தொட்டிகள், ப்ளாஸ்டிக் வாளிகள், பெயின்ட் வாளிகள் என எல்லாத்திலேயும் செடிகள் போடப்பட்டிருக்கின்றன. மாங்காய் இஞ்சி, வெற்றிலைக்கொடி, மல்லிச் செடி, ரோஜாச் செடிகள், சேனைக்கிழங்கு, பாகல் கொடி எனப் பலவும் உள்ளன. ஜன்னல் முழுதும் திறக்க முடியலை. திறந்த பாகத்தில் கிடைத்தவை மட்டும் பகிர்வுக்கு. இவை அனைத்தும் கைபேசியில் எடுத்தேன்.
ஒற்றை ரோஜா பூத்திருக்கு பாருங்க. வெள்ளை ரோஜாவும் இருக்கு.
அதோ அந்தப் பெட்டியில் தான் புறாக்கள் குடும்பம் நடத்துகின்றன. குஞ்சு பொரிச்சாச்சு போல!
குருவிகளை வர வைக்க நானும் மொட்டை மாடியில் அட்டைப் பெட்டி, துளையிட்டு வைத்திருந்தேன். ஊ...ஹூம்! எங்கள் வீட்டு மொட்டை மாடியில் கரும்பு, தக்காளி, நித்யமல்லி உட்பட சில செடிகள் வைத்திருந்தோம். இப்போது அவற்றை கீழேயே கொண்டு வைத்து விட்டோம்!
ReplyDeleteஜன்னல் தோட்டம் பச்சை பசேல். கண்ணிற்கு குளுமை.
ReplyDeleteதோட்டத்தில் இனிதாக வாழட்டும் புறா.
ReplyDeleteஇனி புறாக்கூட்டம் பெருகும். நன்றாக இருக்கு கீதா. வண்ணமயமான படங்கள். கண்ணன் எப்போது வருவான், என் கவலை எனக்கு.
ReplyDeleteஶ்ரீராம், இங்கே எல்லாம் தானாகவே வரும். ஆனால் படம் பிடிக்கிறதுக்குள்ளே ஓடிடும். மும்பையில் அவை நம்மை லக்ஷியமே செய்வதில்லை. அவற்றின் வேலையை அவை பார்க்கின்றன. நம்மை மாதிரி அவற்றைக் கவனிப்பவர்கள் இருந்தாலும் அவர்கள் காலை, மாலை உணவு அளிப்பதோடும், ஒரு தொட்டியில் தன்ணீர் வைப்பதுமோடு முடித்துக் கொள்கின்றனர்.
ReplyDeleteநான் தான் அலுக்காமல் பார்த்துக் கொண்டு இருப்பேன். :) அதிசயமாக இருக்கும்.
ReplyDeleteராஜலக்ஷ்மி வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, அதுங்க ஜாலியா இருக்குங்க! :))))
ReplyDeleteவாங்க வல்லி, இன்னிக்கு எப்படியும் கண்ணன் வந்துடுவான். ஊருக்குப் போற சமயம் எழுதி வைக்கமுடியலை. அதான் போடலை. இல்லைனா பதிவிலே போட்டுட்டு அப்புறமாக் குழுமத்திலேயும் பகிர்ந்திருப்பேன். :)))) நிறையவே எழுதணும். :))) அடுத்த இரண்டு நாட்கள் ஶ்ரீஜயந்தி வேலை. கண்ணன் பிறப்புத் தானே, அவன் பிறந்த நாள் வேலையையும் அவனே பார்த்துக்கட்டும். :))))))
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
ReplyDeleteதொடருங்கள்