எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 31, 2014

இதற்குத் தான் இரண்டாம் பரிசு!

இந்தக்காலத்தில் மகனும், மருமகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே பெரும்பாலும் நினைக்கிறார்கள்.  இப்போதைய சூழ்நிலை நிறைய மாறி இருப்பதால் பிள்ளையைப் பெற்றவர்கள் தங்கள் மகனின் சுக வாழ்க்கைக்குக் குறுக்கே முட்டுக்கட்டை போடுவதில்லை. நாற்பது வருடங்கள் முன்னர் வரை கூட மாமியாருக்கு மகன் மருமகளோடு தனித்திருப்பதைக் கண்டால் பொறாமை ஏற்பட்டு விடும்.  ஆனாலும் பேரன், பேத்தி என வந்துவிட்டால் மாறும் ஒரு சில மாமியார்களும் உண்டு.

பெற்றோருக்கு எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் பிள்ளைகளின் சுக வாழ்வே குறிக்கோளாக இருக்கும்.  அவன் திருமணமாகிய பின்னர் தங்களை விட்டு விட்டு மனைவியுடன் தனியாக வசித்தாலும் பெற்றமனம் அவனைத் திட்டாது.  எங்கோ ஆயுசோடு கிடக்கட்டும் என்றே நினைக்கும். அதிலும் மகன் வயிற்றுப் பேரன்/பேத்தி என்றால் கேட்கவே வேண்டாம்.  தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள்.  மாறாகச் சிலர் பெண்ணின் குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு மகனின் குழந்தைகளைக் கிட்டே சேர்க்காமல் இருப்பதும் உண்டு.  ஆனால் இந்தக் கதையிலோ அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பாசத்தைப் பிழிந்து தருபவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வந்து தங்க நினைத்து மகனிடம் சொல்லி முதியோர் இல்லம் வந்துவிடுகின்றனர். இதில் மகனுக்கு அதிர்ச்சி கலந்த வருத்தம்.  காரணம் என்னமோ நல்லது தான். ஆனாலும்  பெற்றோர் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் ஜாதகத்தைக் காரணம் காட்டுவது இந்தக் காலத்திலும் அதை நம்புபவர்கள் இருப்பதையும் காட்டுகிறது.

ஜோசியர் கூட்டுக்குடும்பமாக இருக்கவேண்டாம், ஆபத்து வரும் எனச் சொல்லி இருக்கிறார் என்கின்றனர் பெற்றோர்.   ஆனால் உண்மையான காரணம் இது இல்லை என்பது நமக்கே புரிந்து விடுகிறது.   ஏனெனில் பெரும்பாலோர் கூட்டுக் குடும்பத்தையே ஆதரிப்பார்கள்.  உண்மையான ஜோசியர் இப்படிச் சொல்லி இருப்பாரா என்னும் சந்தேகம் நமக்குள் வருகிறது.  மகனுக்கோப் பெற்றவர்களைப் பிரிந்து இருக்க முடியவில்லை என்பது பெற்றோரிடம்  அவனுக்கு உள்ள அதீத பாசத்தைக் காட்டுகிறது. என்னதான் மணிகண்டன் மனைவியும் நல்லவளாகவே மாமனார் மாமியாரைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாலும், எப்போ என்ன வம்பு கிடைக்கும் என்று அலைகிற மக்கள் இந்தச் சிறிய தாற்காலிகப் பிரிவைக் கூடப் பெரிதாக்கி வம்பு பேசுகின்றனர்.  அவ்வளவு ஏன் அவள் பெற்றோரே தங்கள் மகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் கொஞ்சம் இடிக்கிறது.  ஆனால் மருமகளோ அதையும் தாங்கிக் கொள்கிறாள்.

