர் மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி சேரும் இடத்தில் இருந்த மதுரை சோமு வீட்டில் இருந்து அவர் பாடுவது கேட்கலாம். நாங்க இருந்த தெருவிலே முதல் வீட்டிலே தான் சமீபத்தில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் பாடகர் ஜி.எஸ். மணி இருந்தார். அவரும் காலை,மாலை இரு வேளையும் சங்கீதப் பயிற்சி செய்வார். ஹரிதாஸ்கிரி மதுரை வரும்போதெல்லாம் இவங்க வீட்டிலே தான் தங்குவார். ஹரிதாஸ்கிரியின் பஜனைப்பாடல்கள் பற்றி தக்குடு எழுதி விட்டார். கொஞ்சம் தள்ளி வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளைத் தெருவில் சேதுராமன், பொன்னுச்சாமியின் நாதஸ்வர ஆலாபனையைக் கேட்டுண்டே பள்ளிக்குச் சென்ற நாட்கள் உண்டு. இத்தனையையும் மீறிக்கொண்டு தான் சங்கீதம் கேட்கும் ஆர்வம் வளர்ந்தது, அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல் தான். வீட்டிலே ரேடியோ எல்லாம் கிடையாது. பக்கத்து போர்ஷனில் வைப்பாங்க, அங்கே போய்ச் சத்தமா வைக்கச் சொல்லுவோம். பல சினிமாப் பாடல்களும் அப்படிக் கேட்டவையே.

பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தபோது என் மாமனார் பாடத் தெரியுமானு கேட்க, குறைந்த பக்ஷம் மறுமகளுக்காவது சங்கீத ஞானம் இருக்கணுமேனு அவர் நினைச்சார் போல. அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் குடும்பம் நடத்தப் பாட்டு தெரியாட்டி என்ன?னு கொஞ்சம் பயத்தோடயே பச்சைக்கொடி காட்ட, நான் விடாமல், "ஆடுகின்றானடி தில்லையிலே" பாட்டை என் பெரியம்மா பெண்ணோடு பாடிக் காட்டிட்டுத் தான் விட்டேன். அப்புறமாய் அவர் பாட்டுனு எழுதிக் கூடக் காட்டக்கூடாதுனு என்கிட்டே வேண்டிக் கேட்டுட்டதெல்லாம் தனிக்கதை. தனியா வச்சுப்போம் அதை. அதுக்கப்புறம் இங்கே வந்ததும் சங்கீதம் கேட்கும் ஆர்வம் மட்டும் வளர்ந்ததே தவிர, குடும்பச் சூழ்நிலைகளால் சங்கீதம் கற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போவே ஐம்பது ரூபாய் ஃபீஸ் வாங்குவாங்க. எங்களுக்கு அது பெரிய தொகை. அதனால் கேட்பதோடு சரி. ஆனால் இங்கே சங்கீதம் கேட்கத் தடை இல்லை என்பது எனக்கு ஒரு வரமாக அமைந்தது. இந்தச் சூழலில் எனக்குத் தெரிந்த சில சங்கீத அற்புதங்கள் எத்தனையோ இருக்கு.

எம்.எஸ்.அம்மாவின் கச்சேரிகளைப் பற்றி எல்லாம் நான் சொல்வது சரியாக இருக்காது. அதே போல் எம்.எல்.வி. டி.கே.பட்டம்மாள் அம்மாள் போன்றவர்களின் கச்சேரிகளும் அருமையாக இருக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் தனித்தன்மையைக் காட்டி இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் விட அப்போது எனக்கு ரொம்பப் பிடிச்சது என்றால் என்.சி.வசந்தகோகிலம் அவர்களின் பாடல்களே. முன்னெல்லாம் அகில இந்திய வானொலியில் வாரம் ஒருநாள் இவங்களோட பாடல்களைப் போடுவாங்க. இன்றைய தலைமுறையினருக்கு இவங்க பேரு தெரியுமானே சந்தேகம். அப்புறமாய்த் தென்னிந்தியக் கல்யாணப் பாடல்களைத் தொகுத்து அகில இந்திய வானொலி வெளியிட்டதொரு தொகுப்பும் மிகப் பிடிக்கும். எம்.எஸ். அம்மா பாடிய ஸ்ரீநாமநவமணிமாலாவும் அற்புதமானதொரு தொகுப்பு. பின்னர் வந்த பாடகர்களில் பாம்பே சகோதரிகள், அருணா சாயிராம் போன்றவர்கள் பிடித்தமானவர்கள்.

அருணா சாயிராமின் "அபங்க்" கேட்டவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும். அந்த husky voiceல் அவர் தன்னை மறந்து இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு கண்ணை மூடிக் கொண்டு பாடும்போது, அதுவும் மராட்டி நன்கு தெரியுமாதலால், நன்கு பாவத்தோடு பாடுவார். அப்போது வரும் உணர்ச்சிப் பிரவாகத்தை வடிக்க வார்த்தைகள் கிடையாது. விஷமக்காரக் கண்ணன் பாடலையும் அருணா சாயிராம் போல் யாராலும் பாட முடியாது. கண்ணனின் விஷமங்களைக் கண்ணெதிரே காட்டுவார். அதே போல் மஹாராஜபுரம் சந்தானம் அவர்களின் "ஆடாது அசங்காது வா!" பாடலின் அழகை அவர் பாடுவது போல வேறு யாராலும் பரிபூரணமான உணர்வு பொங்க, கண்ணன் எதிரேயே வருவது போல் பாட முடியாது. கண்ணை மூடிக்கொண்டு அந்தப் பாடலைக் கேளுங்கள். மயில் பீலி அசைய, கால் சலங்கை சப்திக்க, தலையில் பின்னிய சடை அவிழ்ந்து தொங்க, நெற்றித் திலகம் கலைந்திருக்க, தூக்கக் கலக்கத்தில் கண்ணைக் கசக்கிக்கொண்டு, கண்ணன் தளர் நடை நடந்து வருவான்.

அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை, வதன் கி சிட்டி ஆயி ஹை" எப்போ கேளுங்க, எத்தனை முறை கேளுங்க, எங்கே கேளுங்க, பெருகி வரும் கண்ணீருக்கு அணை போட முடியாது. இதிலே வரும் "தேரே பின் ஜப் ஆயி திவாலி" என்ற வரிகளை நினைக்காத தீபாவளி இல்லை.

Chitthi Aayi Hai Aayi Hai
Chitthi Aayi Hai
Chitthi Aayi Hai Vatan Se
Chitthi Aayi Hai
Bade Dinon Ke Baad,
Hum Bevatnon Ko Yaad
Vatan Ki Mitti Aayi Hai,
Chitthi Aayi Hai ...

Upar Mera Naam Likha Hai,
Andar Ye Paigham Likha Hai
O Pardes Ko Jaane Vaale,
Laut Ke Phir Na Aane Vaale
Saat Samundar Paar Gaya Tu,
Humko Zinda Maar Gaya Tu
Khoon Ke Rishte Todh Gaya Tu,
Aankh Mein Aansoo Chhodh Gaya Tu
Kum Khaate Hain Kum Sote Hain,
Bahut Zyaada Hum Rote Hain
Chitthi Aayi Hai ...

Sooni Ho Gaeen Shehar Ki Galiyaan,
Kaante Ban Gaeen Baag Ki Kaliyaan
Kehte Hain Saawan Ke Jhule,
Bhool Gaya Tu Hum Nahin Bhoole
Tere Bin Jab Aayi Diwali,
Deep Nahin Dil Jale Hain Khaali
Tere Bin Jab Aayi Holi,
Pichkaari Se Chhooti Goli
Peepal Soona Panghat Soona
Ghar Shamshaan Ka Bana Namoona
Fasal Kati Aayi Baisakhi,
Tera Aana Reh Gaya Baaki
Chitthi Aai Hai ...

Pehle Jab Tu Khat Likhta Tha
Kaagaz Mein Chehra Dikhta Tha
Bund Hua Yeh Mel Bhi Ab To,
Khatam Hua Yeh Khel Bhi Ab To
Doli Mein Jab Baithi Behna,
Rasta Dekh Rahe The Naina
Maein To Baap Hoon Mera Kya Hai,
Teri Maan Ka Haal Bura Hai
Teri Biwi Karti Hai Seva,
Soorat Se Lagti Hai Bewa
Toone Paisa Bahut Kamaaya,
Is Paise Ne Desh Chhudaaya
Panchhi Pinjra Todh Ke Aaja, ஹிந்தியிலே போட்டால் எல்லாராலும் படிக்க முடியுமா தெரியலை, அதான் ஹிங்கிலீஷில் போட்டுட்டேன். கொஞ்சம் தப்பு இருக்கு சில வரிகளிலே, அதைச் சரி பண்ணறதுக்கு முடியலை. என்றாலும் கடைசி மூன்று வரிகள், "தூனே பைசா பஹுத் கமாயா, இஸ் பைசே நே தேஷ் சுடாயா, பஞ்சி பிஞ்சரா தோட் கே ஆஜா" கண்ணீர் கொட்ட வைக்கும் வரிகள். எப்போக் கேட்டாலும் அழுதுடுவேன், இப்போக் கூட அழுகையை அடக்க முடியாமல் தான் எழுதறேன்.அடுத்து ஆங்கிலப் பாடல்களில் எப்போவும்போல No New Years Day பாடலும் அதன் வரிகளும் இப்படியே கண்ணீரை வரவழைக்கும். இதே போல ஹிந்தித் திரைப்பட்ம் ஒன்றில் திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லப் போகும் பெண்ணுக்கு அவள் சகோதரிகள் பாடின பிதாயி என்னும் விடை கொடுக்கும் பாடலும் பிடிக்கும் என்றாலும் இப்போல்லாம் அந்தப் பாடலை அதிகம் கேட்கமுடியாததால் அதன் வரிகள் நினைவில் இல்லை. யாரது அங்கே செக்ரடரி?? நம்ம அதியமானைக் கேளுங்க சொல்லுவார்!

அடுத்து தக்குடு புகழறாப்போல விசாகா ஹரியெல்லாம் முழு நேரக் கச்சேரியிலே ஒண்ணும் சோபிக்கலை. கதா காலட்சேபம் வரையிலும் ஓகே. சமீபத்திய வரவில் சேலம் காயத்திரி நன்றாய்ப் பாடுகிறார். காயத்ரி வெங்கடராகவன், காயத்ரி கிரீஷ் போன்றவர்களின் கச்சேரிகளும் நன்றாக அமைகின்றன. என்றாலும் இளைய தலைமுறைக் கலைஞர்களை எடுத்துக்கொண்டால் செளம்யா, பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்களே நினைவில் நிற்கின்றனர். அதிலும் பாம்பே ஜெயஸ்ரீ இப்போதெல்லாம் பக்தியை உள்முகமாய் அநுபவித்துக்கொண்டு பாடுவதை நம்மால் உணர முடிகிறது. இங்கே செளம்யாவைப் பற்றி எழுதி இருக்கிறேன். பார்க்கவும். அடுத்து நித்யஸ்ரீ மஹாதேவன் அருமையாகத் தான் பாடுகிறார் என்றாலும் ஆரம்பகாலங்களில் ரொம்பவே மேல் ஸ்தாயியில் குரலை எடுத்துவிட்டுக் கொஞ்சம் சத்தம் அதிகமாவே இருந்து வந்தது. சமீப காலமாகக் குரல் நன்கு பண்பட்டு, அவரும் சிரமப் படாமல், நமக்கும் கேட்க சிரமமில்லாமல் பாடுகிறார். எனக்கு இவரோட குரலில் பாரதியார் பாடல்கள் அனைத்தும் கேட்கப்பிடிக்கும். உணர்ச்சி பொங்கப் பாடுவார்.

