எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 21, 2013

பொன்னொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை!



என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

பூவொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை,
என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?


அவ்வளவு ஏன்?  நம் தமிழ்நாட்டிலேயே ஒரு சில மாவட்டங்களில் பெண்ணை மாலை மாற்றுகையில் மட்டுமே முதல் முறையாகப் பார்க்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.  இது குறித்து திருமதி கோமதி அரசுவும் கூறி உள்ளார்.  ஆகவே பெண் பார்த்தல் என்னும் நிகழ்வே பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது.  மிகப் பழைய காலங்களில் பெண்ணை சீக்கிரமாகவே விவாஹம் செய்து கொடுக்கும் வழக்கமே இருந்து வந்திருக்கிறது.  அப்படிப் பெண்ணைச் சீக்கிரம் விவாஹம் செய்து கொடுக்க இயலாமல் அந்தப் பெண்ணானவள் வயதுக்கும் வந்துவிட்டால் மூன்று வருஷம் வரையிலும் பெற்றோர் மாப்பிள்ளை தேடித் தருகிறார்களா?  அல்லது அந்தக் கால வழக்கப்படி வரனே தேடி வருகிறானா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  அப்படி வராவிட்டால் அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்கிறது.  அவளுக்கேற்ற மணமகனை அவளே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  இது ஆச்சரியமா இருக்கிறதா?  ஆனால் இது நடந்த உண்மையே.  அதுவும் இது மநுஸ்ம்ருதியில் வருகிறது.  மநுநீதியில் பெண்ணுக்கு அக்கிரமம், அநியாயம் செய்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள் என்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது.  அதோடு விதவை மறுமணத்தையும் மநுநீதி ஆதரிக்கவே செய்கிறது என்றும் படித்துள்ளேன்.  அதுக்கான ஆதாரபூர்வமான தகவல் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.  கணவன் மோசமானவனாக இருந்தால் அவனை விட்டுப் பிரியவும் இடம் கொடுக்கிறது. இத்தனையும் மநுநீதியில் உள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்தப் பெண் பார்த்தல் என்னும் நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்ததும், பெண்ணைப் பார்க்கும் வரனின் வீட்டுக்காரர்கள் பெண்ணைப் பாடச் சொல்லி, நடக்கச் சொல்லி எல்லாம் சோதனை செய்வார்களாம். பாடச் சொல்வது பெண்ணுக்குப் பேச்சு நன்றாக வருகிறதா என்று அறியவும், நடக்கச் சொல்வது பெண் நொண்டியோ, முடமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்கும் ஆகும் என்பார்கள்.  இன்னும் ஒரு படி மேலே போய்ச் சிலர் பெண்ணை விளக்கு ஏற்றச் சொல்வார்களாம்.  ஒரே குச்சியில் பெண் விளக்கை ஏற்றினால் சிக்கனமாய்க் குடும்பம் நடத்துவாள் எனக் கொள்வார்களாம்.  வேறு சிலர் தண்ணீர் நிறைந்த பாத்திரத்தைக் கொடுத்து எதையானும் கழுவி எடுத்துவரச் சொல்வார்களாம்.  தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்து கழுவியும் எடுத்துத் தண்ணீரையும் மீதம் வைத்த பெண் எனில் குடும்பத்துக்கு ஏற்ற பெண் என முடிவு செய்வார்களாம்.  வேறு சிலர் பெண் பார்க்கையில் சாப்பிடும்போது பெண் இலையில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதைக் கவனித்துப் பரிமாறத் தெரிகிறதா என சோதனை செய்வார்களாம்.  ஆகப் பெண் பார்த்தல் என்பது வெறும் சடங்காக இல்லாமல் பெண்ணானவள் ஒரு சோதனை எலியாகவும் இருந்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. இப்போதெல்லாம் கோயில் அல்லது ஹோட்டலில் சகஜமாய்ப் பார்த்துக்கொள்வதே நடைமுறையாக இருக்கிறது. அதன் பின்னரே விவாஹம்.

விவாஹங்கள் எட்டுவகைப்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  அவை பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்தியம், ஆஸூரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என எட்டுவகைப்படும்.