ஒரு படுக்கை அறைகொண்ட சிறிய வீட்டில் கூட்டுக்குடும்பமாக அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் படித்ததுமே பெற்றோர் முதியோர் இல்லம் சென்ற காரணம் நமக்கும் புரிந்து விடுகிறது. தான் பெற்ற மகனாகவே இருந்தாலும் மனைவியோடு வெளியே செல்லும்போது முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும் அம்மாக்களே அதிகம்.  இந்த மாதிரியான உலகில் தன் பிள்ளை, மனைவியோடு சேர்ந்து சந்தோஷத்தை அனுபவித்துத் தங்கள் குலத்தை விருத்தி செய்வதற்காக ஒர் குழந்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக  ஒரு பெற்றோர் முதியோர் இல்லம் செல்வது வரவேற்கத் தக்க ஒன்றே. ஆனால் அதைப் பிள்ளையிடம் வெளிப்படையாகச் சொல்லி இருந்தால் முதியோர் இல்லத்துக்குச் செலவு செய்த காசில் கொஞ்சம் கூடப் போட்டு அப்படி, இப்படிக் கடன் வாங்கி இன்னொரு அறை கட்டி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.  ஏனெனில் கணவன், மனைவி வாழ்க்கை ஒரு குழந்தை பிறந்ததும் முடிந்துவிடுவதில்லை. குழந்தைகளோடு முடிவதில்லை கணவன், மனைவி இருவரின் பந்தமும், பாசமும்.  அதையும் தாண்டி இருக்கிறது.

அத்தகைய ஒரு நிலையை இந்தத் தம்பதிகளும் அனுபவிக்க வேண்டாமா?  ஆகையால் அவர்கள் தனியாகச் செல்வதற்கு பதிலாக மகனிடம் மெதுவாக எடுத்துச் சொல்லித் தங்கள் ஆசை நிறைவேற வேண்டுமானால் இன்னொரு அறை வேண்டும் எனக் கூறி இருக்கலாம்.  ஆனால் இம்மாதிரியான சங்கடமான சூழ்நிலை மும்பை, புனே போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் அனுபவரீதியாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள்.  அங்கே வீடு கிடைக்காத கஷ்டம்.  இங்கே வீடு சொந்த வீடாக இருந்தும் பொருளாதாரக் கஷ்டம். மகனுக்காக அவர்கள் செய்யும் தியாகம் இது என ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் நால்வருக்குள்ளாக வெளிப்படையாகப் பேசித் தீர்க்க வேண்டிய ஒன்றை  ஊரறியச் செய்திருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது.  ஆனாலும் இதன் மூலம் நன்மையே விளைந்தாலும் அக்கம்பக்கம் பேச்சுக்களினாலும், பெற்றோரின் உதாசீனத்தாலும் அந்தப் பெண்ணின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்!   அதோடு இல்லாமல் மாமியார், மாமனார் மேல் அவள் வைத்திருந்த மரியாதைக்கு நிச்சயமாகப் பங்கம் வந்திருக்கும்.  முன்பிருந்த சகஜநிலைமை இனியும் இருக்குமா என்பதே சந்தேகம்.  பெற்றோருக்கோ தங்கள் மகளின் மன நிலையே புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் உடல்நலம் சீர்கெடுவது இதனாலோ என எண்ணினால் இல்லை.  அவள் முதல்முறையாகக் கருவுற்றிருக்கிறாள்.   அதுவும் இரட்டைக்குழந்தையாக இருக்கலாம் என இரட்டிப்பு சந்தோஷத்தையும் கொடுக்கிறாள்.  ஆனாலும் மணிகண்டனுக்கு இந்த நேரம் பார்த்துத் தன் பெற்றோர் அருகே இல்லையே எனத் தோன்றப் பெற்றோரிடம் சென்று சொல்லி ஆலோசனை கேட்கிறான்.  மணிகண்டனின் பெற்றோர் செய்த தியாகம் வீண் போகவில்லை. அவர்கள் நினைத்தது நிறைவேறிய திருப்தியில் இதைச் சொல்ல வந்த பிள்ளையிடமும், மருமகளிடமும் தாங்கள் திரும்ப வீட்டுக்கே வருவதாகச் சொல்லி விடுகின்றனர்.  ஆனால் கடைசி வரை தாங்கள் வெளியே வந்த காரணத்தைச் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். இனி எல்லாம் சுகமே!