விஜய்சிவா பாடல்களை அநாயாசமாகப் பாடுவார். இவரின் கச்சேரி எப்போதுமே அருமை, இனிமை, எளிமை. எனக்கு இவர் குரலில் பிடிச்சது காவடிச் சிந்து தான். அதிலும், "கிளியேஏஏஏ' என்று ஏகாரம் கொடுத்துவிட்டுக் "குறுநகை போதுமடீஈஈஈஈ" என்று முடிக்கும்போது மறுபடி, மறுபடி கேட்க மாட்டோமா என்று இருக்கும். ஹிஹிஹி, டி.எம்.கிருஷ்ணா பாடினால், பக்கவாத்தியக் காரர்கள் எல்லாம் மேடை தனியே போடச் சொல்லுவாங்கனு நினைக்கிறேன். முதல்லே பார்க்கிறச்சே, அவர் மிருதங்கக்காரர்பக்கம் கையை நீட்டினாரா?? சரி, மிருதங்கத்தை வாங்கி வாசிக்கப் போறாரோனு நினைச்சேன். அடுத்துப் பார்த்தால் வயலினையும் கேட்டுட்டார். அதுக்கும் அடுத்து மைக் முன்னாடியே கையை நீட்டினார். ஒரு நிமிஷம் பயந்துட்டேன். நல்லவேளையா மைக் இடிக்கலை. மைக் அமைப்பாளர்கள் விஷயம் தெரிஞ்சவங்க போல. அவர் கையை நீட்டினால் இடிக்காத மாதிரி மைக் அமைச்சிருந்தாங்க. பக்க வாத்தியமும் அப்படிச் செய்யக் கூடாதோ? மற்றபடி அவர் குரலில் உள்ள கம்பீரமும், அநாயாசமாகப் பாடும் கீர்த்தனைகளையும் ஒரு பத்தடி தள்ளி நின்னு (டிவினால் கூட, பயம்மா இருக்கே? :P) ரசிப்பேன். தக்குடு அளவுக்கு ராகங்களை எல்லாம் நெட்டுருப் போட்டு வைச்சுண்டு எழுதாட்டியும் ஓரளவுக்காவது எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்.

இவ்வளவும் சொல்லிட்டுத் தமிழ் சினிமாப் பாடல்கள் பத்திச் சொல்லலைனு நினைக்கிறவங்களுக்கு. பழைய பாடல்கள் எல்லாமே பிடிக்கும். சமீபகாலமாய் சினிமா சங்கீதம் கேட்கறதில்லை. அல்லது என்னால் கேட்கமுடியலை. என்றாலும் கடந்த பத்து வருஷங்களுக்குள்ளாக வந்த படங்களில் கஜினி படத்தின், "ஒரு மாலை இளவெயில் நேரம்" பாட்டும், சூர்யாவின் முதல் படம்??பூவெல்லாம் கேட்டுப் பார்?? தெரியலை எந்தப் படம்னு, ஆனால் பாட்டு மட்டும் நினைவில் இருக்கு."என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்," அதுக்கு மேலே சமீபகாலப் பாடல்கள் மனசில் எதுவும் நிற்கவே இல்லை. எனக்குத் தான் ரசனை இல்லையோ என்னமோ????????????


என்னிடம் மாட்டிக்கொண்டவர்கள்!

ஆஹா, அபி அப்பா ஒரு பின்னூட்டத்தைக் கொடுத்துட்டு மாட்டிக்கொண்டார்
அடுத்து நான் அழைக்க இருப்பது திரு சூரி சார் அவர்கள்,
அப்புறமாய் திராச அவர்களைக் கூப்பிட எண்ணம் ஆனால் அவர் வசதி என்னமோ தெரியலை. என்னது அம்பி அங்கிளா?? வேண்டாம், வேண்டாம், தக்குடுவுக்கு மேலே அலட்டல்! அம்பி அங்கிள் வேண்டாமே! வேறே யாரு இருக்காங்க??? ரா.ல.??? கேட்டுப் பார்க்கலாம், ம்ம்ம்ம்??? வல்லி சிம்ஹன்?? பதிவு போட நேரமிருக்குமா? குழலினிது, யாழினிது என்பர் தம் பேத்தி மழலைச் சொல் கேளாதவர்னு இருக்காங்களே? முடியுமா?? துளசி கோபால், அவங்க சென்னையிலே அநேகமா எல்லா சபாவுக்கும் போயிட்டு வந்துட்டாங்க. அவங்களைக்கூப்பிடலாம்/

அபி அப்பா நல்லா வசமா மாட்டிக்கிட்டார்
சூரி சார், தக்குடுவைப் புகழ்ந்ததுக்கு தண்டனை
திராச சார், சுப்புடுவோட சிஷ்யர்ங்கறதை நிரூபிங்க
ரா.ல. என்ன இஷ்டமோ எழுதுங்க.
வல்லி, முடிஞ்சதை ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
துளசி வெளுத்துக்கட்டுங்க!

