எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 20, 2015

உப்பு, வெள்ளை உப்பு! எங்கள் ப்ளாக் கவனிக்கவும்!

சமையல் அளவுகள் பற்றி ஒரு குறிப்புக் கொடுக்கலாம்னு எண்ணம். நாளைக்கு "எங்கள் ப்ளாகி"ல் "திங்க"ற கிழமை! அதிலே எக்கச்சக்கமா உப்பைப் போட்டுடறாங்க. சாப்பிட முடியறதில்லை. :)

ஒரு டீஸ்பூன் உப்பு அல்லது சர்க்கரை 5 கிராம் இருக்கும்.

இப்படி  3 டீஸ்பூன்கள் சேர்ந்ததே ஒரு டேபிள் ஸ்பூன். இது 15 கிராம் உப்பு ஆயிடும். 5 கிராம் உப்பே சில சமயம் கரிக்கும். 15 கிராம் உப்பை மேசைக்கரண்டியில் எடுத்துப்பாருங்க எவ்வளவு இருக்குனு புரியும்! :)

அதுவே திட உணவுகளில் ஒரு கப் என்றால் குறைந்த பட்சம் 200 கிராம் இருக்கும். அதாவது ஒரு ஆழாக்கு.

மாவு கொஞ்சம் கூட வரும். வெண்ணெய்  250 கிராம் வரும். பாலும் 250 கிராம் இருக்கும். அரிசி 200 கிராம் தான் வரும். குவித்து அளந்தால் கூட வரும். அளப்பதையும் பொறுத்திருக்கிறது. ஒரு கப்புக்குப் பதினாறு டேபிள் ஸ்பூன் என்று அளவு சொன்னாலும் பொருளை உத்தேசித்து இவை மாறும்.  தொலைக்காட்சியில் சமையல் பற்றிச் சொல்லித் தரும் பிரபலமான செஃப்கள் அனைவரும் உப்பைக் கொஞ்சமாகவே தூவுவார்கள். கவனிக்கவும். அதுவும் கடைசியில் தான் உப்பைச் சேர்ப்பார்கள்.

ஒரு டீஸ்பூனுக்கும் குறைவாகவே உப்பைச் சேர்ப்பார்கள். காஃபிக்குச் சர்க்கரை ஒரு டீஸ்பூன் போட்டாலே அதிகமாகத் தெரியும். கரண்டியால் சர்க்கரை போட்டுக் குடிக்கிறவங்க எங்க வீட்டிலும் உண்டுனாலும் காஃபியில் குறைவாகச் சர்க்கரை போடுவதே ருசியைக் கொடுக்கும்,. இல்லைனா ருசியைக் கெடுத்துடும்.

ஆகவே நாளைக்கு யார் சமைச்சாலும் எங்கள் ப்ளாக் செஃப் உப்பைக் குறைச்சுப் போடுங்க! இல்லைனா சாப்பிட வர மாட்டேன்! இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பெல்லாம் போட்டுடாதீங்க! கரிச்சுத் தொலைக்கும்! :)

14 comments:

  1. ஹாஹாஹா! இந்த டீஸ்பூன், டேபிள் ஸ்பூன் அளவு எல்லாம் எனக்கும் குழப்பி எடுக்கும்! பேசாம ஒருசிட்டிகை உப்புன்னு அல்லது தேவையான அளவுன்னு சொல்லி தப்பிச்சிக்கலாமோ? விநாயகர் சதுர்த்தி பிஸி, பையன் காது குத்தல்னு இணையம் பக்கம் வர முடியவில்லை! உங்கள் பதிவுகளின் பக்கமும் வரவில்லை! இனி வருவேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாளைக்கு 5 கிராம் உப்புக்கு மேல் ஒருத்தருக்குத் தேவை இல்லைனு நினைக்கிறேன் சுரேஷ். உங்கள் பதிவில் காதுகுத்தல் குறித்த விபரங்களைப் பார்த்தேன். நிதானமாக வாங்க, பரவாயில்லை! :)

      Delete
  2. எப்பவுமே உப்பைக் குறைத்துப் போட்டுதான் பழக்கம் - சமீபத்தில் செய்த வெஜிடபிள் ஊறுகாய் உட்பட! தேவைன்னா அப்புறம் கூட சேர்த்துக்கலாம் பாருங்க... அதிகமா இருந்தா குறைப்பது கஷ்டம்!

    ReplyDelete
    Replies
    1. ஊறுகாயில் போடும்போதே தேவையான உப்பைச் சேர்த்துடணும். :) சில சமயம் அப்புறமாக உப்புப் போட்டால் சேராது! :) அப்படி அதிகமாகிட்டா எலுமிச்சம்பழத்தை வாங்கி நறுக்கி அதிலே சேர்க்கலாம். :) அல்லது சாறைப் பிழிந்து சேர்க்கலாம்.

      Delete
  3. நல்லவேளை உப்பு அளவு சொன்னீங்க.....

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி கில்லர்ஜி! :)

      Delete
  4. நீண்ட ஆயுளுக்கு
    எண்ணெய், உப்பு, புளி, காரம் குறைக்க வேணுமென
    முன்னோர்கள் சொல்லியிருக்காங்க...
    அப்படியென்றால்
    பச்சைக் காய்கறி, அவியல் கறிசோறு தான்
    அடடே!
    இத்தனையும்
    தங்கள்
    குறைவாகச் சர்க்கரை போடுவதே ருசியைக் கொடுக்கும்
    இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பெல்லாம் போட்டுடாதீங்க!
    என்ற வழிகாட்டலைப் படித்ததும்
    மீட்டுப் பார்த்தேன்!

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. இரண்டு டேபிள் ஸ்பூன் என்பது அதிகமான உப்பு காசிராஜலிங்கம். 4 ஆழாக்குப் புழுங்கலரிசி, ஒரு ஆழாக்கு உபருப்பு அரைக்கும் இட்லிமாவுக்கே இரண்டு டீஸ்பூன் உப்புக்கு மேல் தேவையில்லை! :) அதுவும் கல் உப்புத் தான். பொடி உப்புப் பயன்பாட்டையும் குறைச்சுக்கணும். பொடி தேவை எனில் கல் உப்பை வெறும் வாணலியில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கலாம்.

      Delete
  5. வெண்ணையாம் வெண்ணை.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கண்ணிலே விளக்கெண்ணெய் ஊத்திட்டு வந்துடுவீங்களே! அது டைபோ! கவனிக்கலை,நீங்க திட்டறதைப் பார்த்ததும் தான் கண்டு பிடிச்சேன். இப்போ மாத்திட்டேனே! :)

      Delete
  6. அதிக உப்பு/காரம் அவசியம் இல்லை.... மிதமான அளவு தான் என் சமையலிலும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஒரு சிலர் வெள்ளை உப்பு அபாயகரமானதுனு சொல்றாங்க. ஆனால் வேறு சிலர் உப்பின் அவசியத்தை வற்புறுத்துகிறார்கள். :)

      Delete
  7. உப்பிட்டவரை உள்ளளவும் நினை !!

    ReplyDelete
  8. vaiththiyar sonna aLavu oru teaspoon per day. Thanks Geetha.

    ReplyDelete