இன்னைக்கு மழை அதிகமா இல்லை. அவ்வப்போது சூரியன் அரை மனசா
வேண்டா வெறுப்பா எட்டிப் பார்க்கிறான். ஃபான் போட்டால் குளிருகிறது. புறாக்கள் இன்னைக்குச் சமையலறைக்கு வந்தன. அங்கேயும் சின்னதா ஒரு பால்கனி. அதிலே இருந்து மேலே உள்ள பரணில் இரண்டு அட்டைப் பெட்டிகளுக்கு இடையில் கூடு கட்டப் பார்க்குது போல! இங்கே அதை ரசிப்பவங்க யாரும் இல்லை. நானும் ரங்க்ஸும் தான். இரண்டு புறாக்களின் விளையாட்டைப் படம் எடுத்தேன். நேரம் போகவே இல்லை. :) ரொம்பவே போர் அடிக்குது.
வெளியே செல்லும் மனசும் இல்லை. மழை ஒரு காரணம். அலைய வேண்டாம் என்பது இன்னொரு காரணம். வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 1 ஆம் தேதி கிளம்பின அன்னிக்குத் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்க முடியலைனு ரங்க்ஸ் மறு நாள் பார்க்க ஆவலோடு இருந்தார். ஆனால் இங்கே டிஷ் ரிபேர் ஆகி ஒரு சில தொலைக்காட்சிகளே வந்தன. திங்களுக்குள் சரியாகும்னு நினைச்சால் யாருமே வந்து சரி பண்ணலை. திங்களன்று மாலை ஏழு மணிக்கு ஆவலோடு காத்திருந்த ரங்க்ஸ் சோகமாப் போய்ப் படுத்துட்டார்.
ரொம்பவே பாவமா இருக்கவே என் நாத்தனார் என்னிடம் கணினியில் வேணா பார்க்கட்டும்; போடுங்கனு சொல்லவே, அடிச்சது பிரைஸ்! விட்டது எல்லாத்தையும் நேத்தி வரை அப்டேட் பண்ணியாச்சு. நேத்து வந்து டிஷ் ஐயும் சரி பண்ணிட்டாங்க.
அவ்வளவு விருப்பமா சீரியல்கள் மேல்? அட!
ReplyDeleteபொழுது போகவில்லை என்று நன்றாகவே தெரிகிறது! தினம் ஒரு பதிவு வருகிறதே!
உங்களுக்கும் போர் அடித்திருக்கிறது தெரிகிறது. பொழுது போவதற்கு தொலைக்காட்சிகள் அவசியம் தேவைப் படுகிறதா.நல்ல ஓய்வு எடுக்க சிறந்த வேளை...!
ReplyDeleteசோகம் மறைய , மோகமான போகமாகிய தொலைக்காட்சி வந்ததாக்கும். ரங்க்ஸுக்கு கங்க்ராஜுலேஷன்ஸ்.
ReplyDeleteஆமாம் ஸ்ரீராம், நாத்தனார் சமையல் வேலையைப் பார்த்துக்கொள்கிறார். காலை, மாலை டிஃபன் மட்டும் நான் பண்ணுகிறேன். அதனால் வேலை இல்லை. :) உதவிக்கு ஆள் வேறே இருப்பதால் பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்குவதும் இல்லை. அங்கே தோட்டியில் இருந்து தொம்பன் வரை நான் தான். :))))) செம போர்!
ReplyDeleteமுழுக்க முழுக்க ஓய்வு தான் ஜிஎம்பி சார்.
ReplyDelete"இ"சார், மழை பெய்தால் நிற்கிற வரைக்கும் எந்த சானலும் வராது. :)
ReplyDelete