ஆஹா, நானும் கூப்பிட்டுட்டேனே!

Friday, May 07, 2010

சிரிப்பாய்ச் சிரிக்கிறோமே!

"சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்,
பாட்டினால் என் குரல் ஆழ்ந்து ஒலிப்பதால்,
இவ்வளவு நீண்ட காலம் என் வேதனையைப்
பொறுத்திருப்பதால் நான் துன்புறுகிறேன் என்று
நீ நினைக்காமல் போனாயா?

சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்
என்னுள்ளிருந்து வருகின்ற அழுகை உனக்குக்
கேட்காமல் போயிற்றா?
நடனத்தில் என் பாதங்கள் திளைத்திருப்பதால்
நான் செத்துக் கொண்டிருக்கிறேன் என்று
உனக்குத் தெரியாமல் போயிற்றா?"

இந்தக் கவிதையை எழுதியது நீக்ரோக் கவிஞர் லாங்ஸ்டன் ஹ்யூஸ் என்பவர். இந்தக் கவிதை ஏற்கெனவே நாலு வருஷம் முன்னாடி ஒரு பதிவிலே போட்டுட்டேன், இப்போத் திரும்பப் போடணும்னு ஒரு ஆசை, அநன்யா கேட்ட சங்கிலிப் பதிவில் போடவேண்டிய பாடல்கள் தொகுக்கவேண்டிப் பழைய பதிவுகளிலே அது பற்றிக் குறித்திருந்ததைப் பார்க்கவேண்டிப் பழைய பதிவுகளைக் கிளறிப் பார்த்துக்கொண்டிருந்தப்போ கிடைச்சது. ஒரு விதத்தில் பொருத்தமாகவும் இருக்கு.

Wednesday, May 05, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

ஜராசந்தன் வருகின்றான்!

தோல்வியே காணாத ஜராசந்தன் தன் வாழ்நாளில் இப்படிப் பட்டதொரு பெரிய அடியை வாங்கியதில்லை. அவன் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க ஆரம்பித்ததில் இருந்து கம்சன் அவனுக்குத் துணையாக நின்று ஜராசந்தனின் அனைத்துக் கொடூரமான நடவடிக்கைகளுக்கும் துணை போயிருக்கின்றான். தன் பங்குக்கு யாதவ குலத்தையே இரண்டாய்ப் பிரித்து உடைத்தும் இருக்கிறான். அவனுடைய ஈடு இணையற்ற வீரத்தைக் கண்டே தன்னிரு மகள்களையும் கம்சனுக்குக் கொடுத்தான் ஜராசந்தன். இப்போது அந்தப் பெண்கள் இருவரும் இளம்பருவத்திலேயே விதவையாகிவிட்டனர். அதோடு ஜராசந்தனின் வம்சத்தைச் சேர்ந்த வ்ருதிர்கனனும் அந்தக் கிருஷ்ணனாலும், அவன் அண்ணனாலும் துண்டு துண்டாய்க் கொல்லப் பட்டிருக்கிறான். ஆஹா, இப்படி ஒரு அவமானமா எனக்கு? உண்மையாகவே மீசை கோபத்தில் துடித்தது ஜராசந்தனுக்கு. கோபம் தலைக்கு மேல் ஏறியது. பதினாறு வயது தாண்டாத இரு இளம் சிறுவர்கள், அதுவும் மாடு மேய்க்கும் சிறுவர்கள், அவர்கள் கம்சனின் மறுமகன்களாம், அவர்களால் கொல்லப் பட்டிருக்கிறானே என் அருமை மறுமகன். அதோடு மட்டுமா? ஜராசந்தன் மதுராவின் காவலுக்கென அனுப்பி இருந்த பெரும்படையும், அதன் தலைவர்களும் அங்கிருந்த யாதவர்களால் அவமானம் அடைந்து திரும்பி இருக்கின்றனர். அவர்கள் திரும்பியதும் மதுராவின் நடந்ததைப் பற்றிக் கதை கதையாக வர்ணிக்கின்றனர். போறாததுக்கு, இந்த ருக்மி, விதர்ப்ப நாட்டுப் பட்டத்து இளவரசன் நேரே மகதத் தலைநகரான கிரிவ்ரஜ நகருக்கே புறப்பட்டு வந்துவிட்டான். அவனும் கதை கதையாகத் தான் சொல்கிறான்.