குருகுலவாசம் முடிந்து குருவின் ஆசிகளைப் பெற்றுக் காசியாத்திரையும் சென்று சமாவர்த்தனம் முடிந்த உத்தம பிரம்மசாரிக்காக அவனுடைய பெற்றோர் நல்ல குலத்துப் பெண்ணைத் தேர்ந்தெடுத்துப் பெண்ணின் பெற்றோர்களிடம் தங்கள் பிரம்மசாரி மகனுக்கு அவர்கள் குமாரியைக் கன்யாதானம் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுப்பது ஆகும்.  கவனிக்கவும்.  பெண்ணைக் கொடுக்கச் சொல்லி வேண்டுகோள் தான் பையர் வீட்டார் விடுகின்றனர்.  வரதக்ஷணை என்பதெல்லாம் இல்லை.  இந்த பேரம் எல்லாம் பிற்காலத்திலேயே ஏற்பட்டது.  அதே போல் பெண்ணுக்குப் பரிசம் என்பதும் கிடையாது. இரண்டு குலங்களும் ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் பண்ணிக் கொண்டு தங்கள் குலத்தை விருத்தி செய்வதோடு பிரம்மசாரிக்கு கிரஹஸ்தாசிரமம் ஏற்பட்டு அவன் செய்ய வேண்டிய கர்மாநுஷ்டானங்களை அந்தப் பெண்ணின் துணையோடு கிரமமாகச் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.  எட்டுவித விவாஹங்களில் இதுவே முதன்மை வாய்ந்தது ஆகும்.


அடுத்தது தைவம் எனப்படுவது.  யாகங்கள், யக்ஞங்கள் நடக்கையிலே அதைப் பண்ணி வைக்கும் ரித்விக்குக்குப் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவதும் நடைமுறையில் இருந்து வந்தது.  பெண்ணுக்கு வயது வந்தும் உரிய காலத்தில் பிள்ளை தேடி வராத காரணத்தால் வேறு வழியின்றிப் பெண் வீட்டுக்காரர்கள் வரனைத் தேடிப் போய் அலைந்து யாகசாலையில் மாப்பிள்ளையைக் கண்டுபிடித்துப் பெண்ணைக் கன்யாதானம் செய்வார்கள்.  இது அவ்வளவாக உயர்வானதில்லை என்றே அபிப்பிராயம் என்றாலும் இன்றைக்குச் சில வருடங்கள் முன் வரையிலும் பெண் வீட்டுக்காரர்களே பெரும்பாலும் பிள்ளையைத் தேடிச் சென்று கொண்டிருந்தனர்.  வரதக்ஷணை எனப் பெரும்பணம், மாப்பிள்ளைக்கு மோதிரங்கள், கங்கணம், சங்கிலி போன்ற ஆபரணங்கள், துணிமணிகள் வாங்கப் பணம், அது போக வரனுக்கு தக்ஷணை எனப் பெரும்பணம் கொடுத்து மணமகன்கள் விலைக்கு வாங்கப் பட்டனர்.  உண்மையில் பெண்ணைத் தேடிப் பிள்ளை வீட்டுக்காரர்கள் செல்வதும், பெண்ணைத் தேடிக் கண்டு பிடித்து விவாஹம் செய்து கொள்வதுமே சிலாக்கியமான ஒன்று என சாஸ்திரம் சொல்கிறது.


அடுத்த ஆர்ஷம் என்பதும் உரிய காலத்தில் விவாஹம் ஆகாத கன்னிகையை வயது வித்தியாசம் பார்க்காமல் முதிர்ந்த ரிஷியாக ஆனாலும் இரண்டு பசுக்களையாவது வரனிடமிருந்து வாங்கிக் கொண்டு பெண்ணைக் கொடுப்பார்கள்.  வரனிடமும் அவ்வளவு சக்தி இல்லை.  ஆகையால் பசுக்களைக் கொடுக்கிறான்.  பெண்ணைக் கொடுப்பவருக்கும் பிராம்ம விவாஹம் செய்து வைக்கக் கூடிய சம்பந்தம் கிடைக்கவில்லை என்பதால் பசுக்களையோ, பொருளையோ வாங்கிக் கொண்டு பெண்ணைக் கொடுக்கிறார்கள். ஆனால் விவாஹ விஷயத்தில் பண சம்பந்தமே இல்லாமல் இருப்பதே உத்தமமான விவாஹம் ஆகும்.

