ம்ம்ம்ம்ம் அப்படி ஒண்ணும் பெரிசா யாரும் வரதில்லை. :) வழக்கமா வர டிடியைக் கூட இப்போக் காணோம். சலிக்காமல் ஸ்ரீராம் மட்டும் தான் வரார். அல்லது விட்டுக் கொடுக்காமல்? இஃகி இஃகி இஃகி! நானும் எல்லாப் பதிவுகளுக்கும் போகறதில்லை. சாதாரணமாகவே கொஞ்சம் தாமதமாகவே போவேன். இப்போ இங்கே டாஷ்போர்டிலும் அப்டேட் ஆவதில்லை. தற்செயலாகத் தெரிந்து கொண்டே போகிறேன். மெயிலில் அனுப்புகிறவங்க போஸ்டுக்கும் தாமதமாத் தான் போறேன். மெயில் எல்லாம் தான் நிறையப் பார்க்கிறேன். ஏகத்துக்கு மெயில் வர அளவுக்குப் பின்னூட்டம் இல்லை. :) இப்போ hit list ம் எகிறலை. :))) ஆகவே நாம இல்லைனா எதுவும் தட்டுக் கெட்டுப்போகப் போறதில்லைனு புரிஞ்சாலும் சும்ம்மாஆ உட்கார முடியறதில்லை. :) நம்ம இருப்பைக் காட்டிக்க வேண்டி இருக்கு. இது தான் "நான்" என்னும் உணர்வோ? இதைத் தான் ஒழிக்கணும்னு பெரியோர்கள் சொல்றாங்களோ? சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்?
மொக்கை போஸ்ட் போட்டால் தான் கொஞ்சமானும் மக்கள்ஸ் எட்டிப்பார்த்தாங்க. இப்போ அவங்களுக்கு அதுவும் அலுத்துடுச்சு போல! :) ஆகவே தத்துப்பித்துவமா எழுதிப்பார்க்கலாம்னு ஒரு ஆசை. ஒரு ஈ காக்காய் வராது பாருங்க இப்போ! :)
மொக்கை போஸ்ட் போட்டால் தான் கொஞ்சமானும் மக்கள்ஸ் எட்டிப்பார்த்தாங்க. இப்போ அவங்களுக்கு அதுவும் அலுத்துடுச்சு போல! :) ஆகவே தத்துப்பித்துவமா எழுதிப்பார்க்கலாம்னு ஒரு ஆசை. ஒரு ஈ காக்காய் வராது பாருங்க இப்போ! :)
ஈ!
ReplyDeleteசும்மா இருப்பது ரொம்பக் கஷ்டம்தான்! நான் மட்டும்தான் வர்றேனா என்ன? :))))
ReplyDeleteபின்னூட்டம் எழுதி முடித்து க்ளிக் செய்தால் திடீர் திடீரென்று கூகுளில் ' this page is not available ' என்று வந்துவிடுகிறது.எழுதியதெல்லாம் வீண். 'சரி, சகுனம் சரியில்லை' என்று விட்டுவிடுகிறேன். (2) எதோ தத்துவம் ..அது இது... என்றீர்களே, எப்போது எழுதப்போகிறீர்கள்?
ReplyDelete//ஆகவே நாம இல்லைனா எதுவும் தட்டுக் கெட்டுப்போகப் போறதில்லைனு புரிஞ்சாலும் சும்ம்மாஆ உட்கார முடியறதில்லை. :) நம்ம இருப்பைக் காட்டிக்க வேண்டி இருக்கு. //
ReplyDeleteபாவமா இருக்கு ... உங்களை
நினைத்து அல்ல ..................
.................................................................................................................................................................................................................................................................................................................. உங்காத்து மாமாவை நினைத்தால்.;)
இஃகி இஃகி இஃகி!
