எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 12, 2014

திடீர்னு ஏற்பட்டதொரு அதிர்ச்சி! :(

  http://vijayastreasure.blogspot.in/2014/03/blog-post_2637.html

   கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம். வேறே ஏதோ தேடப் போய் இந்தப் பதிவு கிடைத்தது. இங்கே லக்ஷ்மி விஸ்வநாதன் என்பவர் விஜயாஸ் ட்ரெஷர் என்னும் வலைப்பக்கத்தில் நான் திருமணச் சடங்குகள் குறித்துத் தொகுத்து வந்த பதிவுகளில் சுமங்கலிப் பிரார்த்தனை பற்றி எழுதியவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை வெட்டி ஒட்டியுள்ளார்.  அதிலே நான் தனிக்கூட்டுச் செய்முறையை என்னுடைய சாப்பிடலாம் வாங்க பதிவில் பார்க்கலாம்னு எழுதியதும் சேர்ந்து வந்திருக்கிறது என்பதோடு பூவாடைப் பொண்டுகள், அதிசயப்பொண்டுகள் எல்லாமும் என்னுடைய அனுபவப் பகிர்வுகள். இதை வெட்டி ஒட்டியவர் என் பெயரைக் குறிப்பிடவே இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.  ஏற்கெனவே என்னுடைய சிதம்பர ரகசியம் தொடரும் இப்படித் தான் ஒருத்தர் முழுக்க முழுக்க வெட்டி ஒட்டி இருந்தார். அதே போல் கர்ணன் குறித்து எழுதியவையும்.  பிள்ளையார் குறித்த பதிவுகள். இப்போது இது! ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றே புரியவில்லை!


http://sivamgss.blogspot.in/2013/07/blog-post_5.html

    2013 ஆம் வருஷம் நான் எழுதியவை இந்த வருஷம் மார்ச் மாதம் நகல் எடுக்கப்பட்டிருக்கிறது. :(   இரண்டையும் படியுங்கள்.  இன்னும் பலரும் பல இடங்களில் என் பதிவுகள் நகல் எடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்கள் என்பதாலேயே எச்சரிக்கை கொடுத்தேன்.  அப்படியும் இது நடக்கிறது. :(

19 comments:

  1. எப்படி கூச்சமே இல்லாமல் அடிக்கிறார்கள் என்று புரியவில்லை!

    ReplyDelete
  2. அதிர்ச்சியான விஷயம்தான். அதிலும் படித்தவர்களே இது மாதிரியான செயல்களைச் செய்யும் போது ரொம்பவும் நெருடலாகவே இருக்கிறது. இது மாதிரியான ஆட்கள் வலைப்பதிவில் இப்போது மலிந்து விட்டார்கள். நாம் என்னதான் கூப்பாடு போட்டாலும் அவர்கள் திருந்த மாட்டார்கள். வலைப்பதிவில் காப்பிரைட் பற்றி நாம்தான் சொல்லிக் கொள்ள வேண்டும்.

    கொஞ்ச நாட்களாகவே உங்களுக்கு சோதனை மேல் சோதனை. மனம் தளர வேண்டாம். தொடர்ந்து எழுதவும். இந்நேரம் நிறையபேர் உங்களுக்கு ஆறுதல் சொல்லவும் ஊக்கம் தரவும் வந்திருப்பார்கள்.

    எனது பதிவுகளையும் அப்படியே நகலெடுத்து அப்படியே தங்கள் பெயரைப் போட்டுக் கொண்டு வலைப்பதிவில் வெளியிட்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள். எனது வேதனைப் பதிவு இது.

    எனது பதிவை காப்பி அடித்த பதிவர்
    http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_20.html


    ReplyDelete
  3. சிலர் காப்பி செய்ய முடியாத மாதிரி வைத்து இருக்கிறார்கள். அப்படி செய்து விடுங்கள் உங்கள் பதிவுகளை.
    எடுத்தவர்கள் உங்கள் பெயரையும் தளத்தையும் குறிப்பிட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  4. நாம் எழுதுவதே நம்முடைய திருப்திக்குத் தான். அதை காப்பியடிப்பதில் இவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?

    ReplyDelete
  5. what a shame. இவர்களுக்கு வெட்கமே இல்லை.