அடுத்தது பிராஜாபத்தியம்.  பெண் வயதுக்கு வரும் பக்குவம் அடைந்துவிட்டாள் என்பதால் அவசரம் அவசரமாக வரனைத் தேடிப் போய் பிரம்மசாரியைக் கண்டுபிடித்துப் பெண்ணைக் கொடுப்பது தான் பிராஜாபத்தியம்.  இதைல் ஜிஎம்பி சார் சொன்ன மாதிரி பிரஜையை உண்டு பண்ணும் நோக்கமே முக்கியமானதாக உள்ளது என்பதால் இதுவும் அவ்வளவு உசிதமான திருமண முறை அன்று.  என்றாலும் இன்றும் இப்படியான திருமணங்களே பெரும்பாலும் நடந்து வருகின்றன.


// இது அவ்வளவாக உயர்வானதில்லை என்றே அபிப்பிராயம் என்றாலும் இன்றைக்குச் சில வருடங்கள் முன் வரையிலும் பெண் வீட்டுக்காரர்களே பெரும்பாலும் பிள்ளையைத் தேடிச் சென்று கொண்டிருந்தனர். வரதக்ஷணை எனப் பெரும்பணம், மாப்பிள்ளைக்கு மோதிரங்கள், கங்கணம், சங்கிலி போன்ற ஆபரணங்கள், துணிமணிகள் வாங்கப் பணம், அது போக வரனுக்கு தக்ஷணை எனப் பெரும்பணம் கொடுத்து மணமகன்கள் விலைக்கு வாங்கப் பட்டனர். //

@அப்பாதுரை, தைவக் கல்யாண முறையோடு இது எழுதப் பட்டிருப்பதால் தைவ கல்யாணங்களில் வரதக்ஷணை இருந்தது என்ற கருத்துத் தோன்றி விட்டது. தவறு என் மேல் தான். நான் சொல்ல வந்தது என்னவெனில் தைவக் கல்யாணங்களில் பெண்ணை வைத்துக் கொண்டு பிள்ளை தேடி வராமல் பிள்ளையைத் தேடிப் போனது போல் தற்காலத்திலும் சில வருடங்கள் முன்னர் வரை பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிப் போய்க் கல்யாணம் ஏற்பாடு செய்தனர் என்பதே. இதுக்குத் தான் வரதக்ஷணை கொடுத்தனர். தைவக் கல்யாணங்களில் இல்லை. :))))))))//



மேலே குறிப்பிட்டவை அப்பாதுரையின் பின்னூட்டத்துக்கு என் பதில்.  இந்தப் பதிவில் தைவக் கல்யாணங்கள் குறித்த விளக்கத்தில் மேற்கண்ட வரிகளும் சேர்க்கப் பட்டிருப்பதில் தைவக் கல்யாணத்தின் பொருளே மாறுபட்டுத் தொனிக்கிறது.  உ.வே.சா. அவர்கள் எழுதிய கல்யாணம் குறித்த சான்றுகள் கிடைத்துவிட்டன.  விரைவில் அவற்றைப் பகிர்கிறேன். 


21 comments:

  1. தாலாட்டும் பாடலோடு ஆரம்பம்...

    இத்தனை சோதனைகளா...? இத்தனை வகைகளா...?

    /// விவாஹ விஷயத்தில் பண சம்பந்தமே இல்லாமல் இருப்பதே உத்தமமான விவாஹம் ஆகும் ///

    நன்றி அம்மா...

