எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 11, 2015

ரயிலில் மூத்த குடிமக்களுக்கான முன் பதிவு பற்றிய குழப்பம்! ஒரு விளக்கம்!

ரயில் க்கான பட முடிவு

ஒரு சில பத்திரிகைகள் தவறாகச் செய்தியைப் பிரசுரித்திருப்பதால் அனைவருக்கும் நேரிட்டிருக்கும் குழப்பம் மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து செய்யப்படப் போகிறது என்பதாகும். இதற்காக ரயில்வே அமைச்சகம் ஆகஸ்ட் 31-ந்தேதி சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் கண்டிருக்கிறது. பத்திரிகை சுற்றறிக்கையை ஒரு காபி எடுத்துப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என முன்னர் நினைத்தேன். ஆனால் அதுவும் சிலருக்கு அரசு மொழி ஆங்கிலம் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டதும் இந்த விளக்கத்தைக் கொடுக்கத் தீர்மானித்தேன். எனக்கு வேலை வைக்காமல் மொழி பெயர்த்து உதவிய தம்பிக்கு என் நன்றி. ஒரு தெளிவுக்காகவும் இதைக் குறித்துப் பதறும் பலருக்காகவுமே இந்த விளக்கம். மற்றபடி யாரையும் குறை கூறும் எண்ணமோ தாக்கும் நோக்கமோ இந்தப் பதிவில் கிடையாது. அப்படி யாருக்கேனும் மனம் வருத்தம் அடைந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.


ரயில்வே அமைச்சகம் கீழ் பெர்த் குறித்து ஆகஸ்ட் 31 அன்று பிறப்பித்த ஒரு சுற்றறிக்கை.
எடுத்த எடுப்பிலேயே பொருள் ந்னு சொல்லி பெண்கள் மூத்த குடிமகன்களுக்கு முன்பதிவு கோட்டா ஒதுக்குதல் ந்னு  சொல்லி இருக்கு. அதை படிக்காம கன்சஷனை வாபஸ் வாங்கறாங்கன்னு சொன்னா மூ.தே ந்னு சொல்லாம என்ன சொல்லறது?

மேலும் வருவதன் சாராம்சம்:

தனியாக பயணம் செய்யும் மூத்த குடிமகன்கள், 45 வயதுக்கு மேலான பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்காக ஒவ்வொரு கோச் சிலும் இரண்டு கீழ் பெர்த்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னால் இது 4 ஆக உயர்த்தப்பட்டது.
 அவ்வப்போது புகார்கள் பரிந்துரைகள் பெறப்பட்டதில் தம் குழுவில் பயணம் செய்யும் மூத்த குடிமகன், பெண்களுக்கு இந்த கோட்டாவில் ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை எழுந்தது. இந்த கோட்டாவில் அந்த கோச்சில் ஏற்கெனெவே புக் ஆகிவிட்டதானால் குழு பிரிக்கப்படும் என்பதால் இது முன்னால் அனுமதிக்கப்படவில்லை.
இது மறுபரிசீலனை செய்யப்பட்டு ஒரு முடிவெடுக்கப்பட்டு உள்ளது. படிவத்தில்   மூத்த குடிமகன்கள், 45 வயதுக்கு மேலான பெண்கள், கர்பிணிகள் ஆகியோரில் இரண்டு பேர் இருந்தால் இந்த மூத்த குடிமகன்கள் கோட்டாவில் டிக்கெட் கொடுக்கலாம். இந்த கோட்டாவில் வராதவர்கள் இந்த கோட்டாவில் வருவோருடன் சேர்ந்து படிவம் சமர்ப்பிக்க இயலாது.

2016 ஜனவரி முதல் தேதி முதல் க்ரிஸ் இதற்கான மாற்றங்களை மென்பொருளில் செய்து அறிவிக்கும். டிக்கட் புக் செய்யும் பயணிகளுக்கு தகுந்த எச்சரிக்கை தரப்படும். இதற்காக
1. ஐஆர்சிடிசி ஒரு வசதி செய்ய வேண்டும். மூத்த குடிமகன் கோட்டாவில் 2 பயணிகள் புக் செய்யப்பட்டால் அவர்கள் குழுவிலிருந்து பிரிக்கப்பட நேரிடலாம் என்று எச்சரிக்கை தரப்பட வேண்டும். மேலே தொடர அவர்கள் ஆம் என்று டைப் செய்ய வேண்டும்.
2. க்ரிஸ் பிஆரெஸ் டெமினலிலும் இது போல வசதி தருவதை ஆராய வேண்டும். புக் செய்யும் க்ளர்க் பயனியிடமோ புக் செய்பவரிடமோ கேட்டுத்தெரிந்து கொண்டு தொடர ஆம் என டைப் செய்ய வேண்டும்.
3. ஜோனல் ரயில்வே இதை பொது மக்களுக்கு சரியாக புரிய வைக்க வேண்டி தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

ஆக, இதில் எங்கேயும் கட்டண சலுகை பற்றி பேச்சே எழவில்லை.

