சென்னைக்குக் குடி வந்த புதுசிலே மீ ஒன்லி குழந்தை! :) வில்லிவாக்கம் ஜெகந்நாத நகரில் வீடு பார்த்திருந்தார் ரங்க்ஸ். மாடியில் போர்ஷன். கீழே வரிசையாக நான்கு வீடுகள். மேலே வீட்டுக்காரங்க ஒரு போர்ஷனிலும், நாங்க இன்னொரு போர்ஷனிலும். புது வீடு. கட்டி 2,3 மாசங்கள் ஆகி இருக்கும். கீழே நாலு போர்ஷனிலும் குடித்தனம் வந்தாச்சு. ஒரே ஒரு கிணறு. மேலே இரண்டு வீடுக்கும், கீழே நான்கு வீடுகளுக்கும். அப்போல்லாம் சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். தி.நகரில் சித்தி வீட்டில் ஸ்பூனில் குடிக்க, குளிக்கத் தண்ணீர் கொடுப்பாங்க. :))) ஆனால் இங்கே வில்லிவாக்கத்தில் கிணற்றைப் பார்த்ததும் கொஞ்சம் சந்தோஷமாகத் தான் இருந்தது. ஆனால் மோட்டார் போடவில்லை. கிணற்றுக் கைப்பிடிச் சுவரில் இருந்து ஒரு சிமென்ட் கட்டை போட்டு ராட்டினம் போட்டுக் கீழே இருந்து தண்ணீரை மேலே இழுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். சிமென்ட் கட்டையின் இன்னொரு பகுதி கிணற்றின் கைப்ப்பிடிச் சுவரின் மேல்பாகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
கிணறே ஆழம். மேலே இருந்து இன்னும் 20 அடி கூட. இழுத்தாலும் சிவந்த நிறத்தில் நீர் வரும். குளிக்க மட்டும் குளியலறை மேலே. அவசரமாக் கழிவறைக்குப் போறதுனா கீழே தான் வரணும். உதவிக்கு வந்திருந்த மாமியாருக்கும், என் அம்மாவுக்கும் அவங்க அவங்க குடும்பம் அழைக்க அவங்க சென்று விட்டனர். ஒரே வாரத்தில் கீழே போய்க் கிணற்றில் நீர் எடுத்துக் கொண்டு வந்து மேலே சேர்த்ததில் களைப்பும், சோர்வும், உடல்வலியும் அதிகம் ஆனது. மத்தியான நேரத்தில் தான் கிணற்றில் நீர் இறைக்கலாம். காலையில் கீழ்க்குடித்தனக்காரர்கள் கிணற்றை ஒட்ட இறைத்துவிடுவார்கள். வீட்டுக்காரம்மாவுக்கு முதல் வீட்டில் இருந்த பெண்மணி தண்ணீர் இறைத்துத் தனியாகக் கொடுத்துடுவாங்க. ஆக மொத்தம் மீ த ஒன் அன்ட் ஒன்லி அசடு மத்தியானமா யாரும் இல்லாத நேரமாப் போய்த் தண்ணீர் எடுத்துட்டு வந்துடுவேன். மறு நாள் வரை அதான். இடுப்பில் ஒரு குடம், கையில் ஒருகுடம்னு தூக்கிக் கொண்டு வருவேன். ரங்க்ஸ் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வரச்சே இதைப் பார்த்திருக்கார்.