    ReplyDelete
  2. //பிராஜாபத்தியம்... பிரஜையை உண்டு பண்ணும் நோக்கமே முக்கியமானதாக உள்ளது என்பதால் இதுவும் அவ்வளவு உசிதமான திருமண முறை அன்று. //

    புரியவில்லை. :))

    ReplyDelete
  3. குருகுலவாசம் முடிந்து குருவின் ஆசிகளைப் பெற்றுக் காசியாத்திரையும் சென்று சமாவர்த்தனம் முடிந்த உத்தம பிரம்மசாரிக்காக அவனுடைய பெற்றோர் நல்ல குலத்துப் பெண்ணைத் தேர்ந்தெடுத்துப் பெண்ணின் பெற்றோர்களிடம் தங்கள் பிரம்மசாரி மகனுக்கு அவர்கள் குமாரியைக் கன்யாதானம் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுப்பது ஆகும். கவனிக்கவும். பெண்ணைக் கொடுக்கச் சொல்லி வேண்டுகோள் தான் பையர் வீட்டார் விடுகின்றனர். வரதக்ஷணை என்பதெல்லாம் இல்லை. இந்த பேரம் எல்லாம் பிற்காலத்திலேயே ஏற்பட்டது. அதே போல் பெண்ணுக்குப் பரிசம் என்பதும் கிடையாது. இரண்டு குலங்களும் ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் பண்ணிக் கொண்டு தங்கள் குலத்தை விருத்தி செய்வதோடு பிரம்மசாரிக்கு கிரஹஸ்தாசிரமம் ஏற்பட்டு அவன் செய்ய வேண்டிய கர்மாநுஷ்டானங்களை அந்தப் பெண்ணின் துணையோடு கிரமமாகச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். எட்டுவித விவாஹங்களில் இதுவே முதன்மை வாய்ந்தது ஆகும்.
    இது தான் கலியாணம் !! பூரணமான மகிழ்ச்சிக்கு இவ்வாறு இருத்தலே போதுமானது .
    இப்போதெல்லாம் தண்டனையாகவே தான் பார்க்க முடிகிறது .அறியப்படாத சில நல்ல விசயங்களை அறியத் தந்துள்ளீர்கள் .மிக்க நன்றி .வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற
    நல்ல விசயங்களைத் தொடர்ந்தும் பதிவிடுங்கள் .

    ReplyDelete
  4. இந்தப் பெண் பார்த்தல் என்னும் நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்ததும், பெண்ணைப் பார்க்கும் வரனின் வீட்டுக்காரர்கள் பெண்ணைப் பாடச் சொல்லி, நடக்கச் சொல்லி எல்லாம் சோதனை செய்வார்களாம். பாடச் சொல்வது பெண்ணுக்குப் பேச்சு நன்றாக வருகிறதா என்று அறியவும், நடக்கச் சொல்வது பெண் நொண்டியோ, முடமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்கும் ஆகும் என்பார்கள். //

    நீங்கள் சொல்வது உண்மை. முன்பு இப்படி பார்த்தார்கள் என்பதற்கு எங்கள் வீட்டிலேயே சான்று இருக்கிறது.


    என் அம்மாவை பெண் பார்க்க வந்த பாட்டி, (என் அப்பாவை பெற்றவர்)
    பாடசொல்லி, கேட்டார்களாம், அம்மா ஆர்மோனியம் வாசித்து பாடிக்காட்டினார்களாம். என் அம்மாவுக்கு கூந்தல் நிறைய இருக்கும், அது உண்மையான முடியா எனப் பார்க்க பாட்டி ஏன் ஈரதலையோடு பின்னி இருக்கிறாய் காயவை என்று பிரித்துப்பார்த்தார்களாம்.
    அம்மாவை நடக்க சொல்லிப் பார்க்க அதை எடு, இதை எடு என்று அம்மாவின் கைவேலைகளால் நிறைந்த கண்ணாடி பீரோவிலிருந்து பொருட்களை எடுக்கச்சொல்லி பார்த்து இருக்கிறார்கள்.
    அம்மா எங்களிடம் அடிக்கடி சொல்லுவார்கள்.

    பொன்னொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை பாடல் எனக்கு பிடித்தது.

    ReplyDelete
  5. வாங்க டிடி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. இன்னும் இருக்கு. :))))

    ReplyDelete
  6. ஜீவி சார், குழந்தை பிறப்புக்காகக் கல்யாணம் என்ற அர்த்தத்தில் அது நடைபெறும். திரு ஜிஎம்பி சாரும் அதைத் தான் சொல்றார். இந்த நாட்களில் வேண்டுமானால் இப்படி ஒரு குறிக்கோள் இருக்கலாம். ஆனால் முன்னாட்களில் திருமணத்துக்குக் குழந்தை பிறப்பு மட்டுமே குறிக்கோள் அல்ல.