    ReplyDelete
  6. ரெகுலராகப் படிக்கும் பதிவுகளையே வாசிக்க முடியாமல் இருக்கும்போது அறிமுகமில்லாத பதிவரின் வலையில் உங்கள் பதிவு காப்பி செய்யப் பட்டிருப்பதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள். இதுதான் தற்செயலோ. ?பொதுவான விஷயங்கள் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் வரிக்கு வரி காப்பி அடிப்பதோமுழுவதையும் காப்பி பேஸ்ட் செய்வதையோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது பதிவில் உங்கள் பின்னூட்டம் படிவாகி இருக்கிறதே . அவருடைய ரியாக்‌ஷன் என்ன தெரிந்ததா.?

    ReplyDelete
  7. நாம் கஷ்டப்பட்டு எழுதிய பதிவை இப்படி வேறொருவர் எந்த சிரமமும் இல்லாமல் தன்னுடையது என சொந்தம் கொண்டாடுவது மிகவும் கேவலமான செயல். அதை அவர்கள் கேவலம் என்று உணராதவரையில் திருந்துவது கடினமே. உங்கள் நியாயமான வருத்தமும் ஆதங்கமும் புரிகிறது மேடம்.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், அங்கேயும் சென்று கண்டனங்களைப் பதிவு செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாங்க தமிழ் இளங்கோ ஐயா. வரவுக்கும் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. உங்கள் பதிவைக் கட்டாயமாய்ப் படிக்கிறேன்.

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, முயற்சி செய்தேன், வரலை. யாரையானும் தொழில்நுட்பம் தெரிஞ்சவங்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு செய்யணும். :)))))

    ReplyDelete
  11. வாங்க அப்பாதுரை, உங்களுக்கும் என் நன்றி.

    ReplyDelete
  12. வாங்க ஜிஎம்பி சார், இது கூகிளில் ஒரு தேடலின்போது கிடைத்தது. இதே போல் என்னுடைய பல பதிவுகளும் காப்பி, பேஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன. நானும் கண்டு பிடித்திருக்கிறேன். பிறரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    ReplyDelete
  13. வாங்க கீதமஞ்சரி, வரவுக்கும், கருத்துக்கும், ஆறுதல் சொன்னமைக்கும் நன்றி.

    ReplyDelete
  14. இதுபோல செய்வது மிகவும் தவறு தான் என்பதை அவர்கள் தாங்களாகவே உணர வேண்டும்.

    முடிந்தால் நாம் உணர்த்த வேண்டும்.

    தங்களின் அனுமதிபெற்று வெளியிட்டு, கீழே தங்களின் வலைத்தள இணைப்பினையும் கொடுத்து, நன்றியாவது தெரிவித்தால் அது நாகரீகமாக இருந்திருக்கும்.

    தங்கள் பதிவை யாரும் COPY செய்ய முடியாமல் செய்துகொள்வது தான் ஒரே வழியாகத் தோன்றுகிறது.

    ReplyDelete
  15. தங்கள் பதிவிற்கான என்கருத்தை
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
    http://yppubs.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete
  16. நன்றி வைகோ சார். உணர்த்தினாலும் உணராதவர்களை என்ன செய்வது?

    ReplyDelete
  17. காசிராஜலிங்கம், தங்கள் பதிவிற்கும், அருமையான கவிதைக்கும் நன்றி.

    ReplyDelete
  18. இவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு!

    ReplyDelete
  19. இது ஒரு பெரிய விஷயமில்லை என்று தோன்றுகிறது. உங்கள் கட்டுரை நன்றாக இருக்கிறதனால்தானே காப்பி அடிக்கிறார்கள்? அதனால் இதைப் பற்றி நீங்கள் கவலைப் படவேண்டாம்.

    கீதா ஆச்சலின் சில ரெஸிப்பிக்களைக் காப்பி பண்ணி பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது, காப்பி பேஸ்ட் ஒர்க் ஆகாது. சமயத்துல எரிச்சலா இருக்கும்.

    ரெஸிப்பிக்களைத் தவிர மற்றவற்றை 'Read Only' வைத்தால் தப்பில்லை.

    ReplyDelete