எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 05, 2014

சிட்டுக்குருவி பாடுது! புறாக்கள் ஆடுது!

வானமும் சூரியனும் போட்டி போட்டுக் கொண்டு மேகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு இருக்குதுங்க. :) நாங்க வந்ததில் இருந்து சூரியனைப் பார்க்கவே இல்லை. ஞாயிற்றுக் கிழமை மட்டும் சூரியன் கொஞ்சம் போல மேகப் போர்வையை நீக்கி விட்டுக் கொண்டு அரைக் கண்ணைத் திறந்து பார்த்தான். வந்திருக்கிறது நாங்க தான்னு தெரிஞ்சதும் அலட்சியமாக மீண்டும் போர்வையைப் போர்த்திக் கொண்டான். இன்னும் போர்வையை விலக்கவே இல்லை. சூரியனைக் காணாத வானமகள் மேகங்களைக் கலைத்துப்  பார்த்தும் அவை பிடிவாதமாக இருப்பதைக்  கண்டு கண்ணீரை மழையாகப்பொழிகிறாள்.  ஒரு சப்தம் இல்லை. ஒரு அமர்க்களம் இல்லை. கண்ணீர் மழை மட்டுமே.

சிறிது நேரம் அழுது பார்த்து மேகம் மனம் இரங்காதா என்பது போல் அழுகையை நிறுத்திப்பார்க்கிறாள்.ஆனால் மேகங்களோ கரும் பூதங்களாக வான்மகளை பயமுறுத்துகின்றன.  என்றாலும் அவள் அழுகையில் ஆர்ப்பாட்டம் இல்லை.  இடி என்னும் பெரும் சப்தமோ, மின்னல் என்னும் கொடிய பார்வையோ இல்லாமல் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாள். விட்டு விட்டு அழும் வான்மகளுக்குத் துணையாகக் காற்றென்னும் தோழியும் பலமாக வீசி வீசி மேகங்களைக் கலைக்கப் பார்க்கிறாள்.  முடிவில் வெற்றி மேகங்களுக்கே.  இங்கே என் ஜன்னலுக்கு வெளியே தெரு. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் சொர்க்கம் பக்கத்தில். காற்று வேகமாக முகத்தில் வந்து மோதி எப்படி இருக்கேனு கேட்டு குசலம் விசாரித்துச் செல்கிறது.   முன்னறையில் பால்கனியில் தொட்டிச் செடிகள் இருக்கும் இடத்தில்  இரண்டு மாடப் புறா கூடு கட்ட ஆயத்தம் செய்கிறது.  செடிகளைப் படம் எடுத்தேன்.  புறாக்களை நேரம் பார்த்து எடுக்கணும்.  பார்ப்போம்.  சென்னையிலோ, ஸ்ரீரங்கத்திலே பார்க்க முடியாத சிட்டுக் குருவிகளையும் இங்கே பார்க்க முடிகிறது.  இத்தனைக்கும் இங்கே செல்ஃபோன் கோபுரங்கள் நிறையவே இருக்கின்றன.  ஆனாலும் சிட்டுக்குருவி இருப்பது எப்படி?

11 comments:

  1. ஆஹா... கவிதை மழை பொழிந்திருக்கிறீர்கள். ரெண்டு பாராவும் அருமை. ரெண்டு ஃபோட்டோ கூடச் சேர்த்துப் போட்டிருக்கக் கூடாதோ... கடைசிக் கேள்வி நல்ல கேள்வி. ஆமாம், ஏன்?

    ReplyDelete

  2. மழை குறித்து அழகாய் எழுதி இருக்கிறீர்கள். எங்கள் ப்லாக் எழுத்தாளர்களின் வர்ணனைகள் பதிவின் பின்னூட்டத்தில் திரு.ஜீவி எழுதி இருந்த மழைக்கவிதை வாசித்தீர்களா.?

    ReplyDelete
  3. @Sriram, photos inaippathu ithile romba kashtam. :) 1995 model computer. monitor romba chinnathu. eethoo bagawan arulaal intha mattum oduthu.:)))

    ReplyDelete
  4. Mumbai mazhai is awesome.We used to take our sons car,drop him at his office in Chrchgate and roam around in the rain. Marine draive,malabar hills,Taj hotel. Buying a shirt and salwar dress, drinking chai fron an Iranian shop.It was wonderful. And as you say the balcony is the most important place. Son lived inBandra. so many pigeons used to visit us. along with the chittu kuruvi. Your Munbai diary has taken me back to 1996. thank you Geetha,

    ReplyDelete
  5. கண்ணன் கதைக்குப் பதில் மும்பைக் கவிதை படித்ததில் சந்தோஷம் கீதா. அருமையாக வர்ணித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. அருமையான வர்ணனை.
    மழை ஸ்ரீரங்கத்தில் இருக்காது இல்லே! மும்பையில் ம்ழையை ரசித்து அழகாய் பதிவு போட்டு அசத்தி விட்டீர்கள்.

    குருவிக்கு டவர் பிரச்சனை இல்லை, சிறுதானியங்கள் கிடைக்கும் இடத்தில் தான் இருக்கும் என்றும் பறவைகள் அவைகளுக்கு உணவு கிடைக்கும் இடத்தில் தான் எவ்வளவு தூரம் என்றாலும் பறந்து போய் வசிக்கும் என்றார், Z தமிழ் 8.30க்கு மருத்துவ குறிப்புகள் கூறும் ஒருவர்.

    வீரநாராயணபுரம் போகும் வழியில் ஊர்க்குருவிகளைப் பார்த்தேன்.

    ReplyDelete
  7. வாங்க வல்லி, மும்பை மழை நல்லாத் தான் இருக்கு. இன்னிக்குத் தான் சூரியனார் வரலாமா வேண்டாமானு யோசிக்கிறார். கண்ணன் கதை எழுதியதை எல்லாம் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணத் தான் நினைச்சேன். முடியலை. :( ஆகவே வந்து தான் போடணும். மன்னிக்கவும் வல்லி.

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு ஒத்துக்காதே. அதனால் மழையே வரதில்லை. வந்தாலும் அபூர்வமாக ஒரு நாள் இருக்கும். :) இங்கே தான் நினைச்சு நினைச்சுப்பெய்யுது. :)

    ReplyDelete
  9. குருவிங்க ஏன் தமிழ்நாட்டில்/முக்கிய்மாகச் சென்னையில் இல்லைனு புரியலை. திருக்கோஷ்டியூரில் பார்த்தேன். அதுங்களை வரவைக்க என்ன செய்யணும்னு யோசிக்கணும். :)

    ReplyDelete
  10. சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete