அது 1990 ஆம் வருஷம். ராஜஸ்தானில் நசிராபாத்தில் இருந்து குஜராத் ஜாம்நகருக்கு மாற்றல் ஆகி மே மாசத்தில் அங்கே போயிருந்தோம். போனதில் இருந்து ஒரே மன வேதனை. ராஜஸ்தானில் கிட்டத்தட்ட அரண்மனை வாழ்க்கைக்குப் பழகி இருந்த எங்களுக்கு இங்கே கிடைத்ததோ ஒரு "பூத் பங்களா" தான். வீட்டில் மனிதர்கள் குடி இருந்து ஜன்மாந்திரம் ஆகி இருக்கும் போல் இருந்தது. சமையலறை என்ற ஒரு அறையே இல்லை. படுக்கை அறையில் ஜன்னல் என்பது பேருக்குத் தான். ஜன்னல் மாதிரி! :)அதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியில் இருந்த நாங்கள் அடுத்த ஓரிரு வாரத்தில் சென்னையில் என் அப்பா வீட்டில் ஒரு விசேஷத்துக்குக் கலந்து கொள்ளச் சென்னை செல்ல டிக்கெட் எடுத்திருந்தோம்.
நானும் குழந்தைகளும் ஜாம்நகரில் இருந்து சென்னை ஒரு 2 நாளில் போவதாக ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டிருந்தது. இப்போது தான் வந்ததாலும், ஜாம்நகர் அலுவலகத்தைத் தவிர கட்சில் உள்ள "புஜ்" ஜில் உள்ள அலுவலகமும் என் கணவரின் கீழ் இருந்ததால் அவர் நாடாறு மாதம், காடாறு மாதம் தான் ரங்க்ஸுக்கு அந்த வருட ஆடிட் ரிபோர்ட் அனுப்பியாகணும். அவரால் இப்போது லீவ் போட முடியாது. ஆகவே அவர் எங்களுடன் சென்னை வரவில்லை. நாங்கள் சென்னை போகும் திட்டம் என் கணவரின் முதல் தம்பிக்குத் தெரியும் ஆதாலால் அவ ர் எங்களை பம்பாய் வந்து விட்டுப் பின் சென்னை போகும்படிக் கூறி இருந்தார் . நாங்கள் அதுவரை பம்பாய் போனது கிடையாது. ஒவ்வொரு லீவிலும் போக முடியாமல் ஏதாவது தடை இருக்கும். இப்போ அவருக்குக் குழந்தை வேறே பிறந்திருந்தது. நாங்கள் இன்னும் அந்தக் குழந்தையைப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உத்தேசித்தும் பம்பாயில் என் கணவரின் தாய்வழி உறவினர்கள் நிறைய இருந்ததாலும் அங்கே போய்விட்டே சென்னை போவதாக முடிவு செய்து அதற்குத் தகுந்தாற்போல் டிக்கெட் எடுக்கப் பட்டிருந்தது. செளராஷ்ட்ரா மெயில் துவாரகா அருகே இருக்கும் "ஓகா" என்னும் ஊரில் இருந்து ஜாம்நகர், ராஜ்கோட் வழியாகத் தான் அஹமதாபாத் வந்து பரோடா, சூரத் வழியாக பம்பாய் வரும். என் மைத்துனர் "போரிவிலி"யில் இருந்தார் . அவர் அலுவலகக் குடியிருப்பு
போரிவிலியில் இருந்தது.. அங்கே இருந்து "சர்ச் கேட்" பகுதியில் உள்ள அவன் அலுவலகத்துக்கு நேரே ரெயிலில் செல்ல வசதியாக இருந்தது. அவர் மனைவியும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்தாள். இந்த செளராஷ்ட்ரா மெயில் காலை 6-20 மணி அளவில் "போரிவிலி" வரும். ஆகவே அவருக்கு ஸ்டேஷன் வந்து கூட்டிப் போகவும் வசதி. இதற்கு முன்னால் என்றால் நாங்கள் அமர்க்களத்தோடு ஜாம்நகர் வந்தோமே அந்த
"ஹாப்பா ஜனதா" வண்டி தான். அது ஹாப்பாவில் இருந்து கிளம்புவதோடு இல்லாமல் போரிவிலிக்குக் காலை 4-30-க்கே போய்விடும். அவங்க தூக்கத்துக்கு இடைஞ்சல். எல்லாருக்கும் வசதியாக இந்த வண்டி ஏற்பாடு செய்து குறிப்பிட்ட நாளில் கிளம்பினோம்.
