எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 29, 2013

"பழ"காரங்களோடு கிருஷ்ண ஜன்மாஷ்டமி! :)

எங்க வீட்டுக் கிருஷ்ணன் நேற்றுப் பிறந்த நாள் அலங்காரம்.  வலப்பக்கம் தொட்டிலில் இருக்கும் கிருஷ்ணனை ராஜஸ்தான்,புஷ்கரில் வாங்கினோம்.  இடப்பக்கம் இருக்கும் குட்டிக் கிருஷ்ணன் யாரோ கொடுத்தது.  நடுவில் இருக்கும் தவழ்ந்த நவநீத கிருஷ்ணன் குடும்பத்துப் பரம்பரைச் சொத்து! :) என் கணவரோட முன்னோர்கள் பஞ்சாயதன பூஜை செய்து வந்திருக்காங்க.  அப்போ எல்லா சுவாமிகளோடயும் இந்தக் கிருஷ்ணனையும் வைச்சு இருந்திருக்காங்க. இவரோடு கூட ஶ்ரீதேவி, பூதேவி சமேத மஹாவிஷ்ணு, பிள்ளையார், ரிஷப வாஹனர் ஆகியோரும் உண்டு.  ரிஷப வாஹனர் விக்ரஹம் தான் கிடைக்கலை.  வாஹனம் மட்டும் கிடைச்சது. நாங்க பத்ரியில் வாங்கின லிங்கத்தையும், மதுரை மீனாக்ஷி விக்ரஹத்தையும் அதிலே வைச்சிருக்கோம். :)))




தீபாராதனையில் கிருஷ்ணரும், நிவேதனங்களும்.  கிருஷ்ணருக்கு நேத்திக்கு விரதம்.  அதோட பிறந்த குழந்தையாச்சே! :)) பல்லெல்லாம் முளைக்கலை! அதனாலே எல்லாம் "பழ"காரங்கள் தான் கண்ணனுக்கு.  குழந்தை பிறந்திருக்கிறதாலே பால் பாயசம் வைச்சேன்.  கொஞ்சமே கொஞ்சம் போல் வடை தட்டினேன். மற்றபடி அவல், வெல்லம், வெண்ணெய், தயிர், பால், (பால் அடுத்த படத்திலே இருக்கும்)ஆப்பிள், மாதுளை, கொய்யா, வாழைப்பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவை தான் நிவேதனம்.  ஹிஹிஹிஹி. (இந்த வருஷம் பண்டிகை கிடையாது.  ஆனால் குழந்தை பிறப்பை அலட்சியம் செய்ய முடியுமா? அதான் எளிமையாகக் கொண்டாடியாச்சு!)



இதிலே தீபாராதனைத் தட்டுக்கும் வடைக்கும் நடுவே இருக்கிறது பால்.  பால் காலை வரை வரணும் என்பதால் ஏதேனும் விழுந்து கெட்டுப் போயிடப் போகுதேனு தள்ளி வைச்சிருந்தேன்.  படத்திலே விழலை.  அப்புறமா நகர்த்தி முன்னாடி கொய்யாப் பழத்தையும் பாலையும் வைச்சுப் படம் எடுத்தேன். கிருஷ்ணர் பல் இல்லாமப் பழங்களை மட்டும் எப்படிச் சாப்பிடறதுனு கேட்டுட்டார்.  ஃப்ரூட் சாலட் பண்ணிக் கொடுத்துடறேன்னு சொல்லிட்டேன். 








18 comments:

  1. இனிய ஜன்மாஷ்டமி வாழ்த்துகள். படங்களெல்லாம் நல்லா ஜோரா இருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. கொண்டாட்ட மகிழ்ச்சியை
    படங்களுடன் பகிர்ந்து கொண்டது
    மகிழ்வளிக்கிறது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. "பழ"காரங்களோடு கிருஷ்ண ஜன்மாஷ்டமி! :)

    வாழ்த்துகள் பல..!