இப்போது இன்னும் மனம் வருந்தும்படியாக ஒரு நிகழ்வு. அவனிரு பெண்களும் ஒருவருஷம் துக்க நாட்களை அநுசரித்தபின்னர், மதுராவில் இருந்து மகதம் திரும்பி விட்டார்கள். இருவரும் துக்கத்திலும், துயரம் தாங்காமலும் துடிதுடித்து அழுவதைக் காணச் சகிக்கவில்லை. மேலும் தங்கள் கணவனைத் தந்தை சரியானபடி பாதுகாக்கவில்லை என்று குற்றமும் சாட்டுகின்றனர். மகத சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்காக உழைத்த தங்கள் கணவனைச் சரியான படி கவனித்துப் பாதுகாக்காத நீயும் ஒரு தகப்பனா என்று தந்தையை வசை பாடினார்கள் இருவரும். கோபத்துடன் ஜராசந்தன், “வசுதேவனின் இரு குமாரர்களையும் யமனிடம் அனுப்பும் வரையில் ஓயமாட்டேன். இது சத்தியம். ஆகாசவாணி, பூமாதேவி சாட்சியாக, அஷ்டதிக்பாலர்கள் சாக்ஷியாக, சூரியன், சந்திரன் சாக்ஷியாக இது சத்தியம்!” என்று கடும் சபதம் எடுத்துக்கொண்டான். விதி சிரித்தது. மதுராவின் மேல் படை எடுக்கவேண்டும் எனத் தீர்மானம் செய்தான். அவன் உடனே உதவிக்கு அழைத்தது. சேதி நாட்டு அரசனும், குந்தியின் சகோதரியின் கணவனும் ஆன தாமகோஷனை. பின்னர் விதர்ப்ப நாட்டு அரசனை விட அவன் இளவரசன் யாதவர்களை, முக்கியமாய்க் கண்ணனை அழிப்பதில் முனைப்பாக இருப்பது தெரிந்து அவனையும், அவந்தி இரட்டையர்களான விந்தன், அநுவிந்தனையும், சால்வ தேசத்து அரசனையும், திரிகர்ட தேசத்துத் தலைவனையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான்.

நாடு முழுமைக்கும் தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் தூது அனுப்பி வைத்தான். தன்னுடைய ஏற்பாடுகள் முழுமையடைந்தவுடன், மழைக்காலம் முடியும் வரை காத்திருந்து தன் படைகளை மதுராவை நோக்கிச் செலுத்தினான் ஜராசந்தன். மதுராவை அப்போது நிர்வாகம் செய்து கொண்டிருந்த யாதவத் தலைவர்களுக்கு ஒற்றர்கள் மூலம் செய்திகிடைத்தது. ஜராசந்தன் படை எடுத்து வருவதாயும், கிருஷ்ணனையும் , பலராமனையும் கொடுத்துவிட்டால் படை எடுப்பு நீடிக்காது எனவும், இல்லாவிட்டால் மதுராவை அழிக்கப் போவதாயும் ஒற்றர்கள் கூறினார்கள். பலராமன் கண்ணனோடு வைவஸ்வதபுரி செல்லவில்லையாதலால், குரு சாந்தீபனியின் ஆசிரமத்திலிருந்து திரும்பியிருந்தான். சில நாட்களில் கண்ணனும், புநர்தத்தனை குருவிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பி விட்டான். அப்போது மதுரா நகரமே சந்தோஷ ஆரவாரத்தில் இருந்தது. ஏற்கெனவே பராபரியாகச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. கண்ணன் வைவஸ்வதபுரி சென்றதும், நாகலோகத்திலிருந்த புநர்தத்தனை மீட்டுக்கொண்டுவந்ததும், ஆங்காங்கே மக்களால் பேசப்பட்டு வந்தது. இப்போது கண்ணனும் திரும்பிவிடவே, உத்தவன் மூலம் அனைத்து விஷயங்களையும் அறிந்த மக்கள் கண்ணனைத் தெய்வமாகவே கொண்டாட ஆரம்பித்தனர்.

கண்ணன் திரும்பி வந்த நாளை ஒரு பெரும் விழா போல் எடுத்தனர். உக்ரசேனனே நேரில் சென்று கண்ணனை வரவேற்றிருந்தார்.பதினெட்டு வயது நிரம்பாத கண்ணனனத் தங்கள் தலைவனாக ஆகும்படி வற்புறுத்தினார்கள். உக்ரசேனனுக்கோ வயதாகிவிட்டது. மகனையும் இழந்தபடியால் மனமும் பலவீனமடைந்திருந்த நிலையில் அவருக்கும் இதுவே சம்மதமாய் இருந்தது. ஆனால் கண்ணன் தனக்கு மூத்தவனிருக்கத் தான் எப்படித் தலைமை ஏற்பது என மறுக்க பலராமனோ, தன்னைவிடக் கண்ணனே அனைவரிடமும் ஒத்த தோழமையுடன் பழகுகிறான் என்று தனக்கு வந்த பதவியை மறுத்துக்கொண்டிருந்தான். இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் தான் மகத நாட்டுப் படை மதுராவை நோக்கி வேகமாய் வந்து கொண்டிருக்கும் செய்தி கிடைத்தது. உடனடியாக அவசரக் கூட்டத்தைக் கூட்டினார் உக்ரசேன அரசர். ஒற்றர்கள் சொன்ன செய்தியோ பயங்கரமாய் இருந்தது. கடந்த இரு வருடங்களில் இந்தப் படை எடுப்புக்குத் தயாராக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டு பூரண உதவிப் பொருட்கள், அனைத்து வித மருத்துவ ஏற்பாடுகள், அஸ்திர, சஸ்திரப் பிரயோகங்கள், ஆயுதங்கள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு, தேவையான உணவுப்பொருட்கள், சமைக்கும் ஆட்கள் எனப் பரிபூரணமான ஒரு முற்றுகைக்குத் தயாராய் வருவதாய்த் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உக்ரசேனர் தன் படைத் தலைவர் ஆன, விகத்ருவைப் பார்த்து, முற்றுகையை எத்தனை நாட்கள், மாதங்கள், அல்லது வருடங்கள் மதுரா தாக்குப் பிடிக்கும்? குறைந்தது ஆறுமாதமாவது தாங்குமா?

