தேன்சிட்டு மறுபடி வர ஆரம்பிச்சிருக்கு. சமையலறை ஜன்னலிலும் வந்து உட்கார்ந்துக்குது. பால்கனிக்கும் வருது. தேன் கலருக்கே இருக்குங்க! மொத்தம் 3! ரொம்ப பிசியா இருக்குங்க! குறுக்கும், நெடுக்கும் பறக்கிறதும் அப்போப்போ ஒரு சின்ன இலையைக் கொண்டு வந்து கூடு கட்டும் இடத்தில் சேர்க்கிறதும், இன்னொரு சமயம் ஒண்ணுக்கொண்ணு விளையாடிக்கிறதும்! அதிலே ஒரு தேன் சிட்டை மட்டும் மத்த ரெண்டும் ரொம்பக் கோவிக்குதுங்க! ஏன் அப்படி?!!!!!!!!!! ஆனாலும் அதுவும் வந்து இதுங்களோடு சேர்ந்துக்குது!
தென்னை மரத்திலிருந்து தென்னங்கீற்றுகளை கூடு கட்டறதுக்காக அதுக்குத் தேவையான அளவில் கிழித்துக் கொண்டு வருகிறது. இங்கே பால்கனியில் உட்காரும். படம் எடுக்கப் போனால் பறந்துடும்! என்னிக்கானும் மாட்டிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்போம். :)
இரண்டு நாட்கள் முன்னாடி திறந்திருந்த பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள்ளேயே வந்திருக்கு. நான் அப்போ ரொம்ப முடியலைனு படுத்துட்டு இருந்திருக்கேன். ராத்திரியெல்லாம் தூக்கம் இல்லை. அதனால்! அப்போ என்னைக் கூப்பிட்டிருக்கார் ரங்க்ஸ். ஆனால் நான் எழுந்துக்கலையாம். ரொம்ப நேரம் வெளியே போகத் தவிச்சுட்டு அப்புறமா ஜன்னலைத் திறந்து வெளியே அனுப்பி இருக்கார். இன்னிக்கு பால்கனிக் கம்பியிலே வந்து உட்கார்ந்தப்போ எடுத்த படம் இது. நான் சாப்பாடு மேஜையில் அமர்ந்திருந்தேன். அங்கிருந்து கொஞ்சம் அசைந்து கிட்டேப் போனாலும் பறந்துடும் என்பதால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே எடுத்தேன். முடிந்தவரை ஜூம் பண்ணியதில் இவ்வளவு தான் வந்தது. இன்னொண்ணு வாயில் கிழித்த தென்னங்கீற்றுடன் வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் வயரில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அதை எடுக்க எழுந்தால் இது பறந்துடும்.ஒரு வாரமாக் கூடு கட்டுவதில் ரொம்ப மும்முரம். அதன் சுறுசுறுப்பு நம்மை வெட்கப்பட வைக்குது. மனிதர்களுக்குத் தான் சோம்பல் எல்லாம்னு நினைக்கிறேன். காலையிலேயே ஆரம்பிச்சுடுதுங்க. நாள் பூரா உழைப்புத் தான்! நடுவில் கொஞ்சம் கொஞ்சல், சிணுங்கல்!
நம் மனதுக்கும் உற்சாகத்தை டிரான்ஸ்ஃபர் செய்து விடும். ஜன்னலில் ஒரு புள்ளி தெரிகிறதே.... அதுவா தேன்சிட்டு? அட!
ReplyDeleteஆமாம், தேன் கலருக்கே இருக்கு. இப்போத் தான் செம்போத்தும் வந்துட்டுப் போச்சு! அதைக் கண்டு இது பயப்படுது போல! இது சுண்டுவிரல் அளவே இருக்கு. என்னதான் ஜூம் பண்ணினாலும் கிட்ட இருந்து எடுக்கிறாப்போல் வருமா? அதான் சரியாத் தெரியலை! :)
Deleteஇந்தப்பதிவுக்கு நிறைய + கள் வந்திருக்கு! பார்வையாளர்களும் வந்திருக்காங்க. ஆனால் கருத்துத் தான் யாரும் சொல்லலை! :) போனால் போகட்டும்! இதுக்கெல்லாம் கவலைப்படமாட்டோமுல்ல! :)
Deleteதேன்சிட்டு முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு நிறைய வரும்! தற்போது வருவதில்லை! கடந்த மாதம் ஒன்று வழி தெரியாமல் புகுந்துவிட்டது. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்தும் முன் அடிபட்டு....! மனம் கலங்கிவிட்டது சமாதானம் ஆக நிறைய தினம் தேவைப்பட்டது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஒரு வாரமாக் கூடு கட்டிட்டு இருக்கு ரொம்ப மும்முரமா! ஓடி ஓடிப் போய் தென்னங்கீற்றைக் கிழித்துக் கொண்டு வருது ஒண்ணு! இன்னொண்ணோ ஒரு வைக்கல் பிரியைத் தேடி எடுத்துட்டு வந்து தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டு அப்புறமாக் கூட்டிலே கொண்டு போய் வைக்குது! :) உங்க வீட்டில் தேன்சிட்டு அடிபட்டு உயிர் விட்டது மனதுக்கு வருத்தமாத் தான் இருக்கு! :(
Deleteஅருமையான முயற்சி. சிட்டுக்களிடம் கற்க நிறையவே இருக்கு. ஆமாம் எங்கே கூடு கட்டுகிறது.?
ReplyDeleteநாங்க முன்பிருந்த 408 ஆம் எண் குடியிருப்பில் குளியலறை/கழிவறையின் எக்ஸாஸ்ட் மின் விசிறி வைக்கும் வட்ட வடிவமாக வெட்டப்பட்ட சுவரில்! அதை மூட குறுக்குக் கம்பி போட்டிருக்கு. ஆனால் துளிப்போல் இருக்கும் இது நுழையத் தடை இல்லை. வாயில் கூட்டுக்கான பொருளைக் (அதை விடப் பத்து மடங்கு நீளம் இருக்கும்! ) கவ்விக் கொண்டே உள்ளே நுழைஞ்சுடுது!
Deleteபொறுமை காத்து படம் எடுத்தமைக்கு பாராட்டுகள் சகோ...
ReplyDeleteரொம்பப் பொறுமை வேண்டும். இன்னிக்கும் முயன்றேன். முடியலை!
DeleteIt is a pleasure watching them & learning from them !!
ReplyDeleteஆமாம், ஷோபா!
Delete