மூத்த குடி மகன்களுக்கு நிச்சயமாக கீழ் பெர்த் வேண்டும் எனில் அது கிடைக்கும் பட்சத்தில் உறுதி படுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கிறது. அதுவும் குழப்பம் இல்லாமல் குழுவில் இருந்து பிரிந்து விடுவீர்கள் பரவாயில்லையா என்று கேட்ட பிறகே செய்யப்படும்.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் குழுவாக போகிறவர்கள் தம் குழுவில் இருக்கிற சீனியர் சிடிசனுக்கு நிச்சயமா கீழ் பெர்த் வேணுமானால் தனியாக படிவம் சமர்ப்பியுங்கள். 

இதற்கான சுற்றறிக்கையின் ஆங்கில வடிவம் பெறக் கீழ்க்கண்ட சுட்டிக்குச் செல்லவும். பலருக்கும் இதன் ஆங்கில வடிவம் புரியாததால் ஏதோ மூத்த குடிமக்களுக்கான சலுகையையே ரத்து செய்துவிட்டதாகவும், குடும்பத்துடன் செல்கையில் அவர்கள் தனித்துச் செல்ல நேரிடும் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இது குறித்து இன்றைய தினமலரில் ஆசிரியர் கடிதம் பக்கத்திலும் ஒருத்தர் புலம்பி இருந்தார். அரசு ஆங்கிலம் அதுவும் வரைவுப் படிவத்தின் ஆங்கிலம் புரிவது ரொம்பக் கஷ்டம்.  அதில் பழக்கம் இருந்தால் தான் புரியும். நானே மொழி பெயர்க்க இருந்தேன். ஆனால் தம்பி வாசுதேவன் நேற்று மொழிபெயர்த்துப் போட்டு விட்டார்.  எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி மொழி பெயர்த்திருக்கிறார். யாரும் பதறும்படி எதுவும் நடக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டாலே போதும். ஆங்கிலம் அதுவும் அரசு ஆங்கிலம் புரியும் என்பவர்கள் கீழ்க்கண்ட சுட்டியில் போய் ஆங்கில வடிவ சுற்றறிக்கையைக் காணலாம். 

குழுவிலிருந்து பிரிக்கப்படலாம், மேற்கொண்டு தொடரலாமா என உங்களைக் கேட்டுக் கொண்டே உங்கள் அனுமதியுடனேயே இணைய மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதே போல் நீங்கள் ரயில்வே முன்பதிவுச் சீட்டு அலுவலகம் சென்றாலும் அங்கிருக்கும் ரயில்வே ஊழியர் நிலைமையை உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் குழுவிலிருந்து பிரிந்தால் பரவாயில்லையா எனக் கேட்ட பிறகே உங்களிடமோ அல்லது உங்கள் சார்பாகப் பயணச்சீட்டு வாங்குபவரிடமோ கேட்டுக் கொண்டே  மேற்கொண்டு தொடருவார்கள். ஆக நீங்கள் குழுவிலிருந்து பிரியாமல் இருந்தாலே அங்கே குழுவில் இருப்பவர்களோடு உங்கள் படுக்கை இருக்கையை உங்கள் வசதிப்படி மாற்றிக் கொள்ளலாமே! ஏன் கவலைப்பட வேண்டும்? நீங்கள் கீழ்ப் படுக்கைதான் வேண்டும் என உறுதியாக இருந்தால் தான் குழுவிலிருந்து பிரிய நேரிடும். ஆக இதை அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உங்கள் கையில் தான் இருக்கிறது. 

 http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/traffic_comm/Comm-Cir-2015/CC-51.pdf


ஆங்கிலத்திலிருந்து சுற்றறிக்கையை எளிய தமிழில் மாற்றி இருக்கும் தம்பி தி.வாசுதேவனுக்கு என் நன்றி. 

20 comments:

  1. விளக்கத்துக்கு நன்றி. நான் மூ.கு ஆக இன்னும் கொஞ்சகாலம் இருப்பதால் எனக்கு இப்போதைக்குக் கவலையில்லை!

