தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...
பாரதீக்கு பாமாலை சூடியது அருமை சகோ....
ReplyDeleteபாமாலை அவருடையது தான் கில்லர்ஜி! ஏதேனும் எழுதணும்னு இருந்தேன். நேத்திக்கே பதிவைத் தயார் செய்ய நினைச்சும் முடியலை. கடைசியிலே அவரோட கவிதை ஒண்ணையே பகிர்ந்துட்டேன். :(
Deleteபாரதி நாமம் வாழ்க.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்
Deleteபாவம் பாரதி. வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்டவன் அவன் இருக்கும் வரை ஒரு வேடிக்கை மனிதனாகவே இருந்து வீழ்ந்தான். இறந்தபின் வந்ததுதானே புகழஞ்சலி எல்லாம். பாரதி எனக்குப்பிடித்த ஒரு மாமனிதன் .
ReplyDeleteபிரபலங்கள் பலருக்கும் இறந்த பின்னரே புகழ்மாலை சூட்டப்படுகிறது. என்ன செய்ய முடியும்! மேலும் பாரதி வாழ்ந்த காலம் அப்படி!
Deleteவரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...
ReplyDeleteபுதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
நன்றி டிடி. பக்கத்திலே இருந்தாலும் என்னால் வர முடியும் என உறுதியாகச் சொல்ல முடியாது. :( நிலைமை அப்படி!
Deleteபாரதியின் கவிதை சொல்லி ஒரு நினைவஞ்சலி நன்று.....
ReplyDeleteபாரதியின் நினைவைப் போற்றும் யாருக்குமே உள்ளத்தில் கன்ன்று விரியும் வரிகள் இவை. எழுதும் ஒவ்வொருவரும் பாரதியின் பாடல்களை பயில வேண்டும். தமிழ் வசப்படும். தன்மானம் தரம்பெறும். பகிர்வுக்கு நன்றி
ReplyDelete