விட்டுக் கொடுத்துப் போவதும், ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதும் தான் இல்வாழ்க்கையின் உண்மையான தாத்பரியம் என்பதை இந்த சின்னஞ்சிறு கதையின் மூலம் புரிய வைத்த ஆசிரியருக்குப் பாராட்டுகள்.  அதே சமயம் கூட்டுக் குடும்பங்களில் ஒவ்வொருவரும் வெளிப்படையாகத் தங்கள் குறைகளைப் பேசிப் புரியவைக்கவேண்டும் என்பதும் என் தனிப்பட்ட கருத்து.


தடித்த எழுத்துக்களில் இருப்பவை நான் ஒரிஜினலாக அனுப்ப நினைத்த விமரிசனப் பகுதியில் உள்ளவை.  பின்னர் மீண்டும் படித்தபோது( என் வாழ்நாளிலேயே இந்த விமரிசனக் கட்டுரைகளைத் தான் மறுபடி, மறுபடி படிக்கிறேன்.  மற்றதெல்லாம் எழுதியதை அப்படியே காப்பி, பேஸ்ட் அல்லது நேரடியாக எழுதிவிடுவது தான்)  நீக்கிய சில பகுதிகளில் இதுவும் ஒன்று. 

17 comments:

  1. மீண்டும் தங்களின் விமர்சனம் உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வாகியிருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

    உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதைத்தங்கள் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    தொடர்ந்து இதே போட்டிகளில் வாராவாரம் கலந்துகொண்டு மேலும் தாங்கள் பல பரிசுகள் வென்றிட வேண்டும் என்பதே என் அவா.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  2. பாராட்டுக்கள் .....

    ReplyDelete
  3. பாராட்டிய அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  4. //காரணம் என்னமோ நல்லது தான். ஆனாலும் பெற்றோர் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் ஜாதகத்தைக் காரணம் காட்டுவது இந்தக் காலத்திலும் அதை நம்புபவர்கள் இருப்பதையும் காட்டுகிறது.//

    காரணம் என்னவோ நல்லதுக்குத் தான் என்று நீங்களே சொல்லும் பொழுது கதையின் உள்ளடக்கத்தில் உங்களுக்கு உடன்பாடு இருப்பது தெரிகிறது. கதையைச் சொன்ன முறையில் தான் நீங்கள் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    நீங்கள் நினைக்கிற மாதிரியே நீங்கள் படிக்கிற ஒரு கதையும் எழுதி இருக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி நீங்கள் நினைக்கிற மாதிரி நீங்களே ஒரு கதையை எழுதி விட வேண்டியது தான்.

    அப்படி ஒரு கதை எழுதுங்கள். நாம் இந்த சப்ஜெக்ட்டை விவாதிக்கலாம்
    வெற்று அரட்டை இல்லை.நாம் எழுதுவதில், நினைப்பதில் விவாதிப்பதில் யாருக்காவது நன்மை ஏற்பட வேண்டும். அதற்காகத்தான்.

    ReplyDelete
  5. ஜீவி சார், கதையின் உள்ளடக்கத்தில் எனக்கு முழு ஒப்புதலே. எந்தப் பெற்றோர் தங்கள் குலம் விருத்தியாகக் கூடாது என நினைப்பார்கள்? பெற்றோர் நடந்து கொண்ட விதத்தில் தான் எனக்குக் கருத்து வேறுபாடே.

    இத்தனை அன்பும், பாசமும் காட்டும் பிள்ளையையும், மருமகளையும் நன்கு வாழ்வதற்காக அவங்க சேர்த்து வைச்ச காசைக் கொடுத்துப் பிள்ளையை இன்னொரு அறை கட்டச் சொல்லி இருக்கலாம் இல்லையா? அதைத் தான் விமரிசனத்திலேயே சொல்லிட்டேனே!

    அப்பாதுரை சொன்ன மாதிரி சும்மா நாலு நாள், ஐந்து நாளெல்லாம் பிள்ளையும், மருமகளும் வெளியூர் போயிட்டு வந்தாப் போதும்னு எல்லாம் எனக்குத் தோணலை. ஏனெனில் தாம்பத்தியம் என்பது வெறும் பிள்ளை பெறுவதோடு முடியலை.