    ReplyDelete
    Replies
    1. உங்க குடும்பத்து மற்ற மூத்த குடிமக்களுக்குப் பொருந்துமே!

      Delete
  2. இத்தனை பிரச்னை எதுக்கு மூத்த குடிமக்களுக்கு வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி இருக்கலாமே?
    என்னைப் போன்ற 'பாமர' மக்களுக்கு இந்த விஷயம் புரியாதே?

    ReplyDelete
    Replies
    1. இது ஒண்ணும் பிரச்னை இல்லை. நல்லது தான் பண்ணி இருக்காங்க. ஏற்கெனவே இருந்த 2 இருக்கைகளை 4 ஆக உயர்த்தி இருக்கிறார்களே தவிரக் குறைக்கவில்லை. ஒரு சிலர் அந்தக் கோட்டா இருப்பது தெரிந்து கொண்டு அதில் இடம் பெற நினைக்கலாம். அப்படியானவர்களுக்காகத் தான் இது. அதுவும் குழுவாகச் செல்பவர்கள் சிலர் கேட்டதால் இப்படிச் செய்திருக்கிறார்கள். இது இப்போதைக்கு அமலுக்கு வரப் போவதில்லை. 2016 ஜனவரியில் தான் ஆரம்பம். அப்போதும் உங்களிடம் தனித்துச் செல்வதற்கு ஒத்துக் கொள்கிறீர்களா என்று கேட்டுக் கொண்டு நீங்கள் ஒத்துக்கொண்டால் தான் மேலே செல்லலாம். இல்லை எனில் பழைய முறையே தொடரும். புரியாத உங்களை/என்னைப் போன்ற "பாமர"ஜனங்களுக்காகத் தான் இந்தப் பதிவே.

      Delete
    2. பலருக்கும் புரியாததால்/புரிந்து கொள்ள முடியாததால் ஒருவேளை இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்படலாம். இருந்தாலும் தப்பு ஒன்றும் இல்லை. :)

      Delete
  3. விளக்கவுரைக்கு நன்றி சகோ இங்கிலீஷ் படிச்சா எனக்கு முதுகுவலி வரும் ஆகவே ஜகா வாங்கி வடை சாரி விடை பெறுகிறேன்.
    எனது புதுக்கோட்டை அழைப்பு காண வருக...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி கில்லர்ஜி, எனக்கும் இங்கிலீஷ் இம்சை தான்! :)

      Delete
  4. உங்கள் பொதுநல நோக்குக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, தவறான தகவல் பத்திரிகைகள் மூலம் பரவுவதைத் தடுக்க வேண்டியே இந்த இடுகை. :)

      Delete
  5. புரிய ஆங்கில படிவத்தின் விளக்கத்தை புரியும் தமிழில் தந்தற்கு நன்றி அம்மா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில் குமார். பலருக்கும் இதன் தமிழாக்கம் புரியாததால் மூத்த குடிமக்கள் பயணம் செய்கையில் அவர்கள் குடும்பத்துடன் செல்ல இயலாது என்றே புரிந்து கொள்கின்றனர். அதுவும் இந்தக் குறிப்பிட்டத் தனிப்படிவம் கேட்பது நீங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நான்கு படுக்கை இருக்கைகளுக்குள் தேவை/ அதுவும் கீழ்ப்படுக்கை இருக்கை என்று கேட்டால் தான் கொடுக்க வேண்டும். அப்படிக் கேட்காமல் நீங்கள் குடும்பமாகச் செல்கையில் மொத்தமாகப் பயணச் சீட்டை வாங்கலாம்.

