முதல்லே "சாப்பிடலாம் வாங்க" வலைப்பக்கத்தில் தான் போட நினைச்சேன். ஆனால் ஏற்கெனவே பார்வையாளர்கள் இருந்தாலும் கருத்துச் சொல்லுபவர்கள் நான் "வலையுலகத் தலைவி" என்பதால் தயங்குகிறார்கள்னு புரிஞ்சது. (ஹிஹிஹி, சமாளிப்ஸ்! அப்படினு ம.சா. சொல்லுது) கண்டுக்காமல் தொடர்வோம். நேத்தி ராத்திரிக்கு இட்லிக்குத்தொட்டுக்கத் தேங்காய்ச் சட்னி பண்ண முடியலை. மி.பொ. ஒத்துக்காது. ஆகவே சாம்பார் வைக்க முடிவு செய்தேன். என்னோட வழக்கமான பருப்பில்லா சாம்பாருக்கு பதிலா ஶ்ரீராம் சொன்ன புளியில்லா ஹோ.ச.ப. சாம்பாரை வைக்கத் தீர்மானித்தேன். காமிராவெல்லாம் ரெடி.
ஶ்ரீராம் சொன்ன பொருட்கள் கீழ்க்கண்டவை. இதில் ஓரிரு மாற்றங்கள் செய்தேன்.
துவரம் பருப்பு – 1 கப் = ஒரு கப் எங்களுக்குத் தேவை இல்லை என்பதால் 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 = பெரிய வெங்காயம் சொல்லி இருக்கார். நான் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்துக் கொண்டேன்
தக்காளி – 1 = ஒரு நடுத்தர அளவுத் தக்காளி
உப்பு – தேவையான அளவு = உப்புப் போட்டு வேக வைக்கலை, அப்புறமாத் தான் சேர்த்தேன்.
அரைக்க வேண்டியவை :
தக்காளி – 1 = தக்காளி பாதி போதும் எங்க ரெண்டு பேருக்கு
பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி = இரண்டு டீஸ்பூன் தான். ரொம்பப் போட்டால் சாம்பார் ரொம்ப கெட்டியா இருக்கும். சாம்பார் கெட்டியா இருந்தால் நல்லா இருக்காதுனு எனக்குத் தோணும்.
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி = பருப்பிலேயும் போட்டேன், இங்கேயும் போட்டேன்.
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி = ம்ஹூம், போடலை, அதுக்குப் பதிலா 2 டீஸ்பூன் சாம்பார் பொடியையே போட்டுட்டேன்.
தனியா தூள் – 1 தே.கரண்டி = இன்னொரு முறை செய்யறச்சே மி.பொ.த.பொ தனியாப் போட்டுப் பார்க்கிறேன். செரியா?
தேங்காய்த் துருவல் – 2 தே.கரண்டி = இது சரி. 2 டீஸ்பூன் தான் போட்டேன்.
வெங்காயம்= பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன் (இது நானாகச் சேர்த்தது)
கடைசியில் தாளித்துச் சேர்க்க :
எண்ணெய் – 2 தே.கரண்டி = ஒரு டீஸ்பூன் போதும். :)
கடுகு – 1/4 தே.கரண்டி = போட்டேன்.
வெந்தயம் – 1/4 தே.கரண்டி= போட்டேன்
சீரகம் – 1/2 தே.கரண்டி * = ம்ஹூம் போடவே இல்லை
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி = நோ, நோ, போடலை
வெங்காயம் – 1 = ஒரு வெங்காயம் போடலை. சின்னதா ஒரு வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு கொஞ்சம் இதிலேயும் கொஞ்சம் அரைப்பதிலும் சேர்த்தேன்.
கருவேப்பில்லை – 4 இலை = போட்டேன். சாம்பாருக்குக் கருகப்பிலை என் மாமியார் வீட்டில் போட மாட்டாங்க. எனக்குக் கருகப்பிலை போடலைனா அது சாம்பாரே இல்லை.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2= ஒரு பச்சை மிளகாயும், ஒரு வத்தல் மிளகாயுமாப் போட்டேன்.
கடைசியில் தூவ : பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப் = போட்டேன்.