    ReplyDelete
  7. அம்பாளடியாள், வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. இந்தப் பதிவுகள் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து வரும். நன்றி.

    ReplyDelete
  8. தேர்ந்த எழுத்துக்குப் பாராட்டுக்கள்.

    gloves off.

    தைவ கல்யாணமும் அந்த நாள் வழக்கம் தானே? வரதட்சணை அப்போதே இருந்தது தான்.

    குழந்தை பிறப்பை ஒட்டித் திருமணங்கள் நடந்தன என்பதை ஏற்பதில் என்ன தவறு? அதை ஏற்காமல் என்னவோ ஆத்மார்த்த அன்பின் காரணமாக அந்தக் காலத் திருமணங்கள் நடந்தன, நமது பாரம்பரியம் அப்படி, என்பதில் தான் தடுக்கி விழுகிறோம் என்று நினைக்கிறேன். குழந்தை பிறப்புக்காகத் திருமணம் செய்தோம் என்று சொல்வதில் ஒரு தவறுமில்லை என்றே நினைக்கிறேன்.

    குழந்தை பிறப்பை மட்டுமே ஒட்டித் திருமணங்கள் நடந்தன என்பதும் என் கருத்து. பிரஜா உற்பத்தி நோக்கம் இல்லாத திருமணங்களே இல்லை. இந்துத் திருமணங்களின் பின்னணியில் சந்ததி விருத்தம் மிக ஆதாரமான இடம் பெற்றிருக்கிறது. குழந்தைப் பிறப்புக் குறிக்கோள் இல்லையென்றால் இரண்டாம் திருமணங்கள் பிள்ளைக்கு நடக்க வேண்டிய அவசியம் கிடையாதே? (அதே மனுநீதி மகவின்மைக்குக் காரணம் பெண் என்பது போல் பேசுகிறது) சந்ததி, அதுவும் ஆண் சந்ததி, இல்லையென்றால் ஸ்ரார்த்தம் செய்ய முடியாதே? தனக்கு மட்டுமல்ல, முகமறியாத முன்னோருக்கும் அல்லவா கழிவுக்கடன் செய்ய வேண்டியிருக்கிறது நமது பொன்னான வேதங்கள் சொன்னபடி? அதற்காகவேனும் குழந்தை பிறப்பு அனுசரிக்கப் படவேண்டுமே?

    ReplyDelete
  9. பின்னலை இழுத்துப் பார்த்தாங்களா?!
    இன்றைக்கு எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம் என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

    ReplyDelete
  10. // இது அவ்வளவாக உயர்வானதில்லை என்றே அபிப்பிராயம் என்றாலும் இன்றைக்குச் சில வருடங்கள் முன் வரையிலும் பெண் வீட்டுக்காரர்களே பெரும்பாலும் பிள்ளையைத் தேடிச் சென்று கொண்டிருந்தனர். வரதக்ஷணை எனப் பெரும்பணம், மாப்பிள்ளைக்கு மோதிரங்கள், கங்கணம், சங்கிலி போன்ற ஆபரணங்கள், துணிமணிகள் வாங்கப் பணம், அது போக வரனுக்கு தக்ஷணை எனப் பெரும்பணம் கொடுத்து மணமகன்கள் விலைக்கு வாங்கப் பட்டனர். //

    @அப்பாதுரை, தைவக் கல்யாண முறையோடு இது எழுதப் பட்டிருப்பதால் தைவ கல்யாணங்களில் வரதக்ஷணை இருந்தது என்ற கருத்துத் தோன்றி விட்டது. தவறு என் மேல் தான். நான் சொல்ல வந்தது என்னவெனில் தைவக் கல்யாணங்களில் பெண்ணை வைத்துக் கொண்டு பிள்ளை தேடி வராமல் பிள்ளையைத் தேடிப் போனது போல் தற்காலத்திலும் சில வருடங்கள் முன்னர் வரை பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிப் போய்க் கல்யாணம் ஏற்பாடு செய்தனர் என்பதே. இதுக்குத் தான் வரதக்ஷணை கொடுத்தனர். தைவக் கல்யாணங்களில் இல்லை. :))))))))

