எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 15, 2010

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே!

அரைச்ச மாவையே அரைக்கிறேன்னு சிலபேரோட விமரிசன்ம். அதோட பின்னூட்டங்களே வரதில்லை, யாரும் படிக்கிறதில்லைனு சில அறிவு ஜீவிகளோட கருத்து. இதே கருத்து ராமாயணம் எழுதும்போதும் வந்தது. பொதுவா மொக்கைனா யாரும் சீக்கிரமாப் படிச்சுட்டுப் போயிட்டே இருக்கலாம். இன்றைய அவசர உலகில் எல்லாமே அவசரத்துக்கு ஏற்றாற்போல் கொடுக்கணும்னு எதிர்பார்ப்பு. ஒரு சில பதிவுகள் அர்த்தமுள்ளதாய் சமூகத்துக்கு ஏற்றாற்போல் பிரச்னைகளை அலசும் வண்ணமாய் இருக்குனும் சிலர் கருத்து. அப்படியும் எழுதலாம் தான். ஆனால் சமூகத்தை மாற்ற முக்கியத் தேவை மனப்பக்குவம். அதை ஏற்படுத்த பக்தி ஒண்ணால் தான் முடியும். பலரும் புராணங்களையும், அதன் தத்துவங்களையும் கட்டுக்கதை, இடைச்செருகல்னு சொல்லிட்டுப் புறந்தள்ளும்போது அதில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்காட்டும் ஒரு சிறு முயற்சியே இது. உண்மையான பக்தியையே மூட நம்பிக்கை என்று விமரிசிக்கிறவர்களுக்கு அல்ல. ஏனெனில் பக்தி என்பது இதயத்தின் ஆழத்தில் இருந்து ஊற்றுப் போல் பொங்கி வரும் ஓர் உணர்வு. உணரத் தான் முடியும். இப்போ இது புதுசா இல்லை ஏற்கெனவே அரைச்ச மாவானு பார்ப்போமா? :))))))))

எங்க வீட்டிலே இட்லிக்கு ஊற வைக்கும்போது அஞ்சுக்கு ஒண்ணு, நாலுக்கு ஒண்ணுனு எல்லாம் போடறதில்லை. புழுங்கலரிசி 41/2 பங்குனா, பச்சரிசி அரைப்பங்கு சேர்ப்போம். (பச்சரிசியே போடாமல் இட்லிக்கு அரைப்பவர்களைப் பார்க்கிறேன். தோசைக்குனு பச்சரிசி அதிகம் போட்டு அரைப்பவர்களும் உண்டு.) நான் அப்படி எல்லாம் போடறதில்லை. பச்சரிசியும், புழுங்கலரிசியுமா மேலே சொன்னாப்போல் போட்டுட்டு, உளுந்து ஒண்ணு போட்டுட்டு, அரைக்கும் வழக்கம் உண்டு. இட்லிக்குனு தனியாவோ, தோசைக்குனு தனியாவோ அரைக்கிறதில்லை. மாவையும் கெட்டியா அரைச்சு வைத்தால் சீக்கிரம் புளிக்காது. தோசையோ, இட்லியோ செய்யும்போது வேணுங்கற மாவை எடுத்துத் தேவையான நீர் சேர்த்துக் கரைச்சுக்கலாம். அரைச்சதும் அதை தோசையோ, இட்லியோ எதுவேணாலும் செய்துக்கலாம். ஆகக்க்கூடி அரைச்ச மாவையே அரைக்கிறதில்லை. புது விகிதாசாரம், புதுப்பக்குவம். சாதாரண இட்லி, தோசைக்கே இப்படினா முக்கியமான விஷயம் எழுதும்போது இன்னும் கவனம் எடுத்துக்கணும் இல்லையா? அப்படிக் கவனம் எடுத்துக் கொண்டு செதுக்குவதே கண்ணன் கதைகள். படிக்கும் பலரும் அதில் உள்ள பல விஷயங்கள் தெரியாதென்றே கூறி வருகின்றார்கள். ஆகவே பாராட்டியோ அல்லது குறை கூறியோ பின்னூட்டம் வந்தாலும் வராவிட்டாலும் இவை அனைவரையும் சென்றடையவேண்டும் என்பதே என் எண்ணம்.

"போற்றுவார் போற்றட்டும்,
தூற்றுவார் தூற்றட்டும்,
எல்லாப் புகழும் கண்ணனுக்கே!"


திங்களன்று கண்ணன் வருவான்.
*************************************************************************************
Adventures in being a wife!

Respect his work. When you marry a man, you also marry his job. At times you may even feel that the job comes before you. It doesn’t really, but doing his work well means as much to a man as motherhood does to a woman—and for much the same reasons.

Learn the tricky and challenging art of absorption. A lot of unsuccessful wives seem to regard themselves as divinely-appointed receiving stations for love. They’re constantly concerned with how much attention and affection they’re getting. Certainly, a wife is entitled to love and loyalty. But she also has to be ready to absorb irritability on the part of her husband at times, flashes of displaced anger, discontent with his own performance. These things have to find an outlet somewhere. If a wife can think of herself as a kind of lightning rod that conducts fear and frustration harmlessly into the ground, not only will she be of inestimable value to her husband but she will grow tremendously as a person herself.

And remember:even when a man becomes successful, and knows it, some hidden, sensitive, unsure part of him continues to need the unquestioning support and loyalty of a loving woman.

Most men desperately need a sounding board against which to test ides, hopes, dreams, ambitions, problems, inner conflicts that they can’t resolve alone. They need a woman to whom they can confide their innermost thoughts and feelings without fear of ridicule or rejection.

Creative listening involves response, communication, exchange of ideas. But there are also times when a wife has to be silent, has to bit her tongue, hold back the sharp words that will turn an argument into a fight, or a bad situation into a worse one. No doubt her husband has an equal responsibility. But I think that a man’s job, basically, is to tame the world; a wife’s job is to control herself—and indirectly her husband.

Let him know that you need him. Not long ago an outraged young wife told me that she was fed up with her husband’s roving eye. She was going to tell him off, divorce him if he so much as looked at another woman. I said to her, ‘Do you really want a solution to all this? Then go to your husband. Ask him to put his arms round you. When he does say to him, ‘Darling, I’m hurt. I’m unhappy, and I think you know why. I’m your wife. Please hold me. Please help me.”That’s all you have to do. The admission of your need of his love will work miracles that no amount of anger can.”

Use your talents. Marriage need not limit your horizons. If you have a gift for design, or photography, or decorating, or writing poetry—any talent at all—don’t let it gather dust; use it to expand your marriage.

A brilliant girl I know, who got a first-class degree and went on to graduate work, now has three small children and all the attendant household chores. “I need every single thing I learned at University.”she maintains, ‘to understand my husband’s business, to run his home efficiently and to keep myself aware of what’s going on in the world.”

There are so many little commonsense don’ts that help a wife to make marriage an adventure. For example, don’t make an issue over small things. Overlook them and you will find that your opinion carries a lot more weight in big things.

Don’t be afraid to compromise—compromise doesn’t mean giving in. It’s simply an adult way of acknowledging that there are points of view other than your own in this complex world, and realizing that some of them may occasionally be right.

Don’t be alarmed if you and your husband differ about somethings. Marriage is a partnership, not a merger of identities. Don’t keep fretting over irretrievable mistakes. Everybody makes them. The best things to do is learn from them and them forget them.

There are may small commonsense do’s as well as don’ts. Expand and develop the art of sharing—not just the big, serious things, but the little, delightful things: the book you’re reading, the joke that you hear and hoard for him, the sunset you call him out to watch, the entrancing, unbelievable thing your three-year-old said.

Perhaps the simplest and most inclusive of all rules for successful wives is this; try to please your husband. Does he like neatness? You can be neat. Does he like friends around him? Learn to entertain . Is his job an exacting one? Make his home an oasis of quietness in a noisy world. Does he want you near?? Thank heaven--- and be available.

“To love and to cherish, till deat do us part-----“ this is the great, soul-satisfying role of a wife. And never make the mistake of thinking it a secondary role. Where the ship of matrimony is concerned, your husband may be the engine, but you’re the rudder--- and it is rudder that determines where the ship will go.

4 comments:

  1. ரைட்டு! எங்க பக்கம் எல்லாம் இட்லிக்கு புழுங்கல் அரிசி மட்டுமே, ஆனா இப்ப இப்ப பச்சரியும் கலந்து போடுறாங்க கீதாம்மா!

    ReplyDelete
  2. COMMENTS சில சமயம் போடலைன்னாலும் என்ன மாதிரி படிக்கறவா கட்டாயம் இருப்பா Mrs Shivam. புராணங்கள் AGE OLD VALUES, TRUTH, FACTS ABOUT LIFE ஐ சொல்லறது அதை எப்படி விமர்சிக்க பாத்தாலும், ULTIMATELY THE TRUTH REMAINS THE SAME:))அவைகளை தீர்க்கமா சிந்தித்துப்பார்த்து ஒத்துக்கவும், இன்னும் கத்துக்கவும் தான் முடியும்.அவைகளை COMMENT பண்ணறது கஷ்ட்டம்.COMMENTS எண்ணிக்கை வச்சு quality of a blog ஐ நிர்ணயம் பண்ணறது என்னால ஒத்துக்க முடியல்லை.ரோட்ல விக்கற மிளகாய் பஜ்ஜிக்கு இருக்கற கூட்டம் வைரக்கடைக்கு இருக்குமான்னு ஹரிதாஸ்கிரி ஸ்வாமி சொல்லுவார்.
    நாட்டோட நடப்பு பத்தி பேசி இப்படி இருக்கக் கூடாது அப்படி கூடாதுன்னு சொல்லற எத்தனை பேர் தான் அப்படி நடக்கறா, தன்னை விசாரணை பண்ணிண்டு இருக்கா?? தன்னை விசாரித்து திருத்திக்கொள்ளும் பக்குவம் ஆன்மீகம் தரும் முதல் பரிசு.கீர்த்திலால், ZAவேரியா இருந்து ஜமாயிங்கோ

    ReplyDelete
  3. வாங்க அபி அப்பா, தஞ்சைப் பக்கம் அதாவது பழைய தஞ்சாவூர்க்காரங்க இட்லிக்குப் பச்சரிசி போட மாட்டாங்க இப்போவும், எங்க வீட்டிலே இதுக்கு என ஒரு பட்டி மன்றமே நடந்திருக்கு. :)))))))))))) கல்யாண மும்முரத்திலேயும் இட்லினதும் உடனே வந்து பின்னூட்டினதுக்கு நன்னிங்கோ! :P:P:P

    ReplyDelete
  4. வாங்க ஜெயஸ்ரீ, நிறையப் பேர் படிக்கிறது தெரியும். ஆனாலும் கொஞ்ச நாட்களாய் அரைச்ச மாவையே அரைக்கிறாயே என்ற ஒரு கிண்டல்! அது கேலிக்குனு சொல்லப் பட்டாலும் சாதாரணமாய் ராமாயணமோ மகாபாரதமோ இன்னும் பிரவசனம் ஆங்காங்கே நடக்கின்றன. மகா பக்தவிஜயம் ஜெயா தொலைக்காட்சியில் விட்டல்தாஸ் ஒருமாதிரி சொன்னார் என்றால் சங்கராவில் இன்னொருத்தர் (பேர் தெரியலை)சொல்லும் பத்ததி வேறே மாதிரி இருக்கு. விசாகா ஹரியின் சுந்தரகாண்டம் ஒரு மாதிரி, அதே திருச்சி கல்யாணராமன் வேறே மாதிரி சொல்றார். சமீபகாலமாகச் சுயபுராணம்னு வேறே குறை அவர் கிட்டே! :D பிரவசனமே எத்தனை பேர் பண்ணறாங்க. ஒவ்வொருத்தர் நடையும் தனி. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பத்ததி. அதே போல் நான் எழுதறதும் கொஞ்சம் வித்தியாசமாகவே லாஜிகலா கண்ணனால் எப்படி முடிஞ்சதுனு சொல்றாப்போல் தான். மற்றபடி பின்னூட்டம் வரலைங்கறதே என்னோட கவலை இல்லை.பலரோட கேள்விகளுக்கும் பதிலாக ஒரு தெளிவைக் கொடுக்கத் தான் எழுதினேன். கொஞ்சம் இடைவெளியும் இருக்கட்டும்னு! அதுக்கேற்றாற்போல் இணையமும் இல்லாமல் போச்சு! :))))))))))))

    ReplyDelete