ReplyDeleteஇதுக்கு அர்த்தம் சொன்னாத் தான் பின்னூட்டம் :-)
இதோ இன்னோரு காக்கா. கீதா. நானும் எழுதுவதில் பின் தங்கி விட்டதாக என் த ங்கை சொல்கிறாள். மன ஊக்கம் வரும்போது எழுதலாம். உங்கள் திறமை உங்களுக்குத் தெரியாதாம்மா.
ReplyDeleteதத்துவம் தத்துப்பித்துவம்னு எதோ சொல்றேன்னு சொன்னது உங்கள் இடுகையில் எந்த வரியிலும் காணமே.
ReplyDelete
ReplyDeleteஇஃகி இஃகி, வா.தி. நிறையவே இங்கே இருக்கு.ஈ ஓட்டறதுதான் இங்கே வேலையே !
ReplyDeleteஆமாம் ஸ்ரீராம், நீங்க மட்டும் தான் தினம் தினம் அதாவது நான் போஸ்ட் போட்டால் வரீங்க. :)
ReplyDeleteவைகோ சார், அவர் அதையெல்லாம் கேட்பதில்லை. முக்கியமா என்னோட போஸ்டைப் படிப்பதில்லை. :)அதனால் பிழைச்சார்.
செல்லப்பா சார், அப்போ இது தத்துவம் இல்லையா? சரியாப் போச்சு போங்க. :)
ReplyDeleteஅப்பாதுரை, அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.இங்கே சுரதா.காம் மூலம் தட்டச்சறேனா? அதிலே hihihi வரதில்லை. அதனால் hihihihi என்று சிரிக்காமல் இஃகி இஃகினு சிரிக்கிறேன், தூய தமிழில். அதே!
ReplyDeleteவாங்க வல்லி, எழுத விஷயம் என்னமோ இருக்கு. ஆனால் இங்கே முடியலை. அதான் என் பிரச்னையே! ஸ்ரீரங்கத்தில் எழுதின மாதிரி இங்கே முடியலை. :)))
ReplyDeleteமாடிப்படி மாது, அப்போ தத்துவம் இல்லைங்கறீங்க? என்னங்க நீங்க! இதெல்லாம் நாமே சொல்லிக்க வேண்டியது தானே!
ReplyDeletehere is the kererū from NZhttp://en.wikipedia.org/wiki/New_Zealand_pigeon
ReplyDelete:)))))))
சரிதான், பதிவுலகமே இப்போ கொஞ்சம் சுனங்கிப்போய்த்தான் இருக்கு... ஏதாவது புரட்சி பண்ணித்தான் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரணும் போல....
ReplyDelete@ ஸ்கூல் பையர்,
ReplyDeleteஅதெல்லாம் ஒண்ணும் ஆகலை. சிலர் அவங்க பதிவுக்கு நாம் போனால் வருவாங்க. பலர் போனாலும் போகாட்டியும் வருவாங்க. அவங்களுக்கு முக்கிய வேலை இருந்தால் யாரும் வரதில்லை. அதான் விஷயம். இன்னும் சிலர் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் பதிவிற்கு அவசியமாப் போவாங்க. என்னைப்பொறுத்தவரை எனக்கு மெயிலில் அழைக்கும் நண்பர்கள் பதிவுக்கும், அப்டேட் ஆகும் பதிவுகளையும் பார்த்துவிடுவேன். இப்போ அதுவும் முடியலை! :)))))
ReplyDeleteநானும் பல தினங்களுக்கு முன் பின்னூட்டம் பற்றிநிறையவே குறை பட்டுக் கொண்டிருந்தேன். நாம் எழுதுவதைப் படிக்காவிட்டால்..கருத்து சொல்லாவிட்டால் எப்படி. என்றெல்லாம் நினைப்பு. எழுதுவது போய்ச் சேர்ந்தால் சந்தோஷம். இல்லையா எழுதியதில் கிடைக்கும் சந்தோஷம் போதாதா.?