    ReplyDelete
  11. //குழந்தை பிறப்பை மட்டுமே ஒட்டித் திருமணங்கள் நடந்தன என்பதும் என் கருத்து. பிரஜா உற்பத்தி நோக்கம் இல்லாத திருமணங்களே இல்லை. இந்துத் திருமணங்களின் பின்னணியில் சந்ததி விருத்தம் மிக ஆதாரமான இடம் பெற்றிருக்கிறது. குழந்தைப் பிறப்புக் குறிக்கோள் இல்லையென்றால் இரண்டாம் திருமணங்கள் பிள்ளைக்கு நடக்க வேண்டிய அவசியம் கிடையாதே? (அதே மனுநீதி மகவின்மைக்குக் காரணம் பெண் என்பது போல் பேசுகிறது) சந்ததி, அதுவும் ஆண் சந்ததி, இல்லையென்றால் ஸ்ரார்த்தம் செய்ய முடியாதே? தனக்கு மட்டுமல்ல, முகமறியாத முன்னோருக்கும் அல்லவா கழிவுக்கடன் செய்ய வேண்டியிருக்கிறது நமது பொன்னான வேதங்கள் சொன்னபடி? அதற்காகவேனும் குழந்தை பிறப்பு அனுசரிக்கப் படவேண்டுமே?//

    அப்பாதுரை, திருமணத்தின் ஒரு நோக்கம் சந்ததி விருத்தி, கோத்திர வளர்ச்சி என்று ஏற்கெனவே நானும் கூறியுள்ளேன். மேற்குறிப்பிட்ட கர்மாக்களைச் செய்ய மனைவியின் துணை வேண்டுமல்லவா? அதுவும் சாமவேதிகள் எனில் மனைவி இறந்தாலோ, அல்லது வீட்டுக்கு விலக்காய் இருந்தாலோ, உடல் நலமில்லாமல் எழுந்து நடமாடச் சக்தியற்று இருந்தாளெனிலோ, கணவன் செய்யும் சிராத்தக் கடமைகளில், ஹோமம் என்ற பெயரே கிடையாது. மனைவி இருந்தால் தான் ஹோமம். அதோடு நீங்கள் கூறுவதும் கிரஹஸ்தனின் நித்ய கர்மானுஷ்டானங்களில் ஒன்றே. ஆகவே திருமணத்தின் ஒரு குறிக்கோளான பிள்ளைப்பேறு என்பதிலும் அர்த்தம் பொதிந்தே இருக்கிறது.

    ஸ்ராத்தம் தான் சரியான உச்சரிப்பு, சரியான வார்த்தை. ஸ்ரார்த்தம் என "ர்" போடுவது தவறு. ஸ்ரத்தையாகச் செய்வது தான் ஸ்ராத்தம்.

    ReplyDelete
  12. /பிராஜாபத்தியம்... பிரஜையை உண்டு பண்ணும் நோக்கமே முக்கியமானதாக உள்ளது என்பதால் இதுவும் அவ்வளவு உசிதமான திருமண முறை அன்று. //

    இந்த பிராஜாபத்தியத்தை இப்படிப் பாருங்கள்.

    'காந்தர்வம்' இருந்தது. துஷ்யந்தன் - சகுந்தலை காலம். திருமணம் என்கிற ஒரு சடங்கு இல்லாதிருந்த காலம் அது. ஆனால் குழந்தைப்பேறு உண்டு.

    ஆண்-பெண் இருவர் பந்தத்தில் இருந்த குறைபாடுகளைக் களைய வந்த முற்போக்கான ஒன்று பிற்காலத்து பிராஜாபத்தியம். திருமணம் செய்யாமல் குழந்தை இல்லை என்கிற நிலை. அதாவது, குழந்தை வேண்டுமென்றால் பிராஜாபத்தியம் என்கிற திருமணச் சடங்கில் உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நிலை. பெண்களுக்கு பாதுகாப்பைக் கொண்டு வந்த பிராஜாபத்தியம்.