வெங்காயத்தை வதக்கணும்னு இதிலே சொல்லலை. ஆனால் பச்சை வெங்காயத்தை வேக விட்டால் அதிலே வரும் வாசனை அவ்வளவாப் பிடிக்காது என்பதால் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி உரித்துக் கொண்டு அவற்றை நன்கு வதக்கினேன். பருப்பு, ஒரு தக்காளியோடு வதக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் குக்கரில் வேக வைத்தேன். இதையே பருப்பை நேரடியாக ஒரு அடிகனமான பாத்திரத்தில் வேக வைத்துக் கொண்டு, வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துத் தக்காளியையும் போட்டு வேக வைத்தால் இன்னும் நன்றாக வரும். ஆனால் நேற்று அதற்கெல்லாம் நேரமில்லை, என்பதால் குக்கரிலேயே வைச்சாச்சு.
அரைக்க வேண்டியவற்றோடு ஶ்ரீராம் சொன்ன பொருட்களோடு கொஞ்சம் பச்சை வெங்காயமும் சேர்த்து அரைத்தேன். குக்கரின் பருப்புக் கலவையோடு சேர்த்து இப்போது உப்பும் சேர்த்துக் கொதிக்க விட்டேன். இதுவே கெட்டியாத் தான் இருந்தது. கொஞ்சம் தண்ணீர் சேர்த்துத் தளர்த்தினேன். அப்படியும் என்னோட கருத்துப்படி கெட்டியான சாம்பார் தான். :) பின்னர் தாளிக்கும் பொருட்களைப் போட்டு நன்கு வெங்காயத்தை வதக்கிச் சேர்த்தேன். எல்லாம் முடிஞ்சு சாப்பிடும் வரை ரங்க்ஸிடம் இது விஷயத்தைச் சொல்லவே இல்லை. ஆனால் ரங்க்ஸோ எந்தக் கமென்டும் இல்லாமல் சாப்பிட்டார் என்பதோடு சாம்பார் டேஸ்டே இன்னிக்குப் புதுமாதிரியா இருக்கு. ரொம்பவே மைல்டாக ஜாஸ்தி காரம் இல்லாமல் இட்லிக்கு நல்ல துணையாக இருக்கு. நீ வழக்கமா வைக்கிற சாம்பாரை இனிமேலே பண்ணாதே. இப்படியே பண்ணிடுனு சொன்னாரே பார்ப்போம்.
மனசுக்குள்ளே க்ர்ர்ர்ரிவிட்டு (ஶ்ரீராமுக்கும், ரங்க்ஸுக்கும் தான்) அப்புறமாச் சொன்னேன். இது ஹோ.ச.சா. அப்படினு. ஶ்ரீராம் சொன்னதாகவும் சொன்னேன். ஒரே பாராட்டு மழைதான் போங்க. கொஞ்சம் இல்லை நிறையப் பொறாமையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். :))))))

எல்லாத்தையும் விட அக்கிரமம் என்னன்னா, நீ வடக்கே எல்லாம் போடற மாதிரி ஜீரகமெல்லாம் போட்டிருந்தியானா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு சொன்னது தான்.
ஓகே, ஓகே, விட்டுடறேன். :))) இப்போ வேலை இருக்கு. நிறையவே இருக்கு. அப்புறமா நேரம் கிடைச்சதும் வரேன்.
சீரகத்தின் மேல் ஏனோ உங்கள் உங்களுக்கு வெறுப்பு! (பொருத்தமில்லை என்று சொல்வீர்கள் என்று தெரியும்)
ReplyDelete//ஸ்ரீராம் சொன்ன//
"ஸ்ரீராம் எடுத்துக் கொடுத்த, கீதா ஆச்சல் சொன்ன!" (கர்நாடகத் திரைப்படக் கதை எழுதுபவருக்கு நாங்களும் குறைந்தவர் இல்லையாக்கும்!)
//நீ வழக்கமா வைக்கிற சாம்பாரை இனிமேலே பண்ணாதே. இப்படியே பண்ணிடுனு சொன்னாரே பார்ப்போம்.//
ஹா...ஹா...ஹா...