மன்னரின் நம்பிக்கை பொய்த்துப்போகும்படி விகத்ரு சொன்னான்:”மரியாதைக்குகந்த அரசே, மதுராவின் கோட்டை பலவீனமாய் உள்ளது. தங்கள் குமாரரும், மதுராவின் முன்னாள் அரசரும் ஆன கம்சர், பல வருடங்கள் வெளி நாட்டுப் படை எடுப்பிலேயே இருந்துவிட்டமையால் மதுராவை கவனிக்கவில்லை. மதுரா நகர் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து கொள்ளும் வசதியோடு எந்தவிதமான பாதுகாப்புமின்றி உள்ளது. அதோடு இப்படி ஒரு முற்றுகையை எதிர்பார்க்காததால் போதிய வீரர்களோ, ஆயுதங்களோ, அவர்களுக்கு அளிக்கவேண்டிய உணவுப் பொருட்களோ இல்லை. அவ்வளவு ஏன்? இங்கே இருக்கும் மக்களுக்கே போதிய உணவுப்பொருட்களை நம்மால் அளிக்க முடியாது.” என்றான். மேலும் கம்சன் இறந்ததும், அவனால் வெளியேற்றப் பட்ட மக்கள் திரும்பி வந்ததால் மக்கள் தொகையும் அதிகமாகிவிட்டதையும் தெரிவித்தான். உக்ரசேனர் செய்வதறியாது திகைத்தார்.

“ஆஹா, அக்ரூரரே, நீங்கள் வெளி தேசங்களின் உதவிக்குச் சென்றிருந்தீர்களே? அவர்களிடம் கேட்டீர்களா? உங்கள் தூதுவர்கள் என்ன சொல்கின்றனர்??’ உக்ரசேனன் கேட்டார்.

அக்ரூரர் சொல்லுவார்:”அரசே, நம்முடைய நண்பர்கள் யாவரும் இப்போது நமக்கு உதவி செய்யும் நிலையில் இல்லை. சேதி நாட்டு அரசன் ஆன தாமகோஷன் நமக்கு உதவி செய்ய நினைத்தாலும் ஜராசந்தன் விடமாட்டான். ஆகையால் அவன் வெளிப்படையாக ஜராசந்தனுடனே சேருவான். ரகசியமாக நமக்கு ஆயுத உதவி வேண்டுமானால் கொடுப்பான். விதர்ப்ப நாட்டிலிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. நானே ஹஸ்தினாபுரம் சென்றிருந்தேன். பீஷ்ம பிதாமகரையும் சந்தித்து உதவி கேட்டேன். அவர் தான் இந்த சூழலை நினைத்து மிக வருந்துவதாயும், ஆனால் தற்சமயம் உதவும் நிலையில் இல்லை என்றும் சொன்னார். அதற்கு அவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? குருட்டு அரசன் திருதராஷ்டிரனும், அவன் மூத்த மகன் துரியோதனனும் நாம் பாண்டுவின் புத்திரர்களுக்குப் பக்ஷமாக நடக்கிறோம் எனச் சந்தேகப் படுகின்றார்களாம். இதை அந்த அரசன் திருதராஷ்டிரன் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் இது தான் அவன் உள் நோக்கம். நமக்கு ஹஸ்தினாபுரம் உதவினால் பாண்டுவின் புத்திரர்களின் கை ஓங்கிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் ஹஸ்தினாபுரத்திலிருந்து நமக்கு உதவி கிட்டாது என்று சொல்கின்றனர்.” என்றார் அக்ரூரர்.

“எனில் நம்மால் முற்றுகையைத் தாக்குப் பிடிக்க முடியாது?” உக்ரசேனர் கேட்க, விகத்ரு அதை ஆமோதித்தார். “சில நாட்கள் கூட முற்றுகையை நம்மால் தாங்க முடியாது.”

Monday, May 03, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம்பாகம்!

ஆஷிகா! ஆஷிகா! திரும்பிவிடு!


அரசன் போரிட்டுக்கொண்டிருந்த வீரர்கள் இருவரையும் நோக்கி நடந்தான். அவன் கையில் நீண்ட வாள் இருந்தது. கண்ணனும், புநர்தத்தனும் ஒருவரையொருவர் கீழே வீழ்த்த முயன்று கொண்டிருந்தனர். வெளிப்படையாகப் பார்க்கும்போது அவ்வாறே தெரிந்தது. ஆனால் உண்மையில் இருவருமே ஒருவரை மற்றொருவர் வீழ்த்தாதவண்ணமே பார்த்துக்கொண்டிருந்தனர். தெய்வீகத் தந்தை ஓங்கிய வாளோடு அவர்கள் இருவரிடையே செல்லவும், “ஓஓஓஓஓஓ” என்றொரு ஓலக்குரல் கேட்டது. அங்கிருந்த அனைவர் மனமும், உடலும் நடுங்கியது அந்தக் குரலைக் கேட்டு. அப்படி அனைவர் மனத்தையும் நடுங்கும்வண்ணம் ஓலக்குரல் கொடுத்துக்கொண்டு, நீண்ட கூந்தல் காற்றில் அலைபாய ஓடி வந்து கொண்டிருந்தது ஒரு மெல்லிய உருவம். இத்தனை மெல்லிய உருவத்துக்குள்ளே இவ்வளவு ஓங்கிய சப்தமா என்னும் வண்ணம் குரல் எதிரொலிக்க ஓடி வந்த ஆஷிகா தன் தகப்பனுக்கும், அந்த வீரர்கள் இருவருக்குமிடையே போய் நின்று மறைத்துக்கொண்டாள். கூட்டம் ஸ்தம்பித்துப் போனது. ஆஷிகா படிகளில் இறங்குவதை மட்டுமே கண்ட அவர்கள், அவள் அலறித்துடித்தவண்ணம் இப்படி வந்து நிற்பாள் என்பதை எதிர்பார்க்கவில்லை.