    பிரஜையை உண்டு பண்ணும் நோக்கம் இல்லை. பிரஜையை உண்டு பண்ண வேண்டும் என்றால் பிராஜாபத்தியம் வேண்டும் என்கிற நிலை.

    கால வளர்ச்சி எப்போதுமே முன்னதுக்கு பின்னது பரவாயில்லை என்று தான் இருக்கும். அப்பொழுது தான் அது வளர்ச்சியே.

    அந்த வகையில், அந்த கால கட்டத்தில் உண்மையிலேயே உசிதமான திருமண முறையாக இது இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.






    ReplyDelete
  13. ஆ.. அதெல்லாம் முடியாது. சொன்னது சொன்னது தான் :)

    ஸ்ரார்த்தம்னு நினைச்சிட்டிருந்தேன் இத்தனை நாளும்! நன்றி.
    விருத்தி என்பதற்கு பதில் விருத்தம் என்றும் எழுதிவிட்டேன்.

    சந்ததி பெருக்கைத் தவிர திருமணத்துக்கு வேறு என்ன காரணங்கள் என்பதையும் சொல்லுங்கள். உடன் நின்று இறைச்சேவை செய்வது என்பது பெரிய காரணமல்ல. முக்கிய காரணம் சந்ததிப் பெருக்கம் தான். :)

    ReplyDelete

  14. /இரண்டு குலங்களும் ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் பண்ணிக் கொண்டு தங்கள் குலத்தை விருத்தி செய்வதோடு பிரம்மசாரிக்கு கிரஹஸ்தாசிரமம் ஏற்பட்டு அவன் செய்ய வேண்டிய கர்மாநுஷ்டானங்களை அந்தப் பெண்ணின் துணையோடு கிரமமாகச் செய்ய வேண்டும் என்பதே ஆகும்/ இது அம்பாளடியாளின் பின்னூட்டம்.
    என் எண்ணங்களையே இதுவும் பிரதிபலிகிறது. ஏதோ சந்ததி விருத்திக்குத் திருமணம் என்பது ஏதோ பெருங்குற்றம் என்பதுபோல் எண்ணப்படுகிறதா. என் கருத்துக்கள் எல்லாம் எளிய தமிழில் சொல்லப் பட்டிருக்கின்றன. திருமணங்கள் பற்றி நான் எழுதி இருந்த பதிவின் சுட்டியை அனுப்பியிருந்தேன்.அதில் கண்ட ஒரு சேதிதான் குழந்தைகள் பெற சமூகம் அளிக்கும் அங்கீகாரமாய்த் திருமணத்தைப் பற்றி சொல்லி யிருக்கிறேன். என் கருத்தில் உடன் பாடு கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது.

    ReplyDelete
  15. //இரண்டு குலங்களும் ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் பண்ணிக் கொண்டு தங்கள் குலத்தை விருத்தி செய்வதோடு பிரம்மசாரிக்கு கிரஹஸ்தாசிரமம் ஏற்பட்டு அவன் செய்ய வேண்டிய கர்மாநுஷ்டானங்களை அந்தப் பெண்ணின் துணையோடு கிரமமாகச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். எட்டுவித விவாஹங்களில் இதுவே முதன்மை வாய்ந்தது ஆகும்.//

    ஜிஎம்பி சார், நான் பிராம்மம் திருமணத்தைக் குறித்து எழுதிய பத்தியில் உள்ளவற்றையே அம்பாளடியாள் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே இது நான் எழுதியவையே. அம்பாளடியாளின் கருத்து இல்லை. பிராம்மம் திருமணம் முதன்மை வாய்ந்தது என்னும் வரையில் அந்தப் பத்தியை காப்பி, பேஸ்ட் செய்து போட்டுக் கீழே ஆமோதித்திருக்கிறார் பாருங்கள்,