    அவங்களுக்கு நிரந்தரமாகத் தங்கள் அன்பைத் தெரிவித்துக்கொள்ள, பரிமாறிக்கொள்ள, அந்தரங்கங்களைச் சொல்லிக் கொள்ள, ஒருவருக்கொருவர் மற்றவர் மேல் கொண்டிருக்கும் ஈடுபாட்டைக் காட்டிக்கொள்ள ஒரு இடம் தேவை. அது நிரந்தரமானதாகவும் இருக்கணும். ஆகவே இன்னொரு அறைதான் ஒரே வழி.

    இதை எல்லாம் விமரிசனத்தில் எழுதிட்டுப் பின்னர் நீளம் கருதியும், சில இடங்களில் கொஞ்சம் கடுமையாக எழுதி இருந்ததாலும் நீக்கினேன். உண்மையில் பரிசு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. :)))))

    ReplyDelete
  6. தாங்கள் அன்பு காட்டும் மருமகளுக்கு நன்மையைச் செய்யாமல் அவள் பெயருக்கே களங்கம் ஏற்படும் வகையில் முதியோர் இல்லம் சென்றது மன்னிக்கவே முடியாத குற்றம். அந்தப் பெண்ணின் மனதில் இது நீங்காத வடுவாக இருக்கும். :(

    இதான்பா விஷயம்னு பிள்ளை கிட்டே ஒரு கோடி காட்டி இருக்கலாம் இல்லையா?

    ReplyDelete
  7. ண்மைதான் கீதா. நான் இந்தக் கதையைப் படிக்கவில்லை. இடம் இல்லாமல் தாம்ப்த்யம் நடத்துவது மிகக் கஷ்டம்.எப்பொழுதும் மனம் விட்டுப் பேசுவது எல்லா விஷயத்துக்கும் நல்லதுதான். அதை நீங்கள் அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துகள் மா.

    ReplyDelete
  8. //அதோடு இல்லாமல் மாமியார், மாமனார் மேல் அவள் வைத்திருந்த மரியாதைக்கு நிச்சயமாகப் பங்கம் வந்திருக்கும். முன்பிருந்த சகஜநிலைமை இனியும் இருக்குமா என்பதே சந்தேகம்.//

    அவளுக்குப்பிறக்கப்போவதே இரட்டைக் குழந்தைகள். அதனால் அன்பு மேலும் மேலும் பெருகத்தான் பெருகும்.

    மாமியார், மாமனார் மேல் அவள் வைத்திருந்த மரியாதை நிச்சயமாக மேலும் மேலும் இரட்டிபாகவே இருக்கும்.

    முன்பிருந்த சகஜநிலைமை இனியும் நீடிக்கும். சொல்லப்போனால் மேலும் மிக நன்றாகவே வலுப்பெறும்.

    இவள் இரண்டு குழந்தைகளுக்கும் பால் கொடுத்ததும், மாமியாரும் மாமனாரும் ஆளுக்கு ஒரு தூளியாக ஆட்டித்தூங்கச் செய்வார்கள்.

    ReplyDelete
  9. நல்ல மனசுகளை சந்தேகப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அவர்கள்--அதுவும் புகுந்த வீட்டில் பெற்றோர் நிலையில் இருப்பவர்கள்- மட்டத்தில் நல்லது என்று மனசார நினைத்து செய்ததை இடித்து இடித்துக் காட்டி குற்றமும் சொல்லி பழி போடக்கூடாது என்பது யாருக்கும் இல்லாவிட்டாலும் அந்த மருமகளுக்கு நல்லதாய் முடியும்.

    வீம்புக்காக ஒன்றையே நினைத்து ஒன்றைக் காலில் நின்று வேறு பார்வை பார்க்க மாட்டேன் என்று வாதாடுவது எதற்கும் முடிவு காணமுடியாமல் அவரையே வாட்டும்.

    'எல்லாம் தன் நன்மைக்காகத் தானா?' என்று தெரியாதது தெரிந்தவுடன் மலர்ந்து சிரிப்பது
    உள்ளத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். மனம் சந்தோஷப்பட்டால் அதற்கேற்ற மாதிரி செயல்பாடும் சந்தோஷமாக இருக்கும்.