இதுவரை நான் தனியாகப் பிரயாணம் செய்தது என் பையன் பிரசவத்துக்கு மதுரை போகும் போதும், அங்கே இருந்து திரும்ப நசிராபாத் வரும்போதும் தான். மதுரை போகும்போது என் தம்பியும் ,அம்மாவும் நசிராபாத் வந்திருந்தார்கள் என்றாலும் தம்பி ரொம்பவே சின்னப் பையன். மொழிப் பிரச்னை. ஆகவே கிட்டத் தட்ட நான் தான் கூட்டிப் போனேன் என்று சொல்ல வேண்டும். திரும்ப வரும்போது அண்ணாவும், மன்னியும், என் சிறிய நாத்தனாரும் வந்தார்கள் என்றாலும் அதே பிரச்னைதான். அப்பவும் நான் தான் கூட்டி வந்தேன். இப்போ ரொம்ப நாள் கழிச்சு நாங்க 3 பேரும் தனியாகப் போகிறோம். அதுவும் முதல் முதல் பம்பாய்க்கு. என் மைத்துனர் வீட்டிலும் சரி, எங்களுக்கும் சரி அப்போ ஃபோன் வசதி இல்லை. ஆஃபீஸ் நம்பரில்தான் முக்கியமான விஷயம் இருந்தால் அண்ணா, தம்பி பேசிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் கடிதம் தான். ஆகவே என் மைத்துனர் போரிவிலியில் CWC க்வார்டர்ஸில் "தத்தபாடா ரோட்"டில் இருக்கிறான் என்று தெரியும். மற்றபடி அவர் அலுவலகம் சர்ச்கேட்டில் இருக்கிறது என்றும் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது. என் கணவரிடம் எதற்கும் ஸ்ரீதர் விலாசம் கொடுங்கள் என்றதற்கு அவர், உன்னை ரெயில் ஏற்றிவிட்டு அவன் ஆஃபீஸுக்கு ஃபோன் செய்து விடுகிறேன். மத்தியானம் 2-200க்கு ஏறினால் காலையில் போரிவிலி 7 மணிக்கு வீடு போயிடலாம் என்றார். என் மாமனார், மாமியார் வேறு அப்போ அங்கே தான் இருந்தார்கள். அதனாலும் நாங்கள் கட்டாயம் போக வேண்டி இருந்தது. வண்டியில் ஏறினோம். வண்டியும் கிளம்பியது. அப்பா வராமல் குழந்தைகளுக்குள் ஒரு வெறுமை, இருந்தாலும் வேறு வழி இல்லை. ராஜ்கோட் ஒரு மணி நேரத்தில் வந்தது. ராஜ்கோட்டில் ஒரு குடும்பம் ஏறியது. அவங்க வீட்டையே காலி செய்து இந்த ஸ்லீப்பர் க்ளாசில் ஏற்றினார்கள். எங்களுக்குக் கால் வைக்க மட்டும் இல்லை, கை வைக்கவும் இடம் இல்லை. பாத்ரூம் போகப் பச்சைக் குதிரை தாண்டிப் போகவேண்டி வந்தது. அவங்ககிட்டே சொன்னால் குஜராத்தியில் சண்டை மாதிரி ஏதோ சொல்கிறார்கள். ஏற்கெனவே வெறுப்பில் இருந்த நான் இன்னும் வெறுப்பில் ஆழ்ந்தேன். ஒரு வழியாகக் காலை வந்தது. 5-00 மணி இருக்கும். நான் தான் கொட்டக் கொட்ட முழிச்சுக் கொண்டு இருப்பேனே, அது போல எழுந்து உட்கார்ந்திருந்தேன். வண்டி "பால்கர்" என்னும் ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. டீ வந்தது சாப்பிட்ட படி கேட்டேன், "போரிவிலிக்கு இன்னும் எத்தனை தூரம்?" சாய்வாலா சொன்னார்: "யே காடி டீக் ஸே ஜாதே தோ ஏக் கண்டே மே ஜாயேகி" என்றார். "என்ன இது இப்படிச் சொல்றாங்க!" என்று நினைத்தேன். வண்டி நின்று கொண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது.

தொடருமா? தொடரும் என்று போடவேண்டாமோ? :)))
ReplyDeleteஎன்னங்க இந்தியிலே என்னமோ சொல்றீங்க திட்டறீங்களா? பாராட்டறீங்களா?
ReplyDeleteஓஹோ இங்கயே ஆரம்பித்துவிட்டதா. குழந்தைகளோடு நடுவழியில் நிற்கிறது. சரி எப்படி மீண்டீர்கள் என்பதைப் பார்க்கிறேன்.கீதா.
ReplyDeleteஎனக்கு ஹிந்தி மாலும் நஹி... இருந்தாலும் ஏதோ திட்டுறீங்கன்னு மட்டும் தெரியுது... :-)
ReplyDeleteதொடரும், தொடரும் ஸ்ரீராம், இன்னிக்கு முடிஞ்சுடும். காப்பி, பேஸ்ட் தானே! :)
ReplyDeleteஇஃகி இஃகி சுரேஷ், திட்டலை, அது பேச்சு! :) வண்டி எப்போ போரிவிலி போய்ச் சேரும்னு நான் கேட்டதுக்கு அவர் சரியானபடி வண்டி கிளம்பினால் போயிடும் என்றார்.
ReplyDeleteவாங்க வல்லி, அதெல்லாம் சமாளிப்போமுல்ல! :)
ReplyDeleteநன்றி காசிராஜலிங்கம்.
ReplyDelete@ஸ்கூல் பையர், திட்டலை. :)
ReplyDeletesweet memories.
ReplyDelete