ஏற்கெனவே அவருக்கு இந்த வீடு பிடிக்கலை. அவசரத்துக்கு எடுத்திருந்தார். ஆகவே அன்றே என்னை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் போனார். நாலைந்து வீடுகளைப் பார்த்துவிட்டுக் கடைசியில் ஒரு வீட்டைப்பார்க்க அறைகளெல்லாம் பெரிது பெரிதாக இருந்தன. அந்த வீடு எங்களுக்கு தாராளம். ஆனால் வாடகை நிறைய இருக்குமோ? வீட்டுக்காரப் பாட்டி தான் இருந்தாங்க. மற்றக் குடித்தனக்காரங்க யாரும் இல்லை. அந்தப் பாட்டி 60 ரூ வாடகை. மின்சாரத்துக்கு சப் மீட்டர் இருக்கு. மூணு மாசம் அட்வான்ஸ் அப்படினு சொன்னதுமே இத்தனை பெரிய வீட்டுக்கு இம்புட்டுக் கொஞ்சமாவா வாடகைனு எனக்கு மயக்கமே வந்துடுச்சு. உடனே அந்த வீட்டை அட்வான்ஸ் கொடுத்து நிச்சயம் செய்துட்டோம். ஆனால் வில்லிவாக்கம் வீட்டுக்காரங்க ஒரே சண்டை. அட்வான்ஸைக் கழிச்சுட்டுத் தான் போகணும், திரும்பத் தரமாட்டேனு பிடிவாதம். அவங்களோட சண்டை போட்டுட்டுக் கிளம்பி வந்தோம். பதினேழு ரூபாயோ என்னமோ நஷ்டம். அவங்க திருப்பித் தரலை.
அம்பத்தூர் வந்ததும் தெரிந்தவர்கள் மூலம் ஒரு பால்காரரை ஏற்பாடு செய்திருந்தோம். நாளாவட்டத்தில் பால் சுமாராக இருக்கவே வீட்டுக்கு எதிரேயே கறந்து கொடுக்கும் ஒருத்தரை ஏற்பாடு பண்ணீட்டுப் பழைய பால்காரரை நிறுத்தினோம். அந்தப் பால்காரர் என்னிடம் சண்டை போட்டதோடு அல்லாமல் புதுப் பால்காரரின் மாட்டை வெட்டப்போய்விட்டார். அப்புறமா விசாரிச்சதில் மாட்டுக்காரங்க, வீட்டு வேலைக்காரங்க இவங்களை நிறுத்திட்டு வேறே மாத்தினால் இப்படித் தான் தகராறு பண்ணுவாங்கனு தெரிஞ்சது. கொஞ்ச நாளைக்குப் பக்கத்துப் போர்ஷன் காரர் பால் வாங்கி வைத்துப் பழைய பால்காரருக்குத் தெரியாமல் கொடுத்து வந்தார். இப்படியாகத் தானே சென்னை வாழ்க்கையில் பழம் தின்னு கொட்டையும் போட்டு முளைக்கவும் ஆரம்பிச்சது. ஆனாலும் செடியை வளரவிடப் பிடிக்கலை. :))))

சென்னை அனுபவங்கள் பற்றி தொடர்கதையா, ச்சே... தொடர்பதிவா?
ReplyDeleteஅதெல்லாம் இல்லை. திடீர்னு தோணினா நிறுத்திடுவேன். :)))
ReplyDeleteசிங்காரச் சென்னையுடன் உங்கள் நினைவுகள் தொடரட்டும். நானும் தொடர்கிறேன்.......
ReplyDelete
ReplyDeleteதிருமணத்துக்குப்பின் லூகாஸ் டிவிஎஸில் பணியேற்க 1965ல் சென்னை வந்தோம். முதலில் நாங்கள் குடியிருந்ததும் வில்லிவாக்கத்தில்தான். உங்கள் பதிவு அந்த வில்லிவாக்க நினைவுகளை கிளறி விட்டது. பிறிதொரு சமயம் இடுகையில் பதிப்பேன்.
பயங்கரமான அனுபவங்களா இருக்கே...
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி, சும்மா எழுதினேன். தொடருவது சந்தேகமே!:))))
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், உங்க வில்லிவாக்கம் நினைவுகளையும் எழுதுங்க.
ReplyDeleteஸ்.பையர், :)))) இதெல்லாம் ஒண்ணுமே இல்லையாக்கும். :))))
ReplyDeleteநான் வேலைக்குச் சேரப் போகையில் இடம் தெரியாமல் ஒவ்வொரு பேருந்தாக ஏறி, ஏறிப் பட்ட அனுபவம் இருக்கே! ஹிஹிஹி!
ReplyDelete