    ReplyDelete
  4. பிரமாதம். மூணு கிருஷ்ணரா:)
    ஜாலிதான்.
    பழங்களைத் துண்டு...சிறுதுண்டுகளாகச் செய்து,தேனும் ,வெண்ணெயும் கலந்து வைப்பது வழக்கம். கண்ணன் பார்த்திருப்பான். இது அவலாவது வச்சிதே என்று என்னைப் பார்த்திருப்பான். மற்றபடி எல்லாமேஅழகு கீதா.வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வடை பாயசம்னு அமர்க்களப் படுத்தி விட்டீர்கள்! சீடை செய்யும் வீடுகளில் வளர்ந்த கிருஷ்ணன் வைத்துதான் பூஜை செய்ய வேண்டுமோ! :))

    ReplyDelete
  6. ஸ்ரீராம், வீட்டில் வளர்ந்த குழந்தைகள் இருந்தால் சீடை, முறுக்கு என்று அமர்க்களமாய் கண்ணனுக்கு கிடைக்கும். நாம் இருவர் என்று ஆனதிலிருந்து, அப்பம், வடை, தயிர், நெய், பால், பழம், இனிப்பு அவல் என்று தான் ஓடுகிறது.

    ReplyDelete
  7. கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்.

    பிறந்த குழந்தைக்கு பால், பாயசம்,இனிபபு அருமை.:)

    ReplyDelete
  8. பழ காரம்..... நேற்று மாலை உங்க வீட்டு வழியா தான் போனேன்! ஃபோன் செய்து முன்னாடியே சொல்லலைன்னு வரலை! அப்புறமா வரேன்!

    ஜன்மாஷ்டமி படங்கள் நன்று.

    ReplyDelete
  9. வாங்க வைகோ சார், நன்றி.

    ReplyDelete
  10. வாங்க ரமணி சார், நன்றிங்க.

    ReplyDelete
  11. ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.

    ReplyDelete
  12. வாங்க வல்லி,இன்னும் வெள்ளியிலே வேறே இருந்தார். பொண்ணு தூக்கிண்டு போயிட்டா! :)))கண்ணன் அன்னிக்குப் பாயசம் மட்டும் தான் குடிச்சான். :))) மத்தது இனிமேல் தான் சாப்பிடணும். :)))

    ReplyDelete
  13. வாங்க ஶ்ரீராம், அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. எங்க வீட்டில் குழந்தைக் கிருஷ்ணனை வைச்சுத் தான் பூஜை செய்வோம். :))) விக்ரஹம் இல்லைனா படமாவது இருக்குமே! :)))

    ReplyDelete
  14. வாங்க கோமதி அரசு, எங்க வீட்டில் குழந்தைங்களுக்கு இந்த கோகுலாஷ்டமி முறுக்கு, சீடை அவ்வளவு பிடிச்சதில்லை. அவங்களுக்குத் தட்டை, வடை, பாயசம் மட்டும் ஓகே. ஆனாலும் நான் எல்லாம் பண்ணுவேன். இந்த வருஷம் பண்டிகை இல்லை என்பதால் செய்யலை. :))))

    ReplyDelete
  15. வாங்க மாதேவி, அதுக்கே கிருஷ்ணன் பாயசம் மட்டுமே சாப்பிட்டான். :)))

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், அநியாயமா இல்லையோ? ரகசியமா வந்துட்டு, ரகசியமாப் போயிருக்கீங்க? :))))

    ஓகே, ஓகே, உங்க வேலையை எல்லாம் முடிச்சுட்டு சாவகாசமா வாங்க. :))))

    ReplyDelete

  17. எல்லாப் பண்டிகைகளுமே கடவுள் பேரைச் சொல்லி நாம் புசிப்பதற்குத்தானே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. சாப்பிடனு பண்டிகை இல்லை ஜிஎம்பி சார்! கடவுளுக்குக் காட்டிட்டுச் சாப்பிடுவதால் பிரசாதம் ஆகிறது. அது நமக்குத் தேவையான சக்தியும், ஊக்கமும், மன அமைதியும் தரும். :)))))

    ReplyDelete