ஶ்ரீராமரின் வலப்பக்கம் தவழ்ந்த கிருஷ்ணன் கையில் வெண்ணெயுடன், ராமர் படத்தில் செருகி இருக்கும் படமும் தொட்டமளூர் கிருஷ்ணன், இடப்பக்கம் படத்தில் மஹாசுவாமிகளின் பாத தரிசனம், இடப்பக்கம் நம்ம நண்பர், மாலை போட்டுக் கொண்டு முகமே தெரியாமல் உட்கார்ந்திருக்கார். : இந்த வருஷம் கொழுக்கட்டை எல்லாம் கொஞ்சம்னு வருத்தம் போலிருக்கு!:)
இரண்டாவது தட்டில் ஶ்ரீதேவி, பூதேவி சகிதம் பெருமாள் தொட்டில் கிருஷ்ணர், பீடத்தில் அன்னபூரணி, ரிஷப வாஹனத்தில் சிவன் ஆகியோர். கீழே உள்ளதை எடுக்கணும்னு நினைச்சேன். அப்புறமா இருக்கட்டும்னு விட்டுட்டேன். திரி, எண்ணெய், கற்பூரம், சந்தனம் குங்குமம் போன்றவை வைக்கிறோம்.
நம்ம ஆளு கதம்ப மாலையுடன் தும்பிக்கை மட்டும் தெரியும்படியா உட்கார்ந்திருக்கார். :))))பிரசாதங்கள் எல்லாம் கீழே இருக்கேனு கவலை போல!
சுவாமிக்குப் படைக்கிறோம்னு பேரிலே நாம் தானே திங்கறோம்னு சில பேர் சொல்றாங்க நினைக்கவும் நினைக்கறாங்க. அது அப்படி இல்லை. என்னால் இயன்றதை நான்செய்திருக்கேன். அதை நீ உன் பார்வையால் பார்த்து அங்கீகரித்துக்கொள். நீ அளித்த இந்த வாழ்க்கையை இப்படி வாழும்படி செய்த உனக்கு நன்றி அப்படினு சொல்லித் தான் அவற்றை நாம் சாப்பிடறோம். ஆகவே இறைவன் நமக்கு இதெல்லாம் பண்ணும்படி அனுகிரஹம் செய்திருக்கும் சக்திக்கு நன்றி சொல்லவே அவனிடம் நீயே பார்த்துக்கொள்னு காட்டிட்டு அவன் அளித்த உணவாக இதைச் சாப்பிடுகிறோம். வடையும், அப்பமும் ஒரு பாத்திரத்தில், உளுந்துக்கொழுக்கட்டை பக்கத்தில், அதுக்கடுத்து தேங்காய்க் கொழுக்கட்டை, இட்லி. பாயசம், சாதம், பருப்பு, தேங்காய், வாழைப்பழம், மற்றப் பழங்கள், வெற்றிலை, பாக்கு, ஆகியன. எங்க அம்மா வீட்டிலே இதைத்தவிர கடலைப்பருப்புப் பூரணம், எள் ஆகியவற்றிலும் கொழுக்கட்டை உண்டு. மாமியார் வீட்டில் இரண்டே வகை தான். :)
கொழுக்கட்டை தின வாழ்த்துகள்.
ReplyDeleteவந்தாச்சு, எடுத்துண்டாச்சு,இன்னிக்கு நான் கூட கொழக்கட்டை பண்ணிட்டேனாக்கும்!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், எங்க வீட்டிலே கொழுகட்டை தீர்ந்தே போச்சு. நிறையப் பேர் வந்து எடுத்து இருக்காங்க! :))))) ஆனால் யாருமே கருத்துச் சொல்லலை. இது வரைக்கும் 150 பேருக்கும் மேல் கொழுக்கட்டை எடுத்துக்கொண்டு 9 பேர் அதை + போட்டிருக்காங்க. :)
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, உங்க கொழுக்கட்டையையும் படம் போடக் கூடாதோ!
ReplyDeleteசெல்ல வெல்லப் பிள்ளையார் ஆசி தந்த கொழுக்கட்டைகளை நானும் எடுத்துக் கொண்டேன். நன்றி அம்மா!
ReplyDeleteஉங்கள் கொழுக்கட்டை எடுத்துக் கொண்டேன். விநாயக சதுர்த்தசி வாழ்த்துக்கள் கீதா மேடம்.
ReplyDeleteநேத்திக்கு மறந்து போச்சு. இன்னிக்கு மிஞ்சினத்தை படம் எடுத்து fb ல போட்டிருக்கேன் .எண்ணி 16 தான் அதுக்கே தாவு தீந்திங்:(( ஆனா கொழக்கட்டை நன்னா மெல்லிசா அதிசயமா வந்திருந்தது. ராத்திரி தான் பண்ண முடிஞ்சது வேலைலேந்து வரவே 6 ஆயிடுத்து. கார்த்தால அவல் பொறி கடலை பால் பழம் தான்
ReplyDeleteகொழுக்கட்டை எடுத்துக்க வந்த கவிநயாவுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி உங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமீள் வரவுக்கு நன்றி ஜெயஶ்ரீ, ஃபேஸ்புக்கில் கொழுக்கட்டையைப் பார்த்தேன். :)
ReplyDeleteநேத்திக்கு நிறையக் கூட்டமா இருந்திருக்கு. ஆனால் அட்டென்டன்ஸ் புத்தகத்தில் கையெழுத்திட்டது நாலு பேர்தான். மத்தவங்க கொழுக்கட்டை மட்டும் சாப்பிட்டுப் போனதாலே கொழுக்கட்டை நேத்திக்குச் சீக்கிரமே தீர்ந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்.....
ReplyDeleteகொழுக்கட்டை படம் பார்த்தேன். ருசித்தேன்!
ஆஹா.அழகான சந்நிதி. ஸ்ரீராமபட்டாபிஷேகப் படம் அம்பத்தூரில் பார்த்தது. நினைவில் வந்து போனது. மீனாட்சி படமும் இருக்குமோ. அழகாகப் பண்டிகையைக் கொண்டாடி அமைதியாகப் படமும் போட்டு இருக்கிறீர்கள். பிள்ளையாரின் ஆசிகள் வீட்டில் நிறையட்டும்.வாழ்த்துகள் கீதா.
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
விநாயகர் சதுர்த்தி
ReplyDeleteசிறந்த எணணப்பதிவு
தொடருங்கள்
வாங்க வெங்கட், கொழுக்கட்டை கிடைச்சுதா?
ReplyDeleteவாங்க வல்லி, அதே படம் தானே! :)மீனாக்ஷி படம் அங்கேயே விட்டுட்டு வ்ந்தாச்சு! :(
ReplyDeleteகாசிராஜலிங்கம், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஇந்த வருடம் சதுர்த்திக்கு அட்வாஸா டிக்கெட் புக் பண்ணலாம் போல, எல்லா விக்கிரகமும் பளிச்சுன்னு இருக்கு. கிளீன் பண்றதே பெரிய வேலை போல.
ReplyDelete