      Delete
  6. நல்லதுதான் செய்திருகிறார்கள். நான் ட்ராவல் ஏஜெண்ட் மூலம் பதிவு செய்யும் போது
    கேட்டே பதிவு செய்வார்.
    நன்றி கீதா. தமிழாக்கம் செய்த தம்பை வாசுதேவனுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ஆன்லைனில் டிக்கெட் வீட்டில் இருந்தபடியே வாங்கறவங்களுக்குத் தான் மேற்கண்ட பதிவில் சொன்னபடி கேட்டு பாப் அப் வின்டோ வரும். நேரடியாக முன் பதிவு அலுவலகம் சென்றால் பயணச் சீட்டுக் கொடுக்கும் அலுவலர் உங்களைக் கேட்டுக் கொண்டே முன் பதிவு செய்து கொடுப்பார். ஆனால் கணவன், மனைவி இருவரும் மூத்த குடிமக்களாக இருந்து இருவரும் தனியாகப் பயணம் செய்ய நேர்கையில் கீழ்ப்படுக்கை இருக்கை இருவரில் ஒருவருக்குத் தான் கொடுப்பாங்க. இது எங்களுக்குப் பல முறை நேர்ந்திருக்கும் அனுபவம். அப்போது முன் பதிவு அலுவலகத்தில் இருப்பவரே தனித் தனிப்படிவமாகக் கேட்டு வாங்கிக் கொள்வார். என் கணவருக்குத் தனிப்படிவம், எனக்குத் தனிப்படிவம். இருவருக்கும் எதிர் எதிர்க் கீழ் இருக்கையாகப் போட்டுக் கொடுப்பார். ஆக இது புதிய நடைமுறையும் இல்லை. ஏற்கெனவே இருக்கும் ஒன்று தான். இதைப் பெரிய விஷயமாக்குகின்றனர் என்பதே என் வருத்தம். :(

      Delete
  7. திரு வாசு பாலாஜி G+ இல் பகிர்ந்து கொண்ட அரசு ஆணை உண்மையிலேயே குழப்பமாகத் தான் இருந்தது. அந்த ஆங்கிலமே புது மாதிரியாக இருக்கிறது.
    மொழி பெயர்த்துக் கொடுத்ததற்கு நன்றி. குழப்பம் தீர்ந்தது. இன்றைக்கு பயணசீட்டு வாங்கும்போது 'ஒரு கீழ் பெர்த்தாவது வேண்டும் என்று குறிப்பிட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. பரவாயில்லையா? என்று ஒரு pop-up வந்தது. போயே ஆக வேண்டும். நல்லகாலம் ஒரு மிடில் பெர்த் கிடைத்தது. புக் செய்தேன். அதுவும் கிடைக்கவில்லை என்றால் சக பயணிகளில் யாராவது நல்லவர்கள் இருக்க மாட்டார்களா என்று தேட வேண்டியதுதான்.
    மூ.தே? புரியவில்லையே!

    கட்டண சலுகை நீடிக்குமா, தெரியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. இணையம் மூலம் முன் பதிவு செய்தால் இப்படித் தான் வரும். நேரடியாகச் சென்று முன் பதிவு செய்தால் அங்கே உள்ள அலுவலர் உதவியோடு எந்தப் பெட்டியில் கீழ்ப்படுக்கை இருக்கை என்பதைக் கண்டு கொண்டு செய்து கொள்ள முடியும். மேலே குறிப்பிட்டுள்ள சுற்றறிக்கையில் இணையம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்காகவே சொல்லப்பட்டது என எண்ணுகிறேன். ஆனால் அதிலும் அலுவலர் பயணியிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றே சொல்லி இருக்கிறது. இது குறிப்பிட்ட நான்கு கீழ்ப்படுக்கை இருக்கைகளுக்கான சுற்றறிக்கையே தவிர கட்டணச் சலுகை குறித்தோ, அல்லது மூத்த குடிமக்கள் கீழ்ப்படுக்கை இருக்கை கேட்டால் அவங்க குழுவிலிருந்து பிரிக்கப்படுவார்கள் என்றோ எங்கேயும் சொல்லவில்லை. நீங்களாகச் சம்மதம் சொன்னால் தவிரக் குழுவிலிருந்து பிரிக்கப்பட மாட்டீர்கள். அதுவும் வருகிற ஜனவரி 2016 ஆம் வருடத்திலிருந்து தான் இது நடைமுறைக்கு வருகிறது. இணையத்திலும் முன் பதிவு செய்யத் தனித்தனியாகக் கொடுத்தால் ஒன்றாவது கிடைக்கும் என நம்புகிறேன்.

      Delete
  8. //அந்த ஆங்கிலமே புது மாதிரியாக இருக்கிறது.//

    அரசு மொழி ஆங்கிலம். இம்மாதிரியான வரைவுப் படிவங்களைத் தயாரிக்கவும், தட்டச்சவும் நான் தட்டச்சுப் படிக்கும்போது கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தவிர நீதிமன்ற ஆங்கிலம் தனியாக உண்டு. அதுவும் பழகி இருக்கிறேன். ஆனால் இப்போ நினைவில் இருக்கா என்பது சந்தேகமே! நீதி மன்ற உத்தரவு மாதிரிகளைத் தட்டச்சச் சொல்லுவார்கள்.

    ReplyDelete