எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 18, 2014

இன்னும் சில படங்கள், இதோடு விட்டுட்டேன்பா! :))))

பதிவுகளைப் படிக்கிற அளவுக்குப் பின்னூட்டம் வரலைனு நான் சொன்னதை மாதங்கியின் அப்பா திரு மாலி அவர்கள் படிச்சுட்டுத் தான் விடாமல் படித்து வருவதாகவும், சமையல் குறிப்புக்களைக் குறித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். :)))) இப்போவும் கண்ணன் பிறந்த நாள் பதிவுக்கும் ஜாஸ்தி யாரும் கருத்துச் சொல்ல வரலை.  ஆனால் நிறையப் பேர் ரகசியமா பக்ஷணம் எடுத்துட்டு இருக்காங்க. :))))) போகட்டும்.


இங்கெல்லாம் எப்படியோ மும்பையில் சுதந்திர நாள் கொண்டாட்டத்துக்குப் பத்து நாட்கள் முன்னாடி இருந்தே அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன.  அதே போல் கிருஷ்ண ஜயந்திக் கொண்டாட்டத்துக்கும், ஆங்காங்கே தெருவுக்குத் தெரு உறியடிகள் கட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.   ஆனால் நாங்கள் கிளம்பும் வரை ஒரு உறியடி கூடக் கட்டலை.  சுதந்திர நாள் வந்ததால் கொடியேற்றத்துக்கு அப்புறம் தான் கட்டுவாங்களாம். அதனால் அந்தப் படம் எடுக்க முடியலை.




சமையலறை ஜன்னலுக்கு வெளியே உள்ளே வரத் துடிக்கும் புறாக்கள். 



நான் அங்கே தான் வேலை செய்துட்டு இருந்தேன்.  ஆனாலும் பயமில்லாமல் இவர் நுழையப் பார்த்தார்.




ஜன்னலுக்கு வெளியே புறாக்கள்



சென்னை விமான நிலையத்தில் சுதந்திர நாளுக்கான அலங்காரங்கள் செய்கையில் எடுத்த படம்.  காமிராவை எடுக்க முடியலை.  படம் எடுக்க விடுவாங்களானு யோசனை.  அவசரம் அவசரமாக செல்லிக் கொண்டது. சுமாராகத் தான் வந்திருக்கு. 




13 ஆம் தேதி மதியம் ஶ்ரீரங்கம் திரும்புகையில் விழுப்புரம் தாண்டியதும் தெரிந்த பசுமையான வயல்கள்.  செல்லில் எடுத்தவை. மழைத்துளிகள் இதிலேயும் இருக்கு. :)



மழைத்துளிகள் வெளியே ஜன்னலில் படும்போது எடுத்த படம். :)  ஹிஹிஹி, நிபுணி ஆயிட்டோமுல்ல! :)))





9 comments:

  1. ஸ்ரீ ஜெயந்தியை இவ்வளவு உற்சாகமாக் கொண்டாடுவாங்களா அங்கே... அட!

    எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும் புறாக்கள் இருக்கின்றன.


    ReplyDelete
  2. படங்கள் அழகு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஜன்னல் கவிதைகள் (அதாங்க ஜன்னலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள்) யாவும் அருமை. தொடர்ச்சியாக பின்னூட்டக் கருத்துக்களை எழுதாவிடினும், நானும் உங்களது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்களில் ஒருவன்.

    ReplyDelete
  4. ஶ்ரீராம், குஜராத்தில் பார்க்கணும். சாதம், ஆடம்னு அதாவது சப்தமியை சாதம்னும், அஷ்டமியை ஆடம்னும் சொல்வாங்க. அந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை. அதோடு மக்கள் பஞ்சமியில் இருந்தே கொண்டாட்டங்களை ஆரம்பிச்சுடுவாங்க. மேளா என்ற பெயரில் நம்மூர் எக்சிபிஷன் மாதிரி நடக்கும். கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதினாலும் கூட்டத்தில் இடிபடாமல், நசுங்காமல், மூச்சுத் திணறாமல் போய் வரலாம். எங்க பொண்ணு அப்போ கல்லூரி மாணவி. அவள் சிநேகிதியோடு தனியாகவே இந்த மேளாவுக்கெல்லாம் போய் வருவாள். ஒண்ணும் பயமில்லை. அடுத்து உத்தரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் போன்ற இடங்களிலும்கொண்டாட்டம் பலமாக இருக்கும். பலர் இல்லங்களில் பொம்மைக் கொலு மாதிரி கிருஷ்ணனின் பல்வேறு ரூபங்களைச் சித்தரிக்கும் பொம்மைகளை வாங்கி வைப்பார்கள்.

    ReplyDelete
  5. வாங்க சுரேஷ், நன்றி.

    ReplyDelete
  6. வாங்க தமிழ் இளங்கோ ஐயா, நன்றி வருகைக்கும், கருத்துக்கும், நேற்றைய வருகைப்பட்டியலில் அதிக நபர்கள் பார்வையிட்டிருப்பது தெரிந்தாலும் கருத்து மூன்று பேரிடம் இருந்தே வந்திருக்கிறது. :)))))பலருக்கும் நேரமில்லை என்பதும் புரிகிறது.

    ReplyDelete

  7. நம்மூர் உறியடிக்கும் மும்பை கோவிந்தர்களின் உறியடிக்கும் நிறையவே வித்தியாசம் அங்கு பயிற்சி பெற்றவர்களால்தான் முடியும்

    ReplyDelete
  8. வாங்க ஜிஎம்பி சார், மும்பையில் உறியடியில் விளையாடும் இளைஞர்கள் கோவிந்தா என்றே அழைக்கப்படுகின்றனர். :))

    திறமைசாலிகளாக இருந்தும் அவர்களுக்கும் இதில் காயம் ஏற்படுகிறது. உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த வருடம் நடக்குமோ, நடக்காதோ என்றிருந்தது கடைசியில் நீதிமன்றத் தீர்ப்பின் பேரில் நடைபெறுகிறது. அதனாலும் அலங்காரங்கள் செய்வதில் தாமதம் ஆகிவிட்டது என்றனர்.

    ReplyDelete
  9. எல்லாப்பதிவுகளையும் படிச்சுக்கிட்டுத்தான் இருக்கோம். என்ன.... உடனுக்குடன் இல்லேன்னாலும் நேரம் கிடைக்கும்போது விடறதில்லையாக்கும் !

    ReplyDelete