எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 14, 2014

மும்பையில் பத்து நாட்கள்!

ஒருவழியா மும்பையிலே இருந்து நேற்றிரவு திரும்பியாச்சு. அவ்வளவாக ரசிக்காத பயணம்.  ஏன்னு புரியலை. :) போனதுமே பெட்டி வராதது கொஞ்சம் மனதில் வேதனையைக் கொடுத்தாலும் தொடர் மழையால் கொஞ்சம் அறுவை அடித்தது என்பதும் உண்மை.  எங்கும் போக மனம் இல்லை.  வீட்டிலேயே இருந்தோம்.  ஒரே ஒருநாள் விலிபார்லேவில் இருக்கும் என் பெண்ணின் மாமியாரையும், அன்றே அந்தேரியில் இருக்கும் என் கணவரின் ஒன்றுவிட்ட அண்ணாவையும் போய்ப் பார்த்தோம். மற்றபடி எங்கும் செல்லவில்லை. அவ்வளவு மழை பெய்தும் தெருக்கள் சுத்தமாகக் காட்சி அளிக்கின்றன.  நல்லா அலம்பி விட்டாற்போல் மழையால் தெருக்கள் எல்லாம் பளிச்!

விமான நிலையத்திலிருந்து நாங்கள் இருந்த நவி மும்பையின் நெருல் பகுதிக்கு வர முதல் நாள் இரண்டரை மணி நேரம் ஆனது.  ஆனால் அதே விலிபார்லே போன அன்று ஒரே மணி நேரத்தில் போனோம். நேற்றுக் காலை மீண்டும் விமான நிலையம் செல்ல அரை மணி நேரம் தான் ஆனது. பணமும் குறைவு தான்.  ஓட்டுநர் வெறும் 600 ரூபாய் தான் வாங்கிக் கொண்டார்.   இதுவே தமிழ்நாடாக இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஆகி இருக்கும். ஆட்டோ ஓட்டுநர்கள் குறைந்த பட்சமாகப் பதினைந்து ரூபாய் தான் வாங்குகின்றனர்.  நாம் இருபது ரூபாய் கொடுத்தால் மீதம் ஐந்து ரூபாயைக் கரெக்டாகத் திரும்பக் கொடுக்கின்றனர்.

இதே தமிழ்நாட்டில் குறைந்த பட்சமாக ஐம்பது ரூபாயாக உள்ளது. அதோடு சில்லறையைத் திரும்பக் கேட்டால் ஒருமாதிரியாகவும் பார்ப்பார்கள். நேற்றுச் சென்னை விமான நிலையத்திலிருந்து எழும்பூர் செல்ல முன் பதிவு செய்யப்பட்ட வாடகைக்காருக்கு 420 ரூபாய் ஆனது. இத்தனைக்கும் நெருலுக்கும், சான்டாக்ரூஸுக்கும் உள்ள தூரத்தை விடக் குறைவான தூரம் தான்.   ஆனாலும் பணம் அதிகம் தான்.  நாங்கள்  எங்கும் செல்லவில்லை என்பதால் படங்கள் அதிகம் எடுக்கவில்லை.  வீட்டு பால்கனித் தோட்டத்தில் வந்து அமரும் புறாக்களைத் தான் படம் எடுத்தேன். அவை அப்லோட் ஆகவில்லை.  பிகாசாவில் ஏதோ பிரச்னை என்கிறது.  நேற்று செல்பேசியின் மூலம் ரயிலில் வருகையில் விழுப்புரம் அருகே ஒரு பசுமையான வயலைப் படம் பிடித்தேன். காமிரா மூலம் அதிகம் எடுக்கவில்லை.  எடுத்தவரை படங்களை அப்லோட் செய்த பின்னர் போடுகிறேன்.

அங்கெல்லாம் குடியிருப்பு வளாகங்கள் மிகப் பெரிதாக இருந்தாலும் ஒவ்வொரு வளாகத்தைச் சுற்றியும் திறந்த இடங்கள் நிறைய இருப்பதோடு பல மரங்களையும் சுற்றுச்சுவரைச் சுற்றி வளர்த்திருக்கிறார்கள். வாயில்புறங்களில் அசோகா மரங்களும்,  வளாகங்களின் பின்புறங்களில் மாமரம், வேப்பமரம், தென்னை போன்றவைகளும் இருக்கின்றன.  வளாகங்களின் எதிரே உள்ள நடைமேடைகள் நடப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.  அங்கேயும் மரங்கள், பூச்செடிகள், காய்கறிச் செடிகள் போன்றவை காணப்படுகின்றன.  எந்த வளாகத்தின் எதிரே இவை உள்ளனவோ அவற்றின் நேரடிக்கண்காணிப்பில் இவை எல்லாம் வளர்க்கப்படுகின்றன.  பூங்காக்கள் நீண்ட, நெடியவையாகக் கிட்டத்தட்ட ஒரு காடாகக் காணப்படுவதோடு, குழந்தைகள் விளையாடுவதற்கும் பல்வேறு விளையாட்டுக்களைக் கொண்டுள்ளது.