அங்கே இருவரில் ஒருவர் கொலையுண்டு விழுவதை எதிர்பார்த்துக் காத்திருந்த ரத்தவெறி பிடித்த கூட்டம் ஏற்கெனவே அப்படி நடவாததால் பொறுமையை இழந்திருக்க, இப்போதோ இருவரையும் கொல்ல விடாமல் இளவரசி மறைத்துக்கொண்டும், தடுத்துக்கொண்டும் நிற்கிறாளா? அங்கிருந்த மக்களின் தொண்டையில் இருந்து எழும்பிய சப்தம் உருத்தெரியாமல் நூறு நூறு சிங்கங்கள் ஒரே சமயத்தில் கர்ஜித்தாற்போன்ற தொனியில் கேட்டது. ஆனால் தெய்வீகத் தந்தை கண்ணனையோ, புநர்தத்தனையோ போய் அடையுமுன்னரே தன்னிலைக்கு வந்து விட்டிருந்த கிருஷ்ணன், தன்னைக் காக்கவேண்டித் தன்னைக் கட்டிக்கொண்டு நின்ற ஆஷிகாவை ஒரு கையால் உத்தவனிடம் தள்ளிக்கொண்டே இன்னொரு கையால் உத்தவனின் வாளையும் வாங்கிக்கொண்டான். தன் வாளை நன்கு நீட்டிக்கொண்டே தெய்வீகத்தந்தையின் பக்கம் திரும்பினான். அப்படித் திரும்பும்போதே புநர்தத்தனையும் கீழே வேகமாய்த் தள்ளி அவனையும் அரசனின் வாள் வீச்சிலிருந்து காத்தான். இத்தனையும் சில நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது.

அரசன் பக்கம் திரும்பிய கிருஷ்ணன், “உத்தவா, ஆஷிகாவையும், புநர்தத்தனையும் கூட்டிச் செல்.” என்று உத்தரவு கொடுத்தான். அரசனை நோக்கிக்கொண்டே கிருஷ்ணன் ஒவ்வொரு அடியாகப் பின்னால் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். அவனின் ஒவ்வொரு அடியும் துறைமுகத்தை ஒட்டிச் சரக்குகள் இறக்குமிடத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த மாலுமிகளை நோக்கிச் சென்றன. அரசனும் தன்னையறியாமல் முன்னேறினான். அவனையும் தன் பக்கம் மெல்ல மெல்ல இழுத்துக்கொண்டிருந்தான் கண்ணன். கூட்டம் செய்வதறியாது பயம் கலந்த பக்தியோடு கண்ணனையும், தெய்வீகத் தந்தையையும், அன்னை மாதாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது. அதே சமயம் விழிப்புள்ள சிலர், நம் மன்னன் மீதே வாளை மாற்றன் ஒருவன் ஓங்கி விட்டானே? உடனடியாக அவனைக்கொல்லு, குத்து, தள்ளு என அலறிக்கொண்டிருந்தனர். ஆயுதம் தாங்கிய காவலாளிகள் மன்னனைக்காக்கவென்று சுற்றி வளைக்க மன்னன் அவர்களை விலகுமாறு அலறலுடன் எச்சரித்தான். தன்னைத் தானே காத்துக்கொள்ள முடியும் என்றும் உறுதி அளித்தான்.

கண்ணன் மேல் வைத்த வாளை எடுக்காமல் அரசன் முன்னேற, மன்னன் மேல் வைத்த வாளை எடுக்காமல் கண்ணன் பின்னே செல்ல, இருவரும் கப்பலில் இருந்து சாமான்களை இறக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்த மரப்பலகையில் இருவரின் காலடி ஓசையும் மட்டும் கேட்டது. சற்றுத் தூரத்தில் மாலுமிகள் நின்றுகொண்டு பார்த்துக்கொண்டிருந்தனர். ஆஹா, என்ன இது? திடீரென அந்தப் பலகை தூக்கப் படுகிறதா? அல்லது பாரம் தாங்காமல் தானே தூக்கிக்கொள்கிறதா? திடீரென அங்கே தோன்றிய புண்யாஜனாக் கப்பலின் வீரர்கள் ஹூக்குவின் துணையோடும், ஹூல்லுவின் துணையோடும் புநர்தத்தனையும், ஆஷிகாவையும் கப்பலில் ஏற்ற வசதியாக அங்கே பிணைத்திருந்த படகுகளில் ஏற்றினார்கள். கண்ணன் அவர்கள் படகுகளில் ஏற்ற்ப்பட்டதை உறுதி செய்துகொண்டு தன் வாளைத் தூக்கி வீசி எறிந்தான். மன்னனைப் பார்த்து, “மஹரிஷி பரசுராமரின் சீடரே, என் மரியாதைக்கு உகந்தவரே! என்னைக் கொல்வதுதான் உங்கள் அறம், தர்மம் என நீங்கள் நினைத்தீர்களானால், இதோ நான் நிற்கிறேன் உங்கள் முன்னால், தாராளமாய் என்னைக் கொல்லுங்கள்.” என்று கூறினான். கூடவே,”ஆனால் உங்களால் என்னைக் கொல்ல முடியாது.” என்றும் சொல்லிச் சிரித்தான்.