    ஒன்றையே சொல்லிச் சொல்லி குமைந்து கொண்டிருந்தால் எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவே முடியாது.

    4+2=6 தான். 3+3ம் ஆறு தான்.
    மாற்றி நினைத்துப் பாருங்கள்.
    வட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பதிலிருந்து வெளியே வருவீர்கள்.

    எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரி பாத்திரங்களை சுழல விட்டு கதை எழுதுவது சாதாரண காரியமில்லை. அதற்கு தான் முயற்சி செய்து பார்க்கச் சொன்னேன்.


    ReplyDelete
  10. காக்கா உஷ் என்று சொல்லிச் சொல்லி, நீங்களே காக்கா உஷ்ஷூக்கு வழி வகுத்தால் எப்படி?

    உங்களிடம் கதை எழுதக் கேட்ட என் பின்னூட்டம் எங்கே?..

    அடுத்த பதிவுக்கு அம்பேல் என்று போய் விட்டீர்களே?..

    ReplyDelete
  11. //நீங்கள் நினைக்கிற மாதிரியே நீங்கள் படிக்கிற ஒரு கதையும் எழுதி இருக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி நீங்கள் நினைக்கிற மாதிரி நீங்களே ஒரு கதையை எழுதி விட வேண்டியது தான்.

    அப்படி ஒரு கதை எழுதுங்கள். நாம் இந்த சப்ஜெக்ட்டை விவாதிக்கலாம்
    வெற்று அரட்டை இல்லை.நாம் எழுதுவதில், நினைப்பதில் விவாதிப்பதில் யாருக்காவது நன்மை ஏற்பட வேண்டும். அதற்காகத்தான்.//

    ஜீவி சார், இந்தப் பின்னூட்டத்தில் தான் கதை எழுதச் சொல்லி இருந்தீர்கள். அதை வெளியிட்டிருக்கிறேன். அதைத் தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியலை. இருந்தாலும் மீண்டும் பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. //எல்லாம் தன் நன்மைக்காகத் தானா?' என்று தெரியாதது தெரிந்தவுடன் மலர்ந்து சிரிப்பது
    உள்ளத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். மனம் சந்தோஷப்பட்டால் அதற்கேற்ற மாதிரி செயல்பாடும் சந்தோஷமாக இருக்கும். //

    அதைத் தான் அவங்க ரகசியமாவே வைச்சுக்கிறாங்க! இல்லையா? மறுபடியும் கதையின் முடிவில் கடைசிப்பாராவுக்கு முந்திய(?) பத்தியின் கடைசி வரிகளைப் படித்துப் பாருங்கள். சொல்லி இருந்தால் இந்த விமரிசனமே வந்திருக்காதோ? :)))))))))

    ReplyDelete
  13. //மாமியார், மாமனார் மேல் அவள் வைத்திருந்த மரியாதை நிச்சயமாக மேலும் மேலும் இரட்டிபாகவே இருக்கும்.

    முன்பிருந்த சகஜநிலைமை இனியும் நீடிக்கும். சொல்லப்போனால் மேலும் மிக நன்றாகவே வலுப்பெறும்.

    இவள் இரண்டு குழந்தைகளுக்கும் பால் கொடுத்ததும், மாமியாரும் மாமனாரும் ஆளுக்கு ஒரு தூளியாக ஆட்டித்தூங்கச் செய்வார்கள்.//

    நாளாவட்டத்தில் சரியாகும் என நம்புவோம். :))))))

    ReplyDelete
  14. வாங்க வல்லி, இந்தப் பெற்றோர் மட்டும் என்ன பிரச்னை என்பதைப் பிள்ளையிடம் விவாதித்து முடிவு கண்டிருக்க வேண்டும் என்பதே என் கருத்து. :))))))

    ReplyDelete
  15. //ஆனாலும் இந்த உண்மையான கதை, அந்த இரு வயதானவர்களையும், அந்த குருவாயூரப்பனையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.//


    அவங்க தான் மருமகள் கிட்டே மட்டும் இல்லை; பிள்ளையிடமும் சொல்லவே இல்லையே!!! :(((( சொல்லி இருந்தால் கதையின் போக்கே மாறி இருக்கும். :)

    ReplyDelete