    //இது தான் கலியாணம் !! பூரணமான மகிழ்ச்சிக்கு இவ்வாறு இருத்தலே போதுமானது .
    இப்போதெல்லாம் தண்டனையாகவே தான் பார்க்க முடிகிறது .அறியப்படாத சில நல்ல விசயங்களை அறியத் தந்துள்ளீர்கள் .மிக்க நன்றி .வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற
    நல்ல விசயங்களைத் தொடர்ந்தும் பதிவிடுங்கள் .//

    இதுவே அவரின் பின்னூட்டம். :)))))))

    ReplyDelete
  16. திருமணம் என்பது வாழ்க்கை நெறி.
    பெண்களைக் காப்பாற்ற வந்த சடங்கு.
    ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கட்டுப்பாட்டைக் காக்க வந்த கண்ணியமான ஏற்பாடு.
    எதற்காகவும் ஆன லைசனஸ் என்றோ, மியர்லி வாழ்க்கை ஒப்பந்தம் என்றோ குறுக்கிப் பார்க்க முடியாதபடி க்கு இருவர் இணையும் மணவாழ்க்கைக்கு இதையெல்லாம் தாண்டிய எத்தனையோ குறிக்கோள் களும் பெருமைகளும் உண்டு.

    ReplyDelete
  17. //காந்தர்வம்' இருந்தது. துஷ்யந்தன் - சகுந்தலை காலம். திருமணம் என்கிற ஒரு சடங்கு இல்லாதிருந்த காலம் அது. ஆனால் குழந்தைப்பேறு உண்டு.

    ஆண்-பெண் இருவர் பந்தத்தில் இருந்த குறைபாடுகளைக் களைய வந்த முற்போக்கான ஒன்று பிற்காலத்து பிராஜாபத்தியம். திருமணம் செய்யாமல் குழந்தை இல்லை என்கிற நிலை. அதாவது, குழந்தை வேண்டுமென்றால் பிராஜாபத்தியம் என்கிற திருமணச் சடங்கில் உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நிலை. பெண்களுக்கு பாதுகாப்பைக் கொண்டு வந்த பிராஜாபத்தியம்.//

    ஜீவி சார், நீங்கள் வெளியாகவில்லை எனச் சொன்ன பின்னூட்டம் இதான் என நினைக்கிறேன். எல்லாப் பின்னூட்டங்களையும் வெளியிட்டுவிடுவேன். பதில் கொடுக்கத் தான் மின்சாரம் இருப்பதைப் பொறுத்தோ அல்லது வேறு ஏதேனும் வேலைகள் இருந்தாலோ தாமதம் ஆகும். நன்றி பின்னூட்டத்துக்கு. தொடர்ந்து உங்கள் கருத்தைப் பதிந்து வாருங்கள்.

    ReplyDelete
  18. //சந்ததி பெருக்கைத் தவிர திருமணத்துக்கு வேறு என்ன காரணங்கள் என்பதையும் சொல்லுங்கள். உடன் நின்று இறைச்சேவை செய்வது என்பது பெரிய காரணமல்ல. முக்கிய காரணம் சந்ததிப் பெருக்கம் தான். :)//

    அப்பாதுரை! :))))))

    ReplyDelete
  19. //ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கட்டுப்பாட்டைக் காக்க வந்த கண்ணியமான ஏற்பாடு.
    எதற்காகவும் ஆன லைசனஸ் என்றோ, மியர்லி வாழ்க்கை ஒப்பந்தம் என்றோ குறுக்கிப் பார்க்க முடியாதபடி க்கு இருவர் இணையும் மணவாழ்க்கைக்கு இதையெல்லாம் தாண்டிய எத்தனையோ குறிக்கோள் களும் பெருமைகளும் உண்டு.//

    என்னோட கருத்தும் இதான் ஜீவி சார். :)))))

    ReplyDelete
  20. ஆமாம்.. வெளியாகவில்லை என்று சொன்ன பின்னூட்டம் இது தான்.
    'உசிதம்' ஏற்பு விவரம் மட்டும் தெரியவில்லை. :))

    ReplyDelete
  21. உங்களின் கல்யாணம் பற்றிய இந்தப் பதிவின் மூலம் நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது. இத்தனை வகையான திருமணங்களா?

    மறுமொழிகள் ஒரு ஆரோக்கியமான கருத்தரங்காக இருப்பது படிக்க சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete