எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 01, 2011

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

""நாழிகைகள் கடந்தன. நாட்கள் நகர்ந்தன, பருவங்கள் மாறின. ஆண்டுகள் சென்றன. நான் மட்டும் மாறுபட மாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருப்பேன். எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த மனம் ஆகியவற்றோடு இருப்பேன்.""

மஹாகவி பாரதியார்.

அன்பு கொடுக்கத் தானே தவிர திரும்ப நமக்குக் கொடுக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது என்பதைப் புரிய வைத்த டிசம்பர் 31-ம் தேதிக்கு என் நன்றி.

12 comments:

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 2. தலைவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்துத்துக்கள் ;)

  ReplyDelete
 3. //அன்பு கொடுக்கத் தானே தவிர திரும்ப நமக்குக் கொடுக்கவேண்டும்...//

  அன்பு ஒன்று தான் சுவரில் அடித்த பந்து மாதிரி திரும்பி வருவது.. 'திரும்பி வரும்' என்பது சர்வ நிச்சயாமானது, என்பதால் எதிர்பார்த்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

  'அன்புக்காக அன்பு செய்!' என்பது ஆன்றோர் வாக்கு.

  'கொண்டாடும்'?..

  நமது வயதில் ஆரம்பித்து நிறைய விஷயங்கள் ஆங்கில வருடத்தை ஒட்டியே இருப்பதினால் ஜனவரி-1ம் தேதியை தொடங்கமாகக் கொள்கிறோம். தொடக்கம் நன்றாக அமைந்து தொடரட்டும் என்று வாழ்த்துகிறோம். வாழ்த்துதலிலும், வாழ்த்து பெறுவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். அவ்வளவே.

  தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ரா.ல.
  தக்குடு,
  கோபி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வாங்க ஜீவி சார், புத்தாண்டு வாழ்த்துகளைப்பிடிங்க முதல்லே. :)))

  அப்புறம் நேத்திக்கு என்னோட அன்பின் பிரதிபலிப்பு இல்லைனு ஒரு கணம் வருத்தம் அடைந்து பஸ்ஸிலே செய்தியும் போட்டுட்டேன். உடனே பாருங்க, தனி மடல்கள், தொலைபேசி அழைப்பு, னு எல்லாரும் என்னை மனம் நெகிழ வச்சுட்டாங்க. அட?? கிடைக்காத இடத்திலேபோய்த் தேடியது என்னோட தப்புத் தானே! மேலும் நான் எதிர்பார்த்த நபர் எனக்கு அன்பைக் கொடுக்கலைனாலும் நான் அவங்க கிட்டே அன்பாயிருப்பதைத் தடுக்கவும் முடியாது அல்லவா? அதற்கேற்ற பாரதியின் வரிகளை இன்று தினசரியில் பார்த்ததும் இந்த இடுகை.

  சிலர் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. அதனால் கொண்டாடும் நண்பர்கள்னு குறிப்பிட்டேன். :)))))))))))))))))

  ReplyDelete
 6. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. கீதாம்மா - புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 8. எதிர்பார்ப்புகளே பல வருத்தங்களுக்கு காரணம். எதிர்பார்ப்பு இல்லாமலே வாழ பழகணும்! :P

  ReplyDelete
 9. கீதாம்மா ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
  என்னடா நம்ம சிஷ்யை ஒருத்தி கொஞ்ச நாளா காணோமே !
  என்று ஒரு வாய் கேட்கலாமா வேண்டாமா !
  என்று பின்னூட்டம் எழுதி கொண்டு உங்க ப்லோகுக்கு வந்தா
  எதிர்பார்ப்பு வேண்டாம்ன்னு படித்தேனா !
  சரி ! மகிழ்வோடு என் இனிய புது வருட வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்

  ReplyDelete
 10. வாங்க ப்ரியா, நீங்க தான் குழந்தைகள் படிப்பைக் கவனிக்கவேண்டி இருக்குனு ஏற்கெனவே சொன்னீங்க. அதான் வேலை இருந்திருக்கும்னு நினைச்சேன். புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும். இப்போல்லாம் மத்தியானமா ஆற்காட்டார்12 மணியில் இருந்து 2 மணி 21/2 மணி வரைக்கும் இருப்பதால் பதிவு போடுவது மட்டுமே. யாரோட பதிவுக்கும் போகவோ, பின்னூட்டம் கொடுக்கவோ முடியறதில்லை. :((((( இனிமே சனி,ஞாயிறு மற்றப் பதிவுகளுக்குனு ஒதுக்கிடணும்னு வைச்சிருக்கேன். :)

  ReplyDelete