ஆனால் இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளச் செய்யும் சாம்பார்களில் புளி சேர்த்தால் சாப்பாட்டுக்குக் கலந்துகொள்ளச் செய்யும் சாம்பார் போல ஆகி விடும் என்பதுதான் என் கருத்து!
// ஜீரகமெல்லாம் போட்டிருந்தியானா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு//
ஹா....ஹா....ஹா.... ஹா.... ஹா.... ஹா.... ஹா.... ஹா....ஹா....ஹா....
ஆனால் அதையும் மறைக்காமச் சொன்னீங்க பாருங்க... அங்க நிக்கறீங்க நீங்க!
To follow
ReplyDeleteவி வி சிரிக்கிறேன். யம்மா.. தாங்க முடியலே.
ReplyDeleteஒரு கேள்வி. சட்னி செய்யறது சுலபமா இல்லை சாம்பார் சுலபமா?
ஆஹா! படங்களோடு கலக்கல் சாம்பார். மாமாவின் கமெண்ட்ஸ் சூப்பர்....:) அதையும் மறைக்காமல் பதிவிட்ட நீங்கள் சூப்பரோ சூப்பர் மாமி....:)
ReplyDeleteஶ்ரீராம், சீரகம் எனக்குப் பிடிக்கும். பொங்கல், ரவாதோசை, கோதுமை, கேழ்வரகு தோசைகள், சப்பாத்திக்குப் பண்ணும் சைட் டிஷ்கள், சப்பாத்தி தால், அவ்வளவு ஏன் ஆலு ஜீரான்னே சப்ஜியே பண்ணுவேன். வெண்டைக்காய்க் கறி சப்பாத்திக்குப் பண்ணினால் கூட அதிலே ஜீரகம் உண்டு. :))) கீரைக்குக் கூட சில சமயம் வெறும் மசியல்னால் சீரகம் சேர்ப்பேன்.
ReplyDeleteசாம்பாரில்! ம்ஹூம், சாம்பாரின் ருசியே மாறிடும். :))))))
//ஆனால் அதையும் மறைக்காமச் சொன்னீங்க பாருங்க... அங்க நிக்கறீங்க நீங்க!//
ReplyDeleteநீங்க வேறே, என்னோட கால்வலிக்கு நிக்கவே முடியலை! உட்கார்ந்து தான் எழுதினேன். :))))
அப்பாதுரை, எதுக்காம் விவிசி??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteசட்னியோ, சாம்பாரோ எதுவானாலும் என்னைப் பொறுத்தவரை சுலபம் தான். இரண்டுமே பல சமயங்களில் சேர்த்துப் பண்ணுவதும் உண்டு. :)))
வாங்க ஆதி, நீங்க வேறே, என்னத்தை மறைக்கிறது! அதான் பெரிய பல்பா வாங்கிட்டேனே நேத்திக்கு! இது வரைக்கும் இப்படி ஒரு சாம்பாரை நீ பண்ணி நான் சாப்பிட்டதே இல்லைனு வேறே கமென்ட்! எ.கொ.இ.ச. னு நொந்து நூலாயிட்டேன்! :)))))))))
ReplyDeleteஎல்லாப் புகழும் ஶ்ரீராமுக்கே!
நானும் ஜீரகம் போடுவதில்லை சாம்பாருக்கு. ஆனால் ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
ReplyDelete
ReplyDeleteபாவம் ரங்க்ஸ். எத்தனை நாள்தான் ஒரே மாதிரி சமையலை சாப்பிட்டு ரசிப்பார். variety is the spice....!
சாம்பார் என்றால் சாம்பார் தான்
ReplyDeleteபயன்தரும் சிறந்த பதிவு
தொடருங்கள்
அகஸ்மாத்தாக இந்தப் பக்கம் வந்தேன்.
ReplyDeleteசீரகம் போட்டால் ஸாம்பாரில் வேறு வாஸனை வந்து வடும். நன்றாயுள்ளது பதிவும்,ஸாம்பாரும்.
சாப்பிடுபவர்கள் ரஸிப்பவர்களாக இருந்தால் எல்லாவிதமும் செய்யலாம்.