ஏதோ மயக்கத்திலோ அல்லது தூக்கத்திலோ இவை எல்லாம் நடக்கின்றனவோ என மன்னன் மயங்கினான். அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. அவன் கைவாள் அவனையும் அறியாமல் கீழே விழ மன்னன் நிற்கக் கூட முடியாமல் தள்ளாடினான். கண்ணனின் பார்வை அவனை விட்டு அலகவே இல்லை. ஏதோ வசியம் செய்கிறாப்போல் தொடர்ந்து தன் பார்வையை அவன் மீதே கண்ணன் செலுத்த மன்னனால் எதுவுமே செய்ய முடியவில்லை. தள்ளாடிய மன்னனைப் பார்த்த வண்ணம் கண்ணன் கிளம்பத் தயாராகத் துடுப்பைக் கையில் பிடித்த வண்ணம் பிக்ரு காத்திருந்த படகில் குதித்தான். படகு வேகத்துடன் கிளம்பியது. அவ்வளவு நேரம் திகைத்துப்போயிருந்த கூட்டம் அப்போது தான் உயிர் வந்தது போல் ஓலமிட்டுக் கண்ணனைப் பிடித்துக் கொல்ல வேண்டுமென்று கூக்குரல் இட்டது. மன்னன் மயக்கத்தில் ஆழ்ந்தவன் போலப் பார்த்துக்கொண்டிருக்கக் கண்ணன் சாவதானமாகக் கை அசைத்து விடைபெறப் படகு போய்க்கொண்டிருந்தது.

கண்ணனும், மன்னனும் நின்று கொண்டிருந்த கப்பலின் தொடர்புப் பலகையில் ஆயுதபாணியான காவலாளிகள் குதித்துப் படகைத் தொடர முற்பட பலகைக்கும் கப்பலுக்கும் தொடர்பு திடீரென அறுந்து போய்ப் பலகை மிதக்க ஆரம்பித்தது. திடீரென ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில் ஒரு சில காவலாளிகள் கடலில் விழ, மற்றவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தடுமாற ஒரே குழப்பம் நீடித்தது. படகுகள் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தன. சமாளித்துக்கொண்ட ஒரு சிலர் படகைத் தொடர முற்பட, கண்ணனின் வாளால் கொல்லப் பட்டனர். முரசுகள் அதிர்ந்தன கரையில். எக்காளங்கள் ஓலமிட்டன. அவசர நிலைமை அறிவிக்கப் பட்டது. அப்போது திடீரென யாக குண்டத்து நெருப்பு அங்கே தோன்ற அன்னை ராணியின் உடலில் தேவிமாதா உலகுக்கெல்லாம் அன்னையானவள் ஆவிர்ப்பவித்தாள். கூட்டம் இதைப் புரிந்துகொண்டு அன்னையையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது.

மெல்ல மெல்லக் கீழே இறங்கி மன்னன் நின்றிருந்த இடத்துக்கு வந்த அன்னை ராணி தன் காவலாளிகளுக்குக் கட்டளை இட, அவர்கள் மன்னனைத் திரும்ப அழைத்துச் சென்றனர். படகு தெரியும் இடத்திற்காக வந்த ராணி, அங்கே இருந்த ஒரு உயரமான மேடையின் மேல் ஏறிக்கொண்டாள். படகையே விடாமல் பார்த்தாள். படகிலிருந்த ஆஷிகா பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அன்னை ராணியின் விழிகள் இரண்டும் பெரிதாகி அவளை விழுங்க வருகிறாப்போல் தோற்றியது அவளுக்கு. நடுங்கினாள் ஆஷிகா. கண்ணன் சமாதானம் செய்ய முற்பட்டான். அப்போது அனைவரும் கப்பலுக்கு அருகே வந்துவிட்டனர். கண்ணன் ஆஷிகாவைத் தொட்டுச் சமாதானம் செய்ய முற்பட, கரையில் இருந்து, அன்னை ராணியின் குரல், “திரும்பி வா ஆஷிகா, திரும்பி வா!” என்றது. கப்பலில் தானும் ஏறிக்கொண்டு ஆஷிகாவையும் ஏற்ற முயன்ற கண்ணன் அவளைத் தடுக்க முயல ஆஷிகாவோ வைத்த கண் வாங்காமல் அன்னை ராணியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவ்வளவு தூரத்தில் இருந்தும் அந்தக் குரல் தெளிவாக அவளை அழைக்க, ஆஷிகாவோ தன்னிலை இழந்தவளாய் அந்தக் குரலில் வசத்துக்கு ஆட்பட்டுத் திரும்ப முயன்றாள். கண்ணன் தடுத்தும் முடியவில்லை. கப்பலில் பாதி தூரம் ஏறிய ஆஷிகா ஒரே பாய்ச்சல்! கடலில் பாய்ந்தாள். வெகுவேகமாய் ஒரு மீன்குஞ்சைப் போல் நீந்தினாள். கப்பலில் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஆஷிகா கரையை அடைந்து தன் அன்னையிடம் சென்று விட்டாள். கண்ணன் மாறாத புன்னகையுடன், “நினைத்தேன், ஒரு நாக கன்னிகை தன் அன்னையைப் பிரிந்து இருப்பாளா என, சரியாகிவிட்டது. நல்லது, பிக்ரு, நாம் செல்வோமா?” என்றான். திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான் புநர்தத்தன்.

நாளை ஜராசந்தனின் கோபம், தன் மறுமகன் ஆன கம்சனைக் கொன்ற கிருஷ்ணனையும், அவனுக்குத் துணையாக நின்ற யாதவர்களையும் எப்படிப் பழிவாங்குவது என யோசிக்கிறான் ஜராசந்தன். அதோடு மட்டுமா? மற்ற அரசர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டு கிருஷ்ணனையும், யாதவர்களையும் தனிமைப்படுத்தவும் திட்டங்கள் தீட்டுகிறான்.