மழை அரைமணிநேரம் விடாமல் பெய்கிறது.  பின்னர் நிற்கும்,  மீண்டும் மேகங்கள் எங்கிருந்து வந்து கூடிக் கொண்டு ஒன்றாய்ப் பேசிக்கொண்டு மழையைப் பொழிகின்றன.  எதற்கும் மும்பை மக்கள் அசைந்து கொடுக்காமல் குடையும், ரெயின்கோட்டும் கையுமாக அவரவர் வேலையைப் பார்க்கின்றனர்.  இந்தக் கொட்டும் மழையிலும் குழந்தைகளுக்கான பள்ளி வண்டிகள்  காலை ஐந்தரை மணியிலிருந்து ஏழரை மணி வரை வர ஆரம்பித்து விடுகின்றன.  சின்னஞ்சிறு குழந்தைகள் ரெயின்கோட்டைப் போட்டுக்கொண்டு அந்தக் கொட்டும் மழையிலும் பள்ளிக்குச் செல்கின்றனர்.  மதியம் பதினொன்றரையிலிருந்து பனிரண்டரைக்குள் எல்லாக் குழந்தைகளும் வீடு திரும்பி விடுகின்றனர். போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு குழந்தைகள் தவிக்காவண்ணம் இவ்வகை ஏற்பாடு.

9 comments:

  1. மழைக்கும், நெரிசலுக்கும் மும்பை வாஸ்கள் பழகி விட்டார்கள் போல...

    ReplyDelete
  2. ஒரு வழியாக மும்பை சென்று ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தாச்சா?..
    சந்தோஷம்.

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், நமக்குத் தான் அந்த அவசரம் முடியலை. :)

    ReplyDelete
  4. ஜீவி சார், கருத்துக்கு அர்த்தம் புரியலையே? :))))))

    ReplyDelete
  5. //ஒருவழியா மும்பையிலே இருந்து நேற்றிரவு திரும்பியாச்சு.//

    நீங்கள் சொல்லியிருப்பதையே திருப்பிப் போட்டுப் பாருங்கள்!
    நான் சொன்னது வரும். கிளம்பிய இடத்திற்கு திரும்பி வந்து விட்டால் எப்போதுமே சந்தோஷம் தான்!

    // அவ்வளவாக ரசிக்காத பயணம்.//
    அந்த 'ஒருவழி'க்கு வலுவான அர்த்தம் கொடுக்க இதுவேறு சேர்ந்தாச்சா?..

    // ஏன்னு புரியலை. :) //

    ஏன்னா, பருவ நிலையும், ஒன்றரை வாரத்தில் பட்ட சிரமங்களும், முந்தைய பயணங்களின் சுகமும் இந்தப் பயணத்தை அவ்வளவாக ரசிக்க வைக்கவில்லை. அவ்வளவு தான்.

    மனசு இருக்கிறதே, பலே கில்லாடி.
    'தான்' தான் 'நான்' ஆகும் சர்வ வல்லமை படைத்தது அது!

    ReplyDelete
  6. ஜீவி சார், விளக்கத்துக்கு நன்றி. ஆனால் சித்ரகூடப் பயணம் அவ்வளவு சுகமளிக்காத பயணம் தானே! ஒரு கட்டத்தில் திரும்பிடலாமானு கூட நினைச்சேன். :))))

    ReplyDelete
  7. ஜீவி சார், விளக்கத்துக்கு நன்றி. ஆனால் சித்ரகூடப் பயணம் அவ்வளவு சுகமளிக்காத பயணம் தானே! ஒரு கட்டத்தில் திரும்பிடலாமானு கூட நினைச்சேன். :))))

    ReplyDelete
  8. ஜீவி சார், விளக்கத்துக்கு நன்றி. ஆனால் சித்ரகூடப் பயணம் அவ்வளவு சுகமளிக்காத பயணம் தானே! ஒரு கட்டத்தில் திரும்பிடலாமானு கூட நினைச்சேன். :))))

    ReplyDelete
  9. சிறந்த பயணப் பகிர்வு

    தொடருங்கள்

    ReplyDelete