என்ன பிரமாதம் இல்லையா? அன்புடன்
வாங்க ராஜலக்ஷ்மி, முயற்சித்துப் பார்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். :)
ReplyDeleteஜிஎம்பி சார், நான் ஒரே மாதிரி சமைப்பதில்லை. எனக்கே அலுத்துடும். :)
ReplyDeleteநன்றி காசிராஜலிங்கம்
ReplyDeleteவாங்க அம்மா, உங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சி அடைய வைத்தது. தொடர்ந்து வருகை புரியவும் வேண்டுகிறேன்.
ReplyDeleteஒரு கமென்ட் கொடுத்துட்டு அடுத்ததுக்கு நடுவிலே நேரம் ஆகணுமாமே! என்னோட பதிவிலே நான் கொடுக்கிற பதில்களையே கூகிளார் ஏத்துக்க மாட்டேன், இடைவெளி விடலைனு சொல்றாரே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அநியாயமா இல்லையோ?
ReplyDeleteஆக மொத்தத்தில், நீங்கள் கடைசி வரை சரவண பவன் சாம்பார் வைக்கவே இல்லை. எல்லாவற்றையும்தான் மாற்றி விட்டீர்களே! :-P
ReplyDeleteசரவண பவன் சாம்பார் கமுக்கத்தை வெளியிட்டதற்கு நன்றி!
வாங்க ஞானப் பிரகாசன், மாத்தினாலும் புளி சேர்க்காமல் தானே பண்ணி இருக்கேன். :) அப்புறமா நம்மளோட தனித் தன்மை எப்படித் தெரியறதாம்? :)
ReplyDeleteசாம்பார் சூப்பர். கலரும் மணமும் செம காம்பினேஷன். நன்றாக இருந்தது கீதா.
ReplyDeleteவாங்க வல்லி, இன்னிக்குப் பண்ணிப் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். :)
Deleteஹிஹிஹி.... மறுபடி படிச்சு பூரிச்சுப் போனேன்!
ReplyDelete:))))))))))))))))
ஹிஹிஹி, முந்தாநாள் கூட இட்லிக்கு இந்த சாம்பார் தான். :)
Deleteஎல்லாம் சரி. ஆனால் அந்த ரெண்டு டேபிள்ஸ்பூன் து.பருப்புதான்..... நமக்குப் பருப்பு கொஞ்சம் அதிகம் வேணும்.
ReplyDeleteடீஸ்பூன் இல்லை துளசி, டேபிள் ஸ்பூன். ஆகையால் அது போதும்.நாங்க ரெண்டு பேர் தானே! மத்தப் பொருட்களையும் சேர்த்தா சாம்பார் காலையில் இட்லி சாப்பிட்டப்புறமும் மிச்சம் வருது. மிஞ்சாமலே பண்ணத் தெரியலை உனக்குனு கிண்டல் பண்றார் ரங்க்ஸ். ஏனெனில் சாப்பாட்டுக்கு இது அவ்வளவா நல்லா இல்லை. :)
Deleteகீதா இதில் புளியே இல்லையே! சரியா வருமா? நானும் போஸ்ட் பண்ணினேன்(சுட்டுதான்) ஒரு பெரிய வலையில் என் பேரே போட்டுவிட்டான்.அது முக்யமில்லை.
ReplyDeleteஅங்கு ஒருவன் கேள்வி கேட்டான் இதை
வாங்க அண்ணா, முதல் வருகைக்கு நன்றி. பெரும்பாலான ஹோட்டல்களில் புளி சேர்த்துச் செய்யும் சாம்பார் என்றால் அது சாப்பாட்டுக்குத் தான். இந்த சாம்பாருக்குப் புளி தேவை இல்லை என்பதே இதன் சிறப்பு. நன்றாகவே இருக்கும். நீங்க சாப்பிடுவீங்கன்னா ஒரு நாளைக்கு மன்னியைச் செய்து தரச் சொல்லுங்க! சாப்பிட்டுப் பார்த்த பின்னர் வித்தியாசம் தெரியும். தக்காளியின் புளிப்பே போதும். அதிலும் நான் நாட்டுத் தக்காளி தான் பயன்படுத்துவேன். :)
Delete